Loading

 

எனதழகா – 4❤️

“சார் மே ஜ கம் இன்”, “வாங்க விக்ரம் ” என்று கூறிய அர்ஜுன் தனது இருக்கையில் எம்டி இடம் உள்ள தோரணையுடன் தன் வதனத்தை இறுகிய பாறைப் போல் மாற்றிக் கொண்டான்.அவனின் டிரிம் செய்யப்பட்ட தாடி, கூர்மையாக பார்க்கும் பார்வை, அவன் அமர்ந்திருக்கும் தோரணைப் பார்த்தே பணியாளர்களுக்கு பயம் உண்டாகும்.

இப்போதைக்கு தங்கள் உரையாடலை ஒதுக்கி விட்டனர் மூவரும்.

அசோக்கும் , ஆதிராவும் அவனுக்கு எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தனர். இரு முதலாளிகளும் இருப்பதைக் கண்டு விக்ரம் அச்சமுற்றான்.

“எதுக்கு சார் என்ன வரச் சொன்னிங்க?” என்று ஏசி அறையிலும் முகத்தில் வழியும் வேர்வையை துடைத்துக் கொண்டே கேட்டான்.

“விக்ரம் சார் இங்கு வேலைக்கு  புதுசா?” என்று ஆதிரா கேட்டாள்.

“ஆமாம் மேம்” என்று நடுங்கிக் கொண்டே கூறினான்.” அப்போ சரி” என்று சொன்னவளைப் பார்த்து முழித்தான்.

“மிஸ்டர் விக்ரம் கூப்பிட்டது நான். அங்க பேசிக்கிட்டு இருக்கீங்க? “என்றான் அர்ஜுன்.

” இல்ல சார்… மேம்” .அர்ஜுனின் கூரிய பார்வையில் “சாரி சார்” என்ற கூறினார்.

“அப்போ எனக்கு மரியாதை இல்லயா இங்க. நான் யாரு தெரியுமா?”.”அய்யோ மேம்  அப்படியில்லை சாரி” .

“விக்ரம்” என்றான் அர்ஜுன். “சார்…🤯”தலையைப் பிய்த்துக் கொள்வதுப் போல் இருந்தது அவனுக்கு.

” ஆதி” கண்ணாலேயே அவளின் விளையாட்டை நிறுத்தக் கூறினான் அசோக். அர்ஜீனும் அமைதியாகி விட்டான்.

“லிசன் விக்ரம் இங்க உங்களுடைய வேலை என்ன?” என்று அவனிடம் திரும்பி கேட்டான் அசோக்.

விக்ரம்”டெவலபர் சார்”.ஆதிரா, ” நீங்க டி.எல் தானா?”

“ஆமாம் மேம்”, விக்ரம். “உங்க வேலை என்னன்னு கேட்டேன் சார்?” அசோக்.

“பிராஜெக்ட் பத்தின தகவல் மற்றும்  எவ்வளவு தூரம் பிராஜெக்ட் கொண்டு போயிருக்கிறோம் என்று கிளைண்ட்ஸிடம் கூறுவது சார்”, விக்ரம்.

“அதுக்கான அர்த்தம் அப்போ தெரிஞ்சுருக்கு இல்லையா?” என்று உள்ளர்த்ததுடன்  அர்ஜுன் பேனாவை டேபிளில் சுற்றிக் கொண்டே கேட்டான் .”எஸ் சார்”.

“ஏன் இப்படி செஞ்சீங்க?” என்று கேட்டான் அசோக் . “என்னது சார்?”.

“மிஸ்டர் விக்ரம், நீங்க வேலைக்கு புதிது என்றதால் நானே சொல்றேன். இந்த அறையில் ஒருவரிடம் ஒரு கேள்விக் கேட்டால் அதுவும் இருவரும் சேர்ந்துக் கேட்டால் அக்கேள்விக்கான விடைத் தெரிந்துக் கொண்டே தான் கேட்கிறார்கள். புரியுதா சார்?” என்றாள் ஆதிரா.

“சரிங்க மேடம். ஆனா, அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்கள் ?” புரியாததுப் போல்.

அசோக் ” உங்களுக்கு மேடம் சொன்னது புரியவில்லை என்று நினைக்கிறேன் . நான் நேரடியாகவே கேட்கிறேன். எதற்காக கிளைண்ட்ஸிடம் நீங்கள் பேசுனீர்கள். அது உங்கள் வேலையே இல்லையே? “.

விக்ரம் “சார்!”. அசோக் “ஹம்.. சொல்லுங்க விக்ரம்” .அர்ஜுன் ஒன்றும் கேட்காமல்  அமைதியாக இச்சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையே இவனை பயம் கொள்ள வைத்தது. இருந்தும் தைரியத்துடன் தான் செய்யவில்லை என்று போராடிக் கொண்டிருந்தான்.

இறுதியில்,எச்சில் முழுங்கியப்படி  தன்னைப் பார்பவர்களை நிமிர்ந்து பார்க்கும் திரணியற்று கிளைண்ட்ஸை வேறு தனி ஒருவருக்கு சிபாரிசு செய்ததை ஒப்புக்கொண்டார்.

“என் குடும்பம் கஷ்டம் சார். வேறு வழியில்லாமல் ஒத்துக்கிட்டேன் சார். என் மனதிற்கே உறுத்தியதால்  நானே ராஜினாமா கடிதம் உங்கள் மெயிலுக்கு அனுப்பிருக்கேன் சார். ஆனால், என் குடும்பம் சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் பிள்ளைகளின் படிப்பு கெட்டு போகும். “

“உங்கள் பின்னனியும், உங்களுடைய  நடத்தையும் வைத்துத் தான் இவ்வளவு பொறுமையாகக் கேட்டேன்.அதை முன்னவே யோசித்து இருக்கனும். உங்களை பிளாக் மார்க் செய்து தான்  நான் அனுப்ப வேண்டும் . ஆனால், உங்கள் பிள்ளைக்களுக்காக விடுகிறேன்.அதற்காக உங்களை திரும்ப நம்ப நான் தயாராக இல்லை. நீங்கள் கிளம்பலாம். இம்மாதத்துக்கான சம்பளம் உங்களுக்கு கிடையாது. “என்று கையை கதவுப்புறம் காண்பித்தான் அர்ஜுன்.

விக்ரம் அமைதியாகச் சென்று விட்டான். அசோக் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்

. “ஏன்டா ,இவ்வளவு சாதாரணமாக அனுப்பி விட்டீங்க.இப்போ  இங்க வேலை இல்லைனா அந்த கம்பெனிக்குத் தானே போவாரு. ஏன் விட்டீர்கள்? “

” அவன் கூடப் பேசினது ஒரு கம்பெனி இல்லை. தனிப்பட்ட நபர் .அது யாரு என்று தெரியவில்லை. இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கும் கம்பெனியோடு மோதுபவன் யார் என்று தெரியவில்லை.அவன் தெளிவாக தன்னுடைய அடையாளத்தை எந்த இடத்திலும் மறந்தும் கூட காண்பிக்கவில்லை. அதோடு அவன் நோக்கம் அவனுடைய தொழிலுக்கான வளர்ச்சி இல்லை.நம்முடைய தொழிலை வீழ்த்துவதே”என்றான் அசோக் தலையைப் பிடித்துக் கொண்டு.

“ஹோ , அப்போ ஏதோ சில்வண்டு காலேஜ் முடிச்சவங்க பணத்துக்கு ஆசைப்பட்டு விளையாடிருப்பாங்க விடுங்கடா, இதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாது” என்றாள்.

அர்ஜுன்”இல்லை, தெளிவாகத் தான் காய் நகற்றுகிறான். விக்ரம் வெறும் அம்பு. அவனுக்கு அவன் குடும்பமே பெரிது. அதை வைத்து உபயோகிக்கப் பார்த்திருக்கிறான்.இனிமேல் அவன் அங்கு போக மாட்டான் .ஏனென்றால் , இவன் ஒரு நியாயவாதி”.

ஆதிரா “நியாயவாதியா இப்படி பண்ணியிருப்பார்?”.

அர்ஜுன்”அதுதான் சொன்னானே அவன் குடும்பம் என்று “.

ஆதிரா ” அதே குடும்பத்திற்காக திரும்பவும் அங்கே செல்ல மாட்டான் என்று என்ன நிச்சயம்”.

அர்ஜூன் “ஆம்,வாய்ப்புகள உள்ளது. ஆனால் இப்பொழுது இவனே சென்றாலும் அவன் இவனை வேலைக்கு சேர்க்க மாட்டான்.”

புருவ முடிச்சுளோடு  ஏன் என்று கேட்டாள். அசோக்” இவனை வேலையை விட்டு விலக்குவது போல் விலக்கி விட்டு வேவு பார்க்க வைப்போம் என்று நினைக்கலாம் “

ஆதிரா ” அதற்காக அவனை விட்டு விடுவதா?”. அசோக்” இவனை பிடித்தால் அவன் சிக்க மாட்டான். அதற்கு வேறு யோசிக்க வேண்டும்”

ஆதிரா”உங்களை  பழிவாங்க நினைக்கும் அளவுக்கு  நீங்கள் அப்படி என்ன  செய்தீர்கள். தொழிலில்  போட்டிதான் வரும். இது வேறு மாறி அல்லவா இருக்கிறது”.

அர்ஜுன்”அவன் எண்ணம் என் தொழிலை அழிப்பது அல்ல. என் குடும்பத்தை அழிப்பது.”

அசோக் மற்றும் ஆதிரா அதிர்ந்தனர். இருவரும் ஒரு சேர என்னடா சொல்கிறாய் என்று கேட்டனர். ஆதிரா அசோக்கின் கேள்வியில் திரும்பி பார்த்து உனக்கு தெரியாமலா என்று அதிர்ச்சி ஆனாள்.

இவர்கள் பாண்டவர் குழுவில் யாரு யாரிடம் மறைத்தாலும் அசோக்கிடம் மட்டும் யாரும் மறைக்க மாட்டார்கள்.

ஏனென்றால், அவன் நேர்த்தியாக சூழ்நிலையை கையாளுபவன். அப்படி இருப்பவனுக்கே தெரியவில்லை என்றால் விஷயம் விபரீதம் என்று புரிந்து கொண்டாள்.

“ஆம், என் யூகம் சரியென்றால் இங்கு நுழைய முடியாதென்று நம் கன்ஸ்ட்ரக்ஷனில் நுழையப் பார்ப்பான்.  ஆனால் இப்போது நுழைந்தால் மாட்டிக் கொள்வான். அதே போல்  பணியாளர்கள் மூலமும் நுழையாமல் தொழிலுக்கு அவப்பெயர் கொண்டு வரப் பார்ப்பான்” என்றான் அர்ஜுன்.

அதே நேரம் “எப்பிடி சொதப்பியது?” என்று ஆவேசமாகக் தன் மகனைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தார்.

கீர்த்தி☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்