Loading

வாசலில் முழுப் போதையுடன் நின்றிருந்த சத்யனைக் கண்டு சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்திருந்த அனுஷியா தன்னிலை அடைந்து வேகமாகக் கதவை சாத்த முயன்றாள்.

 

ஆனால் அதற்குள் அவளைத் தள்ளிக் கொண்டு வீட்டினுள் நுழைந்து கதவைத் தாழிட்டு இருந்தான் சத்யன்.

 

இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து விடுதலை ஆகி இருந்தான் அவன்.

 

இத்தனை வருடங்கள் சிறையில் இருந்தும் அவனுக்கு அனுஷியா மீதிருந்த வன்மம் குறையவே இல்லை.

 

அனுஷியாவை வெறித்த மற்றைய சோடி விழிகளுக்குச் சொந்தக்காரன் சத்யன் தான்.

 

வயதாகி விட்டதால் தலை முடி நரைத்து, சிறையில் இருந்ததால் பார்க்கவே பயங்கரமான தோற்றத்தில் இருந்தவனுக்கு பெண்ணாசை மட்டும் குறையவே இல்லை.

 

எதிர்ப்பாராத விதமாக அனுஷியாவைக் கண்டவனுக்கு உடனே அவளைப் பழி வாங்கி விடும் வெறி ஏற்பட்டது.

 

“என்ன டி? எதிர்ப்பார்க்கலயா என்னை இங்க?” எனக் கேட்டான் சத்யா கையில் இருந்த மதுக் கிண்ணத்தை வாயில் சரித்தபடி.

 

“ம…மரியாதையா வெளிய போயிடு. இல்லன்னா கத்தி ஊர கூட்டிடுவேன்.” என்றாள் அனுஷியா தன் பயத்தை மறைத்து மிரட்டலாக.

 

உடனே அவ் அறையே அதிரச் சிரித்த சத்யனோ, “முன்னாடியா இருந்தா இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயந்து இருப்பேன் டி. ஆனா நீ என்னை ஜெயிலுக்கு அனுப்பினதுக்கு அப்புறம் நான் அங்க அனுபவிச்ச சித்திரவதைக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னும் இல்ல டி. என்ன நினைச்ச நீ? நான் அப்படியே உன்ன சும்மா விட்டுடுவேன்னா? ஆமா… எங்க அந்த ********* சிறுக்கி? அவ இருந்த தைரியத்துல தானே நீ அவ்வளவு ஆட்டம் போட்ட. அப்புறம் ஒருத்தன் இருந்தானே ஹீரோவாட்டம். எங்க அவன்? உன்ன நல்லா யூஸ் பண்ணிட்டு தூக்கிப் போட்டுட்டு போய்ட்டானா? பரவால்ல பேபி. அதுக்கு தான் நான் இருக்கேனே.” என விஷமமாகக் கூறியபடி அனுஷியாவை நெருங்க, அவனை சட்டெனத் தள்ளிவிட்டாள் அனுஷியா.

 

போதையில் இருந்த சத்யன் நிலை தடுமாறி கீழே விழ, அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அனுஷியா தன் கைப்பேசியை எடுத்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொள்ள முயன்றாள்.

 

அதற்குள் தடுமாறிக் கொண்டே எழுந்த சத்யன் அனுஷியாவை நெருங்கி அவளின் முடியைப் பற்றி இழுத்து அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டான்.

 

“அம்மா…” என்ற அலறலுடன் கீழே விழுந்த அனுஷியாவின் சத்தத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அனுபல்லவி சட்டென கண் விழித்தாள்.

 

“அம்மா…” எனப் பதட்டமாக அழைத்தவாறு அறைக் கதவைத் திறக்க முயல, அதுவோ வெளிப் பக்கமாகப் பூட்டிக் கிடந்தது.

 

“அம்மா… என்னாச்சு மா? கதவைத் திறங்க.” எனக் கத்தினாள் அனுபல்லவி.

 

அனுபல்லவியின் குரலைக் கேட்டு அனுஷியா அதிர, சத்யனின் முகத்திலோ ஒரு குரூரச் சிரிப்பு.

 

“உன் பொண்ணா?” எனக் கேட்ட சத்யனின் பார்வை அறைப் பக்கம் திரும்பியது.

 

வெகுநேரம் கதவைத் தட்டியும் யாரும் திறக்காமல் போகவும் ஹாலை நோக்கி இருந்த அவ் அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்த அனுபல்லவி அங்கு நின்றிருந்த வயதான ஆடவனைக் கண்டு அதிர்ந்தாள்.

 

கீழே விழுந்து தலையில் அடிபட்டுக் கிடந்த தாயைக் கண்டு பதறிய அனுபல்லவி, “அம்மா…” என அலற, “உள்ள போ பல்லவி. நான் பார்த்துக்குறேன்.” என்றாள் அனுஷியா கெஞ்சலாக.

 

“பரவால்லயே. உன் பொண்ணும் உன்ன போலவே டக்கர் ஃபிகரா இருக்கா. உன் கதைய முடிச்சிட்டு அவள பார்க்குறேன்.” என விஷமமாகக் கூறிய சத்யன் தட்டுத் தடுமாறி எழ முயற்சித்த அனுஷியாவை மீண்டும் தள்ளி விட்டு அவள் மீது வெறித்தனமாகப் படர்ந்தான்.

 

அனுஷியா தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ளி விட முயல, ஆனால் தலையில் அடிபட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவை இழந்து கொண்டிருந்தாள் அனுஷியா.

 

“ஐயோ அம்மா. டேய்… விடுடா எங்க அம்மா. அம்மா… எனக்குப் பயமா இருக்கு மா. கதவைத் திறங்க.” எனக் கதறிய அனுபல்லவி அறைக் கதவை உடைக்க முயன்றாள்.

 

ஆனால் அக் கதவோ அசைய மறுத்தது.

 

“வெ…ளிய வராதே பல்…லவி. ப்ளீஸ்…” என ஈனக் குரலில் முனங்கிய அனுஷியா அந் நிலையில் கூட சத்யனிடமிருந்து தப்பிக்க போராடினாள்.

 

முழுப் போதையில் இருந்தவனுக்கு அனுஷியாவின் மீதிருந்த வெறி அதிகரிக்க, மனசாட்சியே இன்றி அனுஷியாவின் உடைகளைக் களைந்து அவள் கதறக் கதற அனுஷியாவின் கற்பை சூறையாடத் தொடங்கினான்.

 

“விடுடா டேய்… ஐயோ… நான் என்ன பண்ணுவேன்? அம்மா…” எனக் கதறிய அனுபல்லவி அவசரமாகத் தன் கைப்பேசியைத் தேட, அதுவோ சார்ஜ் இன்றி உயிரை விட்டிருந்தது.

 

கைப்பேசியைத் தூக்கி வீசிய அனுபல்லவி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து தாயைக் காக்க முடியாத நிலையை எண்ணி அடுத்து என்ன செய்வது என்று கூட தெரியாது தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

 

“கடவுளே… உனக்கு மனசாட்சியே இல்லையா? எங்க அம்மா என்ன பாவம் பண்ணாங்க? ஏன் அவங்கள மட்டும் இப்படி தண்டிக்கிற? அம்மா…” எனக் கதறினாள் அனுபல்லவி.

 

ஆனால் அந் நள்ளிரவு நேரம் வெளியேயும் ஆள் நடமாட்டம் இன்றி இருக்க, அனுபல்லவியின் கதறல் யாரையும் சென்றடையவில்லை.

 

முழுதாக மயக்கத்திற்கு சென்றிருந்த அனுஷியாவை தன் ஆசை தீர சூரையாடிய சத்யனுக்கு அப்போதும் கூட அவள் மீதிருந்த ஆத்திரம் அடங்கவில்லை.

 

அனுபல்லவியின் கண் எதிரேயே அவளின் தாய்க்கு ஏற்பட்ட நிலைமையைக் கண்டு இரத்தக் கண்ணீர் வடித்தாள் அனுபல்லவி.

 

அரை உயிராய்க் கிடந்த அனுஷியாவின் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தவனின் காதில் அனுபல்லவியின் கதறல் குரல் கேட்க, வன்மமாய்ப் புன்னகைத்தவன் போதையுடனே நடந்து சென்று அறைக் கதவைத் திறக்க முயன்றான்.

 

ஆனால் சாவி இல்லாதிருந்ததால் அவனால் அறைக் கதவைத் திறக்க முடியாதிருக்க, “ஏய் பொண்ணு… கதவைத் திற டி.” என உளறியபடி கதவைப் படபட எனத் தட்டினான்.

 

சத்யனின் குரல் கேட்டு பயத்தில் இதயம் வேகமாகத் துடிக்க சுவற்றோடு ஒன்றிக் கண்களை மூடிக் கொண்ட அனுபல்லவிக்கு கண்களைத் திறந்து பார்க்கவே பயமாக இருந்தது.

 

“அம்மா… வாங்கம்மா… பயமா இருக்கும்மா. அம்மா…” என அனுபல்லவியின் இதழ்களோ அச்சத்தில் முணுமுணுத்துக் கொண்டே இருந்தன.

 

ஒரு பக்கம் தாய்க்கு என்ன ஆனதோ என்ற அச்சம் சூழ, பேதையவளோ நிராதரவாக நின்றாள்.

 

போதையில் சத்யன் கதவை இடித்துத் திறக்க முயன்ற சமயம் அவனின் பின்னிருந்து இரும்பு உலக்கையால் அவன் மண்டையில் அனுஷியா அடிக்கவும் தலை வெடித்து இரத்தம் பீச்சிட அவ் இடத்திலேயே மாண்டு வீழ்ந்தான் அக் கிழட்டு காமுகன்.

 

உடலெல்லாம் காயங்களுடன் சீர்குலைந்து அரை உயிராய் கிடந்த அனுஷியாவின் மனக் கண்ணில் அனுபல்லவி ‘அம்மா… அம்மா…’ என அழைப்பது போல் தோன்றிக் கொண்டே இருக்க, கடினப்பட்டுக் கண் விழித்தவள் கண்டது அனுபல்லவி இருந்த அறைக் கதவை உடைக்க முயன்று கொண்டிருந்த சத்யனைத் தான்.

 

உடனே அனுஷியாவிற்கு எங்கிருந்து தான் அத்தனை பலம் வந்ததோ, கைகளை ஊன்றி எழுந்து நின்றவள் சத்தம் வராமல் மெல்ல மெல்ல சமையலறைக்குச் சென்று இரும்பு உலக்கையை எடுத்து வந்து நொடி நேரம் கூட யோசிக்காமல் சத்யனின் நடு மண்டையிலேயே அடித்தாள் அனுஷியா.

 

சத்யன் இறந்ததைக் கண்ட அனுஷியாவின் முகத்தில் ஒரு வெற்றிக் களிப்பு வந்து போனது.

 

ஆனால் உடற் காயங்களுடன் சேர்த்து தலை வேறு விண் விண் என்று வலித்தவளுக்கு அவளின் நிலை நன்றாகவே புரிந்தது.

 

கஷ்டப்பட்டு சாவியைத் தேடி எடுத்து அறைக் கதவைத் திறந்த அனுஷியா கேட்டது, “வேணாம்… கிட்ட வராதே. என்னை விட்டுடு. ப்ளீஸ். ஒன்னும் பண்ணிடாதே என்னை. அம்மா… அம்மா… வாங்கம்மா. பயமா இருக்கு…” என்ற அனுபல்லவியின் கதறல் தான்.

 

கண் மூடி சுவற்றோடு ஒன்றி இருந்த அனுபல்லவியை நோக்கி காலடிகள் மிக நெருக்கமாக கேட்கக் கேட்க, இதயம் இரு மடங்கு வேகத்தில் துடித்தது.

 

“வேணாம் ப்ளீஸ். விட்டுடு. கிட்ட வராதே.” எனக் கெஞ்சினாள் அனுபல்லவி.

 

திடீரென, “பல்லவி…” என்ற தாயின் குரல் கேட்கவும் சட்டென விழிகளைத் திறந்தவளின் மீதே உடல் வலிமை இழந்து சாய்ந்தாள் அனுஷியா.

 

“அம்மா…” என அனுபல்லவி பதற, பாதி திறந்திருந்த கண்கள் கொண்டு மகளின் முகத்தில் பார்வையைப் பதித்தவாறு இரத்தம் தோய்ந்த விரல்களால் அனுபல்லவியின் முகத்தை வருடிய அனுஷியா, “அம்…மாவ மன்னிச்…சிடுடா செல்லம். நா…னும் உன்…ன தனியா அ..அநாதையா விட்…டுட்டுப் போகப் போறேன்.” என்றாள் திக்கித் திணறி.

 

“இல்லம்மா… உங்களுக்கு ஒன்னும் ஆகாது. வாங்க ஹாஸ்பிடல் போகலாம். எனக்கு உங்கள விட்டா யாரு இருக்காங்க?” என அனுஷியாவைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி கதறினாள் அனுபல்லவி.

 

அனுஷியாவை அணைத்திருந்த அனுபல்வவியின் கரங்களில் ஏதோ பிசுபிசுப்பாக இருக்கவும் குனிந்து கீழே பார்க்க, அனுஷியாவின் தலையில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

 

“ஐயோ இரத்தம்… எனக்குப் பயமா இருக்கு மா. வாங்க ஹாஸ்பிடல் போகலாம். என்னைத் தனியா விட்டுட்டுப் போயிடாதீங்க.” எனக் கண்ணீர் வடித்தாள் அனுபல்லவி.

 

அனுஷியாவின் விழிகள் ஈரமாக, “இல்லம்மா. இதுக்கு மேல இந்த உயிர் தாங்காது டா. உ…உங்க அப்பா போனதுக்கு அப்புறம் அவர் கூடவே நானும் போய் இருப்…பேன். ஆனா உனக்காக மட்டும் தான் இ…ந்த உயிர கைல பிடிச்சிக்கிட்டு இருந்தேன். ஆ…ஆனா இப்…போ உன் அப்பாவுக்காக மட்டும் கட்டிக் காத்த என்…னோட கற்பு இப்படி சீரழிஞ்சதுக்கு அப்புறமும் என்னால என் பொண்…ணு முன்னாடி நிம்..மதியா இருக்க முடியாதுடா. அம்மா சுயநலமா இருக்கே…ன்னு அம்மாவ வெறுத்துடாதே கண்ணு. நா…னும் அப்பாவும் உ… உனக்கு என்னைக்கும் து…ணையா இருப்போம் டா. நா… நான் கண்ண மூட மு…ன்னாடி உன்ன ஒரு நல்லவன் கை…ல சேர்க்கணும்னு நினைச்…சேன் டா. அது முடியாம போயிடுச்சு டா. ஆனா… எனக்கு நம்…பிக்கை இருக்கு. என் செல்லத்த கைப் பிடிக்க போற ரா…ராஜ குமாரன் கூ…டிய சீக்கிரமே உன்…னைத் தேடி வருவான். அ…வன பார்த்ததுமே உன் மனசு சொல்லும் இ..இவன் தான் எனக்…கானவன்னு. பல்லவி ம்மா… இந்த உலகம் ரொம்…ப மோசமானது டா. யாரையும்… கண்மூடித்தனமா நம்பிடாதே. மு…முக்கியமா உன் அத்…தை ஃபேமிலி கண்…ல படாம இரு. உ…உனக்கு துணைக்கு யாரும் இல்லைன்னு நினைக்காதே. உ…உன் கிட்ட உ…ன்னோட படிப்பு இருக்கு. அது… உனக்…கு கடைசி வரை துணையா வரும். ஒரு பொண்…ணுக்கு பலமே அவளோட படிப்பு தான். உங்க அப்…பா இருந்திருந்தா உன்…ன இ…ளவரசி மாதிரி பார்த்து இரு…ப்பார். ஆனா இந்…தப் பாவி வயித்துல பிறந்துட்ட நீ. என்…னால உனக்கு படிப்பை மட்டும் தான் கொடுக்க முடி…ஞ்சது. அது உனக்கு துணை இருக்கும் டா. அம்…மாவ மன்னிச்சிடு டா. அம்மா உன் மேல… உசுரையே வெச்சிருக்கேன் டா தங்கம். எப்…பவும் நல்லா இரு.” என்றவாறு அனுபல்லவியின் தலையை வருடி விட்ட அனுஷியாவின் கரம் அப்படியே தொய்ந்து கீழே விழுந்தது.

 

தம் காதலின் பரிசை தன் விழிகளுக்குள் நிரப்பியவாறு தன் மகளின் மடியிலேயே இன்னுயிரை நீத்தாள் அனுஷியா.

 

“அம்மா…” என்ற அனுபல்வவியின் கதறல் அச் சுவர்களில் எதிரொலித்தது.

 

“அம்மா… எழுந்திரிங்கம்மா. ப்ளீஸ் மா. என்னை தனியா விடவே மாட்டீங்களே. இப்போ நான் தனியா இருக்கேன் மா. யாருமே இல்ல எனக்கு. வாங்கம்மா. இல்லன்னா என்னையும் உங்களோட கூட்டிட்டுப் போயிடுங்கம்மா. நீங்க இல்லாம நான் எப்படிம்மா இருப்பேன்? எனக்கு என்ன பண்ணுறதுன்னு கூட தெரியல.” எனக் கதறினாள் அனுஷியா.

 

வெகுநேரம் தாயை அணைத்துக் கொண்டு கதறியவளுக்கு அதன் பின்னர் தான் நிதர்சனம் உறைத்தது.

 

அடுத்து என்ன செய்வது என யோசித்த அனுபல்லவிக்கு ஹாலில் இருந்த சத்யனின் இறந்த உடல் வேறு பீதியைக் கிளப்பியது.

 

எங்கு அவன் மீண்டும் எழுந்து வந்து விடுவானோ எனப் பயந்த அனுபல்லவி அனுஷியாவை மெதுவாகக் கீழே கிடத்தி விட்டு ஒரு போர்வையை எடுத்து வந்து அவளை சுற்றிப் போர்த்தி விட்டாள்.

 

மரணித்த பின்னும் கூட தன் தாய்க்கு நடந்த அவலத்தை அனைவரும் அறிந்து தாய்க்கு கலங்கம் ஏற்படும் என்ற எண்ணமே அனுபல்லவியைக் கலங்கடித்தது.

 

இருந்தும் போலீஸிடம் உண்மையை மறைக்க முடியாதே.

 

மனதைக் கல்லாக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவள் சற்றுத் தள்ளி இருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டினாள்.

 

வெகுநேரம் கழித்து கதவைத் திறந்த ஒரு வயதான பெண்மணி அனுபல்லவியை அடையாளம் கண்டு அவளிடம் விபரம் கேட்க, சுருக்கமாக அவளிடம் நிலைமையைக் கூறிய அனுபல்லவிக்கு கண்ணீரை அடக்குவதே பெரும்பாடாக இருந்தது.

 

அப் பெண்மணியோ அனுஷியாவிற்கு நடந்த கொடுமையைக் கேட்டு அதிர்ந்தவர் அனுபல்லவியை அணைத்துக் கொண்டு கண் கலங்கினார்.

 

பல வருடங்களாக ஒரே இடத்தில் வசிப்பதால் அவர்களுக்குள் ஓரளவு பழக்கம் இருந்தது.

 

அதுவும் அனுஷியா மூலம் அவளைப் பற்றி தெரிந்து கொண்டவருக்கு சிறு வயதிலேயே கணவனை இழந்து குழந்தையுடன் தனியாகத் தவிப்பவளின் மீது பாசம் அதிகம்.

 

அதுவும் அனுஷியாவின் கள்ளமில்லாச் சிரிப்பும் அனைவருடனும் பழகும் விதமே அந்த ஊரில் அனுஷியாவிற்கு ஒரு நன்மதிப்பை வழங்கி இருந்தது.

 

சற்று நேரத்திலேயே அனுபல்வவியின் வீட்டை போலீஸ், மீடியா, மக்கள் எனச் சுற்றி வளைத்தனர்.

 

அனுபல்லவியிடம் விபரம் கேட்டு அறிந்து கொண்ட போலீஸ் இரு உடல்களையும் பிரேத பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பின் மேலதிக விசாரணைகளுக்காக அனுபல்லவியை காவல் நிலையம் அழைத்துச் செல்ல, அவளுக்குத் துணையாகச் சென்றார் பக்கத்து வீட்டுப் பெண்மணி.

 

எல்லாம் முடியும் போது விடிந்திருந்தது.

 

எல்லா செய்திகளிலும் அனுஷியா பற்றிய தகவல் தான் ஓடிக்கொண்டு இருந்தது.

 

அனுபல்லவிக்கோ அவளின் தாயை எண்ணி அழக் கூட நேரமற்று விசாரணை விசாரணை என கேள்விகளால் அவளைக் கூறு போட்டனர்.

 

தொலைக்காட்சியில் கூறிய செய்தியைக் கேட்ட ஹேமாவும் கிஷோரும் அதிர்ந்தனர்.

 

அனுஷியாவின் கொடிய மரணம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

 

உடனே பிரதாப்பும் அங்கு இருப்பதால் அவனுக்கு அழைத்துத் தகவல் தெரிவிக்க, அப்போது தான் பிரதாப்பும் விஷயத்தைக் கேள்வியுற்று இருந்தான்.

 

எவ்வளவு தான் அனுஷியா மீது வெறுப்பு கொட்டிக் கிடந்தாலும் அவளின் மரணம் அவனுக்கு வலியைத் தந்தது.

 

அதுவும் அப்படி ஒரு கொடூர மரணம் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டாம் என அவனின் ஆழ் மனம் கூக்குரல் இட்டது.

 

அதே நேரம் தான் ஹேமா அவனுக்கு அழைத்து அனுஷியாவின் மரணத்தை சாக்காக வைத்து அனுபல்லவியை அவனோடு அழைத்து வரக் கட்டளை இட்டான்.

 

கூடவே அவள் அடிக்கடி கூறும் வார்த்தைகளைக் கூறி பிரதாப்பின் மனதில் தான் வளர்த்து விட்ட வெறுப்பையும் புதுப்பிக்க, அது சரியாக பிரதாப்பிடம் வேலை செய்தது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்