Loading

டீசர் – 1

“ப்ளீஸ் ப்ரோ.. அவளை காப்பாத்துங்க..” என்று மன்றாடியவர்களை கண்டும் காணாததுமாக நின்றிருந்தான் அவன்.. உயிருக்கு போராடி கொண்டிருந்த பெண்ணவளோ அந்நிலையிலும் “அவன் தான் என்னைய காப்பாத்தணும்னா அப்படி ஒரு வாழ்க்கையே எனக்கு தேவையில்ல..” என்று கத்தினாள்..

“அப்பறம் ஏன் மேடம் இன்னும் தொங்கிட்டு இருக்கீங்க.. கையை விட வேண்டியது தானே..” என்று நக்கலாக அதே சமயம் ஒற்றை கண்ணை மடித்து சாதாரணமாக அவன் கேட்டிட, “டேய் ஏன்டா எல்லாத்தையும் இப்படி கதற விடற..? அந்த பொண்ணை காப்பாத்தி தொலையேன்டா..” என்று நண்பனின் கூற்றை கேட்டு முகத்தை சுருக்கினான்..

“எம்மா உனக்கு வாழணும்னு ஆசையே இல்லயா..? உன் திருவாயை கொஞ்சம் கம்முனு வெய்யேன்மா..” என்று அவளிடமும் இவன் கதறிட, சாவகாசமாக கழுத்தில் சுளுக்கெடுத்து “உங்களுக்காக இல்ல இவனுக்காக தான்..” என்றவன் ஒரே தாவில் அங்கிருந்த வேரை பிடித்து கொண்டு சரிந்திட, “மச்சி..” என்று அவன் அச்சத்தில் கத்திய கத்தல் அவனின் காதை தீண்டாமலே கரைந்தது..

பாறையின் மீது மெதுவாக எட்டி பார்த்தவர்களுக்கே நதியின் நீளமும் ஆக்ரோஷமான நீர் விழுகும் சத்தமும் அவர்களை நிலைகுலைய செய்து சருக்கி விட முயல, எப்படியோ தங்களை மீட்டு கொண்டு தள்ளி வந்து நின்றனர்..

கீழே விழுகாமல் கிளையை பிடித்து கொண்டிருந்தவளை இவன் நெருங்கிய சமயம் பெண்ணவளின் தீப்பொறி அவனை பொசுக்கி விட தொடங்க, எதையும் கண்டு கொள்ளாமல் அவளின் மெல்லிடையை அழுத்தமாக பற்றியவன் அவளோடு சேர்ந்து மேலேற தொடங்கினான்..

ஆடவனின் தொடுதலில் முதலில் திமிறிய பெண்ணவள் கூட அதன்பின் அடங்கிட, அவனின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவளுக்கு பலவிதமான காட்சிகள் மூளையில் மின்னலடித்து மறைந்தது..

“இவன்.. இவன்..” என்று தானாக பெண்ணவளின் அதரங்கள் முணுமுணுத்து எதையோ காணும் ஆர்வத்தில் ஆடவனின் சட்டையை விலக்க முயன்ற நேரம் அவன் பாறையில் ஏறியிருந்தான்.. எப்படி இவனால் இவ்வளவு எளிதாக ஏற முடிந்தது.. என்று பெண்ணவளுக்கு வியப்பு எழுந்தாலும் இறுதியில் கோவமே மேலோங்கியது..

எழுந்த கோவத்தில் அவனின் நெஞ்சின் மீது இவள் காலை வைத்திருக்க, இருவரும் பாதுகாப்பாக வந்து விட்டார்கள் என்று சந்தோசத்தில் அவர்களை நெருங்கிய மற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அதிர வேண்டிய அவனோ நக்கல் சிரிப்புடன் நின்றிருந்தான்..

“கமான் மேடம்.. உங்களால முடியும்.. அப்படிதான்.. இன்னும் கொஞ்சம் தள்ளுனா நான் விழுந்துருவேன்..” என்று இதழில் உறைந்த நக்கலுடனே கூறியது  அவனே.. உடனே பெண்ணவளை குழப்ப ரேகைகள் சூழ்ந்து இம்சித்தது.. அவனை தள்ளிவிட முடியும் தான்.. அதற்கான பலமும் உடலில் இருக்கின்றது.. ஆனால் ஏதோ ஒன்று அவளை தடுத்து அவனின் புறமே காந்தமாக ஈர்க்கிறதே..!

இருந்தும் அவனிடம் தோற்க விரும்பாமல் கெத்தாக அவனை எதிர்ப்பார்வை பார்த்தாள் அவள் வெண்பிறை.. அவளின் கால்களை இவன் அழுத்தி பிடித்த நொடி இதயத்தை மின்சாரமொன்று தாக்கிட, என்ன அறிந்தாளோ அவனை உணர்வற்ற மரமாய் வெறித்தாள்.. 

“உன்னால முடியும்னு நீயே நினைச்சாலும் உன்னால அது முடியாது டியர்..” என்று சன்னமாய் சிரிப்பை உதித்தவன் பெண்ணவளின் விழியம்பு விழிகளை தன் விழிகளால் ஊடுருவியபடி நின்றான் அவன் ஆத்ரேய யாழ்வன்..

 இசைத்திடுவேனா

என் வெண்பிறையை..!!

மூழ்கிடுவேனா

என்னவளின் காதலினுள்..!!

*********

“வந்து விட்டீர்களா தேவியே தேவனுடன்.. உங்களின் வருகைக்காக தான் இத்தனை வருடங்கள் காத்திருக்கிறோம்.. தேவரின் இசையையும் தங்களின் நடனத்தையும் காணாமல் எம் நதியே வெறுமை சூழ்ந்து கிடக்கின்றது..” என்று ஏக்கத்தை தாங்கி உரைத்தது நதியினுள் இருந்து வந்த ஒரு குரலொன்று..!!

இதை கேட்டதும் பிறையும் ஆத்ரேயனும் ஒருவரை ஒருவர் விழிகளால் தழுவிய படி நின்றிருக்க, “ஹோ இவன் பாட.. அந்த பொண்ணு ஆட.. அந்த காலத்துல நல்ல கலெக்சன் ஈட்டிருக்காங்க பாரு..” என்று ஆத்ரேயனின் நண்பன் கிண்டலடிக்க, சுளிரென்று அவனின் முதுகை ஆக்ரோஷமாக பொங்கி எழுந்த நீர் பதம் பார்த்தது..

இதில் மொத்தமாக அவன் நனைந்து பிடிமானமின்றி தண்ணீரிலே விழுந்து விட்டவன் “ஆத்தாடி அம்மாடி..” என்று முதுகை தேய்த்தபடி எழுந்து நின்றான்.. 

“வாயை மூடு மூடனே..! எம் தேவியையும் தேவரையும் பற்றி நகைத்தால் எம் சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்..” என்று அவ்விடத்தையே ஆக்கிரமித்து எதிரொலித்தது நீரினுள் இருந்த குரல்..

இதில் மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தவனை கை குடுத்து பிறையின் நண்பன் ஒருவன் தூக்கி விட, “என்ன இது கொடுமையா இருக்கு.. நான் நடந்ததை தானே சொன்னேன்.. அதுக்குனு இப்படியா..?” என்றான் பாவமாக..

“அய்யோ சகோ வாயை மூடுங்க.. இல்ல மொத்தமா எல்லாரையும் தண்ணீருல இழுத்துட்டு போய்ற போகுது.. இதுக கூட குப்பை கொட்டிட்டோம்.. இங்கையும் கொட்டி தொலைவோம் வேற வழி..” என்று நெற்றியில் விரல்களால் கோடிட்டு விதி என்றான் ஹஸ்கி குரலில்..

இருந்தும் அவன் அடங்காமல் “ஹே நதியே என்னை யாரென்று நினைத்தாய்.. உம் தேவரின் உயிர்த்தோழன்.. அவனை பற்றி உமக்கு என்ன தெரியும்..” என்று கெத்தாக வீரவசனம் பேசியபடி சென்றவனை தடுத்து “டேய் போதும்டா..” என்றிட, “முடியாது முடியாது நான் பேசியே தீருவேன்..” என்று பிடிவாதம் பிடித்தான்..

“அதுக்குனு செந்தமிழ்ல பேசறேனு தமிழை கொல்லாதடா..” என்று தலையில் அடித்து கொள்ள, அதை கண்டு கொள்ளாமல் “அவன்கிட்ட காரணமே இல்லாம அடி வாங்கிருக்கீயா..? இல்ல மிதி தான் வாங்கிருக்கீயா..? இதுவும் இல்லனா ஒண்ணா தண்ணீ அடிச்சுட்டு அவன் பண்ற அலப்பறையை தான் கண்ணால பார்த்துருக்கீயா..? இல்ல அவன்கூட கட்டிப்பிடிச்சு தான் தூங்கிருக்கீயா..?”

“இத்தனை வருசம் அவன்தான் சந்நியாசியா இருக்கானு பார்த்தா அவன் கூட சுத்தற எங்களையும் கமிட்டாக விடாம பண்ற தொல்லையை தான் தாங்கிருக்கீயா..? என் நண்பன் என் தொல்லை.. அவன் உன்னைய மறந்தாலும் என்னைய மறக்க மாட்டான்.. இதுல எம் தேவராமா தேவரு.. போமா போ..” என்று மூச்சு வாங்க கூறியவனை பைத்தியமா இவன் என்ற ரீதியில் பார்த்திருந்த ஆத்ரேயன் “ஆமா நீ யாரு..” என்று கேட்டான் பாருங்க பயப்புள்ளைக்கு இதயமே வெடிச்சு மயங்கி விழுந்துருச்சு..

ஆத்ரேயன் கூடிய விரைவில் உங்களின் முன்பு..

வணக்கம் நண்பர்களே.. இது முன்ஜென்மம் பற்றிய கதை தான்.. அதுக்குனு இது சரித்திர நாவல் இல்லை.. கொஞ்சம் புதுசா டிரை பண்ணலாம்னு இருக்கேன்.. கதை முழுக்க முழுக்க காட்டுக்குள்ள தான் நடக்கும்.. அங்க தான் நாயகன் நாயகி எப்படி சேருவாங்க.. எதுக்கு மறுஜென்மம் எடுத்து அங்க வந்துருக்காங்கனு தெரியும்..

அவங்களோட அவங்க நண்பர்களும் காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டு முழிச்சு‌ எதுக்கு அடி வாங்கறோம்னே தெரியாம வாங்கி கடைசில அங்கிருந்து மீண்டு வெளில போவாங்களா இல்ல அங்கேயே மடிவாங்களானு தான் கதை.. பார்ப்போம் கதை எப்படி வர போகுதுனு..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      தேவன்,தேவினா அப்போ இவங்க தான் அந்த இடத்துக்கு பெரிய தலை போல😇😇😇😇 சீக்கிரம் போடுங்க மீ வெயிட்டிங்