Loading

ணியானவன்–1

          அது 3050 ஆம் ஆண்டு……….நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்த அந்த பெரிய கட்டிடம் தோசைக்கல்லில் ஊற்றப்பட்ட முட்டையின் மஞ்சள் கருப் போல மின்னியது. அதை சுற்றிலும் வெள்ளைக் கருப் போல வெளிச்ச சிதறல்களுடன் ரம்மியமாக காட்சி அளித்தது.

மிக பெரிய கட்டிடம் அது. உள்ளே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில குட்டையான இயந்திர மனிதர்கள் உலவிக்கொண்டு இருந்தனர் அதாவது உதவி செய்து கொண்டு இருந்தனர். பல மாடி கட்டிடத்தில் சில இடங்களில் வெளிச்சம் தெரிந்தது.

     அந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் எட்டாவது மாடி அந்த நள்ளிரவிலும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருந்தது. மணிசேகரன் தனக்கு முன் உள்ள கணிப்பொறியில் கையில் ஒரு பென்சிலை வைத்து ஆட்டிக்கொண்டு ஏதோ ஒரு யோசனையில் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

   சுருக்கமாக மணி என்று அழைக்கப்படும் மணி சேகரன் சராசரி உயரம். விண்வெளி அதிசயங்களை கரைத்துக் குடித்தவன். தூக்கத்தில் எழுப்பி எந்ந கிரகத்தைப் பற்றிக் கேட்டாலும் அது அவன் வாயில் கரகம் ஆடும் அளவிற்கு திறமையானவன்.

    ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து படித்து முன்னேறியவன். ஒரு சிறிய ஹெலிகார் வைத்திருக்கின்றான் வீட்டிற்கு திரும்ப. தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தாலும் அவனுக்கு ஒரு ஆசை இருந்தது. கடவுளோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று !. ஆம் மணி ஒரு நாத்திகவாதி. கடவுள் இல்லை என தான் சொல்லவில்லை ஆனால் இருந்தால் கடவுளை நேரில் வரச் சொல் என வாதம் செய்யும், தான் வரைந்த முக்கோணத்திற்கு இரண்டு பக்கம் என வாதம் செய்யும் பிடிவாதக்காரன்.

     அந்த விண்வெளி மையத்தின் தலைவர் மல்கோத்ரா தனது அறையில் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு இரண்டு மூளை என எல்லாரும் கிண்டலாக சொல்வதுண்டு. மிக திறமையானவர். ஒரே நேரத்தில் இரண்டு பேர் பேசினாலும் எந்த பிசிறும் இல்லாமல் தனிதனியாக இருவருக்கும் பதில் கூறுவார். எளிதில் எதையும் நம்ப மாட்டார். இப்பொழுது ஏதோ யோசனையில் உட்கார்ந்து இருந்தார்.

         மணி அமர்ந்த அந்த பெரிய அறையில் பல மிண்ணனு திரைகள் சுவற்றில் தொங்கி கொண்டு இருந்தன. பல புள்ளிகள் நகர்ந்து கொண்டும்  பல கோண கிரக படங்களும் வந்து கொண்டு இருந்தன. மணி இருந்த அறையில் அவன் மட்டும் ஒவ்வொரு திரையையும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

          பல விண்வெளி புயல்கள் பல கடந்து சென்ற வேளையில் அடுத்து எப்பொழுது வேண்டுமானாலும் விண்வெளிப்புயல் பூமியை தாக்கலாம் என்ற அச்சத்தில் இருந்த நேரம்.

      பலவித கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அந்த ஒரு ’கிரகம்’ பிடிபடாமல் கண்ணாமூச்சீ ஆடிக் கொண்டு இருந்தது. பல வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்து வந்தது. பல வருட கனவாகவே அந்த கண்டுபிடிப்பு மாறி போனது. மணியும் இப்போது அந்த கண்டுபிடிப்பு எண்ணத்தில் உட்கார்ந்து இருந்தான்.

          அப்பொழுது அவனது தொடுதிரை அலைபேசி ஒளிர எடுத்துப் பார்த்தான் . ஒரு குறுஞ்செய்தி வர எடுத்துப் பார்த்தவன் முகம் மாறியது.

        மனதுக்குள் ’ விண்வெளி புயலை விட மோசமான புயல் அல்லவா  இது ’ என்று பதைபதைத்தான்.

       யாராலும் சமாளிக்க முடியாத அந்தப் புயல் இன்னும் சற்று நேரத்தில் அந்த விண்வெளி மையத்தை மையம் கொள்ளப் போவதாக செய்தி வந்திருந்தது.

 

அந்தப் புயல்…………….?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்