Loading

             ஆனந்த பாகம் 4

 

கோபுவிடம் காசு வாங்கி விட்டு வீட்டிற்குச்  சென்று  கொண்டிருந்தான்….. அப்போது எவனோ ஒரு திருடன் அவர் பையை திருடிட்டு ஓடி விட்டான்…. இவர்   எவ்வளவோ  

முயற்சி  செய்தும் அவரால் தடுக்க முடிய  வில்லை…. அவரை தள்ளிவிட்டு ஓடினான்….. 

          வேலாயுதம் கீழே விழுந்ததைப் பார்த்த ஒரு தம்பி அவரை தூக்கிவிட்டு.,அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்து விட்டு நீங்கள் கவலைப்படாதீங்க, நான் அந்த திருடனை பார்த்து பிடித்து விட்டு வருகிறேன் என்று கூறினான்…. இந்த தம்பியும் வேகமாக ஓடினான்….. வேகமாக அந்த திருடன்  சென்ற  பாதையில்  ஓடிப் போய் பார்த்தான். அந்த திருடன் ஒரு ஓரமாக நின்று சிகரெட் பிடித்து கொண்டிருந்தான்….. அவனை பார்த்ததும் இந்த தம்பி மெதுவாக அவன் பக்கத்தில் சென்று அவனை அடித்து அந்த  பையை வாங்கினான்….. 

       அதே இடத்தில் தன் மனம்  நொந்து போய் பணம் வருமா?… இல்ல கிடைக்காமல் போய்  விடுமோ என்ற கவலையில் உட்கார்ந்திருந்தார்….. 

       இவன் அவரை ஐயா என்று கூப்பிட அவர் ஏதோ ஒரு சிந்தனையில் யோசித்து கொண்டிருந்தார் .மறுபடியும் அவர் பக்கத்தில் போய் அவரை தொட்டவுடன்… திடுக்கென்று பார்த்தார். இந்தாங்க உங்கள் பை கிடைச்சிருச்சு, என்று கூறினான்… 

           அதற்கு வேலாயுதம் ரொம்ப நன்றி பா….. 

பரவாயில்லை….. தம்பி நீ யாரு?…. ஊருக்கு புதுசா, என்று கேட்டார்…. இல்லைங்க நானும் இந்த ஊரு தான்….. உன்  பெயர் என்ன?… என்று  கேட்டார்…. என்  பெயர் ரவிசங்கர்…. எனக்கு சொந்த ஊரு இது தான்  …..நான் சின்ன வயசுல இருந்து இங்கே தான்  இருக்கிறேன்…..  படிப்பதற்காக வெளியூர் சென்றிருந்தேன்…படித்து முடித்து இப்போது தான் வந்தேன்…. வழியில் உங்கள பார்த்தேன்…..   

      நீ யாரு பையன்…… சரஸ்வதி பையன்…. ஓ.  ….அது நீதானா தம்பி…. எப்படி இருக்கப்பா… ம்ம்ம்….நல்லா இருக்கிறேன்…. 

   இன்னும் படிப்பு இருக்கா,    இல்ல முடிஞ்சதா?….. முடிந்தது…. இனிமேல் போக வேண்டாம்….சரிப்பா. நான்  கிளம்புறேன்….  

         வீட்டிற்குச் சென்றார்….. மரகதம் இங்கே வா….. என்றார்…. என்னங்க என்ன விஷயம், இந்த பணத்தை பத்திரமாக வை,என்றார்…நம்ம நிர்மலாவிற்கு படிக்க   போகும் போது கொடுத்து விடனும்….. அதற்காக…. மரகதமும் உள்ளே போய் வைத்தாள்…. 

      கல்லூரிக்கு  வர  சொல்லி  நிர்மலாவிற்கு கடிதம்  வந்தது…. அதை படித்து  பார்த்து அம்மா அப்பாவிடம்  கூறினாள்…. 

     அவர்களும் நிர்மலாவிற்கு தேவையான எல்லா பொருள்களும், அவளுக்கு துணிகளும் வாங்கி கொடுத்தனர் ….அவள் ஊருக்குக் கிளம்பும் போது தன் தம்பியைப் பார்த்து நீ நன்றாக படிக்கனும், அம்மா, அப்பாவ நல்லா பார்த்துக் கொள்ள வேண்டும் … அதிகமாக விளையாட போக  கூடாது…

      சரிக்கா,….. என்றான். 

       அம்மா, அப்பாவிடம்  கூறி விட்டு கிளம்பினாள்.. 

      கல்லூரிக்குச் சென்றதும் எங்களுக்கு சொல்லும்மா!… ம்ம்.   சரிப்பா…. என்றாள்…. பார்த்து பத்திரமாக இருந்துக்கோ….! என்று  சொல்லிக் கொண்டே இருந்தாள்…. பஸ்  கிளம்பியது…… 

         நிர்மலாவும் போகும்  போது பல கனவுகளோடு சென்றாள்….. ஊரும் வந்தது…… அங்கே கல்லூரிக்குச்  சென்றாள்…. 

      அங்கே போய் கொண்டிருந்த போது அவளிடம் வந்து ஒருத்தி பேசினாள்… 

   என் பெயர் ராதிகா… உங்க பெயர் என் பெயர் நிர்மலா…. நீங்க என்ன படிக்க போறீங்க…. நான்  bsc,maths ….நீங்கள் நானும் அதே  தாங்க..  நான் கூட ரொம்ப பயந்துட்டேன் இருந்தேன்….. தெரிந்தவர்கள் யாரும் இல்லையே!,…. ஆனால் நீங்க என் கூட இருக்கீங்க!… இப்போம் பயம் இல்லை…. என்று கூறினாள் நிர்மலா…. 

எல்லோரும் கல்லூரிக்குச்  சென்றார்கள்…. 

       கல்லூரிக்குள் நுழையும்  போது சில பதற்றங்கள்.  ஏதோ ஒரு பயம் எனக்குள்  தோன்றியது….. இவர்கள் இருவரும் அவங்க  room க்குச்  சென்றார்கள்….. 

       அங்கே இன்னும் மூன்று பேர் இருந்தார்கள்…. அங்கே ஒருவரைஒருவர் அறிமுகப்படுத்திக்  கொண்டார்கள்… 

      அவங்க அப்பாவிற்கு போன் செய்து நான்  கல்லூரிக்கு வந்து விட்டேன் என்று கூறினாள்….  

    பின்பு ஒவ்வொரு நாளும் தனியாக இருப்பது போல் ஒரு உணர்வு….. இதுவே அவளுக்கு சில மாற்றங்களை கொண்டு வந்தது…. 

       நிர்மலாவிற்கும் கல்லூரி பிடிக்காமல் இருந்தது… 

        கொஞ்சம் நாள் கழித்து அனைத்து மாணவிகள் அவளிடம் வந்து பேசினார்கள்…அவளும் பேசி பழகினாள்… அவளுடைய கல்லூரி வாழ்க்கை மிகவும் நன்றாக போனது….. 

         

   காலப்போக்கில் எல்லாமே மாறியது…. நாள்கள் கடந்தது…. வருடங்கள் கழிந்தது… 

       மூன்று வருடம் கழித்து அவள் ஊருக்குச் சென்றாள்….. 

      அங்கே அவளுக்கு தெரியாத விஷயங்கள் நடந்திருக்கிறது.. …. நிர்மலா வீட்டிற்குச்  சென்ற பிறகு தான் தெரிந்தது.  . அவன் தம்பி வீட்டிலேயே இல்லை….. அவன் கோபித்து எங்கயோ சென்று விட்டான்…. 

       வேலாயுதம் ஏதோ ஒரு கோபத்தில் சத்தம் போட்டு விட்டார் . ஆனால் ஒரு சின்ன விஷயத்துக்காக சண்டை வந்தது…. 

      குணா …படிப்பையும் முடித்து விட்டான்…. அடுத்து படிக்கனும் என்ற நினைப்போடு இருந்தான்… நானும் அவனிடம் கொஞ்ச நாள் பொறுமையாக மெக்கானிக் கடையில் வேலை பாரு, கடனை  கட்டிட்டு அப்புறம்   உன் படிப்புக்கு கடன் வாங்கி தருகிறேன் என்றேன்…. ஆனால் அவனோ நான் சொல்வதை கேட்காமல், தினமும் சேராத பசங்களோடு சேர்ந்து அவனிடம் சில கெட்ட பழக்கத்தை பழகினாள்… 

          அவன்  செய்வதும் எனக்கு  பிடிக்க வில்லை… தினமும் நானும் உன்னுடைய  அம்மாவும் கண்டித்தோம்….. அவன் கேட்கவே இல்லை…. ஆனால் ஒரு நாள் குடிச்சுட்டு கீழே விழும் நிலையில் வந்தான்…. அப்போது நான் எதுவும் பேச வில்லை…. மறுநாள் அவனை திட்டினேன்… இந்த மாதிரி தினமும் குடித்து விட்டு வந்தால் வீட்டிற்கு வராதே?!…என்று கூறினேன் …

        அப்போம் இனிமேல் நான் வீட்டிற்கு வரமாட்டேன் என்று  கூறி கிளம்பி விட்டான்…. குணா… 

இவ்வளவு  விஷயம் நடந்துருக்கு, என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல  ஏன்ப்பா செல்ல வில்லை…. அதுக்கப்புறம்  அவன் எங்கே போனான் என்று  கேட்டீர்களா!…. 

       இல்லம்மா, கேட்கல  ஏம்மா, நீயும் இப்படி இருக்கிறாய்….. சரி நானே போய் கேட்டு விட்டு  வருகிறேன்….. 

     நில்லு, எங்க போற… என்று  கேட்டார் வேலாயுதம் …  அப்பா தம்பி எங்கே போனான் என்று அவனோட நண்பர்களிடம் கேட்டு விட்டு வருகிறேன்.. 

      அதெல்லாம் கேட்க வேண்டாம்…. போனவன் அவனே திரும்பி வருவான் ….

நீ,… உள்ளே போ, என்று நிர்மலாவை  அனுப்பினார்…. 

       அவளும்  உள்ளே போய் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.  …

     அப்போது குணாவின் தோழன் வேகமாக ஓடி வந்தான்..  அதுவும் பதற்றத்துடன் ,   அம்மா, அப்பா யாராவது வாங்க…. உடனே இவன் சத்தத்தைக் கேட்டு விட்டு எல்லோரும் வெளியே வந்தனர்… 

      குணா நம்ம வயலில் மயங்கி கிடைக்கிறான்….. 

    ஐய்யயோ! …. நான் என்ன செய்வேன்… என்று வேகமாக ஓடினார்கள்… அங்கே குணா மயங்கியதைப்  பார்த்து வேலாயுதத்திற்கு படபடப்பு ஆனது…மனதிற்குள் அவனுக்கு ஒன்றும் ஆக கூடாது…. என்று கடவுளிடம் வேண்டினான்.. 

      வயலில்  உள்ளவர்கள் அவனுக்கு தண்ணீர் தெளித்து பார்த்தனர்… அவன் எழுந்திருக்க வில்லை…. 

         பின்பு,நிர்மலா ஆம்புலன்ஸ்க்கு போன்  செய்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்…. 

      அங்கே குணாவை  பரிசோதித்து பார்த்தனர்…. பார்த்து விட்டு வெளியே வந்த டாக்டர்  நிர்மலாவிடம் அவனுக்கு ஒன்றும் இல்லை… அவன் நான்கு நாட்களாக சாப்பிடாமல்  இருந்திருக்கிறான்…. அவன் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறான்… அது என்ன விஷயம் என்று  கேட்டு நிறைவேற்றுங்கள்…                அவனுக்கு just ஒரு injection போட்டு இருக்கிறேன்…. அதனால் தூங்கி எழுந்திருக்க  2மணி நேரம் ஆகும்… மற்றபடி he is all right……. thank gou Doctor.  …என்றாள் நிர்மலா….. 

its ok  ma …….

     this mg duty…. …. என்று கூறினார்… 

        பின்பு யோசித்தாள்… அவனுக்கு என்ன பிரச்சினைஎன்பதை தெரிந்து கொள்ள குணாவின் நண்பனைஅழைத்தாள்… .. 

      குணாவிற்கு என்னாச்சு!… அவன் ஏன்!, அப்படி நடந்துக்கிறான்…. சொல்லுடா, தம்பி… 

       அக்கா நீங்க ஊரில் இருக்கும் போதே உங்கக்கிட்ட சொல்லனும்னு  நினைத்தேன் …

ஆனால் குணா அக்காகிட்ட சொல்ல கூடாது என்று கூறி என்னிடம் சத்தியம் வாங்கி விட்டான்…. அதான் சொல்ல  வில்லை…. 

         குணா  பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் போது ராகிணி என்ற  பெண்ணைக்  காதலித்தான்…. இருவரும் சேர்ந்து தான் படித்தார்கள்… ஒருத்தருக்கு ஒருவர் எங்க போனாலும் ஒன்றாக போவார்கள்… அதுவே  குணா மனசில் காதல் ஏற்பட்டது… 12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தது.   அப்போது தனியாக பேசனும் என்று கூறினான் குணா…. அவளும் என்ன விஷயம் சொல்லு, என்றாள். பின்பு ,

  குணா,   ராகிணியிடம்  காதலை சொல்லும் போது அவள் இவனை Friend  ஆக பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டாள்….. அவன் எவ்வளவோ அவளிடம் தன் காதலை புரிய வைத்தான்… ஆனால் அவள் அதை புரிஞ்சிக்கவே இல்லை….. 

     இந்த வயசில் வருவது காதலே இல்ல  Just only affection… please  குணா gou  can understand…..  என்று சொல்லி கிளம்பி விட்டாள்…. அதனால்  தான் அவன் இப்படி இருக்கிறான்… 

       டேய் அவள் சொன்னது  correct  தானே  இந்த வயசில் வரும் காதல்  just  ஒரு affection  இவன் ஏன் புரிந்து கொள்ள மாட்டிக்கான்…. …. இது இத்தனைக்கும்  one side Love   …..அதுக்கு ஏன்?,…. வாழ்க்கையே போனமாதிரி  feel  பண்ணனும்…. 

        நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்… கேட்கவே மாட்டிக்கான்….. நீங்க தான் அக்கா சொல்லனும்…. நீங்கள் சொன்னால் கேட்பான் என்று எங்களுக்கு தோனுது…. 

     சரிடா தம்பி, நான் பார்த்துக்கிறேன்…. நீங்கள் கிளம்புங்கள்….. சரிக்கா…. நாங்க போய்ட்டு வருகிறோம்…. 

       பின்பு அவனும் கண் விழித்தான். மரகதம் குணாவிற்கு சாப்பாடு கொண்டு வந்திருந்தாள்…. அவனுக்கு ஊட்டி விட்டாள்…. மரகதம் ஏன்டா இப்படி பண்ணே,…. என்று குணாவிடம் கேட்டாள்… அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

        பின்பு வேலாயுதம் நிர்மலாவிடம் கேட்டார் … எப்போது வீட்டிற்குப் போகனும்மா! என்று கேட்டாயா,… ம்ம்ம் கேட்டேன் அப்பா… குணா  எழுந்ததும் போகலாம் என்று டாக்டர் சொன்னார்….. 

      சரி வாங்க வீட்டுக்குப்  போகலாம்…. எழுந்திரு தம்பி வீட்டுக்குப் போவோம்…. என்றாள் நிர்மலா….. 

        நான் வரவில்லை  நீங்க எல்லாம் போங்க என்று  கூறினான் குணா….. 

     ஏன்டா!… இப்படி பேசுகிறாய்….என்று கேட்டாள்…. நிர்மலா…. அக்கா உனக்கு ஒன்னும் தெரியாது, என்னைவிடு நான் வரல…. என்று மறுபடியும் சொன்னான்…. 

          ” மீதியை அடுத்த பாகத்தில் பார்ப்போம்’******

ஆனந்த லீலை தொடரும்.

 

    

    

      

   

  

          

             

       

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்