Loading

ரோமியோ-6

 

மிளிர்மதி….. கண்கள் விரிய அவனது விழிகளை பார்த்தவள்…. தர்சன் நீங்க வர நோக்கமே சரி இல்லை…என்று அறை கதவை அடைக்க போக…

நாலே எட்டில் அவளை நெருங்கியவன்…. அவள் கதவை முழுதாக மூடுவதற்கு முன் கைகளை வைத்து அவளை தள்ளி கொண்டு உள்ளே வந்தவன் கதவை தாழிட்டான்….

என்ன உதவி வேணும் என் பொண்டாட்டிக்கு… என்று ஆதர்சன் கைகளை கட்டி கொண்டு கதவில்  சாய்ந்த படி கேட்க…

அவன் கள்ள பார்வையை உணர்ந்து கொண்டவள்…. அது…. உங்க பொண்டாட்டி இப்போ ட்ரெஸ் மாத்தனும்…

மாத்தலாமே…என்று அவன் அருகில் வர…  ஆல் காட்டி விரலால் அவளை நெருங்கியவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள் மிளிர்மதி…

என்ன டி…. நான் உதவி பண்ண கூடாதா என்று அப்பாவியாக கேட்க…

ஹலோ ஆபீசர்.. இந்த அப்பாவி மூஞ்சியை எல்லாம் நம்ப நான் ஒன்னும் யாரோ இல்ல… தி கிரேட் ஆகிட்டிங் மன்னன் ஆதர்சனோட பொண்டாட்டி என்று அழுத்தி கூறினாள்…

அவனுடைய பொண்டாட்டி என்ற வார்த்தையை அவள் வாய் மொழியாக கேட்கும் பொழுது அவன் உடல் சிலிர்த்து அடங்கியது….

இப்போ என் புருஷன் நேரா பக்கத்து வீட்டுல உள்ள ஷில்பா ஆண்டியை கூட்டிட்டு வருவங்களாம் என்று கூற…

இந்த நேரத்துல அவங்க எதுக்கு டி…

எனக்கு ட்ரெஸ் மாத்த ஹெல்ப் பண்ணத்தான்…

எதே…… நான் மட்டும் பார்க்க கூடாது…அவங்க மட்டும் பார்க்கலாமா…என்று பொறாமையில் பொங்கினான் ஆதர்சன்….

உங்களுக்கு இன்னும் டைம் இருக்கே…

ஆனால் அவங்களை நானே போய் கூட்டிட்டு வந்தா…. வீட்ல புருஷன் இருக்கும் போது ஏன் அவரை ட்ரெஸ் மாத்த கூப்புடனும்னு அவங்க யோசிப்பாங்க… அப்போ நமக்குள்ள இருக்குற எல்லாம் தெரிஞ்சுடாதா என்று பிட்டை போட்டான் ஆதர்சன்..

சிறிது யோசித்த மிளிர்மதி… அதுவும் சரிதான்… என்று கூற… ஆதர்சன் குஷியாகி விட்டான்… இனி அவனை தவிர அவளுக்கு வேற சாய்ஸ் இல்லை அல்லவா…

ஆனால் அவன் ஆசையில் ஒரு லோடு மண்ணை அள்ளி கொட்டினாள் மதி… நீங்க போய் கூப்புட வேணாம்… நீங்க பக்கத்து ரூம்ல இருங்க… நான் அவங்களை கால் பண்ணி வர சொல்லிக்கிறேன்… அவங்க போனதுக்கு அப்பறம் வெளியே வாங்க என்று ஒரே போடாக போட… நொந்து போனான் ஆதர்சன்… முகத்தை கடுமையாக வைத்து கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேறி அடுத்த அறைக்குள் நுழைந்து பட்டென்று கதவை அறைந்து சாற்றினான்…

யப்பா… என்ன ஒரு கோபம் என்று சிரித்து கொண்ட மதி…ஷில்பாவிர்க்கு போன் அடிக்க….. அவரோ அவர் கணவனுடன் கோவிலுக்கு சென்றுள்ளதாகவும்… வீட்டிற்கு திரும்ப இரவாகி விடும் என்று கூற இப்போது நொந்து கொள்வது மதியின் முறை ஆயிற்று…

இப்போது போய் கேட்டாலும் அவன் கத்துவான்…அவனது குணம் அறிந்து ஒன்றும் செய்ய இயலாது ஹால் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டாள் மதி…

சரியாக ஒரு மணி நேரம் கடந்த பின்பு அறையை விட்டு வெளியே வந்த ஆதர்சன்… அவளை திரும்பியும் பாராது நேராக கிச்சனுக்குள் சென்று காபி போட்டு குடித்து விட்டு… அவளுக்கானதை பிளாஸ்கில் போட்டு மூடி வைத்து விட்டு மீண்டும் அறைக்குள் சென்று அடைய..அவளுக்கு தான் ஏதோ போல் ஆகி விட்டது…

ச்ச… இதுக்கு தான் போலீஸ் மிலிட்டரி பசங்களை கல்யாணம் பண்ணவே கூடாது… ரொம்பவே விறைப்பா இருக்காங்க… ஏன் திரும்பி வந்து கேட்டா வேணாம்னா சொல்ல போறேன் என்று நொந்து கொண்டு… அடுக்களைக்குள் சென்று அவளுக்கு போட்டு வைத்த பிளாஸ்கில் உள்ள காபியை மெதுவாக கப்பில் ஊற்ற… அது சூடாக அவள் கைகளில் இறங்கியது… ஏற்கனவே காயம் பட்ட கைகளில் மேலும் எரிச்சல் கொடுக்க… ஆ……என்று கையை உதறிய படியே பிளாஸ்க்கை கீழே வைத்து விட்டாள்…

சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்த ஆதர்சன் … கையில் சூடு காபியை ஊற்றி கொண்டு நிற்கும் தன் மனைவியை பார்த்தவன் பொறுமை இழந்து அவள் அருகில் சென்றவன்…அவள் கைகளை இறுக்க பற்ற.. அவனது திடீர் செயலில் அதிர்ந்த மதி அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்..

அவனோ தீயாக அவளை முறைத்தான்… பைத்தியமா உனக்கு… என்று கையை துடைத்து விட்டு …எரிச்சல் வராமல் இருப்பதற்கு கொடுத்த மருந்தை அவள் கைகளில் பூசி விட்டு… காயம் பட்ட இடத்தில் மெதுவாக ஊதி விட… அந்த எரிச்சலுக்கு அவனது செய்கை சுகமாக இருந்தது மதிக்கு…

அனைத்தும் முடிந்ததும் அவளை விட்டு விலக போக… அவன் கைகளை பற்றினாள் மதி…

அவன் திஎம்பி அவளை பார்க்க…

முடியல தர்சன்…ரொம்ப கஷ்டமா இருக்கு…. எனக்கு ட்ரெஸ் மாத்த ஹெல்ப் பண்ணுங்க என்று அவள் அழைக்க… மறுப்பேதும் சொல்லாமல் இறுகிய முகத்துடன்… அவளுடன் அவளது அறைக்கு சென்றான் ஆதர்சன்….

அவள் அவனது முகத்தையே பார்க்க… அதில் முன்பு இருந்த காதல் …போதை.. காமம்… ஆர்வம் என்று அனைத்தும் இல்லாது வெறுமையாக இருந்தது…

ஏனோ அவனது வெறுமையான முகம் அவளுக்கு வலிக்க செய்தது… கப்போர்ட்டில் ஒரு லெகுவான ஆடையை எடுத்து வந்து மெத்தையில் போட்டவன்… அவளுடைய புடவையின் ஊக்கை கழற்றிவிட.. சேலை அவள் உடலில் இருந்து களைந்து கீழே விழுந்தது… அவனது பார்வையோ எங்கோ வெறித்த படி… அவளது மாற்று உடையான நைட்டியை எடுத்து அவள் தலை வழியாக மாட்டி அவளது பாதி உடலை மறைத்ததை போல் வைத்து கொண்டு.. அவளது பிளவுஸை விடுவிக்க போக…அவனை பாய்ந்து அணைத்து கொண்டு கண்ணீர் விட்டாள் மிளிர்மதி….

அவனோ அவளை அணைக்கவும் இல்லை… விலக்கவும் இல்லை… கல்லென சமைந்து போனான் ஆதர்சன்…

********

அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க… அவள் பின்னே நகர்ந்து கொண்டே சென்றாள்… வேக எட்டுக்களில் அவளை நெருகியவன்…. அவள் முகவாய்யை அழுத்தமாக பற்றி…. அவனது சாம்பல் விழிகளால் அவளை கூரு போட அவனது பார்வை வீச்சை தாங்க இயலாது தானாக இமையை தாழ்த்தி கொண்டாள் அமிர்தா…

ஐயோ தூரத்துல பார்க்கும் போது எதோ ஹீரோ மாதிரி இருந்தானே… இப்போ ஏன் வில்லன் மாதிரி பார்க்கிறான்… அதுசரி எனக்கு அவன் எப்பவுமே “வில்லன்” தான் என்று மனதில் நினைத்து கொண்டிருக்க… மொத அவன் கிட்ட இருந்து தப்பிக்கிற வழியை பாரு டி என்று தலையில் அடித்து சென்றது மனசாட்சி…

கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி என்ன பேசிட்டு இருந்த…. கர்ஜனையாக வந்து விழுந்தது அவனது வார்த்தை….

நான்…. ம்கூம்….. காத்து தான் வந்தது…. வார்த்தை வரவில்லை அவன் நெருக்கத்தில்… தொண்டை வேறு சதி செய்ய…. பேச்சு வராமல் அவள் முழிக்க…

காது கேட்காதா….. என்ன பேசிட்டு இருந்த என்று அவன் போட்ட சத்தத்தில் இவ்வளவு நேரம் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் குடிலுக்குள் சென்று விட… அவளோ உயிரை கையில் பிடித்து கொண்டு நின்றாள்…

இடுப்பில் என்ன அழுத்துகிறது என்று குனிந்து பார்த்த அமிர்தாவின் கண்கள் தெறித்து விடும் அளவிற்கு வெளியே வந்து விட்டது…

அவனே தான்….. பிஸ்டலை அவள் இடுப்பில் வைத்து அழுத்தி கொண்டு அவனது சம்பால் விழிகாளால் அவளை எரிக்க முயல…….

அவளோ பயத்தில்… மெதுவாக வார்த்தைகளை கோர்த்து… அது… அ….அது… நீங்க… விழுந்துட்டீங்கன்னு …சொ…சொன்னேன் என்று உடல் நடுங்க கூற…

அப்பறம்….

அது…. என்கிட்ட தான் ….என்று அதற்கு மேல் கூற முடியாமல் அவள் பயத்தில் பேச்சு வராமல் நிற்க…

உன்கிட்ட விழுந்துட்டேன்ல என்று நக்கலாக கேட்டு வைத்தான் அந்த சாம்பல் விழிகளுக்கு சொந்தக்காரன்…

அப்போது அங்கே தவான் கையில் ஒரு சார்ட்டோடு வர… பாய்… நம்ம காத்திருந்த அந்த டேட் வெளியிட்டாங்க….. என்று பரபரப்பாக அதை அவன் முன் காட்ட..

அவளை விட அது முக்கியம் அல்லவா…. அந்த தேதியை மனதில் குறித்து கொண்டவன்…. கோணலாக ஒரு சிரிப்பு சிரிக்க… அந்த சிரிப்பு கூட அவன் முகத்திற்கு அழகாக இருந்தது.. அந்த பதட்டத்திலும் அவன் முக அழகை பார்த்து ரசித்தாள் அமிர்தா…

நமக்கு நேரம் ரொம்ப குறைவா இருக்கு…  திடீர்னு இந்த மாநாடு நடத்த காரணம் என்ன… ஒரு வேளை நம்மளை லாக் பண்ண கூட இருக்கலாம்… சோ நம்ம ஒவ்வொரு மூவையும் ரொம்ப கவனமா எடுத்து வைக்கனும்… இல்லேன்னா நம்மளோட இந்த சாம்ராஜ்யம் கண்டிப்பா அழிய வாய்ப்பு இருக்கு…

ம்ம்ம்ம்…ஆமா பாய்…. நானும் ஆயுதங்களை எல்லாம் சீக்கிரம் ரெடி பண்ண சொல்லிட்டேன்…. தண்ணிக்கு அடியில இருக்கிற ஆயுதத்தை எடுத்து நம்ம சோதனை பண்ணி பார்க்கனும்…

இந்த முறை உன் அவசர புத்தியை இதுல காட்டாத என்று மீண்டும் எச்சரித்தான் சாம்பல் விழியான்…

இல்ல பாய்… நீங்க சொல்லுறது மட்டும் தான் இந்த முறை நடக்கும் என்று தவான் சரணடைய…. மேப்பில் உள்ள முக்கிய மூன்று நாடுகளை தன் விரல் கொண்டு துப்பாக்கியை வைத்து சுடும் படி அந்த நாடுகளை பார்த்து கை அசைக்க …தவான் அங்கிருந்து சென்றான்…

சரியா 1920 ஆண்டில் நடந்த கடைசி மாநாடு.. இத்தனை ஆண்டுகளுக்கு பின் எதற்காக வைக்க வேண்டும் என்று மூளை யோசிக்க…. இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக தோன்றியது … இந்தமுறை நான் வச்ச செக்குல இருந்து தப்பிக்கவே முடியாது … இந்த தாக்குதலை பத்தி உலகமே பேசனும் என்று வெறியாக அந்த மேப்பில் உள்ள நாடுகளை பார்த்து வாய் விட்டே கூறினான் சாம்பல் விழியான்…

இவர்கள் பேசிய அனைத்தையும் கண்ணு முழி பிதுங்க கேட்டுக் கொண்டிருந்தாள் அமிர்தா…அடப்பாவிங்களா …..என்று வாயை பிளக்க…அப்போது தான் அவளை பார்த்த சம்பால் விழியன்..

அவள் அருகில் நெருங்கி….. பிஸ்டலோடு அவள் கழுத்தை சுற்றியவன்…அவள் மேனியை உரசாது….அவள் காதருகில் நெருங்க…. அவன் மூச்சு காற்று வெப்பத்தில் அவள் காதுகள் சிவந்து விட….

நாட் பேட்( not bad) என்று அவள் சிவந்த காதுகளை பார்த்த படி கூறியவன்…. உன்கிட்ட விழுந்துட்டேனா இல்லையான்னு தெரியனும்னா..  இன்னைக்கு நைட் ஷார்ப்பா 12 மணிக்கு என்னோட ரூம்க்கு வா என்று மெல்லிய குரலில் அதே சமயம் கண்டிப்பாக வர வேண்டும் என்று கட்டளையாகவும் இருந்தது அவனது செவி வழி செய்தி…

எதே 12 மணிக்கு உன் ரூம்க்கு வரனுமா என்று போகும் அவனையே கண் இமைக்காமல் பார்த்து வைத்தாள் அமிர்தா….

நேரம் சரியாக இரவு 12 மணி😉

சனா💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்