Loading

ரோமியோ-4

நீ ஏன் பேபி அத பத்தி எல்லாம் யோசிக்கிற… அதெல்லாம் மாமா பார்த்துகிறேன்…. என்று மிளிர்மதியின் கன்னத்தை தட்டினான் ஆதர்சன்..

சரி சரி யூனிஃபார்ம் போட்டு என் பக்கத்துல வர வேண்டாம்னு சொல்லிருக்கேன்…

அப்படி எல்லாம் முடியாது பேபி… உன் புருஷனோடு சேர்த்து இந்த டிரெஸ்ஸையும் நீ அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆகனும்… என்று அவள் மூக்கின் நுனியை கடித்தான்….

சரி போறது தான் போறீங்க… என்ன கொஞ்சம் மார்கெட்ல இறக்கி விட்டு போங்க….

அதான் எல்லாம் வீட்டுக்கே வருதே…அப்பறம் எதுக்கு…

வீட்டுக்குள்ளேயே இருக்க போர் அடிக்குமே… அதான் உங்ககூட வெளியே வரேன்…

சரி கிளம்பு உன்ன ட்ராப் பண்ணிட்டு கிளம்பிறேன்

சரி என்று திரும்பிய மிளிர்மதியை பின் இருந்து அணைத்து அவள் கழுத்து வளைவில் அழுத்தமாக முத்தத்தை பதிக்க… இதை சற்றும் எதிர்பார்க்காத மதி…. கூச்சத்தில் சிணுங்கி… அவனை தள்ளி விட்டு கதவு வரை சென்றவள் “பொறுக்கி” என்று கூறி விட்டு ஓடியே விட்டாள்…

ஆதர்சன் சிரித்து கொண்டான்… தானா ஒரு பெண்ணிடம் இவ்வளவு காதலாக இருப்பது… அவனை நினைத்து அவனுக்கே வியப்பாக இருந்தது.. ஆரம்பத்தில் திருமணம் செய்து வைக்கிறேன் என்று அவனது பெற்றோர்கள் கூறினாலும்… இவனுக்கு தான் அதில் துளியும் ஈடுபாடு இல்லாமல் இருந்தது… மிளிர்மதியை கூட அப்படித்தான் திருமணம் செய்து கொண்டான்…

ஆனால் முதலிரவில் அவள் பேசிய பேச்சில் விழுந்தவன் தான் இன்னும் எழ முடியாமல் தவித்து நிற்கின்றான்…

மார்க்கெட்டில் அவளை இறக்கி விட… அங்குள்ளவர்கள் அவனை கண்டு மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வணக்கம் வைக்க …. அதை முகத்தில் தவழும் புன்சிரிப்புடன் அழகாக தலை அசைத்து பெற்றுக் கொண்டான் ஆதர்சன்…

தன் கணவனின் மிடுக்கான தோற்றமும்…. அதில் அவனது ஆண்மைக்கு கிடைக்கும் மரியாததையும் பார்த்து பார்த்து பூரித்து போனாள் மிளிர்மதி….

மதி… நீ தேவையானதை வாங்கிட்டு எனக்கு கால் பண்ணு… நான் வண்டியை அனுப்புறேன்… தனியா நீ போக வேண்டாம் என்று அவளது பாதுகாப்பிற்கு ஒரு ஆளை வைத்து விட்டு ஒரு சிறு சிரிப்போடு அந்த இடத்தை விட்டு செல்ல… அவன் கார் மறையும் வரை பார்த்து நின்றாள் மிளிர்மதி… சிறிது நாட்கள் தான் என்றாலும்… அவன் மீது உள்ள காதல் கடலாளவு உயர்ந்தது அல்லவா…

தன் காரின் மிரரில் மதியின் மதி முகத்தையும்… அவள் முகத்தில் தெரியும் காதலையும் பார்த்து கொண்டே மகிழ்ச்சியாக டியூட்டிக்கு சென்றான் ஆதர்சன்… திரும்பி வரும் பொழுது இந்த மகிழ்ச்சி அவனிடன் இருக்குமா என்பது சந்தேகமே….

******

மிதமான குளிரில்… லேசான வாடை காற்றில்…. எப்போதாவது மட்டுமே தரிசனம் தரும் சூரிய தேவர்….. தன் கரங்களை மெல்ல அந்த ஆற்றங்கரை ஓரம் நிற்கும் இரு ஜோடிகளைக் கண்டு அங்கு படர விட….

அந்த மெல்லிய கதிர்களின் வெளிச்சம்…. சாம்பல் விழியனின் முகத்தில் பட… பிரகாசத்திலும் பிரகாசமாய் ஜொலிக்க…. வாயை பிளந்து அவனை பார்த்து வைத்தாள் அமிர்தா..

குளிர்ந்த நீரால் முகத்தை அலம்பியவன்…. தன் ஐவிரல்வளையும் கொண்டு முகத்தில் இருக்கும் தண்ணீரை வழித்து துடைத்து…. புஜம் ஏறிய கை சட்டையை மடக்கி விட்டு …. அவள் அருகில் வர… அவள் தான் வாயை பிளந்த படி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்…

என்ன ம்மா இருக்கான்… நல்லா ஹிந்தி சீரியல்ல வர ஹீரோ மாதிரி… அம்மடியோவ்…. பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கே… அதுவும் அந்த கண்ணு…என்று நினைக்கும் போதே அவன் அருகில் வந்து விட தலையை உலுக்கி கொண்டாள் அமிர்தா….

கருப்பு நிற சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும்… டக்கின் செய்யாத சட்டையும்.. கைகளை புஜம் வரையில் ஏத்தி விட்டு… சட்டையில் மேல் இரண்டு பட்டண்களை கழற்றி விட்டு…அதில் கருப்பு நிற கண்ணாடி சொருகி இருக்க… அலை அலையாய் கேசம் அவன்  முகத்தில் விழ… அதை தன் இடைக்கை கொண்டு அவ்வபோது கோதியவன்…. தன் சம்பால் விழிகளால் தன்னை சுற்றி உள்ள அனைத்து இடங்களையும் பாதுகாப்பின் அடிப்படையில் சுழல விட்டு கொண்டே வர… பச்சையாகவே அவனை சைட் அடிதாள் அமிர்தா…

சூரிய பகவானின் ஒளி கதிர்கள் அவன் மேனியில் பட்டு… அவன் உடல் தங்க நிறமாக ஜொலித்தது… சுண்டி விட்டால் ரத்தம் வர அளவிற்கு பால் வண்ண தேகம் அவன்… அவள் நிறத்தையும் அவன் நிறத்தையும் ஒரு நிமிடம் ஒப்பிட்டு பார்த்தாள்… அந்த அளவிற்கு கருப்பு கிடையாது… மாநிறம் கொண்டது அவளது தேகம்..

மேலே போட்டு இருக்குற துப்பட்டாவை கழட்டி கொடு…என்று சற்றும் அசராமல் அவன் கேட்க….

என்ன………… என்று அதிர்ந்து போன அமிர்தா… அது … வந்து… எதுக்கு என்று தடுமாறிய படி கேட்க…

அவன் சாம்பல் விழிகளால் அவளை ஒரு பார்வை பார்க்க… தானாக துப்பட்டாவை கழற்றி அவன் கையில் கொடுத்தாள் அமிர்தா…

அதை வாங்கி கொண்டவன்…. தன் முகத்தோடு சேர்த்து அதை இறுக்க கட்டி கொண்டு… முதுகிற்கு பின் இருந்து ஒரு பதம் நிறைந்த ஆயுதத்தை கையில் எடுத்து கொண்டு… அவளை பார்க்க…பயத்தில் எச்சில் விழுங்கினாள்…

நான்… நான்… எந்த… தப்பும் பண்ணலை… என்ன வெட்டி ஆத்துல போட்டுறாதீங்க… வலிக்கும்…. ப்ளீஸ்… என்று அமிர்தா அழுதே விட…

இதழ் ஓரம் ஒரு மோகன புன்னகையை படர விட்டவன்… கண் இமைக்கும் நேரத்தில் அந்த ஆத்தில் குதித்தான்…

அவன் செய்கையில் அதிர்ந்தவள்… ஐயோ …என்று அலறி விட்டாள் அமிர்தா… ஐயோ அழகா வேற இருந்தாரே.. இப்படியா போய் ஆத்துல விழுகனும்..நான்தான் இருக்கேன்ல… எதுக்கு இந்த முடிவு எடுத்தாரு …என்று கரையிலேயே குட்டி போட்ட பூனையாக தவித்து கொண்டிருந்தாள்…

சரியாக பதினைந்து நிமிடம் கழித்து உள்ளே இருந்து வெளியே வந்தான் சாம்பல் விழியான்…

ஐயோ ஹிந்தி சீரியல் ஹீரோ மாதிரி இருந்தானே.. இப்படி யாருக்குமே இல்லாம ஆத்துல போயிட்டானே… என்று அமிர்தா கரையில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருக்க… அவள் கடைசியில் கூறிய வசனத்தை கேட்டவனின் உதடுகள் புன்னைகை பூத்ததா என்பதை அவனே அறிவான்…

மீண்டும் தண்ணீரில் உள்ள சலசலப்பை கேட்டு ஒரு எதிர் பார்ப்போடு திரும்ப… அந்த எதிர் பார்ப்பை பொய் ஆக்காமல் அவனே …அவள் ரசிக்கும் அந்த சாம்பல் விழியனே ஆற்றில் இருந்து கரைக்கு வந்தான்…

அவன் கையில் ஒரு இரும்பு பெட்டி இருந்தது… அதையே ஆராய்ச்சியாக பார்த்த அமிர்தாவின் கண்களை பார்க்க தவரவில்லை அவன்….

இதுல என்ன இருக்குனு தெரியனும்… அவ்வளோ தானே..

ஆம் என்று ஒரு ஆர்வத்தில் வேகமாக தலை ஆட்டியவள்… பின் நாக்கை கடித்து இல்லை என்று தலை ஆட்டினாள்…

அதை கண்டு கொள்ளாமல்…அவன் அந்த பெட்டியை திறக்க… உள்ளே பல ஆயுத்தங்கள் இருந்தது… இதே போல் ஆயுதங்களை அவள் படத்தில் கூட பார்த்ததில்லை… இன்று நேரில் பார்க்கையில் உடல் நடுங்கி போனது அவளுக்கு…

ஒவ்வொன்றாக அவன் எடுத்து சரி பார்க்க… அவள் ஆயுதத்தையே மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்… திடீரென அவளை தன் பக்கம் இழுத்தவன்…அவனது கை சிறையில் வைத்து கொண்டே அவள் கையில் ஒரு பிஸ்டலை கொடுத்து விட்டு அவன் பின்னே இருந்தவாரு அதை அழுத்த முயற்சிக்க… அது வெடிப்பதற்குள்ளே ” அம்மா…………” என்று அலறி விட்டாள் அமிர்தா….

கண்களை திறந்து பார்க்க இன்னும் பிஸ்டல் அப்படியே தான் இருந்தது… உடல் அப்பட்டமாக நடுங்கியது அவளுக்கு…  ம்ம்ம்…. ஷூட் பண்ணு என்று அவனது சாம்பல் விழிகளால் அவளை தயார் படுத்த… “வில்லன்” என்று முனங்கினாள் அமிர்தா…

பயம் ஒரு பக்கம்…அவனது நெருக்கம் ஒரு பக்கம் அவளை பித்து கொள்ள வைத்தது… கொஞ்சம்…..த…தள்ளுங்க… ப்ளீஸ்…… என்று திக்கி திணறி கேட்டாள் அமிர்தா….

நான் விட்டா உன்னால சரியா சுட முடியுமா….

நான்….ஏன் சுடனும்…வார்த்தைகள் பயத்தோடு கலந்து வெளி வந்தது….

என்ன கேள்வி… இங்க வந்ததுக்கு அப்பறம் எங்கள்ல ஒருத்தி நீ… இனிமே உன்னால சாதாரண வாழ்க்கை வாழ முடியும்னு நினைச்சு கூட பார்க்காத… என்று அழுத்தமாக அவன் கூற.. மனதால் நொந்து விட்டாள் அமிர்தா…

இதை அவள் ஏற்கனவே எதிர்பார்த்து தான்…இருந்தாலும் அவன் வாய் மொழியால் கேட்கும் பொழுது அவளுக்கு மேலும் வலித்தது…

அப்போது அங்கே வந்த தவான்…. பாய்… புது பொருள் எல்லாம் வந்துருச்சு… அதையும் வச்சுடாலமா… என்று பணிவாக கேட்க…

ம்ம்ம்..என்று மட்டும் செய்கை செய்து விட்டு… தவான் எடுத்து வந்த புது பெட்டியை முதுகில் கட்டி கொண்டு அவன் தண்ணீருக்குள் குதிக்க தயாராக..

ஹேய்… உனக்கு இங்க என்ன வேலை… என்கூட வா… என்று அழைக்க… ஏனோ இதுவரை சாம்பல் விழியனிடம் உள்ள பாதுகாப்பு உணர்வு தவானிடம் அவளுக்கு தோன்றவில்லை போலும்…. அவள் பாவமாக சாம்பல் விழியானை நோக்க… அவனோ அதற்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லாததை போல் தண்ணீரில்  குதித்து விட்டான்…

ஆம் தண்ணீருக்கு அடியில் தான் அவர்களது ஆயுதத்தை பத்து அடி தூரம் தோண்டி.. ஒரு பாதுகாப்பான இடத்தில் புதைத்து வைக்கிறார்கள்… அதிலும் சம்பால் விழியனின் பிங்கர் பிரிண்ட் (finger print) மற்றும் ஐரிஸ்(iris) இருந்தால் தான் அந்த பெட்டியை திறக்கும் படி செய்திருந்தான் …

இப்போது அவன் தண்ணீருக்குள் குதித்து விட…. உள்ளே சென்ற பத்து நிமிடத்தில் வெளி வந்த சாம்பல் விழியானின் இதழ்கள்… அமிர்தாவின் இதழோடு இணைந்திருந்தது….

சனா💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  1 Comment

  1. deiiiii military 😂😂😂😂 un romance ku alave illa da 😂😂😂❤️❤️❤️❤️❤️ enna ma performance pandra 😂 ana intha akka athula acid utha plan pottanga pola🤧🤧🤧 pochu usara iru da…
   deiii sambal kanna 😍😍😍😍🙈🙈🙈🙈 vara vara romba impress pandra da ne 🙈🙈🙈🙈😍😂 ama antha aathukulla va kuthicha 🙄🙄🙄🙄🙄 athula pona uyiridaiye vara mudiyathe 🙄🙄🙄 nee herola bayangarama aalu than da nee en da unga weapons vaika vera edam kedaikalaiya 😂😂😂😂😂 anga than vaikanuma 😂😂😂

   ami ma 😂😂😂😂 romba valithu 😂😂😂 thodachiko 😂😂😂 sight adikalam ana athukunu ippadi vellam vara alavuka 😂😂😂 adipa un jollu la avan nanainchira poran pathu😂😂😂😂 enaku intha thiva paya Mela santhegama iruku ka 😂😂😂😂 ethyeee 😲😲😲😲😲 kiss pannitanaaaaa 😲😲 super ud ka ❤️❤️❤️❤️