Loading

போட்டி விவரங்கள்:

1. லவ் – மந்திரம் இது தான் குறுநாவல் போட்டிக்கான தீம். “லவ் அட் பர்ஸ்ட் சைட்” என்ற முதல் பார்வையில் தோன்றிய காதலை மையப்படுத்தி கதைகள் புனையப்பட்ட வேண்டும். அந்த கதையோட்டத்தில், காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன், திரில்லர் என இன்னும் பல வகையையும் புகுத்திடலாம்.

2. கதைகள் எழுத்தாளரின் சொந்த கற்பனையாக இருத்தல் அவசியம்.

3. இம்முறை அனைவருமே அவர்களது சொந்த பெயரில் தான் போட்டியில் பங்கேற்க இயலும்.

4. ஒருவர் ஒரு கதை மட்டுமே எழுத இயலும்.

5. EMA (extra marital affair) வகை கரு (நாயகன் நாயகியை மையப்படுத்தி, அவர்களுக்கு affair இருப்பது போலான கரு), விரிவான படுக்கையறைக் காட்சிகள், ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

6. போட்டி ஆரம்பிக்கும் தேதி: ஆகஸ்டு 01, 2024
போட்டி முடிவடையும் தேதி: அக்டோபர் 15, 2024
போட்டிக்கு பதிவு செய்ய இறுதி தேதி: ஜூலை 31, 2024
கண்டிப்பாக முடிவு தேதி நீட்டிக்கப்பட மாட்டாது.

7. கதையின் வார்த்தை அளவு – 20000 முதல் 25000 வரை

8. வோட்டிங் (vote) முறைப்படியே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதில் தளத்தின் முடிவே இறுதியானது.

9. மற்ற தள எழுத்தாளர்களும் தாராளமாக பங்கு கொள்ளலாம். தள பாகுபாடுகள் இல்லை.

10. புது எழுத்தாளர்கள், நிறைய கதைகள் எழுதிய எழுத்தாளர்கள் என்ற பாகுபாடு இன்றியே போட்டியை நடத்திச் செல்ல விரும்புகிறோம். புத்தகம் பதிப்பிக்கவிருப்பதால், எழுத்துப்பிழைகளை முற்றிலும் தவிர்ப்பது நலம். போட்டியில் வெற்றி பெறவும் எழுத்துப்பிழைகளை களைந்து பதிவிடுவது அவசியம்.

11. போட்டி முடிவு வெளிவந்த பின், ஒரு மாத காலம் புத்தகமிடப்படாத அனைத்து கதைகளும் தளத்தில் இருக்க வேண்டும். அதன் பிறகு நீக்கிக்கொள்ளலாம்.

போட்டியில் வெற்றி பெரும் முதல் மூன்று கதைகள் யான் பதிப்பகத்தின் மூலம் புத்தக திருவிழாவிற்கு புத்தகமாக வெளிவரும். முடிவுற்ற கதைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

எழுத்தாளரை தொடர்ந்து எழுத்துப் பயணத்தில் பயணிக்க வைப்பதில் மாபெரும் பங்கு வாசகர்களுக்கே உள்ளது. தொடர்ந்து போட்டிக்கதைகள் படித்து, அனைத்திற்கும் நிறைவான விமர்சனம் வழங்கும் வாசகர்களுக்கு புத்தகப் பரிசு வழங்கப்படும்.

(பின் குறிப்பு: வெற்றி பெரும் கதைகள் புத்தகத் திருவிழாவிற்கு புத்தகமாக வரவிருப்பதால், கண்டிப்பான முறையில் போட்டி முடிவு தேதி நீட்டிக்க இயலாது. பிற தள எழுத்தாளர்கள் புத்தகம் பதிப்பிக்க விரும்பவில்லை என்றால், கெஸ்ட் ரைட்டராக பங்கு கொள்ளலாம். வெற்றி பெற்ற பிற தள எழுத்தாளர்கள் புத்தகம் பதிப்பிக்க விரும்பவில்லையென்றால், நான்காவது இடத்தில் இருப்பவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படும்.)

போட்டியில் பங்கேற்க விரும்பும் எழுத்தாளர்கள் கீழுள்ள கூகிள் பார்மை நிரப்பும் படி கேட்டுக் கொள்கிறோம். நன்றி!

https://forms.gle/CJPzRtrCs3BmhiYT8

போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தூரிகை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
2
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்