Loading

யாரிசைக்க வருகுவதோ? 

நாயகர்கள் : சித்தார்த் அபிமன்யு & தேவ் ஆதித்யா

நாயகி : ஜீவவாஹினி

முன்னோட்டம் : 

“வாஹி!” என மெதுவாக அவள் கன்ன கதுப்புகளை தன் விரல்களால் தொட முயன்றவனை நாசுக்காக தன் இடக்கையால் தவிர்த்தாள் ஜீவவாஹினி.

“எதுக்கு என்னை இங்க வர வச்சிங்க?”

“…”

“என்ன விஷயம்னு சொல்லுங்க?” 

“…”

“பச்! சொல்லுங்க! எனக்காக அங்க எல்லாரும் காத்திட்டு இருப்பாங்க!” 

“வெயிட்! வெயிட் வாஹி. இன்னைக்கு உன்னோட எங்கேஜ்மெண்ட் ரைட். சோ, உன்னை பார்க்கணும் போல இருந்தது.”

அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கருவிழிகளை தன் ஆளுமையான விழிகளால் நிதானமாக அளந்த சித்தார்த் அபிமன்யு,

“கங்கிராட்ஸ்! ரொம்ப ரொம்ப அழகா இருக்க வாஹி…” என மெல்லிய குரலோடு அவள் முகத்தினை மெதுவாக நெறுங்கியவன் வெகு நிதானமாக அவள் முகத்தின் ஒவ்வொரு பாகத்தையும் ரசித்தான்.

சோஃபாவில் அமர்ந்தவளின் முழு தேகமும் நடுக்கத்தை வெளிப்படையாக தெரிவிக்க அவள் முகத்தில் ஊர்ந்த அவன் மூச்சுக்காற்று அவளை சிதைத்துக் கொண்டிருந்தது. 

இதழ்கள் இரண்டும் விரிய அவள் விழிகளுக்குள் தன்னை ஆழ்ந்து நோக்கியவனின் மனதில் மகிழ்ச்சி. மனதின் ஏதோ ஒரு மூலையில் தன்னை, தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்வானோ என எண்ணி வந்திருந்தவளுக்கு மீண்டும் மீண்டும் கிட்டிய தோல்வியில் சிதைந்து போயிருந்தது அவன் காதலுக்காக தவிக்கும் அவள் மனம். 

அதே நேரம் அருகிலிருந்த அவளுடைய அலைபேசி சத்தமிட்டு அழைக்க இருவரின் கவனமும் அதில் சென்று நின்றது. ‘தேவ் அத்தான்!’ என ஒளிர்ந்து அடங்கிய அலைபேசியின் திரையில் சென்று விழுந்த சித்தார்த்தின் முகத்தில் சட்டென்று இறுக்கம் குடியேறியது. 

அருகிலிருந்த அவள் அலைபேசியை அவன் எடுக்க நினைத்து தன் கையை நீட்டும் முன் சட்டென அதை உயிர்ப்பித்து தன் காதிற்கு கொடுத்தாள் ஜீவவாஹினி.

“ஹாய்! புதுபொண்ணு! என்ன பண்றீங்க?” என அவள் காதிற்குள் ஒலிக்க வேண்டிய வார்த்தைகள் எல்லாம் அருகில் அமர்ந்திருந்த சித்தார்த்தின் செவிகளை தீண்டும் அளவிற்கு வெகு உற்சாகமாக வந்து விழுந்தது தேவ் ஆதித்யாவின் குரல்.

“அத்…அத்தான்!” என சித்தார்த்தின் முகத்தை பார்த்தபடியே மெல்லிய சத்தமெழுப்பினாள் ஜீவவாஹினி.

“ஜீவா! உன்னை பார்க்கணும் போல இருக்குடா. ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு வெளிய வந்து நில்லேன்… உன்னை ஒருமுறை பார்த்துட்டு உடனே போய்டுவேன்…”

முகத்தில் லேசான அதிர்ச்சி பரவ, “இப்ப எங்க இருக்கீங்க அத்தான்?” என தவிப்பின் உச்சத்தில் நின்றாள் அவன் மனதை கொய்தவள்.

“டேய்! உங்க வீட்டுக்கு வெளிய தான் நிக்கறேன். ஸாரிங்க மேடம்! எங்க மாமா வீட்டுக்கு வெளியே தான் நிக்கறேன். மேடம் எப்ப வெளிய வரதா இருக்கிங்க? இல்லனா நானே இப்ப உள்ள வரட்டுமா? ஹ்ம்ம்?” என்று கூறிய தேவ்வின் புருவங்கள் அடுத்து வந்து விழுந்த வார்த்தைகளில் இடுங்கியது.

“அதுக்கு நீ மைலாப்பூர் போயிருக்க கூடாது. நீலாங்கரை தான் வரணும் ஆதித்யா ஏன்னா உன்னோட ஜீவா இங்க என் கூட என் வீட்ல தான் இருக்கா…” என்று அலட்சியமாக விழுந்தது சித்தார்த்தின் சொற்கள்.

*****

அடர் சிவப்பு நிற டிசைனர் புடவையில் எப்போதும் போல மெல்லிய அலங்காரங்களால் மின்னியவளின் அழகு முகத்தினை தன் கையில் ஏந்தியிருந்த சித்தார்த் அவள் கன்னங்களில் தன் இதழ்களை மென்மையாக பதித்து மீண்டு அவளை தன் முழுமைக்கும் இழுத்து தன்னோடு அணைத்து கொண்டு அவள் கழுத்தில் முகம் பதித்து சிவந்த சூடான தன் முத்தங்களை தொடர்ந்தான். 

இருவரின் நிலையை கண்டு சட்டென அங்கிருந்து செல்ல துடித்த தேவ் ஆதித்யாவின் கால்கள் அங்கே நின்றிருந்தவளின் முகத்தினை கண்டு அப்படியே அசையாமல் நின்றது. எந்தவித உணர்வுமின்றி அவமானமும் பிடித்தமின்மையையும் காட்டிக் கொண்டிருந்த தன் மனம் கவர்ந்தவளை எப்படி அதிலிருந்து காக்கவென புரியாமலும் அதன் காரணம் தெரியாமலும் திகைத்து நின்றிருந்தான் தேவ் ஆதித்யா. 

சித்தார்த்தின் கைப்பிடியில் சிரமப்பட்டு நின்றிருந்தவளின் நிலையை சற்றும் உணராமல் தன் தொடர் உணர்வு குவியல்களால் அவளை தன் இதழுடைத்த உணர்ச்சிகளுக்கு பயன்படுத்தி கொண்டிருந்தவனின் நெஞ்சம் அவள் கழுத்தில் ஊர்ந்த மஞ்சள் வாசமும் ஈரமும் காயாத கற்றை உணர்ந்தவுடன் அவசரமாக அவளை விட்டு விலகி நின்றது. அவள் கழுத்தில் படர்ந்திருந்த தாலியோடு அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்த சித்தார்த்தின் முகத்தில் சட்டென்று தோன்றியது அருவருப்பு தான்.

அவன் விலகிய வேகத்தில் தள்ளாடிய மேனியோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் இதயம் அவன் பார்வையில் சுக்கு நூறாக சிதறியது. அதுவரை இருந்த மோகமும் தவிப்பும் அறுபட அவளை பார்த்தவனின் பார்வையில் வெளிப்படையான கோபமும் ஆத்திரமும் தெரிந்தது.

“ச்ச! நீயா? பச்!” என்றவனின் வார்த்தைகளில் அதிர்ந்து போனது தேவ் ஆதித்யா தான். தன்னவனின் மனதினை நன்றாக அறிந்து வைத்திருந்த ஜீவவாஹினி எந்தவித அதிர்ச்சியும் அடையாமல் தன் உணர்வுகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவன் தோள்களை தொட முயன்று கையை உயர்த்தவும் அவளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் வேகமாக அவள் கையை தட்டிவிட்டான் சித்தார்த் அபிமன்யு.

*****

“வாஹி!”

“…”

“வாஹி! உன்கிட்ட தான் பேசுறேன்” 

“…”

“வாஹி! என்னை பாரேன் ப்ளீஸ்!” அவனுடைய தொடர் அழைப்பில் குனிந்து தன் புடவைகளை மடித்து வைத்து கொண்டிருந்தவள் சட்டென நிமிர்ந்து அவன் முகம் காண, ‘என்னை புரிந்து கொள்ளேன்!’ என்ற பார்வையை தாங்கி நின்றான் சித்தார்த் அபிமன்யு.

“என்கிட்ட பேச உங்களுக்கு அப்படி என்ன இருக்க போகுது. உங்க வீ..வீணா வருவாங்க! அவங்க கிட்ட பேசுங்க…” என நிமிர்ந்து அவனை பார்த்தவள் மீண்டும் தன் வேலைகளை தொடர்ந்தாள்.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து நின்றவன் அவளின் இடையை தன் கைகளால் வளைத்து, “வாஹி! எனக்கு பேசணும். உன்கிட்ட தான் பேசணும். நீ அதை கேட்கணும். என்னை நிமிர்ந்து பார் வாஹி…” என தன் உயரத்திற்கு காற்றில் அவளை உயர்த்தி பிடித்தவனின் தோள்களை மிகவும் இறுக்கமாக பிடித்து கொண்டாள் அவனின் ஜீவவாஹினி. 

தன் முகத்தோடு அவள் முகத்தை அணைத்து நின்றவனின் கரங்கள் பிடிவாதமாக அவள் இடையை சுற்றி படர்ந்து தன்னோடு இறுக்கியது. “சொன்னா புரியாதா டி உனக்கு? என்னை கெஞ்ச விடணும்னு நினைக்கறியா? ஹம்? வாஹி! ஜஸ்ட் லிஸ்டன் டூ மீ…” என மீண்டும் துவங்கியவனை இடைநிறுத்தி,

“இல்ல! இப்ப வீணா…” என அவள் கூறி முடிக்கவில்லை அவள் இதழ்களை தன் இதழ்களை அழுத்தமாக மூடினான் அவளின் உள்ளம் கவர் கள்வன் சித்தார்த்.

அவளோடு இணைந்து மெத்தையில் அவள் புடவைகளுக்கு நடுவில் சென்று விழுந்தவன் மீண்டும் மீண்டும் அவள் இதழ் தீண்டினான். “வா..ஹி! ஜஸ்ட் கிவ் மீ சம் டைம். ஐ கான்ட்…” என பிதற்றியபடியே அவளிடம் புதைந்து போனவனுக்கு மீண்டும் தன் நிலையை அடையவே வெகு நேரம் தேவைப்பட்டது. 

*****

“ஐ லவ் யூ ஜீவா!” என சட்டென எதிரே நின்றவளின் கரத்தினை மெதுவாக பற்றினான் தேவ் ஆதித்யா.

அவனுடைய வார்த்தைகளை முற்றிலும் எதிர்பார்க்காத தாக்கத்தில் தன் இதழ்களை பற்களால் அழுந்த கடித்தவள் உடலெங்கும் பரவியது நடுக்கம்.

“ஜீவா! இங்க என்னை நிமிர்ந்து பாரேன்… ப்ளீஸ் ஜீவா…” என தலைகுனிந்து நின்றிருந்தவளின் கன்னத்தினை தன் ஒரு கையால் தாங்கியவன், “ஸாரிடா! உன்னோட மனசு எனக்கு புரியுது. உன்னால இப்பத்திக்கு என்னை ஏத்துக்க முடியாதுனும் புரியுது. ஆனா, இந்த கல்யாணம் நடக்கட்டுமே ஜீவா…” என அவள் அருகே நெருங்கி நின்ற தேவ்வின் முகத்தை நிமிர்ந்து பார்த்த ஜீவவாஹினியின் முகத்தில் வெளியே சொல்ல முடியாத துயரம்.

“நீ அவனை காதலிச்ச… ஆனா அவன் உன்னை வேணாம்னு தான சொன்னான். இன்னமும் அவனுக்காக நீ ஏன் காத்திட்டு இருக்கணும்டா… நீ யாரோ ஒருத்தி இல்ல நீ என் மாமா பொண்ணு. உன் நல்லதுலையும் கெட்டதுலையும் எனக்கும் பங்கு இருக்கு ஜீவா. இது உனக்காகனு எல்லாம் நீ யோசிக்காத எனக்காக… என்னோட காதலுக்காக இந்த கல்யாணம் நடக்கட்டும்.”

“…”

“உனக்கு வேற எந்த பயமும் வேண்டாம். நம்ப மேரேஜ் லைஃப்ல உனக்கு எந்த சங்கடமும் வராது. நீயா என்னை புரிஞ்சுக்கற வரைக்கும் நான் உன்னை எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் ஜீவாமா… ஐ லவ் யூ ஃப்ரம் ஆல் மை ஹார்ட்ஸ்!” என கூறி முடித்த தேவ் ஆதித்யாவின் குரலில் கொட்டிக்கிடந்தது காதல்.

ஹாய் பிரியாணி’s!

எல்லாரும் நலமா? ரொம்ப பெரிய டீஸர் போட்டு இருக்கேன். படிச்சிட்டு கதையின் போக்கை கெஸ் பண்ணுங்க. ரெண்டு ஹீரோல நம்ப ஜீவாக்கு யார் ஜோடினு கண்டுபிடிங்க😜

நெருப்பாவும் பனியாவும் இருக்கற ரெண்டு ஹீரோஸ் அவங்களோட ரெண்டு விதமான காதல், அதுல நம்ப நாயகி யார தன்னுடைய சரிபாதியா ஏத்துக்க போறாகனுங்க தாங்க நம்ப கதையில பாக்க போறோம்.

Keep waiting for story! Will post the episodes soon!

Yours,

Briyani.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0
  • Select

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்