Loading

மோதும் மேகங்கள்-4
       
             காலையில் ஸ்வேதாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கூறப்படவே இசை அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள்.

       அப்போது கவிதா “ஹே இசை நில்லு. சாப்ட்டுட்டு போ”  என்று வழக்கமான டயலாக்கை கூறினாள்.
    
             “இல்லம்மா எனக்கு வேண்டாம்.ஸ்வேதாக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம். நான்  போயிட்டு வரேன்” எனக் கூறிவிட்டு செல்ல எத்தனிக்க முகிலன் “இசை இரு நானும் வர்றேன்” என கூறினான்.

             முகிலனும் இசையும் ஸ்வேதா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றார்கள்.அங்கே ஸ்வேதா இருக்கும் அறைக்கு சென்ற உடன் அவளது காலில் கட்டு போட்டிருப்பதை பார்த்து இசைக்கு கண்ணீர் துளிர்த்து விட்டது.

            ” என்ன ஆச்சுடி? எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு?” என  இசை வினவினாள்.

            “நேத்து உன் வீட்ல இருந்து போகும் போது ஒரு பைக் காரன் இடிச்சி கீழே விழுந்துட்டேன். கீழே விழுந்ததுல அடிப்பட்டுச்சி. அப்போ ஒரு கார் காரன் வந்து என் காலில் கார ஏத்திட்டு போயிட்டான்”  எனக் கூறினாள் ஸ்வேதா.

         அப்போது மருத்துவர் வரவே அவர் ஸ்வேதாவை பரிசோதனை செய்துவிட்டு   “மிஸ் ஸ்வேதா உங்களுக்கு பயப்படுற மாதிரிலாம் ஒன்னும் இல்ல.கிரீன் ஸ்டிக் பிராக்சர் தான். ஒரு ரெண்டுல இருந்து மூணு மாசம் வரைக்கும் ரெஸ்ட் எடுத்தா போதும்”  என கூறிவிட்டு சில மாத்திரை மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். இசை அந்த மருந்து சீட்டை வாங்கிக்  “நான் போய் வாங்கிட்டு வரேன்” எனக் கூறிவிட்டு சென்றாள். அவள் கதவை திறக்க சரியாக அந்நேரம் ஆதியும் ஸ்வேதாவை பார்க்க வந்தான். இருவரும் மோதிக் கொள்ள இசை ஆதியை பார்த்து முறைத்துக் கொண்டே “கண்ணு தெரியாதவனே..” என வழக்கம் போல் திட்ட முற்பட அவள் இருக்கும் இடத்தைக் கருதி “சரியான இடத்துக்கு தான் வந்து இருக்க.இந்த ஹாஸ்பிடல்ல கண் டாக்டர்ங்க இருப்பாங்க.போய் அவங்கள பாரு” எனக் கூறினாள் இசை.

       இதைக் கேட்ட ஆதி “ஹே யாருக்கு கண்ணு தெரியலன்னு சொல்ற நீ” என கோபமாக கூறவே இசையும் அது  மருத்துவமனை என மறந்து “உனக்கு தான்” என அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள். அப்போது அங்கே வந்த ஒரு செவிலியர் “ஹாஸ்பிடல்ல சத்தம் போட கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா?சைலண்டா இருங்க” எனக் திட்டிவிட்டு சென்றார். ஆதி இசையை பார்த்தவாறு நின்று இருந்தலால் அச்செவிலியர் அவனை காணவில்லை.

          இசையும் அவனை முறைத்துக் கொண்டே மருந்துகளை வாங்க சென்றாள். ஆதியும் ஸ்வேதாவை காண உள்ளே சென்றான்.
ஆதி ஸ்வேதாவின் உடல்நலம் பற்றி விசாரித்து விட்டு அவளுக்கு இரண்டிலிருந்து மூன்று மாதம் வரை ஓய்வு வேண்டும் என மருத்துவர் கூறி இருப்பதை அறிந்து அவன் ஸ்வேதாவிடம் “நீங்களே  உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரையாவது எனக்கு  அசிஸ்டன்ட்ட  இருக்க தேடி தர முடியுமா? ட்ரீ மன்ட்ஸ் கழிச்சி நீங்க வந்து கண்டியனு பண்ணிக்கோங்க. உங்களுக்கு இந்த ட்ரீ மன்ட்ஸ்க்கான சம்பளத்த நான் தந்துறேன்.இப்ப சூட்டிங் பிஸியில் என்னால அசிஸ்டென்ட் எல்லாம் தேடறது கஷ்டம்”  என அவளுக்கு வேண்டுகோள் விடுத்தான்.

       அப்போது சரியாக இசை உள்ளே நுழையவே முகிலனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

          ஆதிக்கு கால் வரவே அவன் “ஒன் மினிட்” என கேட்டு விட்டு வெளியே சென்று பேச ஆரம்பித்தான். ஸ்வேதாவின் அறையில் முகிலன் இசையை ஆதிக்கு அசிஸ்டென்டாக பரிந்துரைக்குமாறு ஸ்வேதாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

        இசை ஆதியின் பெயரை கேட்டதும் அந்த வேலை தனக்கு வேண்டாம் என மறுக்க முகிலன்  “ஸ்வேதா அக்காக செய் இசை. இப்ப நீ வேண்டான்னு சொல்லிட்டேன ஆதி சார் வேற யாரையாவது அசிஸ்டென்டா தேர்ந்தெடுத்துத்தா ஸ்வேதா அக்காக்கு வேலை போய்டும். இப்ப நீ இந்த வேலையில் சேர்ந்தா ஸ்வேதா அக்காவுக்கும் வேலைல இருந்த  மாதிரி இருக்கும். உனக்கும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்ச மாதிரி இருக்கும்” எனக் கூறினான்.

      ஸ்வேதா “ஆதி சார் கிட்ட கேட்டு உனக்கு ஒரு வேலை வாங்கித் தரலாம்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். பட்  அவர் கூட  சண்டை போட்டு நீயே உன் இமேஜ கெடுத்துக் கிட்ட. இப்போ இந்த வேலைக்கு நா அவள ரெக்கமெண்ட் பண்ணாலும் ஆதி சார் ஒத்துக்கணும்ல?”  என இசையிடம் ஆரம்பித்து முகிலன்யிடம் முடித்தாள்.

     ” நம்ம ஜஸ்ட் கேட்டு பார்க்கலாம் அக்கா..”  என முகிலன் கூறிக்கொண்டிருக்கும் போதே கால் பேசி முடித்துவிட்டு ஆதி உள்ளே நுழைந்தான்.

        “சரிங்க ஸ்வேதா உடம்ப பாத்துக்கோங்க. முடிஞ்சா உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா எனக்கு அசிஸ்டென்டா இருக்க முடியுமான்னு கேட்டு சொல்லுங்க.அப்புறம் உங்க ஹாஸ்பிடல் பில்ல நா பே பண்ணிட்டேன்.” எனக் கூறினான் ஆதி.

      ஸ்வேதா   “உங்களுக்கு எதுக்கு சார்  தேவ இல்லாத சிரமம்.நீங்க என்ன வந்து பார்த்ததே பெரிய விஷயம்”  என கூற “எனக்கு இதலாம் ஒரு சிரமும் இல்ல” என கூறினான் ஆதி.

      ஸ்வேதா தயங்கிக் கொண்டே “தேங்க்ஸ் சார்.அப்புறம் இசை நல்லா வேலை செய்வா.அவ பேசுனதுல்லாம் மனசுல வச்சிகாதீங்க. நீங்க யாருன்னு தெரியாம பேசிட்டா..” எனக் கூறினாள்.

      ஆதி  “ஓகே ஸ்வேதா. இவங்களே எனக்கு அசிஸ்டென்டா இருக்கட்டும். இவங்க கிட்ட எல்லாம் டீடைல்சும் சொல்லிடுங்க. நாளைல இருந்து இவங்க ஜாயின் பண்ணிக்கித்தும்”  எனக் கூறிவிட்டு சென்று விட்டான்.

         அவன் சென்றதும் இசை  நான் “அவனுக்கு அசிஸ்டன்ட் இருக்கேன்னு ஒத்துக்கவே இல்லையே. அதுக்குள்ள நீங்களே ஏன் சொன்னீங்க?” என முகிலனையும் ஸ்வேதாவையும் முறைத்தாள்.
  
         முகிலன் “இசை உனக்கு தேவை ஒரு வேலை. அது தேடி வரும் போது ஏன் வேண்டாம்னு சொல்ற? ஆதி சாரப் பாத்தியா நீ அவரு கூட சண்டைப் போட்டாலும் பெரிய மனசோட உனக்கு வேலை தந்து இருக்காரு. ஆதி சார் யாருன்னு உனக்கு புரிஞ்ச இருக்கும்னு நினைக்கிறேன். அவர் கிட்ட உன் வாயாடி தனத்தலாம் காட்டாம ஒழுங்கா நாளைல இருந்து போய் வேலையை பாரு”  என இசையிடம்  கூறி விட்டு ஸ்வேதாவிடம் கதை அளக்க தொடங்கிவிட்டான்.

    இசைக்கு ‘இப்படி அந்த  கண்ணு தெரியாத மனித குரங்கு கிட்ட என்ன மாட்டி விட்டுட்டீங்களே’ என மனதில் புலம்ப மட்டும் தான் முடிந்தது. ஆதியோ இசையை நினைத்து  வில்லத்தனமாக சிரித்துக்கொண்டு சென்றான்.
    
              

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்