Loading

மோதும் மேகங்கள்-12

         ஆதியை கண்ட இசை அதிர்ச்சியுடன் எழுந்து நிற்க ஆதியும் நின்று கொண்டிருப்பதை கண்டு முகிலன் “உட்காருங்க ஆதி சார்.நான் போய் உங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் எடுத்துட்டு வரேன்.நீங்க இசை கூட பேசிட்டு இருங்க” எனக் கூறிவிட்டு சமையலறையில் நுழைந்தான்.

           இசை ஆதியை கண்டு அதிர்ந்தது என்னமோ உண்மை தான்.ஆனால் அது ஒரு  கணத்திற்கு மட்டுமே. “உட்காருங்க ஆதி.எங்களுக்கு விருந்தோம்பல்ன என்னனு தெரியும்.வீட்டுக்கு வந்தவங்களை உட்கார வெச்சு எதாவது சாப்பிடு கொடுத்துதான் அனுப்புவோம்” என நேற்று ஆதி அவளை அமருமாறு கூட கூறாததை உள் குத்து ஆக வைத்து நக்கலாக கூறினாள்.

        ஆதி எதுவும் கூறாமல் அமர்ந்து விட்டபிறகு “சொல்லுங்க மிஸ்டர் ஆதித்யன்.எதுக்கு இங்க வந்தீங்க?”  என இசை கேட்டாள்.

       “நான் உன்கிட்ட  பேசனும்” என ஆதி கூற  “என் கிட்ட தான இப்போ பேசிட்டு இருக்கீங்க” என இசையும் அவன் என்ன கூற வருகிறான் என புரிந்தும் அவனை வெறுப்பேற்றி கொண்டிருந்தாள் இசை.

         “நான் உன்கிட்ட தனியா பேசனும்” என இசை வேண்டும்  என்று தான் பேசுகிறாள் என அறிந்தும் அவளை பிறகு கவனித்து கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு பொறுமையாக பதிலளித்தான் ஆதி.

            “இங்க நம்ம ரெண்டு பேரும் மட்டும் தானே தனியா இருக்கோம்.எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க” எனக் கூறினாள் இசை.

        “எதுவா இருந்தாலும் இங்கேயே பேசலாமா?” என ஆதி நக்கலாக வினவ “உனக்கு ஆல்ரெடி கண்ணு தெரியாது.இப்போ காதும் அவுட்டா? நான் தான் இங்கேயே பேசலாம்னு சொல்லிட்டேனே. திரும்பி திரும்பி அதே கேட்டுகிட்டு இருக்க”  என சலித்துக் கொண்டாள் இசை.

       “சரி உன் இஷ்டம்.நீ வேலைய விட்டத இன்னும் உன் வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரியாதுனு தான் தனியா பேசலாம்னு சொன்னேன்.ஆடு வழிய வந்து என்னை வெட்டு வெட்டு தலை நீட்டும் போது நான் என்ன வேணாம்னா சொல்லுவேன்.இங்கேயே பேசலாம்” என  அவள் காதுகளில் மட்டும் விழுமாறு மெல்லமாக கூறிவிட்டு  “இசை நீ வேலைய..”  என சமையல் அறையை நோக்கி முகிலன் காதில் விழுமாறு  உரக்க கத்தி கூறிக் கொண்டிருக்கும் போதே ஆதியின் வாயை பொத்தி  “வா தனியா போய் பேசலாம்” எனக் கூறினாள் இசை.

     “இப்போ நம்ம தனியா தானே பேசிகிட்டு இருக்கும் இசைஐஐ..” என அவன் சிரித்துக் கொண்டே நக்கலடிக்க இசை எதுவும் பேசாமல் அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவள் அறைக்கு சென்றாள்.

      அறைக்கு வரும் வரை  ஆதியிடம் இருந்த நக்கல் எல்லாம் மறைந்து வில்லத்தனமாக சிரித்துக்கொண்டேன் அவளது அறை கதவை தாழிட்டான்.

         “என்ன பேசனும் இப்போ ? அதான் நேத்தே எல்லாமே பேசி முடிச்சுட்டோம்ல” என இசை கோபமாக வினவ ஆதி அதையெல்லாம் காதில் வாங்காதவறு சென்று இசையின் மெத்தையில் அமர்ந்தான்.

      “ஹேய் என் பெட்ல உட்காராதே சேர்ல வந்து உட்காரு” என  இசை அருகில் இருந்த நாற்காலியை எடுத்துப் போட்டு கூறினாள்.அவள் அவளது மெத்தையில் யாரையும் அமர அனுமதிக்க மாட்டாள். மெத்தை விரிப்பை கூட அவளை எடுத்து மாற்றி போட்டு விடுவாள்.

        “ஓ மேடமுக்கு பெட்டில் உட்கார கூடாதா?” எனக் கூறிக் கொண்டே ஆதி மெத்தையில் நன்றாக படுத்து புறண்டான்.

         “ஹேய் மனசாட்சி இல்லாத மனித குரங்கே.முதல்ல எழுந்திரிடா” என இசை கத்த கத்த அவன் வேண்டுமென்றே புரண்டு கொண்டிருந்தான்.

     ‘இந்த குரங்கு சொல்றதெல்லாம் கேட்காது.முதல்ல பேசி அனுப்பிவிட்டுனும்’ என நினைத்துக் கொண்டு இசை பல்லைக் கடித்துக் கொண்டு  “என்ன சொல்ல வந்த அத சொல்லி விட்டு போ” என்றாள்.

       “ஹா..” எனக் கூறிக்கொண்டே எழுந்து அமர்ந்தவன் “ஏன் இன்னிக்கு வரல? வரலனா எனக்கு கால் பண்ணி சொல்லனும்னு கூட தெரியாதா?” என அதிகாரமாக வினவினான் ஆதி.

        “அதான் நான் நேத்து சொன்னல்ல. நான் இனி வேலைக்கு வரல.நீ வேற ஆள பாத்துக்கோனு” என ‘இதைக் கேட்க தான் இவன் வந்தானா’ என இன்னும் கோபம் ஆனாள் இசை.

        “நீ சொன்னா நான் கேட்கனுமா ? நான் தான் உன் பாஸ் அது ஞாபகம் இருக்கா?” என வினவினான் ஆதி.

     “வேலைய விட்ட அப்புறம் எப்படி சார் நீங்க என்னோட பாஸ் ஆவிங்க?” என ஆதியின் கேள்விக்கு எதிர்கேள்வி கேட்டாள் இசை.

        “நீ வேலைய விடறேன் தான் சொன்ன.அத நான் ஏற்கவே இல்லையே.இப்பவும் நீ என் கிட்ட தான் வேலை செய்யுற. இப்பவும் நீ என்னோட அசிஸ்டன்ட் தான்” என அவளது தலையணை மீது கையை வைத்துக் கொண்டு மெத்தையில் ஒய்யாரமாக ரங்கநாதரை போல் படுத்துக்கொண்டு கூறினான் ஆதி.

         “மிஸ்டர் ஆதித்தியன் உன்கிட்ட வேலை செய்வதும் செய்யாததும் என்னுடைய இஷ்டம்.எனக்கு உன்கிட்ட வேலை செய்யும் பிடிக்கல” எனக் கூறினாள் இசை.

            “ஓ அப்ப சரி வேலைக்கு வரதும் வராததும் உன் இஷ்டம்தான் அதே மாதிரி வேலைக்கு வராதவங்களுக்கு  சம்பளம் தரதும் தராததும் என்னோட இஷ்டம்”  என ஆதி வில்லத்தனமாக சிரித்துக் கொண்டே இசையை பார்த்து கூற இசை பிரியாவிற்கு அவன் யாரை குறிப்பிட்டு கூறுகிறான் என்று புரிந்து போயிற்று.

              “டேய் மனசாட்சி இல்லாத மனித குரங்கே.உனக்கும் எனக்கும் தான பிரச்சனை. எதுக்கு நடுவுல ஸ்வேதாவ இழுக்குற?”  என கோபத்துடனும் இயலாமையுடன் கேட்டாள் இசை.

          “நானா இழுக்கலையே இசை.நீதான் இழுக்க வைக்கிற” என ஆதி தன் இரண்டு கைகளையும் விரித்து தன்னிடம் பேசி ஒன்றும் ஆகப் போவது இல்லை நீ நான் சொல்வதற்கு ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் என்பதை போலவே சைகை காட்டினான்.

           “அதான் நாம நேத்தே தெளிவா பேசிட்டோம்ல்ல” என இசை கேட்க “கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பாருங்க மேடம்.நான் உன்கிட்ட ஆரம்பத்துல ஏன் வந்தனு கேட்டது தான்.அதுக்கு அப்புறம் நீயே பேசிட்டு,நீயே கிளம்பிட்ட. என்ன எங்க பேசவிட்ட?” என ஒற்றை புருவத்தை தூக்கி வினவினான் ஆதி.

       “சரி ஓகே” என பல்லை கடித்துக் கொண்டே  “நான் கூடிய சீக்கிரமே வேலைக்கு போயி நீ ஸ்வேதாவுக்கு தரப்போகும் இந்த மூணு மாச சம்பளத்தை வட்டியோட உனக்கு திருப்பி கொடுத்துடறேன்” எனக் கூறினாள் இசை.

        “ஹேய் என்ன பார்த்தா உனக்கு கந்துவட்டிக்காரன் மாதிரி தெரியுதா ? நான் அதெல்லாம் பண்றது இல்லை” என கூறினான் ஆதி.

           “இப்ப என்னதான் பண்ண சொல்ற?” என கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள் இசை.

            அதான் சொல்லிட்டேன்ல்ல.ஒன்னு நீ ஒத்துக்குனா மாதிரி வேலைக்கு வா. இல்லனா ஸ்வேதாவுக்கு சம்பளம் போடல, வேலையிலிருந்து தூக்கிட்டேன்ல்லாம் சொல்லக்கூடாது” என இசையை எப்படியாவது வேலைக்கு வர வைக்க வேண்டும் என்ற முடிவோடு கூறினான் ஆதி.

               “சரி வந்து தொலைக்கிறேன். மிருக காட்சியில (ஜு) வேலை செய்யறதா நினைச்சுக்கிறேன்” என சலித்துக் கொண்டு இசை கூற  “என்ன சொன்ன? சரியா கேக்கல” என ஆதி தன் காதை சுண்டுவிரலால் நோண்டிக் கொண்டே கேட்க  “நாளைல இருந்து வேலைக்கு கரெக்டா வந்துரேன்னு சொன்னேன்”  என்ன கூறினாள் இசை.

             “ஹா குட் அப்புறம் அவன் இவன் குரங்கு இப்படி எல்லாம்  என்ன கூப்பிடக் கூடாது. ஒழுங்கா அசிஸ்டன்ட் மாதிரி சார்ன்னு தான் கூப்பிடனும்.புரியுதா?” என மெத்தையில் இருந்து எழுந்து இசை அருகில் வந்து ஆதி கேட்க  “புரியுது சார்” என வேறு வழியில்லாமல் தலையெழுத்தே என கூறினாள்  இசை

            “ம்ம்ம் குட்”  என இசையின் கன்னத்தை கிள்ளிவிட்டு  “வா போலாம்”  எனக் கூறிவிட்டு இருவரும் இசையின் அறையை விட்டு வெளியே வந்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்