Loading

மோதும் மேகங்கள்-1.

        அந்த ரம்மியான மாலை பொழுதில் சூரியன் மறையும் வேளையில் வானம் செம்மஞ்சளாக காட்சியளிக்க குல்மோஹர் மரங்கள் இரு பக்கமும் நிறைந்து இருக்கும் சாலையில் வெள்ளை நிற சுடி அணிந்து தேவதை  போல் ஒரு பெண்  நின்று கொண்டிருந்தாள்.

       அப்போது அங்கு வந்த கார் ஒன்று அவள் மேல் சேற்றை அடித்துவிட்டு சென்றது.  “மனசாட்சி இல்லாத மனித குரங்கே என்னோட புது ட்ரெஸ இப்படி பண்ணிட்டியே. அதுவும் வெள்ளை கலர் ட்ரெஸ் வேற” எனக் கத்திக்கொண்டே கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்து காரைக் குறி வைத்து அடித்தாள். அந்த கல் சரியாக காரில் பட, அந்த கார் நின்றது.

              காரில் இருந்து அழகாக ஒரு இளைஞன் இறங்கி வந்து “ஹே ஏன்  கல் ஏறிஞ்ச” என்று வினவினான்.

        அந்த பெண் அவனை ஒரு பார்வை  பார்த்துவிட்டு “கண்ணு தெரியதவனுக்கெல்லாம் யார் லைசன்ஸ் தந்தது ? இப்படி என்னோட ட்ரெஸ பாழக்கிட்டியே” எனக் கோபமாகக் கூறினாள்.

       “வாட் எனக்கு கண்ணு தெரியாதா?” எனக் கேட்டபடியே அவனது கூலர்ஸை கழற்றி அவளை பார்த்தான். அழகான வட்டமுகம் அதற்கு சிறிதும் பொருத்தமில்லாமல் இருந்த கோபம், அவளது கை, முகம், ஆடைகளில் அவனால் ஏற்பட்ட சேறும் என  அவளை பார்த்ததும் அவன் சிரித்து விட்டான்.

      “இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிற? பண்றதையும் பண்ணிட்டு சிரிப்பு வேற” என்று கடுகடுத்தவளிடம் “இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற” என்றான் அந்த அழகிய வாலிபன்.

       “என்னோட புது ட்ரெஸ்க்கு பதில சொல்லிட்டு போடா” என்றாள். “என்னது டா வா? நா யாருனு உனக்கு தெரியுமா?” என வினவினான்.

        “நீ யார வேணாலும் இருந்துத்து போ. இப்போ என் ட்ரெஸ்க்கு பதில் சொல்லிட்டு போ..” என அவள் அவனை விடமால் நியாயத்தைக் கேட்டு கொண்டு இருக்க அவனோ தனது பர்ஸில் இருந்து சில ஐநூறு ரூபாய் நோட்டுக்களை அவள் கையில் திணித்து, ” இந்தா வச்சுக்கோ.நீ போட்டு இருக்குற ட்ரெஸ விட காஸ்ட்லியா வாங்கிக்கோ, இப்போ என்ன விடு” என்றான்.

அதைக்  கேட்ட அவளோ “நா உன்ன இவ்ளோ நேரம் நிக்க வச்சி பேசுறது இனி யாரயும் நீ இப்படி பண்ண கூடாதுனு தான். அப்புறம் நா காசுக்காக இதலாம் பண்ணல. நா ஆசைய வாங்குன ட்ரெஸ் இது. அந்த கடைலியே ஒரே பீஸ் இது தான். நீ சாரி கேட்டு இருந்தா கூட உன்ன விட்டுட்டு இருப்பேன். பட் நீ இவ்ளோ திமிறா பேசுனதுக்கு அப்புறம் இப்போ உன்ன விடுறதா  ஐடியா இல்லை .சோ நீ என்  வீட்டுக்கு வந்து இத துவச்சி க்ளீன் பண்ணி தந்துத்து போ” என்று சாதரணமாக கூறினாள்.
         அவன் அதிர்ச்சியாகி “வாட்” என்று வாயை பிளந்தான்.
            “என்ன சும்மா சும்மா வாத்து, கோழி, முட்டைனு.வந்து துவச்சி கொடுத்துத்துப் போ” என கூறினாள்.

         “நா துவைக்குனுமா?நா  எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா உனக்கு?” எனக் கேட்டான்.

      “அதான் முன்னாடியே தெரியாதுனு சொல்லிட்டேன்ல. திரும்ப திரும்ப அதயே கேட்டுக்கிட்டு இருக்க” என்று சலித்துக்கொண்டாள்.

    “என்னால முடிஞ்சத செஞ்சிட்டேன்.  இதோ பாரு  என்னால துவைக்கலாம். முடியாது” என கூறிவிட்டு அவளது பதிலைக் கூட  எதிர்பாராமல் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

        அவனை சொடுக்கிட்டு அழைத்து   அவன் கொடுத்த பணத்தை அவனைப் போலவே கையில் திணித்துவிட்டு, “இந்த பணம் எனக்கு தேவை இல்ல. கண்ணா வாழ்க்கை ஒரு வட்டம். இதே மாதிரி உனக்கும் நடக்கும். அப்போ நீ என்ன நினைச்சிப் பார்ப்ப” எனக் கூறிவிட்டு அவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அவன் கோபத்துடன் காரை எடுத்துக்  கொண்டு கிளம்பிவிட்டான்.

        போகும் காரையே வெறித்துப் பார்த்து
கொண்டு “திமிருப்புடிச்சவன்” என திட்டிக்  கொண்டு இருக்கும் போதே “ஹே சாரிடி இசை.  கொஞ்சம் லேட்  ஆய்டுச்சி.” என்று ஸ்வேதா அவள் அருகில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கூறினாள்.

         இசை என்கிற இசைபிரியா தனது தோழி ஸ்வேதாவை முறைத்துக் கொண்டே “கொஞ்சம் லேடா? உன்னால டைமக்கு வரவே முடியாதா? எப்பவும் லேட்” என்றாள்.

         “சாரிடி . நா இருக்குற பீல்ட்(field) அப்படி இசை.ஆதி சாருக்கு ஷுட்டிங் முடிய லேட் ஆய்டுச்சி” என்று தன்னிலை விளக்கம் அளித்தாள் ஸ்வேதா.

       “என்னமோ போடி. பைக் பஞ்சர்  ஆனதும் நா கேப்லியே போய் இருப்பேன் .நா பக்கத்துல தான் இருக்கேன், நா விட்டுறுன்னு லேட் பண்ணிட்ட” என சலித்துக்கொண்டாள் இசை.

        “அதான் சொன்னேலடி..” என கூறிக் கொண்டிருக்கும் போது தான் இசை சேறில் நனைந்து இருப்பதைக் கண்டு  “என்னடி இது சேறபிஷேகம்? என கேட்டாள் ஸ்வேதா.

   “எல்லாம் உன்னால தான். உனக்காக வெயிட் பண்ணும் போது தான் ஒரு கார் காரன் சேத்த  அடிச்சுத்து போய்ட்டான்” என்றாள் இசை.

             இதைக்கேட்ட ஸ்வேதா சிரித்துக்கொண்டே தண்ணீர்  பாட்டிலை எடுத்துக் கொடுத்து அவளை  சேற்றை கழுவிக் கொள்ளுமாறு கூறினாள்.          அந்த இளைஞனோ “திமிருப்புடிச்சவ. எப்படிலாம் பேசுறா” என நினைத்துக்கொண்டு வேகமாக காரை ஓட்டிச் சென்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்