“ஐயோ செல்லம் என்ன ஆச்சு டா அம்மு டாக்டர்ஸ் யாராச்சு இருக்கீங்களா எமெர்ஜெண்சி.” கதறி அழுதுகொண்டிருந்தனர் அந்த சிறுவர்களின் பெற்றோர்கள். உடனே இருக்கையை விட்டு எழுந்த மொழி பிள்ளைகளுக்கு வைத்தியம் பார்க்கலானாள்.
அவள் பையில் இருந்த இதயத்துடிப்பு மானியை (ஸ்டெத்தெஸ்கோப்) எடுத்து துடிப்பு மற்றும் மூச்சு சீராய் வருவதையும் உறுதி செய்யும் காரியங்களில் ஈடுபட்டிருந்தாள். உடன் விழியும் அவளுக்கு உதவி கரம் நீட்ட அதற்குள் இவர்களை பார்த்து கொண்டிருந்த இன்னொரு சிறுமிக்கு மூச்சு திணறல் வந்துவிட்டது.
மூச்சிற்கு மிகவும் சிரமமபட்டு கொண்டிருந்த பிள்ளையின் புறமிருந்து குரல் வர வேகமாய் விழி அந்த சிறுமியை காண சென்றாள் மொழியின் “நான் இவங்க ரெண்டு பேரையும் பாத்துக்கிறேன். யு கோ” என்ற சொல்லிர்கிணங்க.
அதற்குள் அனைவரும் அங்கே கூடிவிட, “சார், மேம் ப்ளீஸ் கோ ஆபரேட் பண்ணுங்க ஏற்கனவே நம்ம ஒரு ப்ரோப்லேம் ல இருக்கோம். இவங்க பசங்களுக்கு ட்ரீட்மென்ட் குடுக்கிறாங்க அவங்க பிளேஸ் ல போய் ஒக்காருங்க. பிலைட் ப்ராப்லெமையும் சேர்த்து தான் பார்த்தாகனும். அப்ப தான் நம்ம எல்லாருமே சேப் அ லேண்ட் அக முடியும். நாங்க இவங்களுக்கான ஹெல்ப் பண்றோம் ப்ளீஸ்”.என்று விமான ஊழியர்கள் இவர்களை அமரவைத்து விமான பிரச்சனைக்கான வழியை தேடி கொண்டிருந்தனர். இந்த மருத்துவ தேவைகளுக்கு உதவிக்கொண்டே.
மூச்சுத்திணறலலால் பாதிக்கப்பட்ட பிள்ளையைப் பார்த்த மாத்திரத்தில் விழியின் உடல் நடுங்கின. நினைவுகளை விட்டு அழிக்க முடியாத துயரம் அவள் வாழ்வில். கண்களில் கண்ணீர் விழுந்துவிடவா என அனுமதி வேண்டி நின்றது அவளிடம். சட்டென தன்னை மீட்டுக்கொண்டவள் உணர்ந்தாள் இது அதற்கான நேரம் அல்லவென. துரித கதியில் சிகிச்சை அளிக்க தயாரானாள்.
பயத்தில் மூச்சு திணறல் எடுத்துவிட இன்னும் பயம் அதிகரித்தது பிள்ளைக்கு. வேகமாய் மூச்சை இழுத்து விட முயன்றாள் குழந்தை. பெற்றோர் ஒரு புறம் அழுது புலம்பவென அங்கிருந்தவர்கள் மனதை கனத்தது.
அவ்விடம் சென்றவள் பிள்ளையின் மூச்சு சீரை துரித கதியில் பரிசோதித்து “இன் ஹேலர் எங்க மா. உடனே குடுக்கணும் குடுங்க அவங்களுக்கு”, என்றவள் அன்னையின் கரங்களில் இருந்த அந்த கருவியை வாங்கி பிள்ளையின் வாயிற்குள் வைத்து கருவியை அழுத்த மருந்து உள்ளே சென்றது.
பயத்தில் பிள்ளையின் கண்களில் கண்ணீர் அருவியாய் வடிந்தது அதனை உணர்ந்தவள் குழந்தையிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.
“ஒண்ணுமில்ல டா தங்கம். சரி ஆகிரும் பயப்படாதீங்க ஆன்ட்டி மருந்து குடுத்திருக்கேன். அழக்கூடாது டா மா.” என்றவாறு கண்ணீரை துடைத்து விட்டவள். தலைகோதி ஆறுதல் படுத்தினாள்.
” நீங்க அழாம இருந்தா சீக்கிரமா சரி ஆகும் டா. பயப்படாதீங்க தங்கம்”, என்றவள்.சிகிச்சையில் கவனமாக, அதற்குள் அந்த இரண்டு சிறுவர்களுக்கு அதிர்ச்சி, பயம் மற்றும் சரியாக உண்ணாத காரணத்தால் உண்டான மயக்கம் என்கையால் அதற்கான மருந்து கொடுத்துவிட்டு இங்கு வந்து சேர்ந்த மொழியின் கண்களில் கண்டது மூச்சு நின்றுபோன பிள்ளையைத்தான்.
***********
இருபது நிமிடங்களுக்கு முன்பு,
மூச்சுதிணறல் ஏற்பட்டதே ஆஸ்துமா தாக்குதலால், பயத்தில் இன்னும் மூச்சினை அதிகமாக இழுத்த சிறிய பாவைக்கு வளிவாயுவின் உள்ளிழுப்பு அதிகமாய் தேவைப்பட மூச்சிற்கு வெகுவாய் போராடினாள்.சிறிய பாவை அவளுக்கு பயம் மட்டும் குறைந்த பாடில்லை
அவள் அன்னையோ , தந்தையோ விழியோ எவ்வளவு சமாதானம் கூற முயன்றும் முடியவில்லை. இங்கே சிகிச்சை ஆரம்பிக்கும் பொழுதே அங்கே விமானத்தில் உள்ள வலிவாயு கவசம் கேட்டிருந்தாள். விமான குழுவினரும் சரியாக விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த அந்த கருவியை கொடுக்க உடனடியாக பிள்ளைக்கு ஆக்சிஜென் வளிவாயு வழங்கப்பட்டது .
‘இந்த ஆக்சிஜென் மாஸ்க் மட்டுமே இவங்க கண்டிஷன் கு ஒர்க் ஆகல. மருந்தும் கொடுக்கணும் கண்டிப்பா ‘ என்று நினைத்தவளுக்கு தெரிந்தது. வெகு தீவிரமான நிலையில் இருக்கிறாள் குழந்தை என.
விழி உடனே “‘ஹைட்ரோகார்டிசோன் (hydrocortisone)’ மருந்தை கொண்டு வாங்க ப்ளீஸ் சீக்கிரம் “, விமான ஊழியர்களை துரித படுத்தினாள். அவர்களும் அந்த மருந்தை எடுக்க அவை இருக்கும் அறைக்குள் சென்றனர் .
மருந்தை எடுத்து வந்து இவளிடம் கொடுக்க அதனை பார்த்தவளுக்கோ அதிர்ச்சி, அந்த மருந்து காலாவதி ஆகிவிட்டிருந்தது. அவர்களை நிமிர்ந்து பார்த்தவள்,”இந்த மருந்து எக்ஸ்பயர் ஆகி ரெண்டு மாசம் ஆகுது . அவங்க ரொம்ப கிரிட்டிஸால் ஆ இருக்காங்க இப்பவே அவங்களுக்கு டிரீட்மெண்ட் குடுக்கணும் அந்த மருந்து எவ்வளவு முக்கியம் தெரியுமா”, என்றவளுக்கு அடுத்து என்ன செய்வதென வழி தெரியவில்லை.
அந்த ஊழியர்களுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை தவறு தங்கள் பக்கம் தன என அறிந்தவர்கள். மன்னிப்பை யாசித்தாலும், அவர்களை கவனிக்கும் நிலையில் யாரும் இல்லை. சற்று நேரத்தில் மூர்ச்சையாகி இருந்தாள்.நாசியில் மூச்சின் வரத்து இல்லை. அதிர்ச்சியில் விரிந்த விழியின் கண்கள்,மூளையை இரண்டு வினாடிக்கு வேலை நிறுத்தம் செய்தது. சட்டென நாடியை சோதிக்கலானாள்.
கைகளில் தெரியாமல் போக உடனே கழுத்தில் கைகளை கொண்டு சென்றால் நாடியை தெரிந்து கொள்ள. துடிப்பின் அளவு குறைந்ததால் கைகளில் கண்டுபிடிக்க முடியவில்லை. கழுத்தில் நாடி துடிப்பு இருந்தது.
அங்கு சிகிச்சை முடித்து இவ்விடம் வந்த மொழியும் இவளுடன் இணைந்து கொண்டாள். பதற்றம். விழிக்கு எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் . தன் தோழிக்கு நடந்தவை மீண்டும் நிகழ கூடாது என அத்தனை தீர்க்கமாய் இருந்தாள்.
விழி , “மொழி சி பி ஆர் குடுக்கலாம்”.
துரிதமாய் குழந்தையின் பெற்றோருக்கு நிலைமையை விளக்கி விட்டு மொழியை பார்த்தாள் ,
மொழி ,” சி பி ஆர் குடுக்க சர்பேஸ் ஸ்டேபில் ஆஹ் இருக்கனும் விழி. இப்ப பிலைட் ஏற்கனவே கொஞ்சம் ஆடிட்டே இருக்கு. எமெர்ஜென்சி கு தரை இறக்குவாங்களே ஏர் கண்ட்ரோல் கிட்ட பேசுறதா சொல்லிருக்காங்க”,
விழி, ” நான் சொல்றது புரியுதா. ஹர் பல்ஸ் ஐஸ் கெட்டிங் டௌன் ராபிட்லி. வி ஹவ் டு டூ சம்திங். சி பி ஆர் ட்ரை பண்ணலாம்” என்றவள் சுவாச மீட்பு சிகிச்சை கொடுக்கலானாள்.
விழி விரிவரித்தவைகளை கவனித்ததிலிருந்தே அந்த பெற்றோருக்கு நிலைகொள்ளமுடியா துயரம் ஆட்கொண்டது. அழுகை, அழுகை அதை விட வேறு எதுவும் செய்யும் நிலையில் இல்லையே அவர்கள். எதுவுமே செய்யமுடியா தங்கள் நிலையை எண்ணி கவலை கொள்ளவதா , கடைசி நம்பிக்கையாய் கடவுளிடம் முறையிடுவதா. கடவுளிடம் முறையிட தான் முடிந்தது. கடைசி துளி பெரும் நம்பிக்கையை கைகள் கூப்பி இறைஞ்சினார்கள்.
விழி , சுவாச மீட்பு சிகிச்சையை இரண்டு முறை முயன்றவளுக்கு தோல்வியே கிட்ட , மொழி முயற்சி செய்தாள் . அவர்களின் அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அவளை காப்பாற்றிவிட்டால் விமானத்தை தரையிறங்கி மேல் சிகிச்சைகள் கொடுக்கும் திட்டத்தில் இருந்தர்வர்வகளுக்கு தோல்வி மட்டுமே பலனாய்.
ஆம், அந்த பிள்ளையின் உயிர் பிரிந்துவிட்டது. விழியால் ஏற்க முடியவில்லை மீண்டும் சுவாச மீட்பு சிசிகிச்சை கொடுத்தாள். குழந்தையிடம் பேசினால், அழுதாள். அவள் எவ்வளவு முயன்றும் பலனில்லை. இறந்தவரின் தேதி மற்றும் நேரம் குறிப்பிட, அறிவிக்க வேண்டிய கடமை விழியினுடையது. பேச்சு வரவில்லை. அவளையே கலங்கிய கண்களோடு பார்த்திருந்த பெற்றோருக்கு என்னவென கூறுவாள்.
அவர்களுக்கு கடைசி துளி நம்பிக்கை எதாவது அதிசயத்தில் பிள்ளை தங்களிடம் திரும்பிவிடமாட்டாளா என்று. அத்தனை எதிர்பார்ப்புகளும் , முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராய் அல்லவா போய்விட்டது. அந்த அன்னை தலையில் அடித்துக்கொண்டு அழுதார் பார்க்க முடியவில்லை அவரிடம் என்னவென்று ஆறுதல் உரைப்பாள். நெஞ்சம் மலையாய் கனத்தது. மனம் இறுக்கம் கொண்டது. அத்தனை துயரையும் விழுங்கிக்கொண்டவள், பிள்ளை இறந்த தேதியும் நேரமும் அறிவித்தாள். அந்த தாயும் மயங்கி சரிந்தார்.
இதுவரை விழி சிகிச்சை பார்த்திட்ட எவரும் இறந்ததில்லை. தான் கர்ப்பிணிகளுக்கு அறுவைசிகிச்சைகள் செய்பவள் தான் . இதுவரை தான் சிகிச்சை கொடுத்த இவரின் இழப்பையும் கண்டிராதவள். அதுவும் கொஞ்ச நேரம் முன்பு கூட தன்னிடம் எத்தனை அழகாய் பிஞ்சு மொழியில் பேசி விளையாடினாள். அதற்குள் அவள் இந்த உலகத்தில் இல்லை அதையும் தான் தானே அறிவித்தோம். தானும் இதற்கு காரணம் என்ற எண்ணம் அவளின் மனதை கிழித்தது அந்த எண்ண அலைகள் அவள் ஆழ் மனதில் அவள் தான் காரணமென ஆணி அடித்தாற்போல் பதிந்துவிட்டது. அவள் விழிகளில் உயிர்ப்பு இல்லை.
அங்கு விமானத்தின் முடிவுகள் பற்றி பகிரப்பட்டன. என்ன செய்தி என புரியும் நிலையில் அவர்களை சுற்றி இருந்த எவருமே இல்லை. அவரவர் இருக்கையில் அமர செய்தனர் விமான குழு எதுவுமே புரியாமல் எங்கோ வெறித்தபடி இருந்த விழியின் நினைவுகள் எங்கு இருந்தனவோ?.
காரெழிலன் விழியை பார்த்தான், ஆனால் ஒரு மருத்துவர் என்ற முறையில் இந்த இழப்பு அவளால் கடந்து விட முடியும் என்று நினைத்தவன் அவளை நோக்க , அவள் பார்வை வெறித்தபடி இருந்ததை பார்த்தவனுக்கும் அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் தான். ஆனால் இந்நிலையில் ஆறுதல் எப்படி ?, அவளுக்கான தனிமை கொடுப்பதே சாலச்சிறந்தது என அமைதியானவன். கண்களில் சொட்டாய் கண்ணீர் வழிய துடைத்துக்கொண்டான். நிறைமதியனும் ஆறுதலாய் எழிலனின் தோள் பற்றினான். நிறைமதியனும் விழியை பார்க்க. அவள் முகமெங்கும் வலியின் சாயல். அதனை கண்டவன் கண்களில் அத்ருப்தி.
எழிலனை அத்தனை அழகாய் ‘எலி மாமா’ என்றழைத்தவள் இப்பொது இல்லை. நினைக்க நினைக்க கண்ணீ்ரின் கணம் உயர்ந்தது.
விழியும் எழிலனும் பேசிக்கொண்டிருக்கையில் , மொழியின் பக்கமாய் அழகாய் எட்டி பார்த்துவிட்டு ஓடி . எட்டி பார்த்து ஓடி என இருந்தவளை சட்டென பிடித்த மொழி, பெற்றோரை பார்த்து கண்களில் அனுமதி பெற்று தூக்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டாள். மொழியிடம் பிள்ளை மொழியில் வாயடித்துக்கொண்டு விழியிடம் தாவினாள் .
” வாங்க டா தங்கம் .” என்றவளுக்கு அழகு குவியலாய் தன்னிடம் தாவிய பிள்ளையை அத்தனை பிடித்தது. பிள்ளையின் கன்னத்தில் இதழ் பதித்தவள். சிரித்தபடி கொஞ்சலாய் ” உங்க பேர் என்ன செல்லம் ” என்க ,
அதற்கு பிள்ளையும் மழலை மொழியில் தன பெயரை அழகை உச்சரிக்க , தனக்கு புரியவில்லை என்றாலும் புரிந்தது போல், “அதான் உங்க பெற ரொம்ப சூப்பர் ஆஹ் இருக்கே.” என்று பேச்சு கொடுத்தாள்.
” உந்த பேது “
” என் பேர் விழி “
“விதி யா “
” ம்ம் . ஆமா டா செல்லம் அதான் கரெக்ட் “
பேச்சு கொடுத்தபடி இருக்க எழிலனும் கலந்து கொண்டான்.
அவன் பெயரை கேட்டு ” காஆஆ ” என்று இழுக்க,
வாய்விட்டு சிரித்த எழிலன் ,” எழிலன் சொல்லுங்க ” என்க ,
நடுவில் விழி செய்த குட்டி கலாட்டாவில் எலி என்று படிப்பித்தால் குழந்தையிடம்.
அதற்குள் அந்த குட்டி வாண்டும், ” எலி”, என்றே அழைக்க.
பின் ஒரு வழியாய் ” எலி மாமா ” என்றாள் .
எழிலனும் விழியை ‘புட் ஐஸ்’ என்றே அழைக்க கற்றுக்கொடுத்திருக்க, அதுவும் அவள் மனதில் அழகாய் பதிந்து விழியை ,” புத் ஐச் ” என்றே அழைத்தாள்.
மொழியிடம் முதலில் பேசினாலும் விழியிடமும் எழிலனிடமும் நன்றாக ஒட்டிக்கொண்டாள். கண்களால் மட்டும் நிகழ்வுகளை தொடர்ந்த நிறைமதியன் உரையாடல்களில் கலந்துகொள்ளவில்லை.
சிறிது நேரம் விளையாடி விட்டு தன் இடம் சென்றுவிட்டாள் பெற்றோரிடம்.
மீண்டும் நிகழ்விற்கு திரும்பிய எழிலன், கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான். விழியும் அந்த நினைவுகளையும் தன கடந்த கால நினைவுகளிழும் தான் கண்கள் மூடி இருந்தாள். எவரும் கண்களை திருந்து ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. அந்த பெற்றோருக்கு ஒரு சிலர் ஆறுதல் சொல்வது காதுகளில் கேட்டு கொண்டுதான் இருந்தது நிறைமதியனுக்கும்.
😔😔😔
🥲🥲
Nice epi da..💞💞💞👌👌👌
Thank u dav ❤️😍
அச்சோ சோ sad
அந்த குழந்தையின் இறப்பிற்கு விழி எப்படி காரணமாவா..?