
மெல்லினம் 34:
அப்போது தான் ராகேஷிற்கு விஷாலின் நினைவு வர, அவனை நேரே தேடி சென்று விட்டான். அவனிற்கு கதிரின் மாற்றம் எதனால் என தெரிய வேண்டியிருந்தது.
சமீபத்தில் தான் விஷாலிற்கு திருமணம் முடிந்திருந்தது. ராகேஷ் அவனின் திருமணத்திற்கு வர முடியாததற்கு, வருத்தம் தெரிவித்தவன் தான் வாங்கி வந்திருந்த கிஃப்ட்டை கொடுத்து விட்டு மெல்ல பேச்சினை துவங்கினான்.
ராகேஷ் பேசும் விஷயம் விஷாலிற்கு பிடிபட்டு விட முதலில் தயங்கினான். பின் கதிர் முல்லையை மறந்து, வேறு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும், என நினைத்தவன் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி இருந்தான்.
“என்ன விஷால், நீ என்கிட்ட மொதல்லயே சொல்லி இருக்கலாம்ல? நான்.. நான்! எப்புடியாவது பேசியி இருப்பேன்ல” என்றவனின் முகம் கதிர் எப்புடி எல்லாம் வேதனையை அனுபவித்து இருப்பான் என்று நினைவில் முகம் கசங்கிற்று.
“இல்லை அண்ணா, கதிர் என்னை சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டான். இப்பவும் கதிர் அவனோட வாழ்க்கைய, வாழாம தொலைச்சிடுவானோன்னு பயந்து தான், நான் அவன் சொன்னதை மீறி உங்ககிட்ட பேசுறேன்.
இரண்டு வருஷமாக போகுது, இன்னமும் அவன் என்னை ப்ளாக்ல தான் வச்சிருக்கான். அதுவே அவன் இன்னமும் முல்லையை மறக்காம இருக்கான்றதுக்கு சாட்சி. எங்க என்கிட்ட பேசுனா, அவனுக்கு முல்லையோட ஞாபகம் வந்துடுமோன்னு, பயந்து தான் பேசாம இருக்கான்” என்றவனின் குரலில் வருத்தம் பெரிதாக இருந்தது.
விஷாலின் தோளை தட்டிய ராகேஷ், எதுவும் பேசாது வெளியேறி விட்டான்.
விஷாலிடம் பேசி விட்டு வந்ததில் இருந்து, ராகேஷின் மனம் நிம்மதி இல்லாமல் தவித்தது. ‘இப்படியே விட்டால் கதிரை இழந்து விடுவோம்’ என பயந்தவன் அவனை இங்கே வர வைக்க முயன்றான்.
வீட்டினரின் தொடர் படையெடுப்பாலும், ரேஷ்மியின் மழலை குரலும் அவனின் நெஞ்சத்தை கரைக்க இந்தியா திரும்பினான்.
இறுகி போய் வந்தவனை, கண்ட ஞானத்தின் தாய் உள்ளம் துடித்து விட்டது. அதன் பிறகும் அவனின் புன்னகை இழந்த முகமும், யாரிடமும் ஒட்டாத தன்மையும் அவர்களை மேலும் பயங்கொள்ள வைத்தது.
இந்த நிலையில் தான் ஸ்ருதி, சுரபியை கதிருக்கு மணம் முடிக்கும் பேச்சினை தொடங்க ஆரம்பத்திலயே அதற்கு “முடியாது” என முட்டு கட்டை போட்டு விட்டான் கதிர்.
ஆனால் இவன் மறுத்தது தெரிந்து, சுரபி பால்டாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்க அவ்விடயம் கேட்டு அதிர்ந்து தான் போய் விட்டான்.
அதன் பிறகு குடும்பத்தினர், முக்கியமாக ஞானம் அவனை விடாது கார்னர் செய்யததில், நேரிடையாக அவன் சுரபியிடம் பேசி அவனிற்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை அவன் தெரிவித்திருக்க,
அவனிடம் பேசிய பின்னே அவனை விட முடியாது அவனை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தாள் சுரபி.
கடைசியில் ஞானத்தின் கண்ணீர் அவனை கரைக்க, அப்போதும் கடைசி முயற்சியாக அவன் சுரபியிடம் பேசினான்.
“என்னை கல்யாணம் பண்ணா சத்தியமா நீ சந்தோஷம் இருக்க மாட்ட. உன்னோட எதிர்பார்ப்பு எதையும் என்னால நிறைவேத்த முடியாது. என்கூட உன்னோட வாழ்க்கை அவ்வளவு ஈசி இல்லை” என அறிவுறுத்த,
அவனின் அழகிய தோற்றத்தில் மதிமயங்கி பேயிருந்தவளுக்கு, அது எல்லாம் காதில் ஏறியதாக தெரியவில்லை. எப்படியும் அவனை மாற்றி விடலாம், என்ற அலட்சியத்தில் இருந்து விட்டாள்.
ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் யாவும், சத்தியம் என திருமணம் ஆன இரண்டே மாதங்களில் புரிந்து கொண்டாள் சுரபி.
முதலில் அனைத்தையும் பொறுத்து போனவள், ஒரு கட்டத்தில் அவள் நினைத்தது நடக்காததில், ஏற்பட்ட ஆத்திரத்தை அவனிடம் கொட்ட ஆரம்பித்தாள்.
இதனிடையே ஒரு நாள் ரூமை சுத்தம் செய்தவளின் கண்ணில், முல்லையின் பொருட்கள் பட்டு விட, அவ்வளவு தான் கதிரிடம் ஆடி தீர்த்து விட்டாள்.
தினம், தினம், சண்டை என அவள் கதிரின் நிம்மதியை குழி தோண்டி புதைக்க கதிரால் முடியவில்லை.
அவளின் ஆத்திரம் எல்லாம் வெறுப்பாக மாறி, அவனை எரிக்க ஆரம்பித்தது.
கதிரும், சுரபியின் நிலை புரிந்து அவளுடன் மனமொத்து வாழும் எண்ணத்தை எடுக்க நினைக்க, அவனால் சுத்தமாக முடியவில்லை.
முல்லையை சுமந்த இதயம்! சுரபியை ஏற்க மறுத்தது. அவன் கடந்த காலத்திற்கும், நிகழ் காலத்திற்கும் போராடி கொண்டிருந்த காலம், சட்டென சுரபியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது அவள் வேலைக்கு சென்ற மூன்று மாதங்களில்.
இவனிடம் மட்டுமல்ல மொத்த குடும்பத்திடமும் பேச்சை குறைத்தால். எந்நேரமும் போனிலே இருந்தாள்.
வீட்டில் அனைவரிடமும், எரிந்து எரிந்து விழுந்தாள். அவளை கண்காணித்து கொண்டிருந்தவனுக்கு, அவளின் உடல்நிலை மாற்றம் புரிய ஆரம்பித்தது.
இதுவரை அவன் வாயிலாக அவனுடைய கடந்த காலத்தை கூறி கொண்டிருந்தவன் நிறுத்தி முல்லையின் முகம் பார்க்க…!
அவளது இரு கன்னங்களிலும் கண்ணீர் வழிந்து, காய்ந்து போய் அதன் தடம் வெள்ளையாக தெரிந்திருந்தது.
கதிர் சொன்ன மாற்றத்தில் அவள் மூளை படுவேகமாக சிந்தித்தது “ஹரிஷ்??” என்ற ஒற்றை வார்த்தை எழுப்பி, அவன் முகம் நோக்க,
அவளது கன்னத்தினை அழுந்த துடைக்க பரபரத்த கைகளை கட்டுப்படுத்தியவன் “ஆம்” என தலையசைத்தான்.
மேலே சொல்?? என்றதொரு பார்வையை முல்லை வீச,
அதனை புரிந்து கொண்டவன் அவளிடம் கூற ஆரம்பித்தான்.
சுரபியின் உடல்நிலை மாற்றம் அவனிற்கு தவறாய் பட ஆரம்பித்தது. அதுவும் மூன்று நாட்கள் அவள் அம்மா வீட்டிற்கு சென்றவள் மிகவும் சோர்ந்து போய் வீடு திரும்பினாள்.
உடலாலும், மனதாலும், அவர்கள் இணையா விட்டாலும் சுரபியின் இந்த மாற்றம் அவனிற்கு தெளிவாக புரிந்தது.
அவனின் சந்தேகம் சரி என்னும் விதமாக, ஒரு நாள் அலுவலக வேலையாக “மதிரம் மருத்துவமனைக்கு” வந்தவன் அங்கே சுரபியையும் ஹரிஷையும் கண்டு திகைத்தான்.
முதலில் நண்பர்கள் என நினைத்தவனிற்கு, அவர்களது நெருக்கமும், மகப்பேறு மருத்துவரை சந்திக்க அமர்ந்திருந்ததும் அவனிற்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
அவர்களை நெருங்கும் முன் இருவரும் உள்ளே சென்றிருக்க, ஏதோ பெரிதாய் மனதை உறுத்திற்று கதிருக்கு.
அவர்கள் வெளியே வரும்வரை அவன் காத்திருக்க, கதிரை கண்ட சுரபிக்கு அதிர்ச்சியே, ஹரிஷிற்கும் கூட.
அவளின் அதிர்ச்சியில் சட்டென அவளின் கையில் இருந்த பைஃலை கதிர் பிடிங்கிட, சுரபி தடுக்கும் முன்னே முழுதாய் படித்து முடித்திருந்தான் கதிர்.
அதில் ஒரு வாரத்திற்கு முன்பு சுரபிக்கு அபார்ஷன் செய்யப்பட்டிருந்த மெடிக்கல் ரிப்போர்ட் அதில் இருக்க ஆடி தான் போனான்.
அவன் பார்த்த விஷயம், அவனை ருத்ரமூர்த்தியாய் மாற்ற, முயன்று ஆத்திரத்தை அடக்கியவன் சுரபியை அங்கிருந்து இழுத்து சென்று விட்டிருந்தான்.
இரண்டு நாட்கள், முழுதாக இரண்டு நாட்கள் தேவைப்பட்டது கதிருக்கு, சுரபி மற்றும் ஹரிஷின் உறவை பற்றி அறிய.
விஷயம் தெரிந்தவனிற்கு அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. இதனை குடும்பத்தினரிடமும் அவனால் சொல்ல முடியாதே, இது அவனிற்கு அவமானம் ஆயிற்றே!
அப்போதும் அவன் சுரபியின் வழியே யோசித்தான். ஒருவேளை தான் அவளுடன் ஒட்டாமல் இருப்பதால் தான், அவள் இப்படி தடம் மாறி போனாளோ, என நினைத்தவன் அவன் செய்த தவறை சரி செய்ய முயற்சித்தான்.
முதலில் அவளிடம் நண்பனாக பேசி, பழக முயல ஆரம்பிக்க, சுரபிக்கு ஆச்சர்யமே அவள் எதிர்பார்த்தது கதிரின் கோபத்தையும் பிரிவையும் அல்லவா??
கதிரின் இணக்கமான பேச்சில் அமைதியாக இருந்தவளிற்கு நாட்கள் ஆக, ஆக கதிர் இந்த விஷயத்தினை குடும்பத்தினரிடம் கூற மாட்டான், என அவளிற்கு புரிந்த நொடி அவளின் ஆட்டம் அதிகமானது.
இம்முறை கதிரை வலிக்க வைக்க வேண்டும் என நினைத்தவள் அவனுடன் இணக்கமாக பேசி அவனை நம்ப வைத்தாள்.
கதிரும் அவள் ஹரிஷுடனான உறவை மறந்து விட்டாள், என நம்பிய வேளை, அவனது நம்பிக்கையை உடைக்கும் விதமாக மீண்டும் கர்ப்பமானாள் சுரபி.
ஆக அவள் கதிரை ஏமாற்றிய படியே, ஹரிஷீடன் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறாள்.
இந்த விடயம் கேள்விபட்டு கதிர் சுக்கு நூறாக உடைந்து விட்டான். கோபம் கண்களை மறைக்க சுரபியை ஓங்கி அறைந்து விட்டு, ஹரிஷை தேடி சென்றவன் அவனையும் அடித்து நொறுக்கி விட்டான்.
இனியும் சுரபியுடனான ஒரு வாழ்க்கை அவனிற்கு அவசியமற்றது, என புரிந்தவன் அவளை விவாகரத்து செய்ய முடிவு செய்தான்.
ஆனால் வீட்டினரிடம் இதனை எப்படி தெரிவிப்பது, என அவன் தடுமாற அவனின் தடுமாற்றத்தை தனக்கு சாதகமாக்க சுரபி திட்டம் தீட்ட,
தெரிந்து நடந்ததா இல்லை விதியின் செயலா? கதிர் முல்லையை சந்தித்தான் கிட்டதட்ட மூன்றரை வருடங்களுக்கு பிறகு ,அதுவும் அத்வியுடனும் ஹரிஷீடனும்.
ஹரிஷின் உரிமையான தொடுகை, முல்லை அவனின் மனைவி என அப்பட்டமாக உரைக்க, மீண்டும் ஒரு முறை உடைந்து போனான்.
அதுவரை குடும்பத்தை மனதில் வைத்து தடுமாறியவன், அந்த கணம் உறுதியாய் முடிவு எடுத்தான், சுரபியை பிரிவதில்.
முல்லையை இனியும் அந்த ஹரிஷீடன் வாழ வைக்க விரும்பாததும் ஒரு காரணம் ஆகும்.
எடுத்த முடிவினை செயல்படுத்தியும் விட்டிருந்தான். அவனிற்கு தெரியும் இவன் சுரபியை விவாகரத்து செய்தால், அவள் கண்டிப்பாக ஹரிஷையும் விவாகரத்து வாங்க வைப்பாள் என்று, நன்றாக தெரிந்தே முல்லையை அந்த துரோகியிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு துணிந்து முடிவு எடுத்தான்.
இவ்விஷயம் வீட்டில் பூதாகரமாக வெடிக்க, ராகேஷிடம் முழுதையும் கூறிவிட்டான் முல்லை விஷயம் உட்பட.
ஏற்கனவே முல்லையை பற்றி தெரிந்திருந்ததாலும் ராகேஷ் கதிருக்கு துணைபோனான்.
கதிர் நினைத்த மாதிரியே, எல்லாம் நடைபெற அடுத்து முல்லையை அவன் அருகே கொண்டு வர, அவன் சில விஷயங்களை செய்து இதோ நினைத்தது போல் அவளை மனைவியாக்கியும் விட்டிருந்தான். இதில் சீதாவின் பங்கும் அதிகம்.
நடந்தவைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி விட்டு, கதிர் முல்லையை பார்க்க கன்னங்களை அழுந்த துடைத்தாள் “போகலாம்” என்ற வார்த்தையோடு வெளியேறி இருந்தாள்.
அவள் மனநிலை புரிந்த கதிரும் அமைதியாகி சென்றான். இவர்கள் வீடு வர நன்றாக இருட்டி விட்டிருந்தது.
வீட்டினுள் நுழைய, இவர்களை எதிர்பார்த்து சுரபி ஹாலிலேயே அமர்ந்திருந்தாள். இவர்களை கண்டதும் அவள் கண்கள் ஒரு வித முறைப்புடன், இருவரையும் தழுவ அதில் ஆத்திரம் கொண்ட முல்லை “ஏய் திரும்பு டி, இனி கதிரை பார்த்த கண்ணு ரெண்டையும் நொண்டி வெளியே எடுத்துடுவேன் போடி” என பல்லை கடித்து கொண்டு பேசியவள், கதிரின் கைபிடித்து கொண்டு அவர்களது அன்றைக்கு சென்று விட,
சுரபிக்கு மேலும் மேலும் வன்மம் கூடியது.
முல்லையின் பேச்சை கேட்டவனிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. எங்கே அவனின் காதல் தெரிந்து, அவனை வெறுத்து விடுவாளோ என பயந்திருந்தவனுக்கு
அவளின் இப்பேச்சு சொல்லெண்ணா மகிழ்ச்சியை அள்ளி தந்தது.
ஆனால் அவனின் மகிழ்ச்சி எல்லாம்,
அடுத்த நாள் காலை, முல்லை இவனுடன் ஊருக்கு வர மறுத்து அவளின் பெற்றோர் வீட்டிற்கு செல்லும் வரை மட்டுமே நீடித்தது
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
24
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

அட போம்மா முல்லை. என் செல்லக் குட்டி கதிரை அழ வைக்கிறதே உனக்கு வேலை. ஆத்தி இந்த ஹரிஷ் சுரபி என்னென்ன வேலை பார்த்திருக்காங்க. அவங்களை விடுங்க. கதிர் குடும்பம் தான் செம்ம. அவனுக்கு எப்பவும் சப்போர்ட் ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥