-
“அம்மாஆஆஆஆஆஆ”என்றபடி பை ,ஷாக்ஸ், ஷீ என ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை நோக்கி எறிந்தபடியே ஓடி வந்தான் பள்ளி முடிந்து வந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் கதிர்.
“ஹாஆஆஆய்”என்றபடி வந்த ஆனந்தியின் குரலின் சுருதி குறைந்தது அவனின் செய்கை பார்த்து .
“என்ன கதிர் இது அம்மா உனக்கு என்ன சொல்லி இருக்கேன்
எல்லாத்தையும் அந்தந்த இடத்தில் வைக்கனும்னு சொல்லியிருக்கேன் இல்ல?”என்றாள் இடுப்பில் கை வைத்தபடி
“அம்மா ப்ளீஸ்மா இன்னைக்கு ஒரு நாள் விடு எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு “என்ற மகனை பார்க்க பாவமாக இருந்தாலும்
இந்த வயதில் சோம்பல் நல்லதுக்கில்லையே எனத்தோன்ற
“இங்க பாரு நீ இதெல்லாம் எடுத்து வச்சா அம்மா உனக்கு பிடிச்ச ஸ்னாக்ஸ் கொண்டு தருவேன்
எங்க கடகடன்னு எடுத்து வை பார்ப்போம் ?”
“ஹான் அப்படியா அப்ப சரி “என்றபடி ஒவ்வொரு வேலையாய் செய்தான் முதலில் பேக்கை அதன் இடத்தில் ஐடி கார்ட் பேக் உள்ளே அதற்கான இடத்தில் போட்டான்.
பின் ஷூஉம் ஸ்சாக்சும் அதன் இடத்திலும் லஞ்சு பாக்ஸ் கழுவ போட்டு அதன் பையை அதற்குரிய இடத்தில் மாட்டி விட்டு பின் என்ன என யோசிக்க
நினைவு வந்தவனாய் பெட்ரூம் சென்று மாற்று துணி எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்று ப்ரஷாகி வரவும்
அவன் அம்மா டைனிங் டேபிள் மீது அவனுக்கு பிடித்த முட்டை போண்டா வைத்திருந்தாள் .
“ஹை ஜாலி யம்மி யம்மி தேங்கியூ மம்மி”என்றபடியே சாப்பிட ஆரம்பித்தான்.
“சரிடா தமிழ் விடைத்தாள் இன்னைக்கு தந்தாங்களா ?”என்றாள்
“பக்கக்கெக் “என்று சாப்பிட்ட படியே பையைக் காட்ட
“சரி சரி மெல்ல சாப்பிடு நா எழுத்துக்கறேன் “என்று சொன்னதோடு இல்லாமல் எடுத்து வந்து அமர்ந்தாள்.
பொறுமையாய் அனைத்தையும் புரட்டி பார்தவளுக்கு திருப்தி நல்ல மார்க் எடுத்தால் இருக்காதா பின்னே!?
ஆனாலும் ஒரு சின்ன சங்கடம் ஒரு சந்தேகம் எப்படி கேட்காம இருப்பா?
“ஆமா கதிர் எல்லாமே சரியா எழுதி இருக்க ஆனா மார்க் ஏன் கம்மியா இருக்கு?”
“இரு இரு “என்றபடி சைகை காட்டியவன் கைகளை கழுவிக்கொண்டு தண்ணீர் குடித்து விட்டு தெய்வமாய் பதில் சொல்ல தொடங்கும் முன்
விடைத்தாளை வாங்கி குறிப்பிட்ட ஒரு பக்கத்தை எடுத்து நீட்டியபடி சொன்னான்
“இதுதான் அதுக்கு காரணம்”என்றான் அதை சுட்டிக்காட்டி
அது கோழிப்பண்ணை பற்றிய கட்டுரை .
மீண்டும் அதை ஒரு முறை கடகடவென வாசிக்க “சரியாத்தானேடா இருக்கு அதுக்கு எதுக்கு கம்மி மார்க்?”
“கேட்டேனே அதுக்கு மிஸ் சொன்னத மட்டும் இல்ல காட்டுறேன் பாரு இதோ …”என்றான்
அங்க முட்டை என்ற எழுத்துக்கு முட்டை போடப்பட்டிருந்தது
அது மட்டும் அல்லாது மற்ற இரண்டு மூன்றும் எழுத்துக்களும் அதுபோலவே குறிக்கப்பட்டிருப்பதை அப்பொழுதுதான் கவனித்தாள் ஆனந்தி .
“என்னடா இது ?சரியாத்தானே எழுதி இருக்க எனக்கு புரியல?”
“முதல்ல எனக்கும் புரியல அப்புறம் மிஸ் தான் சொன்னாங்க
தமிழ் எழுத சில முறை இருக்கு அதுல முக்கியமானது இந்த மெய் எழுத்துக்கு வைக்கிற புள்ளி .
மெய்யெழுத்துக்கு புள்ளி வைக்கனுமே தவிர இப்படி முட்ட போடக்கூடாது
அதாவது நா சின்னதா ஒரு வட்டம் போல போட்டிருக்கேன் பாரு அது தப்பு …புள்ளி தான் வைக்கனும்
இது போக உயிர்மெய் எழுத்தான க….ச..ஞ..இதெல்லாம் எழுதும் பொழுது மூக்கு வச்சு ம்ம் கூரா கோடு வச்சு ம்ம் இல்லை கோடு போட்டு எழுதனும்
மொட்ட மொட்டயா எழுதக்கூடாது …
இதெல்லாம் ஏற்கனவே இரண்டு மூன்று வாட்டி என் மிஸ் சொல்லி இருக்காங்க நான் தான் மறந்து திரும்ப அதே தப்ப செஞ்சிட்டேன்
அதனாலத்தான் மார்க் கம்மியாச்சு அடுத்த தடவ இப்ப செஞ்சா இந்த பார்க்கும் கட்டுரைக்கு இல்ல முட்ட தான் ..அப்படின்னாங்க ஸாரிம்மா மிஸ் கிட்டயும் இதைத்தான் சொன்னேன் ஸாரின்னு “
“ஓஓஓ தமிழ்ல இத்தன விஷயம் இருக்கா ஹும் “என்று வியந்தவள்
“சரி சரி தப்ப திருத்திக்க அடுத்த தடவ செய்யாத என்ன ?”என்றாள்.
“கண்டிப்பாம்மா “என்றான் கதிர் குரலில் உறுதியுடன்.ட