Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 2

சென்னை

அதிகாலை 4 மணி. இரவின் ஆதிக்கம் இன்னும் முற்று பெறாத நிலையில்… மேல் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதில் உள்ள ஒரு வீடு. அது 3 முதல் 4 படுக்கை அறைகள் கொண்ட ஓரளவுக்கு வசதி உள்ள நவீன முறைப்படி கட்டபட்ட வீடு. அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் அலாரம் விடாமல் அடித்து கொண்டு இருந்தது. அதை தன் கையில் அணைத்து விட்டு தன் அன்றாட பணிகளில் ஈடுபட தயாரானாள் நம் கயல்விழி. அதிகாலை எழுந்து குளித்து முடித்து அந்த வீட்டின் அனைத்து வேலைகளும் அவள் தான் முடிக்க வேண்டும்.

வீட்டை பெருக்குவதில் இருந்து துணி துவைப்பது, காலை டிபன் மற்றும் மதிய உணவு என தனி தனியாக சமையல் செய்து எல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்து சமையலறையை சுத்தம் செய்து விட்டு சுமதியின் அறைக்கு அதிகாலை தேனீர் கொண்டு செல்வது வரை. அதையும் சரியான நேரத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். கொஞ்ச நேரம் கூடினாலோ குறைந்தாலோ அதற்கான அர்ச்சனை அந்த காபியை விட இன்னும் அதிக சூடாக வந்துவிடும். சிறு வயதில் அதிகமாக தேனீர் அபிஷேகம் வாங்கி அந்த வலியை வெளியேயும் சொல்ல முடியாமல் தனது அறையில் தலையணையில் முகம் புதைத்து அவள் வடித்த கண்ணீர் துளிகள் ஏராளம். அதை அந்த தலையணை மட்டுமே அறியும். அதனாலயே சீக்கிரமாக எல்லாம் முடித்து விட்டு சரியான நேரத்திற்கு முன்னதாகவே போய் விடுவாள். அந்த தேனீர் எவ்வளவு சுவையாக இருந்தாலும் பாராட்டு மட்டும் என்றுமே கிடையாது.

செல்வா அந்த வீட்டின் ஒரு அறையில் இரண்டு கால்களும் இழந்த நிலையில் சக்கர நாற்காலியில் தன் வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருந்தார். அவரையும் கயல் தான் பார்த்து கொண்டாள். மற்றவர்களுக்கு செய்யும் போது தன் தந்தையை விட்டு விடுவாளா என்ன. அவரையும் சுத்தப்படுத்தி குளிக்க வைத்து ஒரு குழந்தையை போல பார்த்து கொண்டாள். ஹேமாவின் நினைவுகளும் கயலும் தான் செல்வா இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம். தன் மகள் வாழ்க்கை செழிப்பாக இருப்பதை பார்த்து விட்டு தான் செல்வது என்ற வைராக்யத்துடனும், நம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகிறார். அவரது நம்பிக்கை நிறைவேறுமா? பாப்போம்.

அந்த வீட்டில் செல்வா, சுமதி, கயல் மற்றும் அருண் (12) வசித்து வருகின்றனர். ஒரு காவலாளி அவரது பெயர் வேலு. பல வருடமாக அங்கே வேலை செய்யும் விசுவாசமான வேலைக்காரர். தேவை என்றால் மட்டும் வேலைக்காரர்கள் ஆண் பெண் என வந்து செல்வர். மத்தபடி அனைத்து வேலையும் செய்வது கயல் தான். தேனீர் உடன் சுமதியின் அறைக்கு சென்றாள் கயல். எட்டு மணிக்கு மேல் எழுந்து கயல் கொண்டு வந்த தேனீரை குடித்து விட்டு, “இதெல்லாம் ஒரு டீ-யா என்னைக்கு தா டீ-யை ஒழுங்கா போடுவியோ…” என்று சலித்து விட்டு, “போய் எனக்கு சுடுதண்ணி எடுத்து வை இதெல்லாம் தினமும் உனக்கு சொல்லணுமா போ…” என்று அவளை விரட்டி விட்டு மீண்டும் படுத்து விட்டாள். இது எப்பொழுதும் நடப்பதால் அவளும் வேகமாக எல்லா வேலையும் முடித்து விட்டு தன் தம்பியை எழுப்பி தயாராக சொல்லி விட்டு இவள் கல்லூரி செல்ல ஆயத்தமானாள்.

*************************

ஆதித்யா எழுந்து தனது அன்றாட உடற்பயிற்சியை முடித்து விட்டு ஹோம் தியேட்டரில் சத்தமாக பாடலை வைத்து விட்டு குளித்து கொண்டு இருந்தான். இசை கடலில் மூழ்கி கொண்டு இருக்கும் போது பாடல் நின்று விட்டது. உடனே அவனுக்கு தெரிந்து விட்டது இது யாருடைய வேலை என்று. ‘ஆஹான் வந்துட்டான், இன்னைக்கு என்ன அட்வைஸ் பண்ண போறானோ. இவனை நண்பனா வெச்சுகிட்டு ஒரு பாட்டு கூட நிம்மதியா கேக்க முடியலையே…. சீக்கிரமா இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்போதா நமக்கு நிம்மதி’ என்று தன் நண்பனை கழுவி ஊத்திவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு வெளியே வந்தான் ஆதி.

அவன் அறையில் அவன் கழுவி ஊற்றிய ஆருயிர் நண்பன் கண்களில் கோபத்துடன் இவனுக்காக காத்து கொண்டு இருந்தான். வேற யாரு நம்ம கார்த்திக் தா. அவனை பார்த்ததும், “வா டா மச்சான் இப்போதா உன்னைய பத்தி நினைச்சேன்… அதுக்குள்ள நீயே வந்துட்ட… உனக்கு ஆயிசு நூறுடா” என்று கேவலமாக சமாளித்து கொண்டு இருந்தான். அவனோ உன்னை நான் அறிவேன் என்ற ரீதியில், “சரி இன்னைக்கு என்னைய எப்படி எல்லாம் சார் கழுவி ஊத்தினிங்க சொல்லுங்க கேப்போம்…” என கேட்டுவிட்டு அவன் சொல்லும் மொக்கை பதிலுக்காக காத்து கொண்டு இருந்தான். ‘ஐயோ…. என்ன கண்டுபுடுச்சுட்டான், எப்படி சமாளிக்குறது’ என யோசித்து கொண்டே “என்னடா இப்படி சொல்லிட்ட… நீ என் உயிர் மச்சான், உயிர் இல்லாமல் இந்த உடல் எப்படி இருக்கும்… அப்படி பட்ட நான் உன்னைய போய் திட்டுவனா… என்னைய போய் சந்தேகபட்றியே இதெல்லாம் நியாமா…” என்று சிவாஜியவே ஓவர்டேக் பண்ற அளவுக்கு ஒரு நடிப்பை காட்டி கொண்டு இருந்தான் ஆதி. (மீ: என்ன நடிப்பு டா சாமி, இதெல்லாம் ஓவர் தா)

கார்த்தி அவனை பார்த்து த்தூ என துப்பி விட்டு கேவலமாக பார்த்து கொண்டு இருந்தான். அதெல்லாம் அவன் கண்டு கொள்ளாமல் கடமையை கண்ணாக தயாராகி கொண்டு இருந்தான். இப்போது கார்த்தி சீரியஸ் ஆக பேச ஆரம்பித்தான். “நீ ஏன் மச்சி இப்படி பண்ற யாரு என்ன சொன்ன என்ன நானே அத சீரியஸா எடுத்துக்கல நீ ஏன் இப்படி பண்ற…” என்று தன் கண்ணீரையும் கஷ்டத்தையும் மறைத்து சாதாரணமாக காட்டி கொள்ள முயற்சி செய்து கொண்டு இருந்தான் கார்த்தி. ஆதி தன் முக பாவங்களை மாற்றி அவன் முன்னால் வந்து “மச்சி என்னைய பத்தி உனக்கு தெரியும். எனக்கு நீ ரொம்ப முக்கியம். நான் இருக்கும் போது உன் கண்ணுல இருந்து கண்ணீர் வந்தா என்னால தாங்க முடியாது. அவன் எப்படி உன்னைய பத்தி பேசலாம். அதுவும் என் முன்னாடியே பேசுறான். அவனுக்கு எவ்ளோ தைரியம் இருக்கும். கொன்னு போட்ருப்பேன் காலேஜ்-அ போய்டுச்சு… இல்லைனா நேத்தே அவனுக்கு சங்கு ஊதி பாலே ஊத்திருப்பேன் தப்புச்சுட்டான். இன்னொரு தடவை அவன் கண்ணுல படட்டும் அப்போ தெரிஞ்சுப்பான் இந்த ஆதி யாருனு” என்று கோவத்தில் கண்கள் சிவக்க பேசி கொண்டு இருந்தான். (பாவம் யாரு பெத்த புள்ளையோ). சட்டென கண்கள் கலங்க தன் நண்பனை தாவி அணைத்து கொண்டான் கார்த்தி. அவனின் மன நிலையை புரிந்து கொண்டு தன் கோவத்தை குறைத்து அவனுக்கான ஆறுதலாக மாறி போனான் ஆதி.

அப்படி என்ன நடந்துருக்கும்………. அடுத்த எபில பாக்கலாம்…

காதல் தொடரும்.
மீயாழ் நிலா

தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. அக்கா பொண்ணுனு கொஞ்சம் கூட அன்பு இல்லாம இந்த சுமதி,கயலை எவ்ளோ கஷ்டப்படுத்துறா..செல்வத்துக்கு என்ன ஆச்சு..ரெண்டு காலும் இல்லையா….

      கார்த்திக் கை யாரு என்ன சொன்னா..அதுக்கு ஆதி அவங்கள என்ன பண்ணான்??? Karthik, aadhi friendship bonding superb

      1. Author

        Thanks sis 🥰☺️☺️😄😄😄☺️

    2. Hello writer ji … Pls tag me…. Nan kuda nenga second epi podalanu ninachen …. Ipo thn pathen…. Unga epila full story link ila…. Y thodar kadhai la sekalaya… Pls apothn ethana epi potrukenganu enkaluku teriyum … Thodar kadhai la swrthum link varalena admin kitta sollunga. … Epi rmba kutty ya iruku sis…. Knjm perusa kudaka try pannunga … Pavam kayal …. Ava appa accident ku Sumathi kuda reason ah irukalam…. Karthik adhi frndship super….. Nic epi sis…. Keep going….

      1. Author

        Thanks sis🥰🥰🥰 athuku enna sis periya ud kudutharalam😁☺️👍 naan paakura sis eppadi thodarkadhai ya serkkarathunnu👍