Loading

ஆட்சியர் கனவு – 16 💞

அனைத்துமானவளே…
என் அகம் கொண்டவளே.!
என் அங்கம் முழுதும் நீ தானே
உன்னை அறியும்
உள்ளம் நான் தானே..!
மன்னித்து விடடி!

எப்போதும் அமைதியாகவே இருப்பவள் இன்று திவியை அறைந்தது அனைவருக்கும் அதிரிச்சியே..

ரோஜா “ஏய்..யது.. என்ன மா.. எதுக்கு இப்போ அவள அடிச்ச.?”

யது அப்போது தான் தான் செய்த தவறை உணர்ந்தவள் திவியை பார்க்க, அவள் கண்கள் நீரை அடக்கி கொண்டு இருந்தது.

யதுவிற்கே புரியவில்லை என் இந்த சிறிய விஷயத்துக்கு அவளை அடித்தோம் என்று “சாரி திவி” என்று அவள் அருகில் செல்ல,

திவி “அம்மா.. எனக்கு டைம் ஆச்சு.. நான் கிளம்புறேன்.. அப்பா ஈவினிங் வர லேட் ஆகும் ப்பா” என்று விட்டு யதுவின் முகத்தை கூட பார்க்காமல் சென்று விட்டாள்.

யது “திவி..திவி..” என்று அவள் பின்னே செல்ல, அதற்குள் அவள் மிதிவண்டியில் சென்று விட்டாள்.

யது “ம்மா.. மா.. அவ பேசாம போய்ட்டா மா.!” என்று அழுக,

ரோஜா “ஒரு பாட்டுக்கு அவள ஏன் மா அடிச்ச.?”

யது”அம்மா.. அது.. அது..”

ராஜா “நீ சீக்கிரம் கிளம்பி ஸ்கூல்க்கு போ மா” என்றதில், விரைவாக அவளும் சென்றாள்.

அங்கு பள்ளியில் திவிக்கு வேறு வேலை தந்து விட்டதால் மீனாவை வரவேற்பு பகுதியில் நிறுத்தி இருந்தனர்.

யது வேகமாய் பள்ளிக்கு வர, அங்கு மீனாவிடம் சென்று “திவி எங்க டி மீனு”

மீனா”அவள மிஸ் வர சொன்னாங்கன்னு போய்ட்டா.. உன்னையும் என்னையும் இங்க நிக்க சொன்னாங்க! நீ பேசாம நில்லு”

யது”இல்ல டி.. திவிய பாக்கணும்.”

மீனா”அவ வருவா டி.. நீ நில்லு”என்று அவளை நிக்க வைத்து விட்டாள்.

சிறிது நேரத்தில் அங்கு திவி வர, யது அவளையே பார்த்து கொண்டு இருந்தாள்.

மீனா”உங்க ரெண்டு பேருக்கும் என்ன டி பிரச்சனை..? ஏன் டி மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்கீங்க.?”

திவி”அதுலாம் சொன்னா உனக்கு புரியாது மீனா.. நான்லாம் பாட்டு பாட கூடாது. அதுலாம் பீலிங் டி.ம் சரி சரி.. உன்னை மிஸ் கூப்டாங்க”என்று கூற

மீனா”ம்ம் போறேன் டி”

திவி”எரும நீ எங்க போற?.. உன்னை மிஸ் கூப்டாங்க” என்று யதுவை பார்த்து கொண்டே கூற,

மீனா அதை கவனிக்காமல்”அதான் டி போறேன். “

திவி”அய்யோ.. உன்ன மிஸ் கூப்டாங்க டி” என்று மேலும் கூற,

மீனா”என்ன விட்டா நான் போவேன் டி.. விடு டி அரமெண்டல்”

திவி”யாரை பாத்து அரமெண்டல்னு சொல்ற.? நின்ன கொந்து களையும்” என்று மலையாளத்தில் பேச,

மீனா”திவி உண்மைய சொல்லு இந்த ஒரு வார்த்தையை தவற உனக்கு வேற எதுவும் தெரியாது தான.?”என்று அவளை வார,

அதில் யது சிரித்து விட்டாள். திவி”என்ன பாத்து யாரும் சிரிக்க வேண்டாம்.. மிஸ் வர சொன்னங்க. அங்க போலாம்” என்று கூற,

மீனாவிற்கு இப்போது திவி கூறியது புரிய, யது அமைதியாக நின்று கொண்டு இருந்தாள்.

யதுவின் கண்களில் உள்ள நீர் இதோ அதோ என்று இருக்க, திவி”யது…” என்று அழைத்த மறு நொடி.. யது”சாரி டி.. சாரி டி..” என்று அழுதாள்.

திவி”ப்ச்.. லூசு..! எதுக்கு சாரி..சொல்ற.? நீ தானா அடிச்ச” என்க,

யது”சாரி டி.. இனிமே உன்னை அடிக்க மாட்டேன்.. நீ என்ன பாட்டுவேணா பாடு” என்று கூற,

திவி”வேணாம் தாயே.. மறுபடியும் நீ அடிக்கவா..” என்க,

யது பாவமாய் முகத்தை வைத்து கொண்டு இருக்க, திவி”யது.. யது.. ப்ச்.. யது என்ன பாரேன்.. ஏய் உன்னை என்ன நான் பொண்ணு பாக்கவா வந்து இருக்கேன். குனிஞ்சிக்கிட்டு இருக்க, பாரு டி..!”அப்போதும் அவள் குனிந்து கொண்டு இருக்க,

மீனா இதை கண்டு கொள்ளாமல் வண்ண காகிதத்தை கட்டி கொண்டு இருக்க,
அப்போது இரு மாணவர்கள் போட்டிக்கு கலந்து கொள்ள வர, மீனா அவர்களை காணாது தன் கடமையே கண்ணாக வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்.

அங்கு யதுவோ இன்னும் நிமிராமல் இருக்க, திவி.. “யது அங்க பாரு டி.. ஆதி என்று கத்த, யது உடனே சுற்றி முற்றி தேடினாள். ஆனால் உண்மையிலேயே ஆதி வந்து இருப்பதை அவள் அறியாமல் போனாள்.

திவி அவளை பார்த்து சிரிக்க, யது “ஏன் டி பொய் சொன்ன?”

திவி”லூசு. பின்ன நீ இப்படியே இருந்தா நான் என்ன பண்ண.? இன்னும் அந்த எருமையை கண்டே பிடிக்கல.. அதுக்குள்ள நான் சொல்றேன்னு நீயும் தேடுற.? என்ன லவ்வா.?”

யது”ஏய்.. அப்டிலாம் ஒன்னும் இல்ல.. ஆதி மாமா வந்தா எல்லாரும் சந்தோஷப்படுவாங்கள அதான்” என்று சமாளிக்க,

திவி”ம்ம் நம்பிட்டேன்.. சரி.. உன்ன மிஸ் வர சொன்னாங்க.. ஆனா நீ போவாத.. நானே போய் பாக்குறேன்” என்று விட்டு சென்றாள்.

மீனா கீழே விழ போக அங்கு வந்த மாணவர்கள் அவளை பிடித்தனர். அப்போதும் அவள் பிடி இல்லாமல் ஒருவன் மேல் விழ, அவன் தன் சகோதரன் மேல் விழ, அவன் யதுவின் மேல் விழப்போக யது நகர்ந்து விட்டதால் மூவரும் கிழே விழுந்தனர். அதை கண்டு யது சிரிக்க, ஏதோ யோசனை வந்தவளாக திவியை காண சென்றாள்.

மீனா”சாரி அண்ணா..நான் தான் பாக்கல”

முதல் மாணவன்”ம்ம் பரவால்ல பாப்பா.. போட்டிக்கு எங்க பேர் கொடுக்கணும். ?”

மீனா”பாப்பானுலாம் கூப்டாதிங்க. என் பேர் மீனா. உங்க பேர்.?”

ஆதி”என் பேர் ஆதி.. இவன் என் தம்பி கோகுல்”

மீனா”ம்ம் சரி ண்ணா.. இங்க ஒருத்தி இருந்தாளே எங்க அவ.? அவளுக்கு தான் போட்டி விவரம் தெரியும் ண்ணா” என்று திவியை கூற, ஆனால் அங்கு இருந்ததோ யது என்பது மீனா அறியாமல் போனது காலத்தின் கோலம் போல,

கோகுல்”உங்க பிரண்ட் பேர் என்ன ?”

மீனா”யது..!’என்று கூற, அந்த பெயர் ஆதியின் மனதில் ஆழமாக பதிந்தது.

மீனா போட்டிக்கான தகவல்களை யதுவிடம் கேட்டு விட்டு இவர்களிடம் கூறினாள்.

யதுவிற்கு  ஆதியை பார்த்த உடன் ஏதோ செய்ய, அங்கு வந்த திவியோ ஆதியை உடனே கண்டு கொண்டாள்.

திவி தன்னை அறியாமல் தியா என்று சொல்ல, யது”யாரு டி அது தியா.?”

திவி”அய்யோ அப்படியா சொன்னேன் என்று தலையில் அடித்து கொண்டு மறுப்பாக தலையசைத்து, யது அவன பாரேன்.. எங்கேயோ பாத்த மாதிரி இல்ல.?”

யது”ம்ம்ம்ம்.. ஆமா திவி.. ஆனா எங்கன்னு தான் தெரியல.”

திவியும் யோசனையில் இருக்க, ஏதோ தோன்றியவளாக அவளிடம் இருந்த ஆதியின் சிறு வயது புகைப்படத்தை எடுத்து பார்த்தாள். உறுதியும் செய்து கொண்டாள்.”அப்போ.. தியா உனக்கு ஒன்னும் ஆகல.. இத்தனை வருசமா எங்க டா இருந்த ..! ஏய்.. நான் உன்னை கண்டுபிடிச்சிட்டேனா.? சூப்பர்.. கடவுளே.. ரொம்ப ரொம்ப நன்றி.. ” என்று நினைத்துகொண்டு இருக்க,

யது மீனாவிடம் “ஆள பாரு.. கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம். உம்முனா மூஞ்சு.” என்று கூற,

மீனா”ஏய் அவங்க உன்ன விட பெரியவங்க டி யது”

திவி”அதுக்கு என்ன.. சைட் அடிக்க கூடாதா.? உம்முன்னு இருந்தாலும் பையன் கும்முன்னு இருக்கான்.” ஏனோ யது அவனை பற்றி கூறியது திவிக்கு பிடிக்காமல் போக, அவள் இவ்வாறு கூறினாள்.

சீனியர் மாணவி “8த் தான் படிக்குற அதுக்குள்ள சைட்டா” என்று திவியின் காதை திருக,

திவி”ஆஆஆஆ… எத்தனாவாது படிச்சா என்ன கா.. சரி சரி விடுங்க” என்று விட்டு இருவரும் உணவு இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

யதுவிடம் திவி ஆதியை நன்றாக கவனிக்கும் படி சொல்லிவிட்டு தான் சென்றாள். தன்னை அவனிடம் அறிமுகப்படுத்தி கொள்ள திவி விரும்பவில்லை. எங்கே மறுபடியும் தன்னை வெறுத்து விட்டால்.? ஆதலால் யதுவையே அவனிடம் அனுப்பினாள்.

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு பேட்சை கொடுக்க, யது அந்த வேலைகளை செய்தாள். ஆதியின் முன் திவி வரவே கூடாது என்ற முடிவில் இருக்க, விதியின் முன் மனிதன் நினைத்தது நடக்குமா என்ன.?

உணவு வழங்கும் இடத்தில் இருந்த திவியிடம் கோகுல் இரண்டு உணவு கேட்க,  திவி அவனிடம் வாக்கு வாதம் செய்து கொண்டு இருந்தாள்.

கோகுல் :” ரெண்டு பேர்க்கு சாப்பாடு” என்று கேட்டான்.

திவி:” என்னது ரெண்டு பேர்க்கா.? ஒருத்தருக்கு ஒன்னு தான் குடுக்க சொல்லி இருக்காங்க. உனக்கே ரெண்டு தர முடியாது. அப்ரோம் லாஸ்ட் டா இருக்கவங்களுக்கு பத்தலான என்ன பண்றது.?” என்றாள்.

கோகுல்:” ஹலோ! ரெண்டுமே எனக்குன்னு உன்கிட்ட சொன்னனா? அப்டி ஒன்னும் நான் தீனிப்பண்டராம் கிடையாது! ஓகே.அப்டியே ரெண்டு குடுத்தாலும் என்ன ஆகிடுவ.? உன் அப்பா வீட்டு சொத்தா போகுது.?”

திவி:” ஏய்.. தேவ இல்லாம என் அப்பாவாலாம் இதுல இழுக்காதே! சொல்லிட்டேன்.  ஒருத்தருக்கு ஒன்னு தான் தரணும்னு சொல்லி இருக்காங்க.யாருக்கு வேணுமோ அவங்க நேர்ல தான் வரணும்” என்று கூறினாள்.

உணவு வாங்க சென்ற கோகுலை காணவில்லை என அவனை ஆதி தேடிக்கொண்டு வர, அங்கு நடந்த ரகளைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

சில நிமிடங்கள் அவன் அவளை ரசித்தாலும் ஏதோ ஒன்று அவள் மேல் கோபத்தை தான் வர வைத்தது.  திவி செய்யும் செயல்கள் அவனுக்கு திமிராகவே தெரிந்தது.

அங்கு சென்ற ஆதி என்ன செய்கிறோம் என்று தெரியாமல் திவியிடம் இருந்து உணவை பிடுங்கி கொண்டு கோகுலையும் அழைத்துக்கொண்டு சென்றான். அப்போது அவன் உதடுகள் அவனரியாமல் குட்டச்சி என்று உச்சரித்ததை திவி கண்டு கொண்டாள்.

திவி:” ப்பா.. என்னா கோவம்? செம சூடு பார்ட்டி நீ தியா” என்று நினைத்துக்கொண்டு தன் மற்ற வேலைகளை பார்க்க சென்றாள்.

அடுத்த ஒவ்வொரு வேலைகளையும் யது ஆதிக்காக பார்த்து பார்த்து செய்தாள். மறந்தும் கூட அவன் முன் திவி வரவே இல்லை.

போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் அனைவருக்கும் ஜூஸ் கொடுக்கப்பட்டது. அப்போது ஆதிக்கு கொடுக்கப்பட்ட ஜூஸில் யாரோ மயக்க மருந்து கலந்து விட்டிருக்க அதனை அறியாமல் ஆதியும் அதனை குடித்தான். அதை குடித்த பிறகு அங்கேயே மயங்கி விழுந்தான். அவனை இரண்டு நபர்கள் பெண்கள் உடை மாற்றும் அறையில் தள்ளிவிட்டு கதவை அடைத்தனர். இதை அனைத்தையும் யது பார்த்து விட்டு திவியிடம் கூறினாள். திவி பதறி அங்கு விரைந்தாள்.

போட்டிகள் முடிந்த வேளையில் மாணவிகள் அனைவரும் அவ்வறைக்கு செல்ல, அங்கு ஆதியை கண்டு அனைவரும் திகைத்து போயினர். மற்ற மாணவர்கள் அவனின் நிலையை கண்டு அதிர கோகுல்:” ஆதி ண்ணா! என்ன பாருங்க ண்ணா!” என்று கதற,

யதுவை ஆசிரியர் அழைத்ததாக சென்று விட, விரைந்து அவ்விடம் வந்த திவி: ” மிஸ்! இவங்களுக்கு கால்ல அடி பட்டுடுச்சு மிஸ்! நான் தான இன்சார்ஜ், அதனால நான் தான் இவங்களுக்கு பர்ஸ்ட் எயிட் பண்ண வர சொன்னேன். கொஞ்ச நேரம் முன்னாடி நான் வந்தப்போ இந்த ரூம் மூடி தான் இருந்துச்சு! அதான் நான் போய்ட்டேன். இவங்களுக்கு கிலோஸ்ட்ரோ ஃபோபியா அதான் மயங்கி விழுந்துட்டாங்க” என்றாள்

கோகுல்:” இவ என்ன அண்ணாக்கு இல்லாதது லாம் சொல்ற?” என்ற ரீதியில் அவளைப் பார்க்க,

திவி:” தியா எந்திரிங்க!” என்று கண்ணீருடன் அவனின் கன்னத்தை தட்டி அவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்தாள். இவளின் இச்செயலை கண்டு அனைவரும் ஒவ்வொரு மாதிரியாக பேச, மீனாவும் கோகுலும் அவளை சமாதானப்படுத்த, திவியோ ஆதியை தன் மடியில் கிடத்தி அழுதுகொண்டு இருந்தாள்.

கோகுல்:” மீனா இதுக்கு முன்னாடி இவ அண்ணாவை பாத்து இருக்காளா.?”
மீனா மறுப்பாக தலையசைத்து “யது அவங்கள ஹாஸ்பிடல் கூட்டி போலாம் வா” என்று கூற,

திவி: தலையசைத்து,”இங்க பாருங்க! ஒன்னுமில்ல! எல்லாம் சரி ஆகிடும்!”  என்று அவனின் கன்னத்தை தட்டி கை, கால்களை தேய்த்து விட்டாள்.

அவன் கண் விழித்து அவளின் முகத்தை பார்க்க, கண்கள் அவனின் மனதில் ஆழ பதிந்தது. மீண்டும் மயக்கநிலைக்கு சென்று விட்டான்.

அவனை அங்கு இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, யது இங்கு திவியின் மேல் கடும் கோபத்தில் இருந்தாள்.

ஆதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட, இங்கு யது திவியை கொலைவெறியில் முறைத்து கொண்டு இருந்தாள்.

திவி:”இவ ஏன் நம்மள இப்டி முறைக்குறா.? என்று யோசித்து விட்டு, ஓடி சென்று அவளை அணைத்து கொண்டாள். யது.. நீ எதுவும் பீல் பண்ணாத டி.. ஆதிக்கு ஒன்னும் ஆகாது”என்று கூற,

யது அவள் அழுகிறாள் என்று எண்ணி”சரி சரி திவி… நான் பீல் பண்ணல.. நீயும் அழாத.!” என்று அவளின் முதுகை வருடி விட்டாள்.

திவி”அப்பாடா பிள்ளை நார்மல் ஆயிட்டா என்று நினைத்து விட்டு, யதும்மா.. ஏன் என்ன முறைச்சிக்கிட்டு இருந்த டா” என்று ஒன்றும் அறியாதவளாய் கேட்டாள்.

யது”ஆமா ல..” என்று கூறிவிட்டு மீண்டும் முறைக்க தொடங்கினாள்.

திவி”அயோ லூசு திவ்யா.. அவளே மறந்துட்டா.. நீயே கேட்டு மாட்டிக்கிட்ட.. அநேகமா. உனக்கு உன் வாய் தான் டி எமன்”என்று தன்னையே நொந்து கொண்டு யதுவை பாவமாக பார்த்தாள்.

யது”அவங்க யாரு.? எதுக்கு அவங்கள நல்லா கவனிக்க சொன்ன.? நீ ஆதி மாமாவ தான தியான்னு கூப்டுவ.? அவங்கள எதுக்கு தியான்னு சொன்ன?” என்று கேள்வியாய் அடுக்கி கொண்டே போக,

திவி”இதுக்கு பேர் தான் தவளை தான் வாயாலேயே கெடுறதுன்னு சொல்லுவாங்க போல, என்று மனதிற்குள் நினைத்து கொண்டு, வர்ஷினி அவங்க.. நம்ம.. நம்ம.. ஆதி மாமா தான்” என்று இரு கைகளையும் கன்னத்தில் வைத்து கொண்டு பாவமாக கூறினாள்.

யது”எ..என்..என்ன டி சொல்ற.? உண்மையாவா.?” என்றவளின் கண்களில் அத்தனை ஆனந்தம்.

திவி”ம்ம் ஆமா ” என்று கூற,

யது அவளை கட்டி அணைத்துகொண்டு.” எப்டி திவி கண்டுபிடிச்ச.? உனக்குள்ள அவ்ளோ அறிவா.?”என்று கேட்க,

திவி”ஏய்.. கொழுப்பா.?…” என்று முறைத்தாள்.

யது”லைட்டா..”என்று கூறிவிட்டு, “சொல்லு திவி.. எப்டி கண்டுபிடிச்ச.?” என்று ஆர்வமாய் கேட்க,

திவி”உனக்கு சக்தி அண்ணா தெரியும் ல.?” என்று கேள்வியாய் கேட்க,

யது”யார்.. நம்ம எதிர் வீட்ல இருக்காங்களே அவங்களா.?”

திவி”ம்ம்ம் அவங்களே தான்.. அவங்களும் ஆதியும் ஒரே ஸ்கூல் தான் போல, காலைல அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தத பாத்தேன் யது.. பர்ஸ்ட்டே அந்த எருமைய ஸ்ஸ்ஸ்.. ஆதிய பாத்த உடனே கொஞ்சம் டௌப்ட். அப்ரோம் சக்தி அண்ணா கிட்ட கேட்டேன்.. அவங்க சின்ன வயசுல இருந்து வீட்டை விட்டு வந்துட்டாங்கன்னு சொன்னாங்க..

அப்ரோம் நான் என் சந்தேகத்தை சொன்னேன். அண்ணா தான் அவங்க சின்ன வயசு போட்டோவை காட்னாங்க. அன்னைக்கு அத்தை குடுத்த போட்டோவும் என்கிட்ட தான் இருந்துச்சு. ரெண்டும் வச்சி பாத்தேன்.. ஆதின்னு கண்டுபிடிச்சிட்டேன் டி.. உன்கிட்ட சொல்ல வரப்போ என்னென்னமோ நடந்துடுச்சு.”என்று தான் செய்த விஷயங்களை கூற,

யது “செம திவ்யா.. சூப்பர் டி.. வா.. அம்மா கிட்ட இப்போவே சொல்லலாம்.” என்று கூற,

திவி “சொல்லி ?”

யது “என்ன திவி, இப்டி கேக்குற.? சொன்னா அம்மா அப்பா ரொம்ப சந்தோசப்படுவாங்க. அத்தை மாமா கூட எவ்ளோ சந்தோசப்படுவாங்க. “என்று கூற,

திவி “சந்தோஷபடுவாங்க தான் யது.. ஆனா இப்போ வேண்டாம் யது..”

யது “ஏன் திவி.?”

திவி “வேண்டாம்னா விடேன் யது..” என்று அழுத்தமாக கூற,

இதற்கு மேல் திவியிடம் எதுவும் கேட்க முடியாது என்று அறிந்த யது அமைதியாகி விட்டாள்.

கனவு தொடரும்…🌺🌺🌺🌺🌺

படித்துவிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க பா..

நன்றி..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்