Loading

ஹாய் ! நான் லவ் மந்திரம் போட்டிகாக இந்த கதை எழுதுறேன். ஏற்கனவே எழுதிக் கொண்டிருக்கும் குளிர் ஊசி ஹோல்டில் வைத்துள்ளேன். சீக்கிரமே போடுறேன்…… ஆதரவு கொடுங்க…. கமெண்டு பண்ணுங்க Boys & Girls 🙏🏻🙏🏻💞💞💞

முசுடும் முயலும் – 1 😾😻

” இங்க பாரும்மா ……. இனிமே எங்கனாலையும் தேட முடியல…. நீ எதிர்பார்க்குற எல்லாமே எங்கனால பாக்க முடியல….. நீ ஒன்னு சொன்னா உங்க அப்பா ஒன்னு சொல்லுறாரு…… ஒத்துக்கோ “

உத்ராவின் தாய் தென்றல் தனது மகளின் சம்மத்திற்காக வேண்டினார். ஆனால், உத்ரவிற்கு விழிக்க மட்டுமே செய்ய முடிந்தது.

ஆனால், அவள் வேறு யோசிப்பதற்குள் உத்ராவின் தந்தை வைரமணியன் ” நாங்க உன் நல்லதுக்கு தான் செய்வோம். பெத்தவங்க என்னைக்கும் கெடுதல் நினைக்க மாட்டாங்க . நாங்களும் அதே தான். நம்ம வரைமுறைல படிக்கிறதே பெருசு. நாங்க படிக்க வச்சுட்டோம் . வேலைக்குலாம் கஷ்டம் மா ……. ஒத்துக்கோ “

“நான் வேலையை கல்யாணம் அப்புறம் பாத்துக்குறேன் அப்பா…. அதுக்கு வேலை பாக்குற பையனா வெளியூர்ல இருக்குற மாப்பிள்ளையா பாருங்கனு தான சொல்லுறேன் “

” இதுவும் வெளியூர் தான் ” என தென்றல் இடை புகுந்திட …. திரும்பி தந்தை இருப்பதால், தாயைக் கண்டு முறைக்க மட்டுமே முடிந்தது .

“அப்பா நான் தனியா இருக்கணும்னு நினைக்கிறேன். கூட்டு குடும்பம்லாம் எப்படிப்பா “

“மா! நான் இதுக்கு மேல வாதம் பண்ண விரும்பல. நான் விசாரிச்சுட்டேன். சித்தப்பா பேசுனத நீயும் கேட்டல . நல்ல குடும்பம். படிச்ச குடும்பம். நல்ல பையன். தொழிலும் நல்லா இருக்கு . நல்ல ஊருல தான் இருக்காங்க. எங்களை பத்தியும் யோசி” எனக் கூறி எழுந்து விட்டார் மனப் பாரத்தோடு .

அவள் தனியாக யோசிக்கட்டும் என்று அன்று பொழுது முழுவதும் விடலாம் என்று நினைத்து இருவரும் சென்று விட்டனர். ஆனால், உத்ரா அறியாமல் தனது முதல் புதல்வி மைத்ரேயியிடம் வரன் வந்ததை கூறினார் தென்றல்.

வைரமணி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்  துணிக் கடை வைத்திருக்கிறார். அவருக்கு இரு புதல்விகள் உத்ரா மற்றும் மைத்ரேயி . மனைவி தென்றல். இவர்கள் நால்வரும் பாபநாச கமல், கெளதமி , இரு பிள்ளைகள் என்று குட்டி கூட்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

தனது சுய முயற்சியால் முன்னேறி ஓரளவிற்கு பெரிய அளவிலான துணிக்கடையை விரிவு செய்து வைத்திருக்கிறார். பிள்ளைகளும் அன்னையின் தயவில்  நன்முறையில் மதிப்பெண் எடுத்து, இருவரும் வெளியூரில் படித்தனர்.

மைத்ரேயி கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிரிவு துறையை தேர்வு எடுத்து மதுரையில் ஒரு பிரபலமான கல்லூரியில் படித்தாள்.

சென்னை பழக்க வழக்கங்களைக் கண்டு அஞ்சி, தெற்கு பக்கத்தில் படிக்க அனுப்பி வைத்தார் வைரமணி. நான்காம் வருடம் முடித்து வெளியில் வரும் முன்னரே திருமணம் முடிவு செய்து சாத்தமங்கலத்தில் கல்யாணம் செய்து வைத்து விட்டார்.

அதே போல், இரண்டாவது பெண்ணையும் கொடுக்க ஆசைப்பட, வேலைச் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டனர்.

ஆனால் , கடவுளின் விதி அவளுக்கு ஒரு வருடம் ஆகியும் ஒரு வரனும் அமையவில்லை. அதோடு மைத்ரேயியும் இரண்டாம் குழந்தை கருவுற்றதால் அன்னையின் உதவிக்கு வீட்டிலேயே இருந்து விட்டாள்.

இருந்தும் சும்மா இல்லாமல் டி.என்.பி. எஸ்.சி. க்கு படித்துக் கொண்டிருந்தாள். வரைய கற்றுக் கொண்டிருந்தாள். தன்னால் முடிந்ததை எதுவோ செய்துக் கொண்டிருந்தாள்.

குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் மைத்ரேயியும் கிளம்ப , அன்று ஆரம்பித்தது வீட்டில் பரபரப்பு .

“என்னையை கல்யாணம் பண்ணிக் கொடுங்க…. இல்லையா வேலைக்கு விடுங்க… அதுவும் இல்லைனா படிக்க அனுப்புங்க…… இப்படி ஏன் சும்மாவே வைச்சிருக்கீங்க “

“நானும் அத தாண்டி நினைக்கிறேன். உன்னை வீட்டில வச்சிருக்கிறது எனக்கு தான் பெரிய பாடா இருக்கு. உனக்கும் உன் அப்பாக்கும் பஞ்சாயத்து பண்ணியே காலம் போகுது …. அடங்குறியா ” என தென்றல் போகிற போக்கில் திட்டி விட்டு போக, வைரமணி கடைக்கு கிளம்பி விட்டார்.

இரு வாரத்தில் பெருந்துறையிலேயே ஒரு மாப்பிள்ளை இருப்பதாக கூறி பேச்சை ஆரம்பிக்க,எங்கு நாம் எதாவது பேசினால் இங்கையே கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்று எண்ணி, தென்றலும் வைரமணியும் பேசிக் கொண்டிருந்த போது , சிரித்துக் கொண்டு ” மாதாஜி….. எதுக்கு இந்த அவசரம். ஒன்னும் அவசரம் இல்லை. பொறுமையா வெளியூர் மாப்பிள்ளையா பாத்து கல்யாணம் பண்ணி கொடுங்க…. நான் வையிட் பண்ணுறேன். இப்போ இந்த பாத்திரம் தான விலக்கனும். நான் விலக்குறேன் …. நைனா உங்களுக்கு டீ வேணுமா ” என்று கேட்டு பவ்யமாய் நிற்கும் மகளை முயன்று மட்டும் முறைத்து விட்டு கடைக்கு சென்று விட்டார்.

இது தான் சாக்கு என்று தென்றல் ஒரு வாரமாக வீட்டு வேலைகளை கற்க  வைத்து விட்டார். எப்பொழுது உள்ளூர் மாப்பிள்ளை வீட்டில் வேண்டாம் என்று இவர்கள் கூறி விட்டனரோ வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிய கதையாக அன்றிலிருந்து மறுபடியும் வேலை செய்ய டிமிக்கி கொடுத்து கொண்டிருந்தாள்.

வழக்கம் போல் இரவு முழுவதும் அலைபேசியை அலசி ஆராய்ந்து பன்னிரெண்டு மணிக்கு மேல் தூங்கிவிட்டு, பகலில் எட்டு மணி  ஆகியும் கண் திறக்க முடியாமல் கடினப்பட்டு திறந்து எரிச்சலுற்றாள்.

ஏனென்றால், வைரமணி கத்தாமல் கதறாமல் அறையில் ஓடும் ஏசியை ஆஃப் செய்து விட்டு, மின்விசிறியையும் ஒன்றில் வைத்து விட்டு நடைபயிற்சி (வாக்கிங்) சென்று விட்டார்.

வழக்கம் போல் எழுந்து, அன்னையிடம் திட்டு வாங்கி கொண்டு, பல் துலக்கி கையில் டீ கோப்பையுடன் அலைபேசியையும் தூக்கி கொண்டு வீட்டின் வாசலில் உள்ள சோபாவில் அமர்ந்து நிம்மதியாக அக்காலை பொழுதை டீயுடன் ரசித்து ருசித்து கொண்டிருந்தாள்.

அந்நேரம் , வீட்டிற்கு வெளியே இருவர்  நின்று பக்கத்து வீட்டு முகவரி கேட்டனர். காலை பொழுதை ரசிப்பதில் தடங்கல் ஏற்பட்டாலும் சிரித்த முகமாக பதிலளித்தாள். அதன் பின் , சிறிது நேரத்தில் அவ்விருவரும் இவர்கள் வீட்டிற்கு வந்து தென்றலுடன் பேசி விட்டு சென்றனர்.

ஆனால், இது எதுவும் உத்ராவிற்கு தெரியாது. ஏனென்றால், கால் மணி நேரத்திற்கு முன்பே தென்றல் மண்டையில் நன்றாக கொட்டி குளிக்க அனுப்பி வைத்து விட்டார்.

திருமணம் நடப்பதற்கு ஆயிரம் தெய்வங்களை கும்பிட வேண்டும் என்பது அங்கு எழுதப்படாத சட்டம். எவ்விஷயத்திற்கும் முதல் வணக்கம் கடவுளுக்கே.

அதனால், தலை குளித்து  அழகான ஊதா வண்ணத்தில்  தாவணியும், பச்சை வண்ணத்தில் ஊதா வண்ண பார்டர் பொருந்திய தாவணியும், அதே பச்சை வண்ணத்தில்  ஊதா பார்டர் அணிந்த ப்ளவுஸையும், இடைவரை நீண்ட கூந்தலை தளிர பின்னி, முகத்தில் மஞ்சள் பூசி, தலையில் மல்லிகை சரமிட்டு, ஊரின் ஒரத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு இருக்கும் அரச மர பிள்ளையாரிடம் முறையிட சென்றுக் கொண்டிருந்தாள்.

அவளின் உடல் வாகு சற்று பூசிய உடல்வாகு, மாநிறத்திற்கும் சிறிது கம்மியான நிறம். ஆனால், லட்சணம் கொட்டி கிடக்கும். கண், காது, மூக்கு என்று அனைத்தும் செதுக்கி வைத்தது போல் எடுப்பாக இருக்கும். மொத்தத்தில் அவள் பெருந்துறை கிளியோபாட்ரா .

கோவிலுக்கு சென்றவள் மிக பண்பாக சிரத்தையோடு அன்னை சொன்னதை பக்குவமாக செய்தாள். அரச மரத்திற்கும் பிள்ளையாருக்கும் தண்ணீர் ஊற்றி விட்டு, அரச மர இலையில் மாலை கோர்த்து, அதை பிள்ளையாருக்கும் செலுத்தி விட்டாள்.

எல்லாம் செய்ததை கண்டு பிள்ளையாரே விழி பிதுங்கி தான் நின்றார். ஏனென்று அவருக்கு தான் தெரியுமே. ஒவ்வொரு வார சனிக்கிழமையும் இங்கு வந்து பதினைந்து நிமிடத்தில் எல்லாம் செய்து விட்டு, அரை மணி நேரம் திட்டி தீர்ப்பாள் அதுவும் அருகில் உள்ள பொட்டி கடையில் நொறுக்கு தீனிகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே .

அதே போல் இன்றும் தேன் மிட்டாய், கடலை மிட்டாய், வேர்க்கடலை என்று எல்லாம் வாங்கி கொண்டு வந்து நன்றாக பிள்ளையார் முன் சம்மணமிட்டு ” விநாயகா ! ஒரு கவ்வுக்கு ஒரு ஹீட் தான். உனக்கு எத்தனை தடவை சொல்லுறது. ஒருவேளை நீ யானை அவதாரம் எடுத்ததால உனக்கு புரிய மாட்டேங்குதா? போய்  கூகுள் பண்ணி பாக்கனும்? எனக்கு இப்ப முக்கியம் வேலைக்கு போறது. அப்படி மாப்பிள்ளை பாக்க மாட்டியா ? காமிக்க மாட்டியா? இது தான் லாஸ்ட்….. இனிமே இந்த ஊரு மாப்பிள்ளைலாம் வேணாம் ” எனக் கூறி எழுந்து சென்றவுடன் பிள்ளையாருக்கு அரச மரம் மூலம் தென்றல் வீசியது.

அது பிள்ளையாரே அவள் போனதை நினைத்து மூச்சு விட்டது போல் இருந்தது. கடவுளுக்கு கூட நிம்மதி இல்லை போலும். போய் ஒரு நிமிடத்தில் திரும்பி வந்தவள் “உனக்கு நான் என்ன விரும்புறேனு புரியல. அதனால சிம்பிளா சார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லுறேன் “அழகு……. வேணா வேணா…. முதல்ல அறிவு, அழகு, ஆரோக்கியம், செல்வம் , திறமை இது எல்லாம் இருக்கிற மாப்பிள்ளை வெளியூர்ல வேலை பாக்குற மாப்பிள்ளை …. இந்த  ப்ராடக்ட் தான் வேணும். அமேசான்ல கிடைக்கலைனு நீ பாட்டுக்கு மீஸோல ஆர்டர் போட்டுறாதா கணேசா மீ பாவம்….. ஒகே …. வரட்டா…….. ” எனக் கூறி வீட்டிற்கு சென்று விட்டாள்.

கடவுளிடம் எவ்வாறு மன்றாட வேண்டும் என்பது கூட தெரியாமல் , சக தோழியிடம் பேசுவது போல் பேசி விட்டு செல்பவளை பிள்ளையார் நக்கல் சிரிப்புடன் காண்பது போல் இருந்தது.

😾❤️😻

யோகேஸ்வரயா மகாதேவாய
த்ரயம்பகாய த்ரிபுரன்தகாய
த்ரிகாணி காலாய காலனி ருத்ராய
நீலகண்டாய ம்ருதயஞ்சாய
சர்வேஸ்வராய சதாசிவாய
மகாதேவாய நமஹ…….

நடுவீட்டில் அடிவயிற்றிலிருந்து கூறி தியானம் செய்து கொண்டிருந்தான் நம் நாயகன் காசிநாதன் (எ) அபிமன்யூ .

இவர்கள் இருவரும் சந்திக்கும்பொழுது எவ்வாறு இருக்கும் என்று அடுத்து அத்தியாத்தில் பார்ப்போம்.

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
38
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    10 Comments

    1. முசுட்டு முயல் ரைட்டரே 😁

      கதை இப்ப தான் படிச்சேன். உத்ரா 😂😂😂😂😂

      வெறும் வேர்க்கடலையோட முடிக்கிறிங்க… எனக்கு பிடித்த தேங்காய் பிஸ்கட், நெய் கேக் லா காணும் 😒…

      இவ பண்ணுற லொள்ளுக்கு காசி புள்ள பூனையாட்டும் பிராண்டி வைக்காமல் இருந்தா சரி 🤣🤣

      1. Author

        😂😂😂 நன்றி

      1. Author

        😂😂😂😂😂 நன்றி

    2. பிள்ளையார்கிட்ட அடாவடியா கண்டிஷன் போடும் உத்ரா எங்க…
      அமைதியா தியானம் பண்ணும் அபிமன்யு எங்க…..

      இருக்கு இங்க ஒரு கலாட்டா இருக்கு…..

      இப்போ நான் யாரு டீம்ல நிக்க? டீம் உத்ராவா? டீம் அபிமன்யு வா? அதை அடுத்த எபியில் சொல்றேன்….

      ஆமா அடுத்த எபி எப்போ?

      ஆரம்பமே நல்லா இருக்கு இதே போல் கடைசி வர கொண்டு போக வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

      1. Author

        போக போக நீங்களே யாரு டீம்னு முடிவு பண்ணுங்க…….சீக்கிரம் சீக்கிரம் கண்டிப்பா போடுறேன் ……

    3. உத்ரா லொள்ளு செம்ம பாவம் பிள்ளயார் 😂😂

      1. Author

        நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻