Loading

முசுடும் முயலும் – 9 😾❤️😻

“ஏப்பா உன் வீட்டில எல்லாரும் அசைவம் சாப்பிட மாட்டாங்க பா? “

“என்னது 😱? ” உத்ரா அதிர்ந்து கத்த , மைத்ரேயியும் தென்றலும் கலக்கமாக பார்த்தனர்.

“என்னங்க இது ? “

” எனக்கே தெரில மா ! மாப்பிள்ளையோட அப்பா மட்டும் தான் சாப்பிட மாட்டாங்கனு சொன்னாங்க! இப்போ பேசி முடிச்சவுடனே மாப்பிள்ளையோட தாத்தா நிச்சயம் பத்தி பேசிட்டு இந்த விஷயத்தை சொன்னாரு “

“இவளை சாப்பிட விடுவாங்களா ? உள்ளூர்லையும் இல்லை…. அங்க வாங்கி கொடுப்பாங்களானு தெரிலயே ! “

“அதுலாம் நாங்க பாத்துக்குவோம்னு சொன்னாரு ” என வைரமணி மனைவியிடம் கூறி விட்டு, “மாப்பிள்ளை பேசும் போது இதைப் பத்தி கேட்டுறு மா ” எனக் உத்ராவிடம் கூறி விட்டு, வைரமணி பத்திரிக்கையில் மூழ்கி விட்டார்.

மனதில் இருந்தாலும் உத்ராவின் முன்பு காண்பிக்காமல் மைத்ரேயி மற்றும் தென்றலும் நாளை பத்திரிக்கை கொடுப்பதற்கான லிஸ்டில் மூழ்கி விட்டனர் .

எவ்வளவு தான் பொறுமை காத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் தூக்கம் வருகின்றது என்று கூறி விட்டு அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

பழைய உத்ரா வெளியில் எட்டிப் பார்க்க, மனதிற்குள்ளேயே “இந்தாளு பேசுவான் பேசுவானு எதிர்ப்பார்த்தா கதைக்கு ஆகாது. நம்மளே களத்துல இறங்க வேண்டிதான் . இந்த விஷயம் பாலா பயலுக்கு தெரிஞ்சா இன்னும் கலாய்ப்பான் . அய்யோ நமக்கு அப்போ கறி சோறு இல்லையா ! அடப்பாவி மனசுக்குள்ள வந்ததுல இருந்து இவன் என்ன இப்படி பொலம்ப விட்டுட்டானே ! படுபாவி ! ” என பல வித சிந்தனைகளை மனதிற்குள் போட்டு குழப்பி கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக மனதை தேற்றி அவனின் எண்ணை எடுத்து விட்டாள். இதோடு அரை மணி நேரம் ஆகிவிட்டது அவள் அவனை தொடர்பு கொள்ள முயற்சி செய்து . மனதை தேற்றி ஆழ மூச்செடுப்பாள் . பின்பு, அவனின் எண்ணிற்கு கீழ் பளிச்சென்று பச்சை நிற வட்டத்தில் தெரியும் தொலைபேசியின் ஐக்கானை தொட முயற்சிப்பாள். பின்பு, கை விட்டு விடுவாள்.

இதே போல் செய்து கொண்டு இருந்துவள் அவளுக்கே பொறுமை  போய் இன்ஸ்டாகிராம் பார்ப்போம் என்று நெட்டை ஆன் செய்ய, பட்டென்று “ஹாய் ” என்று அவனின் பெயரில் வாட்ச்சப்பில் இருந்து ஒரு தகவல் வந்ததாக காண்பித்தது.

அவன் மேல் பைத்தியமாக இருந்தவள்  இத்தகைய சிறு செயல் கூட அவளின் மனதை குளிர்வித்தது. உத்ரா எப்பொழுதும் எதற்கும் அலட்டாதவள் என்றெல்லாம் சொல்ல முடியாது.

ஆனால், அவளுக்கு பிடித்தவர்கள் அவளுக்காக எடுக்கும் சிறு முயற்சியும் அவளை மலையளவு மகிழ்விக்கும். அதே போல், வருத்தத்தையும் வாங்கிக் கொள்வாள் என்று யார் அபியிடம் கூறுவது.

அவனுக்கு பேச வேண்டும் என்று தோன்றியது. சட்டென்று அனுப்பி விட்டான். ஆனால், அதன் பிறகு அவன் மறந்துவிட்டு கடை வேலை பார்ப்பதே கொடுமை.

அவள் வந்த தகவலை நோட்டிஃபிகேஷனிலேயே பார்த்து விட்டு சிறிது கெத்து காட்ட வேண்டும் என்று நினைத்து ஒரு ஐந்து நிமிடம் கழித்து இவளும் ஹாய் என்று அனுப்பினாள்.

அவனுக்கு இவள் அரை மணி நேரம் கழித்து அனுப்பினாலும் மனம் கஷ்டப்படாது. ஆனால், இவன் ஒரு நொடி கழித்து பேசினால் கூட அந்த ஒரு நொடி முழுவதும் நெருஞ்சி முள்ளாக குத்தியது.

அவனின் மெசேஜை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தவள் எதார்த்தமாக கண்ணாடியை பார்க்க, அவளின் பிம்பத்தில் எதிர்வினை மிகத் துல்லியமாக தென்பட்டது. நாமா இப்படி இருக்கிறோம் என்று அவளுக்கே ஆச்சர்யமாக வந்தது. சட்டென்று அவள் மனதில் படமாக ,

” அதே காத்து

வாசம் வேற

அதே மண்ணு

வண்ணம் வேற

அதே மக்கள்

வாழ்க்கை வேற

ஒன்னு மட்டும் மாறவில்லை

மத்த நாட்டு சுவை எல்லாமே

ஒத்த வேளை உடையைப் போல

சுத்தமான நம்மூர் சுவையோ

ஆத்தா தந்த உசுரப் போல

தீ மூட்டி பாசம் கொட்டி

சமைச்சது திண்டுக்கலு தலப்பாக்கட்டி

நெய் ஊத்தி நேசம் கொட்டி

படைச்சது திண்டுக்கலு தலப்பாக்கட்டி ”

சட்டென்று தலையை உலுப்பி அவனது பதிலுக்காக எதிர்ப்பார்க்காமல் சட்டென்று அவனுக்கு அழைத்து விட்டாள். ரிங் போன பின்னரே ஏனடா அழைத்தோம் என்று இதயம் தாறுமாறாக அடிக்க ,

அதே சமயம் அவளது அழைப்பில் அவனது இதயம் காதல் இசை பாடிக் கொண்டிருந்தது. அவன் முகத்தில் சிறு முறுவல். அவளின் பெயரிலேயே அவளது பிம்பம் தெரிவது போன்று ஒரு கற்பனை தோன்றியது.

அதனை வெளிப்படுத்தாமலும், வெளிப்படுத்துவதற்கும் இடையில் பட்டும் படாமல் சிறு புன்னகையுடன் கண்களில் சிறு அதிர்வு அவன் முகத்தில் பிரதிபலித்தது. அதே உணர்வோடு அழைப்பை ஏற்க, ஒரு முறை பேசியதிலேயே அவளின் தயக்கத்தை புரிந்து கொண்டான்.

அதனால் , அவனே ஆரம்பித்தான் . “ஹலோ உத்ரா ! “

“ஹாய்”

“கடைசியா என்கிட்ட பேச தோணிருச்சா? “

“என்ன இவன் நம்ம பேச வேண்டிய டயலாக்லாம் இவன் பேசுறான் ” என மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டவள், தொண்டையை செருமி . “இல்லை பாட்டிம்மா தான் சொன்னாங்க! நீங்க ரொம்ப பிசினு . அதான் நான் நீங்களே கூப்பிடுவீங்கனு ….. “

“வெயிட் பண்ணியா ? ” ஹஸ்கி குரலில் கேட்க, அவள் உடல் வியர்வையில் நனைந்தது. இதயம் தாறுமாறாக மாறியது.

தன்னை சமன்படுத்தி “ஹம்ம்….. ” என்று கூற, காற்று மட்டுமே வெளியில் வர, அச்சத்தம் அவனின் செவிக்கு எட்டியது. அதில் அவனுக்கு போதையே ஏறியது. கண்மூடி அதை அனுபவித்தவன் சிரித்துக் கொண்டே அவளை சமன்படுத்தும் நோக்கத்தில் ” அப்புறம் ஏன் உன் கொள்கையை விட்டு எனக்கு போன் பண்ண ? “

அவளுக்கும் முறுவல் வந்து சென்றது. இருந்தும் அவனின் சகஜ பேச்சில் இவளுக்கும் குறும்புத்தனம் எட்டிப் பார்க்க , “யோவ்…. என்ன கலாய்க்கிறீயா ? “

அவன் நன்றாகவே சிரித்து விட்டான். அதில் அவளுக்கு வெட்கம் தொற்றிக் கொண்டது. அவன் சிரித்து விட்டு “என்ன பண்ணுற ? என்கேஜ்மெண்ட் பர்சேஸ்லாம் எப்போ? “

“ஹப்பா என்கேஜ்மெண்ட் நடக்க போகுதுனு தெரியுமா அப்போ ? “

அதற்கும் அவனிடம் சிரிப்பே. பின்பு அவளே “பெரிசா ஒன்னும் இல்லை. மேக்-அப் அத்தை சொல்லிட்டாங்க. சாரி பர்சேஸ் பண்ண வரச் சொன்னாங்க. யோசிச்சேன் வந்தா வெயில அலையனும். அதனால நீங்களே பாத்துக்கோங்கனு சொன்னேன். சரினு சொல்லிட்டாங்க. மெஹந்தி இங்கேயே சொல்லிட்டேன். அவ்ளோ தான் என் சைட் . நீங்க? உங்க பர்சேஸ் ? “

அவள் வருவாள் என்று எதிர்ப்பார்த்து இருந்தான். அவள் வரவில்லை என்று கூறியது அவனுக்கு ஏமாற்றம் தான். ஆனால், அவன் அதை வெளியில் காண்பிக்கவில்லை. ஏனென்றால், அதுவே அவனின் இயல்பு.

“ஹலோ ? “

“ஹான்……. இனிமே தான் போகனும். என்ன டிரஸ் போடலாம்னு யோசிக்கிட்டு இருக்கேன். சூட் ரிசப்ஷனுக்கு போடறதுனால இதுக்கு ஷர்வாணி தான் போடனும் . சோ, போய் பாக்கனும். “

“இதுல என்ன கன்ஃபுயூசன் ? அதான் எல்லாம் தெளிவா சொல்லுறீங்க ! “

“இல்லை டைம் கம்மியா இருக்கு இல்லையா… கூட டைம் இருந்தால் சென்னை போய் எடுத்து இருப்பேன். இப்போ இங்கையே எடுக்குற மாதிரி இருக்கும் “

“பேஃக்ட் தான் …….. சரி … அப்பறம் சாப்பாட்டாச்சா? “

“ஹம்….. நீ……. “

“ஹம்….. சாப்பிட்டேன் “

“ஹே நான் அன்னைக்கே உன்கிட்ட கேட்கனும்னு நினைச்சேன். மறந்துட்டேன் . நீ வெஜ்ஜா நான் வெஜ்ஜா ? “

” ஏசப்பா ….. நீங்க வெஜ்ஜா? ” பீதியாகியது அவளின் குரலிலேயே தெள்ள தெளிவாக தெரிந்தது.

“நீ நான்-வெஜ் சாப்பிடுவியா? “

“ஹம்ம்…… சாப்பிடுவேங்க….. நல்லாவே சாப்பிடுவேன் …….😭😭😭 உங்க வீட்ல யாரும் சாப்பிட மாட்டாங்களா ? “

“ஹாஹா…… சாப்பிட மாட்டாங்க …. ஆக்சுவலி நீ அழுகுறதனால  ஒன்னு சொல்லுறேன் “

” என்னது? “

” என்னால தான் என் வீட்ல யாரும் சாப்பிடறது இல்லை. நான் தான் ஃபர்ஸ்ட் விட்டேன் “என நன்றாக சிரித்து கொண்டே கூறினான்.

அதில் கடுப்பாகிய உத்ரா “போயா… நீ எனக்கு வேணாம் “

” அப்படிலாம் நான் உன்ன விட மாட்டேன். நீ அப்படி நினைக்க கூட கூடாது “என மறைமுகமாக அவனின் காதலை வெளிப்படுத்தி விட்டான்.

அதில் அவள் கன்னம் செவ்வானமாக சிவந்தது. அவளின் முகத்திற்கு முன்பே “நீ கருப்பு… நீ குண்டு ” என கூறியவர்களுக்கு மத்தியில் இவனின் அன்பு அவளுக்கு அரணாக மாறியது.

அவள் வெட்கப்பட்டு கொண்டே ” ஹம்ம்…. எத்தனை நாளைக்கு இதே மாதிரி சொல்லுறீங்கனு பாப்போம் “

“அதுவும் உண்மை தான் ” நாக்கை உதடினுள் சுளித்து கொண்டே கூற,

“யோவ் …… “

பின்பு நிறைய கதை பேசி விட்டு இரண்டு மணி நேரம் கழித்தே இருவரும் வைத்தனர். அதுவும் அபியின் தொழிற்சாலை சம்மந்தப்பட்ட அழைப்பு வந்ததால் தான்.

அதன் பின்பு, ஒரு வாரம் ஆகியும் அபி அவளை அழைத்து பேசவில்லை. ஞாயிறு மதியம் பேசியதோடு சரி, இரவும் அழைக்கவில்லை. அவனை புரிந்து கொள்வது மிகவும் கடினமாக  இருந்தது.

தான் வெட்கப்பட்டு அழைக்க தயங்குகிறோம்  எனத் தெரிந்தும் ஏன் அவன் அழைக்கவில்லை என்கின்ற பெரும் சந்தேகம் மனதை கொன்றது உத்ராவிற்கு . 

அதோடு வெள்ளிக்கிழமையும் வந்து விட்டது. இன்னும் அவனிற்கான உடையை அவன் தேர்வு செய்யவில்லை என்பது வேறு அவளுக்கு சங்கடமாக இருந்தது.

அவன் வேலையில் பிசியாக உள்ளான் என்று அனைவரும் கூறினாலும் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டும் நடக்க இருக்கும் நிகழ்வை பெரிதாக நினைக்க தோன்றாதா என்ற எண்ணம் உத்ராவிற்கு மனதை அரித்தது.

சனிக்கிழமை மதியம் போல் மூன்று உடை அணிந்து அவளுக்கு புகைப்படமாக அனுப்ப, அதில் அவளுக்கு ஒன்று மிகவும் பிடிக்க, அதனை அவள் திரும்ப அனுப்ப , ஓகே என்று கூறியதோடு சரி அதன் பின்பும் பேசவில்லை. நாளை நிச்சயம் இன்றாவது பேசுவான் என்று நினைத்தால் அதுவும் பேசவில்லை.

நிச்சய நாளும் வந்தது. கோயம்பத்தூரில்  நிச்சயம் வைத்ததால் அனைவரும் அங்கு செல்ல, ஹோட்டலில் அனைவரும் தங்கி விட்டனர் . அவளுக்கு அலங்காரம் செய்ய பன்னிரெண்டு மணிக்கெல்லாம் வர, அவளும் அதில் மனதை தினச திரும்பினாள்.

நான்கரை மணி போல், எல்லாம் முடிந்தவுடன் போட்டோகிராபர் போட்டோ எடுக்க அழைப்பதாக கூற, அவளும் தன்னை கண்ணாடியில் பார்த்தாள்.

அழகிய சிற்பம் போல் இருந்தது அவளது அலங்காரம். லிலாக் நிறத்தில் பூக்கள் நிரம்பிய பட்டில் பெரிய பார்டர் முழுவதும் ஆரி ஒர்க் செய்து, அதே போல் ப்ளவுசிலும் ஆரி ஒர்க் செய்து இருந்தனர். தலையை உச்சி எடுத்து சின்ன கிளிப் மட்டும் அணிந்து கீழே கர்ல்ஸ் செய்து இருந்தனர். அதே ஆரி ஓர்க்கில் பெல்ட்டும் அணிந்திருந்தாள் . கழுத்தை ஒட்டி போல்கி நெக்லெஸ் அதற்கு ஏதுவாக கம்பல், வளையல், நெற்றியில் சின்ன நெற்றி சுட்டி என அழகு பதுமையாக இருந்தாள்.

அறையை விட்டு வெளியில் வந்து அவ்வராண்டாவில் அவளை நிற்க சொல்லி, போட்டோகிராபர்  போட்டோ எடுக்க முயன்ற நேரம் , தெரிந்தும் தெரியாமலும் உள்ள இடுப்பை உரசி அவளை பின்னிருந்து அணைத்து தலையில் முத்தமிட முயன்ற அபியை, அதிர்ந்து திரும்பி பார்த்தவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

அழகான புகைப்படமாக  மாறியது !

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அவன் அசைவம் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டான் அப்போ உத்தரவுக்கு என்ன பண்ணப்போறா??

      1. Author

        ❤️❤️❤️❤️❤️❤️