முசுடும் முயலும் – 5 😾😻
இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் உத்ரா அமைதியாவா இருப்பா. உடனே அடிச்சு பிடிச்சு சாப்பிட போன பியூட்டிசன் அக்காவை சாப்பிட கூட விடாமல் தன் முகத்தின் அழகிற்கு மேலும் மெருகேற்றி கொண்டிருந்தாள்.
😾❤️😻
அதற்கு நேர்மாறாக உத்ராவிடம் எவ்வாறு பேச வேண்டும் என்னென்ன பேச வேண்டும் என்று பட்டியலிட்டு கொண்டிருந்தான் நம் நாயகன் அபிமன்யூ.
“ஏன்டா முகத்தை கூட கழுவாம இப்படியே எவ்வளவு நேரம் இருக்க போற? சாப்பிடவும் வரல ? என்ன தான்டா பண்ணுவ? ஃபேக்ட்ரில இருந்து வந்தவுடனேயே சொன்னேன் நாளைக்கழிச்சு போடுற டிரஸ் பாரு இல்லைனா நாளைக்கு வாங்கனும்னு அதுவும் பண்ணல ? ஏன்டா என் ஜீவன வாங்குறீங்க?” படபடவென பொறிந்து தள்ளிய அம்மாவை எந்த ஒரு எதிர்வினையும் காட்டாது அமைதியாக அரை நொடி பார்த்தவன் சட்டென்று அவர் சொன்ன வேலைகளைப் பார்க்க சென்று விட்டான்.
ஏனென்றால், அவனின் அம்மாவின் உடல்நிலை கருதி அவர்கள் படப்படப்புடனோ இல்லை கோபமாக இருக்கும் பொழுதோ இவன் அமைதியாக அவரின் பேச்சை கேட்பான். மற்ற சமயங்களில் இவனே டென்சனை இலவசமாக கொடுத்து விட்டு செல்வான்.
கீழே பங்கஜம் படுத்திய பாட்டில் கௌதமி அபியிடம் பாய்ந்து விட்டார். அதுவும் புரிந்து தான் அபி அவர் சொன்னதை சத்தமில்லாமல் செய்தான். இறுதியாக அவன் சாப்பிட உணவு மேஜைக்கு வந்து அமர, பங்கஜம் பரிமாறினார்.
அவ்வீட்டு ஆண்மக்கள் சாப்பிடும் பொழுது பங்கஜம் மட்டுமே பரிமாறுவார் . இது அவர்கள் வீட்டின் எழுதப்படாத சட்டம். அவ்வாறு அவர் எடுத்து வைக்கும் பொழுது பேச்சை ஆரம்பித்தார்.
“நாளைக்கழிச்சுக்கு எல்லாம் எடுத்து வச்சுட்டியா? “
“ம்ம்… வச்சுட்டேன் பாட்டி “
“ஹம்ம்……. அப்புறம் எதோ கிப்டலாம் வாங்கி கொடுக்கனுமாம்ல? நீ வாங்கிட்டியா ?”
“இல்லை பாட்டி “
“தேவையில்லை…. நம்ம தான் பூ பலகாரம்லாம் வச்சு கொடுக்க தான் போறோம். அதுக்கு எல்லாம் செலவு பண்ணாதப்பா….. நம்ம தான் கல்யாணம் செய்யனும். வீட்டில எல்லாம் இனிமே செலவு இருக்கு “
“அப்போ கல்யாணம் பண்ணி வைக்காம இருக்க வேண்டியத்தான? ” மென்று உணவை முழுங்கியவன் வார்த்தைகளை கொட்டினான். அடுப்பறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த கௌதமிக்கும் மாமியாரின் வார்த்தைகள் பிடிக்காததால் மகனை கண்டிக்கவில்லை. அவருடன் சுற்றி அமர்ந்திருந்த அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அமைதியாகவே இருந்தனர்.
இருந்தும் பங்கஜம் வாயை மூடாமல் ” அத விடுப்பா……. நீ உன் விஷயம் எதுவோ சொல்ல போறனு சொன்னாங்க? அதெல்லாம் வேணாம்ப்பா “
“அந்த பொண்ணு எதுனாச்சம் மறச்சுட்டு இங்க கல்யாணம் பண்ணி வந்து அப்புறம் தெரிஞ்சதுனா என்ன பண்ணுவீங்க? “
“அடிராசா அந்தளவுக்கு பெரிய விஷயம் இல்லை. சின்ன வயசுல நடந்தது. அதுவும் இப்ப மறந்துட்டோம் அதே மாதிரி மறஞ்சுருச்சு . அதை விட்டுறேன் “
“பாட்டி நீங்க பேசுற எதுவும் எனக்கு பிடிக்கல…. நான் பாத்துக்குறேன் . எனக்கு வயசு வந்துருச்சு. அதோட இது எங்க இரண்டு பேர் சம்மந்தப்பட்டது. உங்களுக்கு செலவு ஆகுதுன்னு சொல்லுறீங்க… பேசாம நான் பேசுனதுக்கு அப்புறம் அந்த பொண்ணும் நானும் ஒகே சொன்னா மத்த ஏற்பாடு பண்ணுங்க.. அப்போ உங்களுக்கு செலவு வராது ” என பட்டென்று கூறி விட்டு எழ ,
” பாட்டி சாதாரணமா சொல்லுறத ஏன் இவ்வளவு பெரிய விசயமா பேசுற அபி” சாரதராஜன் கேட்க, ஒன்றும் பதில் கூறாமல் அமைதியாக சென்று விட்டான்.
மேலே சென்ற அபி சட்டென்று தோன்றிய விஷயத்தை தனது பெற்றோர்களிடம் கூற, அவர்களும் அதற்கு சம்மதம் கூறி விட்டனர்.
😾❤️😻
வெள்ளிக்கிழமை நிச்சயம் என்கின்ற பொழுதில் வீட்டில் உறவினர்கள் மாலை ஆறு மணிக்கு மேல் வருவதாக இருக்கும் சமயம் மதிய உணவை உண்டு விட்டு மூன்று மணி அளவில் தனது ஆருயிர் தோழனின் ஒருவனான விநாயகரிடம் சென்று விட்டாள்.
விநாயகருக்கே ஆச்சர்யம். ஏனென்றால் வந்து அரை மணி நேரம் ஆகியும் வாயைத் திறக்கவில்லை. அதே போல் அவருக்கு செய்ய வேண்டிய எதுவும் செய்யவில்லை. அமைதியாக அரச மரத்தின் அடியில் அமர்ந்து இன்ஸ்டாகிராமில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு சில மணித்துளிகளுக்கு பின் பாலா அங்கு வந்தான். அவனைக் கண்டவுடன் தரதரவென இழுத்து விநாயகரின் முன்பு அமர வைத்தாள்.
“இங்க பாருங்க….. ரெண்டு பேருக்கும் சேத்தே சொல்லுறேன். தனி தனியாலாம் சொல்ல முடியாது. அதுனால தான் உன்னை வெயிட் பண்ண வச்சேன் கணேசா ….. சாரி……அய்யோ இல்லை இல்லை இல்லை. இந்த நாய் தான் காரணம். இவன் தான் நம்ம ரெண்டு பேரையும் வெயிட் பண்ண வெச்சுட்டான் ” பாலாவை நீட்டி கணேசனை சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள்.
பாலாவிற்கு இவளின் குணநலங்கள், பிடித்தம், பிடித்தம் இல்லாமை எல்லாம் அத்துப்படி. அதனால், அவள் கணேசரிடம் பேசுவது எல்லாம் வித்தியாசமாக இல்லை. வேலை இருக்கும் நேரத்தில் போன் செய்து வந்தே ஆக வேண்டும் என்று உத்ரா கூறியதால், டி . எல் இடம்(டீம் லீடர்) திட்டு வாங்கி கொண்டு வந்ததால் இவள் திட்டுவதோடு விநாயகரையும் திட்ட வைக்கிறாளே என்கின்ற கடுப்பில் ,
“ஹே….. என்னன்னு சொல்லுடி டக்குனு . இப்போதான் பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருக்கா? நானே கடுப்புல இருக்கேன் “என இன்னும் நாலைந்து வசனம் பேசி முகத்தை நொந்தது போல் வைத்துக் கொண்டு பாலா கூற,
“நானும் மாப்பிள்ளையும் மீட் பண்ணிக்கிட்டோம் ” கண்களை உருட்டிக் கொண்டு கூற , பாலாவுடன் விநாயகருக்கும் கண்கள் சாக்கர் போல் விரிந்தது”
“ஓஓ…… ஆளு வந்தவுடன ப்ரண்ட்ஸ்லாம் இரண்டாம் பட்சம் ஆகிடுச்சுல….. ஆளு பாத்தவுடனே ப்ரண்ட கழட்டி விட்டவங்கலாம் பாத்து அற்ப மனுஷங்கனு சொன்ன….. இவங்களாம் துஷ்யர்களுனு சொல்லுவ …… இப்போ நீயும் இப்படி வந்துட்ட.. அதுனால நானே உன்ன நம்ம சங்கத்துல இருந்து ஒதுக்கி வக்கிறோம் . அது போல பூசாரிக்கிட்ட சொல்லி இனிமே உன்ன கோயில் பக்கம் விட வேணாம்னு சொல்லிடுறேன். இது கணேசருக்கு ” என படபடவென பொறிந்து கொண்டிருந்தான் பாலா.
“டேய் பைத்தியம்…… எதுக்கு மூச்சு விடாம வசனம் பேசுற? இப்படிலாம் சொல்லி என்னை கழட்டி விடலாம்னு பாக்குறியோ? நீ கடைசி வரைக்கும் சிங்கிள் தாண்டி …..எப்படி கணேசர் இருக்காரோ அப்படி தான் நீயும் . அதனால …..”
“நீ மட்டும் கல்யாணம் பண்ணுற ? ” பாலா முந்திக் கொண்டு கேட்க,
“ஆமாடா அரைவேக்காடு …….. நான் கல்யாணம் பண்ணி போய் அங்க எதுனாச்சும் பிரச்சனைனா யாருக்கிட்ட என் குமுறலாம் சொல்லுறது ? உனக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டி வந்துடா, அவளுக்கு டைம் ஸ்பெண்ட் பண்ணனும், அப்புறம் பிள்ளை குட்டி வந்துட்டால் அதுக்கு ஸ்பெண்ட் பண்ணனும்…… நாம ஏன் அவ்ளோ போகனும்….. பேசி முடிச்சாலே சார் லைன் பிஸியா தான் இருக்கும். செகண்ட் காலுல நான் இருக்கேனு காமிச்சாலும் எடுக்க மாட்ட நீ ….. அதுனால நீ சிங்கிள் தான் “
“இந்தாடி உன் அழிச்சாட்டியம் ரொம்ப ஓவரா இருக்கு ! என் மீனுக்குட்டியோட டூயட் பாடலாம்னு நினைச்சா பட்டினத்தார் மாறி இருக்க சொல்லுற ….. போடி இவளே ! “
தலையை சொறிந்து ஆர்வமே இல்லாதது போல் காண்பித்து “உனக்கு டீடெயில்ஸ் வேணுமா வேணாமா ஒழுங்கா சொல்லு ” என எதைச் சொன்னால் அவன் அடங்குவான் எனப் புரிந்து அதை கூற,
பாலா அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் ஆஜாராகினான்.
😾❤️😻
பியூட்டி பார்லரில் தன்னை மெருகேற்றி கொண்டிருந்தாள். அப்பொழுது வெளியே மைத்ரேயின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
ஒன்றும் கூறாமல் அமைதியாய் அமர , அரை மணி நேரத்தில் அனைத்தும் முடிந்து வெளியில் வந்தனர். ஆட்டோவில் அமர்ந்தவுடன் “பாரேன் கல்யாணம்னு சொன்னவுடனே பி ஏ என்ன? ஆட்டோ என்ன? மரியாதை தான் போ ” என கூறிய உத்ராவை ஏற இறங்க பார்த்தவள் ஈரோடிற்கு அரை மணி நேரத்தில் இறங்கினர்.
உத்ராவிற்கும் வியக்க ஒன்றும் இல்லை. எப்படியும் இங்கு தான் ஆரி ஒர்க் வேலைப்பாடுகள், தையல் என அனைத்தும் கொடுப்பாள். விசேஷம் என்பதால் அதுக்கு தான் செல்கிறோம் என்று தெரிந்தது. ஆனால் , அவளும் வியக்கும்படியாக சென்னை சில்க்ஸ் சென்றது தான்.
அதுவும் சுடிதார் பிரிவிற்கு சென்றது தான் ஆச்சர்யம். “ஏன்டி மீட்டிங்கிற்கு புதுசா தான் வாங்கனுமா? “
“இல்லை உன் டிரஸ் பாத்தேன் . ரொம்ப நல்லா இருக்கிற மாதிரி தெரில அதான் ” .
“நிறுத்து உன் டேஸ்ட் விட என் டேஸ்ட் சூப்பரா தான் இருக்கும் “
” ஆமாடி …. நல்லா இருக்கும் . அதனால வாங்க வேணாம் கிளம்பு “
“சரிடி…. வா…. வா….. அப்பா ஆசையா வாங்கி தராரு …. வேணாம்னா சொல்ல போறேன் “
பின்பு, அனைத்தையும் வாங்கி வீடு வந்து சேர்ந்தனர். இரவில் அனைவரும் உண்ணும் சமயம்…… வைரமணி ” உத்ரா…… டிரஸ்லாம் எடுத்தாச்சா …..? “
“ஆச்சுப்பா “
” சரி…… நாளைக்கு அந்த பையன் உன்னை பாத்து பேசனும்னு சொன்னாராமா ! உன்னை அவரே பிக் அப் பண்ணிக்கிறாராமா ! மைத்ரேயி கூட போயிடு “
“😨😨😨😨 நாளைக்கா? “
“ஆமா நாளைக்கு தான் “
😾❤️😻
ஜன்னல் ரெஸ்டாரண்ட்
ஆயிரம் சதுரடியில் இருபதுக்கும் மேற்பட்ட டேபிள்களின் மத்தியில் நீச்சல் குளம். அதில் வடப்புறத்தின் ஓரத்தில் யாரின் கண்ணிற்கும் தென்படாதவாறும் , பக்கவாட்டில் இயற்கையின் அழகு தென்படுவது போன்றும் உள்ள டேபிளில் உத்ரா . அவளின் நேர் எதிரில் அபிமன்யூ .
இம் மாலை
வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ
நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
கீர்த்தி ☘️
உத்ரா கிட்ட அபிமன்யு அப்படி என்ன பேச போறான்??
அடுத்தடுத்து வரும்
நட்பு செம