முசுடும் முயலும் -19 😾❤️😻
“உத்ரா….. “
“மாமா……. “
“ச்சீ….. வைடா போனை ! ” எனக் கூறி பட்டென்று வைத்தவன், அவளை கண்களால் எரித்தான் .
” இங்க பாருங்க….. அவனும் பாவம்ல…… “
“இப்போ தான உத்ரா சொன்னேன் ! அவ எனக்கு சப்போர்ட்டடா இருப்பானு ? உன் லைப்ல எவ்வளவு பெரிய உறவா உனக்கு வந்துருக்கேன் ! நான் நினைக்கிற மாதிரி நீ நினைக்க மாட்டியா ? “
அவனின் கேள்வியில் திக்கு முக்காடி நின்றாள் உத்ரா.
அதற்குள் , கதவு தட்டும் சத்தம் கேட்டு திறக்க, மைத்ரேயி “நல்ல நேரம் முடியுறதுக்குள்ள கிளம்பனும் டி …. கிளம்பு ” எனக் கூற , இருவரும் கிளம்பி விட்டனர் .
😾❤️😻
” ஏன் அகில் இப்படி பண்ண ? ” கௌதமி கேட்க, அப்பொழுதும் சாரலா நிதானம் இல்லாமல் அவளை சரமாரியாக அடித்தார்.
ஆனால், அதை பங்கஜம் கண்டு கொள்ளாமல் “இப்போ தான் கல்யாணம் முடிஞ்சு மறு வீட்டுக்கு போயிருக்காங்க…. ஏன் இப்படி நடு வீட்ல கத்திக்கிட்டு இருக்கீங்க ? “
“அப்போ நாங்க எங்க வீட்ல போய் அடிச்சு கொலையே பண்ணீக்கலாம் ! உங்களுக்கு கவலையே இல்லைல ? ” முதன்முறையாக நிரல்யா வாயைத் திறந்தாள்.
பங்கஜம் கோபம் கொண்டால் அவ்வளவுதான் கத்த மாட்டார் கதற மாட்டார். அழுது கரைந்து விடுவார். அதில் யார் உருகிறார்களோ இல்லையோ கணவரும் பிள்ளைகளும் தப்போ சரியோ தாயின் பக்கம் தான் நிற்பார்கள். இதையே சாக்காக வைத்து இவர்களை வரவிடாமல் பண்ணி விடுவார் என நினைத்து கௌதமி முந்திக் கொண்டு “நிரல்யா வாயை மூடு ! பெரியவங்கள பாத்து இப்படி தான் பேசுவியா ? “
” ஆமா எப்பவும் எங்க வாயையே மூடுங்க ! அவ கேட்டதுல என்ன தப்பு ? ” இனிமேல் இந்த வீட்டில் தங்களுக்கு நாதி இல்லை என்ற ஆதங்கத்தில் சாரலா பொங்கினார்.
” நீங்க ஏன் எனக்கு அம்மாவா வரல ? ” அகிலின் கேள்வியில் அனைவரும் அமைதியாகினர். நிரல்யாவும் ” ஆமா ! ” என மெதுவாக கூறினாள் கௌதமியைப் பார்த்து.
கௌதமி சங்கடமாக சாரலவை பார்க்க, சாரலாவிற்கு சம்மட்டியால் அடித்தது போன்று இருந்தது.
“என்னடா பேசுறீங்க ? பிரச்சனையை பெரிசு பண்ணாதீங்க! ” என கூறி அவர்களை அடக்க பார்த்தார்.
“இல்லை அத்தை ! சின்ன வயசுல அப்பா குடிச்சுட்டு தான் வீட்டுக்கே வருவாரு ! அவரை குடி போதைல தான் நாங்க அதிகமா பாத்து இருக்கோம். அம்மா ! அதுவும் பாவம் ! இல்லைனு சொல்ல மாட்டேன் ! அவர்கிட்ட இருந்து எங்களை காப்பத்துறதுக்கு அதை தியாகம் பண்ணிக்கிருச்சு ! அதலாம் புரியாம இல்லை அத்தை ! ஆனா, ஒரு அம்மாவா எங்களுக்கு படினு சொல்லல ! சம்பாதினு சொல்லல ! தைரியமா துணிச்சலா அதுவும் இல்லை! எங்களையும் இருக்க விடல ! எனக்கு உங்கள தவிர யாருமே பாசம் காமிக்கல அத்தை ! என்னை உண்மையா நேசிச்சது இந்த படிப்பு! அது மூலமா எனக்கு கிடைச்சது தான் அக்பர்! அவன் எனக்கு உண்மையான அன்ப காமிச்சான் அத்தை ! அவனுக்கு யாருமில்லைனு சூழ்நிலை வந்துச்சு அத்தை ! அவங்க பேமிலியே ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க ! அப்போ நான் தான துணையா இருக்கனும்! நான் ஒரு உறவா மாறி இப்போ எங்களுக்கு ஒரு உறவ உருவாக்கிட்டோம் ! “
“அவன் கிட்ட என்ன இருக்கு? மாசம் இரண்டு லஞ்சம் வாங்குறான் அவ்வளவு தான் ? ” சாரலா தாயாக புலம்ப ,
” நீ இன்னும் திருந்தல மா ! நானும் மாசம் சம்பாதிக்கிறேன் ! சிக்கனமா இருந்தா எல்லா நடக்கும் ! எனக்கு இது போதும் ! உண்மையான அன்பு எனக்கு கிடைச்சா போதும் “
“அதுக்கு முஸ்லிம் பையன் தான் கிடைச்சானா ? “
“நிரல்யாவை நினைக்காமா நீயா சுயமா முடிவு எடுத்துக்கிட்டா அது கரெக்ட்டா ? ” சாரதராஜனும் பங்கஜமும் கேள்வி கேட்க,
” நம்ம சொந்தகாரங்களை தவிர உங்க குடும்பத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இருக்குனு யாருக்கும் தெரியாது ! அவளுக்கு ஏத்த வாழ்க்கையை அக்கா, அக்கா புருஷனா ரெண்டு பேரும் சேந்து பாத்துக்குவோம் ! உங்களுக்கும் அது தான் கரெக்ட் ! ” என தீர்க்கமாக கூற, பங்கஜம் பேச வருவதற்குள் , கெளதமி சங்கரனை காண ,
“அந்த பையனை வரச் சொல்லு ! நான் பேசனும் ! “
“நீங்க….. “
“கௌதமிய அம்மானு சொல்லீட்டீல ! அப்போ நான் அப்பாவா சில கடமையை செய்வேன் ! கேள்வி கேட்க உனக்கு உரிமை இல்லை ! போன் போட்டு இப்பவே வர சொல்லு “
அவள் ஒரு நிமிடம் பதற்றத்துடன் நிற்க, சரியாக அந்நேரம் உள்ளே அபியும் உத்ராவும் வந்தனர்.
அனைவரும் நிற்பதைக் கண்டு புருவம் இடுங்கி பார்க்க, அபி சரியாக கணித்து கண்களாலேயே “சொல்லி விட்டாயா ” என்று கேட்டான் .
“ஆமா ” என்று தலையாட்டிய அகில் நிலாவையும் அபியையும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் உத்ரா.
அவர்களின் சைகை மொழி அவளுக்கு வேறு ஒன்றை நினைவுப் படுத்தியது.
😾❤️😻
மாலை வீட்டிற்கு திரும்பும் வேளையில் அவர்கள் இருவர் மட்டும் ஒரு காரில் பயணித்தனர். அவனே கார் ஓட்ட மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
“உத்ரா ….. “
“ஹான்….. “
“உத்ரா உன்கிட்ட ஒன்னு சொல்லனும் “
“நான் உங்களை என்னைக்குமே இறக்கி நினைச்சதே இல்லைங்க …… நீங்க தான் என் முதல் லவ் …… பஸ்ட் லவ் …. பெஸ்ட் லவ் “
இறுதியில் அவள் கூறிய வாக்கியத்தில் முறைத்தவன் ” ஆனா நீ எனக்கு பர்ஸ்ட் லவ் இல்லை “
ஒரு நிமிடம் திகைத்தவள் “எது இந்த கிரஸ்ஸ தானா லவ்னு சொல்லுறீங்க? “
” இல்லை காலேஜ் படிக்கும் போது ….. திடீர்னு அகில் மேல ஒரு ஈர்ப்பு …. அது அப்படியே காதலா மாறுச்சு…. ஆனா சேரல ….. “
“ஏன் ….. “
“ஐ லவ் யூ உத்ரா ….. இப்போ உன்னை மட்டும் தான் லவ் பண்ணுறேன். இனிமேயும் நீ மட்டும் தான். அதோட உங்கிட்ட மட்டும் ஒரு சில சில்மிஷமலாம் பண்ண தோணுது …. என்னோட குழந்தை தனமும் வெளியில வருது …. ” என அவன் பாட்டிற்கு அவளிடம் நடந்து கொள்வது, நடக்க ஆசைப்படுவது என நிறைய விஷயங்களை பகிர்ந்தான்.
முதலில் ஆர்வம் இல்லாமல் கேட்டவள் போக போக அவளும் சேர்ந்து கொண்டாள். ஆனால், பேச்சிற்கு கூட அவளின் ஆசைகளை அவள் சுற்றி வளைத்து கூட கூறவில்லை. அவனை மட்டுமே ரசித்து கவனித்தாள்.
😾❤️😻
இப்பொழுது இருவரின் உரையாடலை கேட்டவுடன் அவன் பேச்சை மாற்றியது ஞாபகம் வந்தது.
என்ன தான் அவன் தன்னை விரும்புகிறான் என வெளிப்படையாக கூறினாலும் , இருவரும் பேசிக் கொள்வது சற்று எரிச்சல் ஏற்பட்டது.
அதே கடுப்புடன் அவனின் அருகில் நிற்க, அகிலும் அவனின் அருகில் வந்து நின்றாள்.
” என்னங்க ….. “
“அண்ணா ….. “
சட்டென்று திரும்பி அதிர்ந்து பார்த்தாள் உத்ரா அகில் நிலாவை .
கீர்த்தி ☘️
அபியும் உத்ராவும் மனசு விட்டு நல்லா பேசிக்கிட்டாளே எந்த பிரச்சனையும் வராது போல இரண்டு பேரோட புரிதலின்மை தான் மண்டையை குழப்பிக்கிட்டு இருக்கு.
Thanks for the comment ! I am waiting for your comment ! 😇
இரண்டு பேரும் 😁