முசுடும் முயலும் – 15 😾❤️😻
அறையின் வாயிலேயே மலர்களால் தூவி, ரூம் ஸ்பிரேயின் மகிமையில் மணம் நன்றாக பரவி இருந்தது. அவளை அவளின் அறைக்கு முன் நிறுத்த , உள்ளே நுழைவதற்கு முன் திரும்பி தனது தமக்கையைப் பார்த்தாள்.
அதனை வேறு மாதிரி நினைத்து சுற்றி இருந்தவர்கள் அவளை நன்றாக கலாய்த்த பின்னரே, இதற்கு மேல் இங்கு நிற்க முடியாது என நினைத்து அவளே கதவை திறந்து உள்ளே வந்தாள் . அவன் எப்படி எப்படியோ திட்ட போகிறான் என்கின்ற பயத்தில் உள்ளே நுழைய, அவன் சிரித்த முகத்தோடு பவ்யமாக எழுந்து நின்றான். எவ்வளவு பவ்யமாக இருக்க முயன்றாலும் அவனின் கம்பீரம் தலைதூக்கி கொண்டு தான் இருந்தது.
அதில் தன்னை மறந்து பார்த்தாள் அதுவும் தன்னவன் என்கின்ற நினைப்பில்.
“கதவு சாத்திட்டு ரெண்டு பேரும் லவ்ஸ் பண்ணுங்க ” என்று பின்னிருந்து கூறிய பின்னரே, சுயநினைவு பெற்றதோடு அவனின் எதிர்வினையின் அர்த்தமும் புரிந்தது. பிறரின் கண்ணுக்கு வித்தியாசம் தென்படாதவாறு நடந்து கொள்கிறான் என்று.
பெருமூச்சு விட்டு , திரும்பி கதவை சாத்தி விட்டு சாதாரணமாக திரும்ப , அவனின் பார்வை தானாகவே தலை குனிய வைத்தது. அப்படி குனியும் பொழுது தான் தெரிந்தது அவனின் அங்கம் மொத்தமும் மெலிதான சேலையின் வெளியே பளிச்சென்று தெரிந்ததை.
அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. இருந்தும் தான் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள். ஆனால், அவனோ உன் தைரியம் என்னை அசைக்காது என்பது போல் அவளின் அருகில் நெருங்கி வந்தான்.
அவளை பட்டும் படாமல் அரை அடி இடைவெளியில் நிற்க, அவளின் கண்கள் தன்னிச்சையாக மூடியது. ஒவ்வொரு முறையும் அவளைக் காணும் பொழுது ஈர்க்கும் கண்களை விட, கீழுதட்டின் சிவப்பும், மேலுதட்டின் கருமையும் இன்று அவனை வெகுவாய் ஈர்த்தது. அதில் போதையே ஏறியது என்று கூட கூறலாம். அவளை தொடவில்லை. ஆனால், அவளை களேபரம் செய்து விட்டான் அரை நொடியில். அவள் கண் மூடி இருந்தாலும் உள்ளுணர்வு அவனின் செய்கையை நன்றாகவே உணர்த்தியது.
அதில் அவளும் மெய் மறந்தே நின்றாள். இந்நொடி இருவரும் தங்களது சண்டை ,கோபம் ,வருத்தம் அனைத்தையும் மறந்து இருந்தனர். காதலோடு வயதிற்கே உரித்தான மோகம் , தாபம், போகம் போட்டி போட்டது இருவருக்குள்ளும்.
அப்பொழுது டக்கென்று ஒரு சத்தம். கண் திறந்து உத்ரா பார்க்க, இருவரையும் செல்ஃபி எடுத்தான் . அதன் பின் அவ்வறையையும் எடுத்தான். பின்பு, மொபைலை ஓரத்தில் வைத்தவன், வாட்ச்சை கழட்டி வைத்து விட்டு, சட்டையை மடக்கி கொண்டே அவளின் அருகில் வந்தான்.
இப்பொழுது அவன் முசுடானான். புருவத்தை சுருக்கி கொண்டு அழுத்த நடையுடன் வந்தான். இவள் அவனின் இம்மாற்றத்தில் தெளிந்து நிமிர்ந்து நின்றாள். அவளுக்கு அவனின் தொடுகை தான் பலவீனமே. அவனின் கோபம் அல்ல. அது புரியாமல் அவன் அவளை சீண்டும் நோக்கத்தில் வர , இவள் அஞ்சாமல் இருந்தாள். அதில் உண்மையிலேயே வெறி வந்து, வேகமாக அவளின் கொழு கொழு இடுப்பை கிடுக்கு பிடியாக பிடித்தான்.
அதில் அவளுக்கு வலி ஏற்பட்டு விட்டது. அதனால், அவளின் கண்களில் கண்ணீரும் எட்டிப்பாத்தது. அதில் அவன் கோபம் தோய்வது புரிந்து தன் மீதே கோபம் கொண்டவன், அதனை போக்க கீழே குனிந்து அவளின் அதரங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டே அவளின் இடுப்பை பிய்த்தே விட்டான். அதில் இன்னும் கண்கள் கலங்கியது. அவளின் கண்ணீர் தன் கன்னங்களில் உரசிய பின்னரே , வன்மையை விட்டு விட்டு மென்மையை மேற்கொண்டான்.
அதில் கொஞ்சம் கண்ணீர் கட்டுபட்டது அவளுக்கு . அது புரிய, அவன் மேலும் மேலும் மென்மையை தொடர்ந்தான். அதில் தன்னை மறந்து அவனின் முதுகில் கை வைத்து கட்டி அணைத்தாள். அதில் மேலும் கிறங்கி அவன் அவளின் இடுப்பில் இருந்த கைகள் மெது மெதுவாக மேலே முன்னேறி அவளின் மென்மையை தேடியது.
தேடியது கிடைக்கும் சமயத்தில் சடாரென்று ஒரு சத்தம். இருவரும் அதில் சுயநினைவு பெற்று கண்களை திறக்க, கும்மிருட்டாக இருந்தது. வீட்டில் கரண்ட் எப்படி போகும் என்று நினைத்து அபி முழிக்க,
“என்ன இவ்வளவு பெரிய வீட்டுல இன்வர்டர் கூட போடல கஞ்ச பயலுங்க …….. அய்யோ ஒரு வேளை இந்த கணேசா தான் எங்க பர்ஸ்ட் நைட் களைச்சு விட்டாரா? ….. ஒருவேளை இவரே பிளான் பண்ணி கரண்ட் போக வச்சு இருட்டுல தெரியாம தொட்டுடேன் சொல்லி மொத்தமா முடிக்கலாம்னு நினைக்கிறாரோ …… இல்லை மாதாஜி சொன்னுச்சே ஏதோ இன்னைக்கு சாந்தி முகூர்த்ததுக்கு தேதி மட்டும் தான் குறிச்சிருக்கு ! ஆனா, அந்த அளவுக்கு நாள் சரியில்லைனு இங்க சொன்னதா சொன்னுச்சே ! அதனால வீட்டு ஆளுங்களே இப்படி பண்ணீட்டாங்கலோ ! “
உத்ரா இவ்வளவும் நினைத்து முடிக்கும் சமயம் , கரண்ட் வந்தது. கூடவே, கதவை திறந்து அபி உள்ளே நுழைந்தான். அதில் புருவம் சுருக்கி “நீ எப்போ வெளிய போன? “
அவன் முறைத்த முறைப்பில் எச்சிலை முழுங்கி “நீங்க…… எப்போ வெளிய போனீங்க ? “
அதற்கும் முறைப்பையே பதிலாக கொடுத்தவன் , உள்ளே வந்து கம்மென்று படுத்துக் கொண்டான். அதில் அவள் தான் குழம்பினாள் .
” என்ன இவன் லூசா? லவ்வையும் ஒழுங்கா பண்ணல சரி கோபத்தையாவது ஒழுங்கா காமிக்கிறானா அதுவும் இல்லை சரி அட்லீஸ்ட் ரொமான்ஸ் ஆச்சும் ஒழுங்கா பண்ணுவானு பாத்தா அதுவும் இல்லை ….. ச்சை…. போச்சு … போச்சு… எல்லாம் போச்சு…. என் பர்ஸ்ட் நைட் போச்சு….. என் மேக்கப் – அப் போச்சு …. இந்த பூ டெக்கரேசன் போச்சு…. மொத்தமா நாசமா போச்சு…. ஹே கணேசா… கவுத்துடியே….. உன்ன ” என நினைத்து, அவள் குளியலைறைக்கு சென்று இரவு உடைக்கு மாறி வந்து, அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.
இவன் நேரே படுத்து கையை நெற்றியில் வைத்து கண் மட்டுமே மூடி இருந்தான். தூங்கவில்லை . அதற்கு சாட்சியாக இமைகள் அசைந்தது. அவன் எதையோ நினைத்து நினைத்து குமுறினான். அதில் எப்பொழுது கண் அயர்ந்தான் என்று தெரியவில்லை.
எவ்வளவு நேரம் சென்றது எனத் தெரியவில்லை. சட்டென்று முழித்தான். அறையே கும்மிருட்டாக இருந்தது. திரும்பி பார்த்தான். அவள் உறங்கி கொண்டிருந்தாள். இருட்டுக்கு கண் பழகி விட, அவள் நன்றாக தெரிந்தாள். அவள் முதுகு காண்பித்து தூங்கினாலும், அவளின் நீளமான முடியை தளிர பின்னி மல்லிகை பூ சூடியிருந்தது நன்றாக புலப்பட்டது. அம்மல்லிகை பூ மணத்தில் மீண்டும் அவள் மேல் ஆசை கொண்டு , அவளின் அருகில் சென்று அவள் மேல் கைப் போட்டான்.
அவளிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. அவள் உறங்கி விட்டாள் எனப் புரிந்தது. ஆனால், மனம் அவளை நாடியது. அதன் பயனாக அவளை மெல்லமாக அணைத்து அவளின் காது மடலில் முத்தமிட்டான். அதில் அவள் உறக்கம் கலைந்து மெல்ல அசைய, அதையே சாக்காக கொண்டு மேலும் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.
லைட்டை ஆன் செய்தவள் “யோவ் நீ என்ன லூசா ….. “
அவன் முறைக்க, அதில் மேலும் கடுப்பாகி “டேய் என்ன முறைப்பு … நான் அப்படி தான் பேசுவேன் ….. மரியாதை ஒன்னு தான் இப்போ குறைச்சல் …… கோபத்துல அதலாம் வராது….. நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் ஓவரா போற….. லவ் பண்ணுற அப்போவே சண்டை….. சண்டைல இருக்கும் போதே ரொமான்ஸ் பண்ணுற ….. ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே தூங்கிட்ட….. இப்போ தூங்கிட்டு இருக்குறவள எழுப்புற ? “
“இப்போ உனக்கு தூக்கம் ரொம்ப முக்கியமா “
“ஆமா …. பின்ன ! உனக்கு தெம்மாதுண்டு முடி தான். ஆனா எனக்கு பாரு “எனக் கூறி அவளின் இடைவரை கூந்தலை எடுத்துக் காண்பித்து விட்டு ” அதோட சேலை மெஹந்தி மேக்கப் அப், டச்சப், செட்டப், ஹை ஹீல்ஸ் எவ்வளவு இருக்கு தெரியுமா ? தூங்கி இரண்டு நாள் ஆகுது ! மூடிட்டு படுய்யா பேசாமா ! மனுசன் நிலைமை புரியாமா ” என படபடப்புடன் கூறிவிட்டு, லைட்டை ஆஃப் செய்து பட்டென்று படுத்து உறங்குவது போல் கண்களை மூடிவிட்டாள்.
ஏனென்றால், அவன் திட்டிவிட்டால்….. பதில் பேசுவதற்கு அவன் வாய் திறப்பதற்குள் போர்வையை முகம் வரை இழுத்து போர்த்தி வராத தூக்கத்தை வரவைக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் பட்டாசாய் பொறிந்தது கூட ஒன்றும் தெரியவில்லை. இறுதியில் அவள் பயந்து சென்று படுத்தது தான் சிரிப்பை உண்டு பண்ணியது.
அவனுக்கு நன்றாக தெரியும் அவள் கணவன் மனைவி உறவுக்குள் நுழைவதற்கு முன் தன் கோபம் போக வேண்டும் என்று தான் இவள் வேண்டுமென்றே தடுக்கிறாள் என்று. அதற்காகவே சீண்ட தோண்டும் மனதை கட்டுப்படுத்தி முதுகு காட்டிக் கொண்டு படுத்தவளை இழுத்து அவளின் தோளில் படுக்க வைக்க, அவளோ அவனை விட்டு விலகி அவனின் புஜத்தில் கை வைத்து கண் அயர்ந்தாள். அவளை பார்த்துக் கொண்டே இவனும் கண் அயர்ந்தான். மனதிற்குள்ளேயே “சாரி டி…. உன்கிட்ட மறச்சுட்டேன் ” எனக் கூறிக் கொண்டான்.
😾❤️😻
“ஏண்டி …. உன்னால இந்த ஒரு வேளை கூட உருப்படியா பாக்க தெரியாதா ? எதுக்கு தான் நீ இருக்கியோ? ஒரு பிளான் கூட ஒழுங்கா பண்ண தெரில…… “
கீர்த்தி☘️
ஓன்றும் புரியவில்லை