Loading

முசுடும் முயலும் – 14 😾❤️😻

அதிகாலை பொழுதில் வாகனங்கள் குவிந்து இருக்க, பெண் மக்கள் அனைவரும் வண்ண வண்ண பட்டு உடுத்தி அழகிய பூக்களாக வலம் வர, ஆண்கள் அனைவரும் தமிழனுக்கே உரித்தான பட்டு வேஷ்டியில் வலம் வர, இளம்பெண்கள் தாவணியிலும், லெங்காவிலும் வலம் வந்தனர். சிறார்கள் தனக்கு இன்று விடுமுறை என்பதோடு விளையாட தாம் வயது ஒத்தவர்கள் இருக்கிறார்கள் என்ற ஆசையில் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அனைவரும் ஆராவராத்துடன் காண , இனிதே நடந்தது அபி உத்ராவின் திருமணம். அனைவரும் அட்சதை தூவி ஆசிர்வதித்து தனது மகிழ்ச்சியை இரு வீட்டார்களும் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால், இவ்விசேஷத்தின் ஹீரோவானா அபி சிடுசிடுவென அமர்ந்திருந்தான். முகத்தில் பெயருக்கு கூட சிரிப்பு இல்லை. அதே போல் உத்ரா குனிந்த தலை நிமிரவில்லை. எங்கு இந்த திருமணத்தை நிறுத்தி விடுவானோ என்கின்ற பயம் போய், இவனுடனான தனிமை எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற பயமே மனதை கொன்றது. அவனை நிமிர்ந்து பார்க்கவே பயந்தாள். கண்களில் நீர் முட்டியது. நிமிர்ந்து மங்கலாக தெரிந்த தனது பெற்றோர்களை கண்ணில் நிரப்பி கொண்டாள்.

அவன் மூன்று முடிச்சிட்ட பொழுதும் வனது கூரிய நகங்களால் அவளின் முதுகை பதம் பார்த்து விட்டு தான் மூன்றாவது முடிச்சையே போட்டான்.

கையைப் பிடித்து வலம் வரும் பொழுதும் அனைவரின் கண்ணிற்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பதற்கு அவனின் கையை மென்மையாக பிடித்தாள். அவனோ அதில் மேலும் மேலும் கோபம் கொண்டு அவளின் சுண்டு விரலை நசுக்கிய பின்பு தான் விட்டான். உதட்டை கடித்து கண்ணீரை கட்டுப்படுத்தினாள். மெட்டி போடும் பொழுதும் இதே பாடுதான்.

பின்பு அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி விட்டு, வந்த உறவினர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்பு, சாப்பிட சென்ற பொழுது அனைவரின் கண்ணிற்கு வித்தியாசம் தெரியாதவாறு இருவரும் சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டனர்.

இவர்கள் இருவருக்கு இடையில் நடக்கும் பனிப்போர் யாருக்கும் தெரியாது. தெரிந்த இருவர் பாலா மற்றும் விநாயகரே .

பின்பு, பெற்றர்வகளையும்  , தமக்கையையும் பிரியும் ஏக்கமானது  கண்ணீராக வெளிப்பட்டது. அனைவரிடமும் விடைபெற்று உத்ரா அபிமன்யூவாக கிளம்பினாள்.

காரில் அமர்ந்தும் பெற்றவர்களை பார்த்துக் கொண்டே கண்கள் கலங்க, கார் கிளம்பிய நொடி அவளின் கையை இறுக்கி நசுக்கும் அளவிற்கு பிடிக்க, வலி தாங்கவில்லை அவளுக்கு . இருந்தும் பொறுத்துக் கொண்டு அவனை திரும்பிக் காண ” வெல்கம் டு ஹெல் இடியட் ” என கண்களில் அனல் பறக்கக் கூறினான்.

அவனை பாவமாக பார்க்க, எரிச்சல்பட்டு வேறு புறம் திரும்பிக் கொண்டான். சிவந்த கைகளை கண்டாள். அதில் அவளது மெஹந்தியை தாண்டி கன்றி இருந்தது கை. அதனை மெல்ல தடவிக் கொண்டே ” உன்னை காயப்படுத்தும் போது கத்துனா இன்னும் இன்னும் காயப்படுத்துவேன் “என கூறிய வார்த்தைகள் மனதில் ஓடியதோடு அன்று அவன் நடந்த கொண்ட முறையும் கிலியை உண்டு பண்ணியது.

அதே நினைப்புடன் கண் அயர்ந்தாள். சட்டென்று வண்டி நின்றதில் டக்கென்று முழிக்க, கண் முன் இருந்த வீட்டைக் கண்டவள் விரக்தி புன்னகை தான் வந்தது. எப்படி எல்லாம் இந்நாள் இத்தகைய பொழுது இருக்க வேண்டும் என்று பல கனவோடு இருந்தாள். கல்யாணமே ஏனோ தானோவென நடந்து விட்டது இது என்ன பெரிய விஷயமா என்று நினைத்து ஏக்க பெருமூச்சு விட்டு கொண்டு இறங்கினாள்.

அவளையும் அபியையும் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றனர். பின்பு, அவளை விளக்கேற்ற கூற, அவள் பூஜை அறையின் உள்ளே நுழையும் நேரம் சட்டென்று கதவு அடைக்கும் சத்தம் கேட்டது. அதில் கையில் வைத்திருந்த குத்து விளக்கை தவற விட்டாள். அனைவரும் அதிர்ந்தனர்.

அவர்களின் முறைப்படி பெண் வீட்டில் இருந்து கல்யாணம் செய்து மாப்பிள்ளை வீட்டுக்கு வரும் பொழுது குத்து விளக்கை கையில் வைத்து கொண்டு தான் வர வேண்டும். மஹாலெஷ்மியே வருவது போல் நினைத்துக் கொண்டு இந்த சம்பிரதாயத்தை செய்கின்றனர் . அது விழுந்தால் அனைவரும் பதற தான செய்ய வேண்டும். அதே நிலை தான் அங்குள்ள அனைவருக்கும்.

அங்கு ஒரு சம்பவம் நடக்கும் பெரிது படுத்தலாம் என்று ஒரு ஓரத்தில் ஒருவர் நின்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க,
அதற்குள் அபி அதனைப் பிடித்து இருந்தான்.

அதன் பின்பே அனைவருக்கும் ஆசுவாசமாக இருந்தது. அதன் பின், எந்த தடங்கலும் இல்லாமல் விளக்கேற்றினாள்.
பின்பு, ஒன்றாக அமர வைத்து பாலும் பழமும் கொடுத்து விட்டு, இருவரையும் ரெஸ்ட் எடுக்குமாறு கூறிய நொடி, அபி சட்டென்று அவனின் அறைக்குள் புகுந்து கொண்டான். இவளை கீழே உள்ள அறையில் தங்குமாறு கூறிவிட்டு மற்றவர்களும் சென்று விட்டனர்.

உள்ளே நுழைந்தவள் ஏக்க பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அந்த அறையை சுற்றி முற்றி பார்த்தவள் தொப்பென்று மெத்தையில் படுத்தாள். ஓடும் காற்றாடியையே பார்த்துக் கொண்டிருந்தவள் எப்பொழுது கண் அயர்ந்தாள் என்று தெரியவில்லை. மைத்ரேயியும் யமுனாவும் அழைத்த பின்னரே கண்களை கடினப்பட்டு திறந்தாள்.

அதன் பின் தான் , தான் இருக்கும் இடம் நிலை என அனைத்தும் புரிந்தது. மைத்ரேயி தான் கத்திக் கொண்டிருந்தாள்.

” ஏன்டி உன்கிட்ட எத்தனை தடவை படிச்சு படிச்சு சொன்னோம். வந்த உடனே தலை முடியை அவுத்து சிக்கு எடுத்து சரி பண்ணி வச்சுடனு . இப்படி தூங்குற ? வெளியில எல்லாரும் வந்துட்டாங்க. எப்போ ரெடியாகிறது? சீக்கிரம் எந்திரி !  “

ஆனால், அவளோ இரு நாட்களாக சரியாக தூங்காததால் உடல் சோர்வோடு அபியின் கோபத்தில் மன சோர்வும் இருந்தது. பெற்றோர்களை வேறு பிரிகின்றோம் என்பது வேற மனதை வெகுவாக வதைத்து கொண்டிருந்தது.

இதை அனைத்தையும் நினைத்து கொண்டே எப்பொழுது கண் அயர்ந்தாள் என்று தெரியவே இல்லை. இப்பொழுதும் அதே நினைப்புடன் எழுந்து குளியலைறைக்கு சென்று விட்டாள்.

இந்நேரம் நாம் இவ்வளவு பேசியதற்கு பதிலுக்கு பதில் பட்டாசாக வெடிப்பவள் அமைதியாக செல்வதை கண்ட மைத்ரேயி, தனது தங்கையின் மனநிலையை சரியாக புரிந்து கொண்டு துரிதமாக யமுனாவின் உதவியுடன் அவளை தயார் செய்தாள்.

பின்பு, அவள் வெளியில் வர  தென்றல் பூரித்து போனார். கல்யாண புடவையில் சிம்பிளான தங்க மாலை, தங்க ஜிமிக்கி, தங்க வளையல் அணிந்து, தலையை வாரி, பூ வைத்து, நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து, மெலிதான ஒப்பனையில் அழகாக இருந்தாள். அவள் கழுத்தில் அணிந்திருந்த மஞ்சள் தாலியில் முகம் பிரகாசமாக இருந்தது.

அனைவரின் முன்பும் வந்து கையெடுத்து கும்பிட்டு விட்டு தமக்கையின் அருகில் நிற்க, அவளை பிடித்து அபியின் அருகில் அமர வைத்தனர். அதன் பிறகே அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். காலையில் அணிந்து இருந்த பட்டு வேஷ்டி சட்டையில் அம்சமாக இருந்தான்.

அனைவரும் அமர்ந்து பேசி சிரித்து, அபி மற்றும் உத்ராவின் மனநிலை புரியாமல் பெரியவர்கள் முதல் இளையவர்கள் வரை அனைவரும் அவர்களை கலாய்த்தனர். அதில் தான் மெலிதாக பயம் தொற்றிக் கொண்டது அவளுக்கு .

ஒரு வழியாக இரவு ஒன்பது மணியாக இவளுக்கு தான் பகிரென்று இருந்தது. பெற்றவர்களும் கிளம்பி விட , அவளை இரவுக்கு தயார் செய்ய ஏற்கனவே இருந்த அறைக்கு கூட்டிச் சென்றனர்.

அவள் உள்ளே நுழைந்தவுடன் குளிக்க சொல்ல , உள்ளே சென்று உடையை கலைந்து தண்ணீரை திறந்து விட்டு  நின்று விட்டாள்.

“அடப்பாவிங்களா என் பர்ஸ்ட் நைட் எப்படிலாம் நடக்கணும்னு நினைச்சேன் “

“நீ தான யாருக்குமே நடக்காத மாதிரி வித்தியாசமா நடக்கனும்னு சொன்ன ! ” மனசாட்சி அவளிடம் கேள்வி கேட்டது.

” நான் கேட்டது இந்த வித்தியாசமா ? கடவுளே விநாயகா உன்னை நம்பி பிரண்டா வச்சிருந்தேன், உன் வேலையை காமிச்சுட்டீல !  உன்னை வந்து மீட் பண்ணலைனு ஆப்பை அடிச்சுடீல ! எல்லாம் அந்த பாலா நாயால வந்தது . எல்லாம் என் நேரம்  ! ஒரு பயலும் நம்மல லவ் பண்ணல! நமக்கு லவ் பண்ணி சொல்லவும் தைரியம் இல்லை! சரி வீட்ல பாத்தது லவ் பண்ணுவோம்னு பாத்தா அந்தாளு சரியான சைக்கோவா இருக்கான். என் விரலை வேற நசுக்கிட்டான் ! இப்போ உள்ள போனா பக்கம் பக்கமா டையலாக்கா பேசுவான். கோச்சுக்கிட்டா கம்முனு தூங்கணும். அத விட்டு …. அய்யோ புலம்ப விட்டுடானே”

இவ்வளவு நடந்தும் நீ திருந்தவில்லை என விநாயகர் நினைத்துக் கொண்டு அடுத்த லீலைக்கு தயாராகி விட்டார்.

உத்ராவும் சந்தன நிறத்தில் லேசான பூனம் சேலையை கட்டி இருந்தாள். தலை நிறைய மல்லிகைப் பூ , கழுத்தில் அவன் கட்டிய தாலி மட்டுமே , கையில் சிம்பிளான வளையல். அம்சமாக இருந்தாள். பூஜையெல்லாம் செய்து அவளை உள்ளே அனுப்பினர்.

உள்ளே நுழைந்தவள் அதிர்ச்சி ஆகி விட்டாள் ! 😱

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. உத்ரா அபி ரெண்டு பேருக்கும் என்ன சண்டை?

      முதல்ல என் உத்தரவை குளிக்கவைத்து ரெடி பண்ணி ரூம்க்குள்ள அனுப்பி மறுபடியும் ஏன் குளிக்க சொன்னாங்க??

      1. Author

        பர்ஸ்ட் டைம் refresh than ava அப்படி தான் போட்டிருக்கேன்… சாயங்காலம் உறவினர்களாம் வருவாங்க . அதுக்காக! நைட்டு தான் குளிச்சு ரெடி ஆவாள்.

      1. Author

        💜💜💜❤️❤️