Loading

முசுடும் முயலும் –  11 😾😻

அரக்க பறக்க  அவளை காண்பதற்கு வேலைகளை பிறரிடம் பகிர்ந்து கொடுத்து விட்டு, அலுவலகத்தில் இருந்து இருபது நிமிட தூரத்தில் இருக்கும் இடத்திற்கு சாப்பிடாமல் கூட சென்றான் அபி.

இதுதான் அபி ! பிடித்தவர்களுக்காக எல்லாம் செய்வான் ஆனால் அது மற்றவரின் பார்வைக்கு படாதவாறு செய்வான். முக்கியமாக வெகு சீக்கிரத்தில் யாருடனும் நெருங்கி பழக மாட்டான். அவ்வாறு பழகினாலும் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டான். ஆனால், அவர்களிடம் மட்டுமே மனதை வெளிக்கொணர்ந்து பேசுவான். அது சில நேரம் எதிரில் இருப்பவர்களின் மனதை கொல்லும்.

இப்பொழுது உத்ராவிடம் கண்டிப்பாக வர வேண்டுமா என்று கேட்டது போல். ஆனால், அவள் குரலில் பிசிறு ஏற்பட்டதை தெரிந்தவுடன் அவளுக்காக சென்று விட்டான். ஆனால், அது உத்ராவிற்கு தெரியாது. அவளைப் பொருத்தவரை கட்டாயத்தின் பேரில் மட்டும் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள்.

இருந்தும் அவனுடன் இருக்கும் நிமிடத்திற்கு ஏங்கி அதனை புறம் தள்ள, இதோ அவனின் அன்பன் கண் முன்னால். அவனின் ஆபிஸ் வியர் டிரஸ்ஸில் அம்சமாக இருந்தான். அவனின் முகத்தில் அமைதி இருந்தது. ஆனால் பேசுபவரிடம் கடினம் இருந்தது நன்றாகவே தெரிந்தது.

உடையை தேர்வு செய்தாலும் நொடிக்கு ஒரு முறை அவனைக் கண்டு கொண்டே இருந்தாள். தென்றலோ மருமகன் வந்தவுடன் பேருக்கு தலையை அசைத்து விட்டு ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டார்.

ஐந்து நிமிடம் பேசி முடித்து விட்டு, அவளின் அருகில் வர “என்ன மேடம் பர்சேஸ் எதுக்கு? “

” கல்யாணத்துக்கு அப்புறம் போட வேண்டிய டிரஸ் பர்சேஸ் ” என உடையைப் பார்த்து கொண்டே கூறினாள்.

“கல்யாணத்துக்கு அப்புறம் எதுக்கு டிரஸ்? “

“என்ன? “

” ஹா ஹா…….. இப்போ யூஸ் பண்ற டிரஸ்ஸே போட வேண்டியது தான? அப்படி கேட்டேன் ” சிரித்துக் கொண்டே கூற, அவனின் சிவந்த உதடு இவளை இம்சை செய்தது . அதே போல் அவளின் கண் இவனை இம்சித்தது.

ஒவ்வொரு முறையும் அவனைக் காண வெட்கப்பட்டு அலைப்புறும் கண்கள் கவ்வியது அவனை. அவளைக் கண்டவுடன் சிரிக்கும் அவனின் நிறைந்த அழகிய சிவந்த உதடு அவளை உறிஞ்சி விடுகிறது.

“ஓஹோ……. “என கண்கள் சுருக்கி பார்க்க, இன்னும் அவளை நெருங்கி “இப்போவே அதெல்லாம் பேசிட்டா உனக்கு தைரியம் வந்திடும். உனக்கு இந்த விஷயத்துல தைரியம் வரவே வேணாம். நீ இதே மாறி கண்ணையும் மனசையும் படபடனே வச்சுக்க “

கையில் எடுத்த உடையை கீழே தவற விட்டாள் அவனின் காதல் மொழியில். அதில் தன்னை மறந்து புன்னகைத்தவன் அதனை எடுத்து மாற்றி விட்டு கொஞ்சம் தள்ளி ஒரு பொம்மைக்கு அழகாக உடுத்திய கரும்பச்சை நிற குர்தா அழகாக இருந்தது. அதனை தொட்டு பார்த்து கொண்டிருக்க, அவனின் அருகில் வர அதனை கையில் கொடுத்து ட்ரயல் பார்க்க சொன்னான்.

அவளோ அவனிடம் காண்பிக்காமல் உள்ளேயே மாற்றி பார்த்து விட்டு வெளியில் வந்தாள். தன்னிடம் வந்து காண்பிப்பாள் என்று நினைத்து இருந்தவனுக்கு சிறு ஏமாற்றம் தான். ஆனால், அவனின் முதிர்ச்சி அதனை புறம் தள்ளியது.

“ரொம்ப அழகா இருந்துச்சு ! இதையும் எடுத்துக்குறேன் ! “

” இதையும்னா? ” புருவம் உயர்த்தி கேட்க,

“இன்னும் எடுத்திருக்கேனு அர்த்தம் “எனக் கூறி அன்னையின் கையில் கொடுத்த துணிகளையும் வாங்கி கொண்டு கேஷ் கெளண்டருக்கு சென்றாள்.

அவளிடம் இருந்து தான் தேர்வு செய்த உடையை மற்றும் எடுத்துக் கொண்டு அதை தனியாக பில் போட கூறினான். அவள் அவனைப் பார்க்க, இவன் கார்ட்டை கொடுத்துக் கொண்டே “எத்தனை மணிக்கு வந்த? “

“நான் 12:30 க்குலாம் வந்துட்டேன் ! ” எனக் கூறி அவள் முன்பே தேர்வு செய்த துணியை தூக்கி முன்னே வைக்க, அதில் வந்த பில் இரண்டாயிரம் எனக் காண்பித்தது. அதற்கு சரிசமமாக இவன் இரண்டாயிரத்துக்கு ஒரே உடையை வாங்கி கொடுத்தான்.

அதை கையில் கொடுத்தவன் ” பக்கத்துல போய் ஏதாவது சாப்பிட்டு வருவோமா? “

“அம்மா…… “

“அத்தைக் கிட்ட கேட்டுட்டு வா ! “எனக் கூறி விட்டு வந்த அழைப்பை எடுத்து பேச சென்று விட்டான்.

அம்மாவை எப்படி விட்டு செல்வது என்ற யோசனையில் இவள் கேட்க, அவனோ கேட்க சங்கடம் கொள்கிறாள் என இவனாக ஒன்றை நினைத்துக் கொண்டு பதில் கூறினான்.

உத்ரா தனது தாயிடம் கேட்க, தரைத்தளத்தில் ஓரத்தில் போட்டு இருக்கும் கதிரையில் அமர்ந்திருப்பதாக கூற, இவளும் அவனிடம் கூறி விட்டு முதல் மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு கீழே அமர வைத்தாள். பின்னாலேயே, ஒரு கோல்ட் காஃபியை அத்தையிடம் கொடுத்து விட்டு உத்ராவை அழைத்து கொண்டு மூன்றாம் தளத்தில் இருக்கும் காஃபி டேவிற்கு சென்றான்.

மணி இரண்டரை தொட்டதால், அபிக்கு பசி வயிற்றை கிள்ளியது. அதனால், இவன் சாண்ட்விச் மற்றும் மில்க் ஷேக் ஆர்டர் செய்ய, அவள் ஒரு ஐரிஸ் காஃபியுடன் முடித்துக் கொண்டாள்.

முதன்முறை வெளியில் வருகிறோம் என்று  உத்ராவோடு அபிக்கும்  ஆனந்தம் இருந்தாலும் அவனின் வேலைப்பளு அவனின் கழுத்தை நெறித்து கொண்டிருந்தது. அதனோடு பசியும் சேர்ந்துக் கொள்ள, ஆசையோடு ருசி பார்க்க கூட கொடுக்காமல் பேசிக் கொண்டே கடகடவென  சாப்பிட்டு முடித்தான்.

அவன் கிளம்புவதற்காக தான் இவ்வளவு சீக்கிரம் சாப்பிடுகிறான் என அவனின் வேகத்தை தவறாக புரிந்த கொண்டாள் உத்ரா. அழைப்பு வந்துக் கொண்டே இருக்க , ஒரு கட்டத்தின் மேல் பொறுக்காமல் அவளே எழுந்துக்  கொண்டாள்.

அவளை அன்னையின் அருகில் விட்டுவிட்டு அடுத்தடுத்து அழைப்பு வந்தததில்  அவன் சென்று விட்டான். நிச்சயம் முடிந்து அவனுடன் நடக்கும் முதல் சந்திப்பு. ஒரு புகைப்படம் கூட இல்லையே என மனம் ஒரு பக்கம் கசந்தாலும் தனக்காக முதன்முறை வாங்கி கொடுத்த உடையை தழுவி மகிழ்ந்து கொண்டாள்.

😾❤️😻

இரண்டரை மாதம் கழித்து,

இன்றும் கோயம்பத்தூர் நோக்கி பயணம் மேற்கொண்டாள் உத்ரா. கல்யாண கலை என்பதே அவளின் முகத்தில் துளி அளவு கூட இல்லை. எதுவோ ஏனோ யாருக்கோ என்பது போல் இயற்கையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதே போல் இசையை ஏனோ தானோவென கேட்டு கொண்டிருந்தாள். அதனோடு பின்னோக்கி அவனோடு ஒன்றாக கழித்த பொழுதை நினைத்தாள்.

😾❤️😻

அவள் அனைத்து பொருட்களையும் வாங்கி கொண்டு வீட்டுக்கு இனிமையுடன் சென்றாள். இவளுக்கும் இரு நாட்களாக வேலை இருந்தது. இருந்தும் அவனின் அழைப்பை எதிர்ப்பார்த்து ஆசைப்பட்டாள். ஆனால் அவனோ தொழிலில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.

இவள் அழைப்பிற்கும் பதில் இல்லை. என்றோ ஒருநாள் வீட்டில் கல்யாணம் பற்றி பேசும் பொழுது அவளின் ஞாபகம் வந்து அவளிடம் பேசுவான்.

அவ்வாறு ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது , அவனுக்கு தாம் கூறாத ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. மண்டையை குடைந்தவன் ஏன் அதனை மறந்தோம். ஏன் கூறாமல் விட்டோம் என்று பலவாறு யோசித்தவன் அவளை இழந்து விடுவோமோ என்கின்ற பயம் அவனை சூழ்ந்தது. இருந்தும் தைரியத்தை வரவழைத்து கூற முயன்றாலும் எதுவோ ஒன்று தொடுத்தது.

திருமணத்திற்கு முன்னே இதனை கண்டிப்பாக கூறியே ஆக வேண்டும் என நினைத்து அந்த வாரமே அவளை காண சென்று விட்டான். இந்த மூன்று மாதத்தில் பெற்றோர்களுடன் வந்ததோடு சரி இப்பொழுது தான் வீட்டிற்கு வருகிறான்.

அவன் வருகிறான் என்று  கெளதமி தென்றலிடம் கூறியவுடன், அதிர்ந்த உத்ரா அபிக்கு அழைத்தாள். அவனோ மற்ற வியாபாரிகளிடம் தனது உற்பத்தியை பற்றி கூறுவதற்கு ஒரு ப்ரசண்டேஷன் உருவாக்கிக் கொண்டிருந்தான்.

அவள் வருவதைப் பற்றி கேட்பதற்காக தான் அழைக்கிறாள் எனப் புரிந்த அபி உடனே அழைப்பை ஏற்று ” டி…… நான் ஞாயிற்று கிழமை ஊருக்கு வரேன் . எத்தனை மணிக்குனு நான் நாளைக் கழிச்சு சொல்லுறேன்டி. நான் ரொம்ப பிஸி டி…. பாய்”

அவளும் அவனின் வேலையை புரிந்து கொண்டு அவனை காணும் நாளைக் கண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்நாளும் வந்தது. அவளைக் கண்டு வழக்கம்போல் மர்ம புன்னகை வீசினான். இவளும் அவனுக்காக அழகான புடவையை கட்டி நின்றாள்.தென்றலும் தடபுடலாக விருந்து வைத்து அவனைக் கவனித்தார் . எல்லாம் முடிந்து வைரமணியும் சில மணித்துளிகள் பேசி விட்டு நகல , உத்ரா அவனை அழைத்துக் கொண்டு மாடிற்கு சென்றாள்.

இதற்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல் எடுத்தவுடன் இப்பேச்சை ஆரம்பிக்காமல் சிரித்துக் கொண்டே சுற்றி வேடிக்கைப் பார்த்தவன் “அப்புறம் என்ன பண்ணுற ? பர்சேஸ்ஸிங்கலாம் ஓவரா ? “

அவளும் சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே “ஹம்ம்…….. “

“கல்யாணத்துக்கு என்ன டிரஸ் ? ரிசப்ஷனுக்கு என்ன பிளான் பண்ணிருக்க ? “

” இன்னும் முடிவு பண்ணல ” அவனின் முகத்தை பார்க்காமல் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு கூற, அவள் வெட்கம் கொண்டு தான் இவ்வாறு செய்கிறாள் என்று நினைக்க, அவளோ ஒரு சிறு கோபத்துடன் அவ்வாறு பேசிக் கொண்டிருந்தாள்.

அவனாக ஒன்று நினைத்து அவளின் அருகில் நெருங்கி வர, இவள் திரும்ப அவளின் கண்களை கண்டவன் சிரித்துக் கொண்டே அவளின் கொழு கொழு இடுப்பை தழுவிக் கொண்டே அவளை கட்டியணைத்தான். அதில் அவள் தான் பயந்து விட்டாள். சுற்றி உள்ள வீடுகளில் இருந்து எவரும் பார்த்து விட்டாள் அவ்வளவு தான் என்று நினைத்து பயந்தவள் அவனை விலக்க, அவன் கேள்விக் குறியாக பார்க்க, சுற்றி பார்த்தவள் “கீழ உட்காருவோமா ? ” என கேட்க, இவனும் சிரித்துக் கொண்டே உட்கார்ந்தான்.

பின்பு, அவளைப் பார்த்து “நான் உன்கிட்ட பர்ஸ்ட் டைம் பேசுற அப்போவே சொல்லனும்னு நினைச்சேன். ஆனா , அதை மறந்துட்டேன். அப்படியே கொஞ்சம் வேலை பிரஷர் வேற . இப்போ தான் ஞாபகம் வந்துச்சு. அதை சொன்னா எப்படி எடுத்துப்பனு தெரில . ஆனா, அதுக்கு முன்னாடி ……. ஹம்க்கும் நான்  மறச்சேனு நினைக்காத ! “

அவனைத் திருதிருவென பார்த்தாள்.

” எனக்கு …… ! “

அவன் கூறிய செய்தியில் அதிர்ந்தே விட்டாள்.

“தப்பு செய்து விட்டோமோ ” மனதிற்குள் குடைந்தது.

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்