முசுடும் முயலும் – 16 😾❤️😻
“ஏண்டி …. உன்னால இந்த ஒரு வேலை கூட உருப்படியா பாக்க தெரியாதா ? எதுக்கு தான் நீ இருக்கியோ? ஒரு பிளான் கூட ஒழுங்கா பண்ண தெரில…… “
“ஆமாம் மா ! உனக்கும் உன் மகளுக்கும் சேவகம் செய்ய தான் என்ன பெத்து இருக்க பாரு ! எப்போ பாரு அதை பண்ணு இதை பண்ணுனு சொல்லிக்கிட்டே இருக்க? ” நிரல்யா
பட்டாசாய் வெடித்தாள் .
“என்ன செல்லம் இப்படி சொல்லிட்ட ? எனக்கு பெரிசா இதை பத்தி தெரியாது நான் அந்த காலத்து ஆளு ! ” சாரலா தனது மகளை கெஞ்சி கொஞ்சி கூறினார்.
“அதான் உன் மக இருக்காள? ” மூக்கை விடைத்துக் கொண்டு கேட்க,
” அகிலுக்கு தான் கொஞ்சம் அறிவு கம்மினு தெரியும்ல உனக்கே ” என தனது மூத்த மகளின் செவிக்கு எட்டாமல் இளையவளிடன் கமுக்கமாக கூறினார்.
ஆனால், அகில் நிலா அனைத்தும் காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் அலைபேசியுடன் உறவாடி கொண்டிருந்தாள். அவளுக்கு அவள் நினைத்த காரியம் நடக்க வேண்டும். அவ்வளவே !
“அதுக்கு நான் தான் கிடைச்சேனா ? “
“சரிடி ! இப்போ என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு? எல்லாம் கை மீறி போச்சு? வேற ஏதாச்சும் வழி இருக்கா ? ” அகில் இம்முறை சத்தம் போட்டுக் கேட்டாள்.
நிதர்சனம் புரிய நிரல்யா ” ஒன்னும் பெரிசா பண்ண வேண்டாம். குறைந்தபட்சம் ப்ளான் எக்ஸிக்யூட் செய்யுறதுல உன் பங்கும் இருக்கலாம்ல ” வேற புறம் திரும்பி குரலை தாழ்த்தி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்க, தங்கையின் மனநிலையைப் புரிந்து
“பண்ணா நானும் அம்மாவும் மாட்டிக்குவோம் . இங்க எல்லாருக்கும் நாங்க பண்ணுறது தெரியும். அதான் உன்ன அனுப்புறோம்! “
” என்னவோ சொல்லுற ? முடிவு நல்லதாக இருந்தா சரி தான் “
“கண்டிப்பா சரியா தான் இருக்கும் ! ” என அகில் நம்பிக்கையாக கூறினாள். நிரல்யாவிடம் கூறுவது போல் தனக்குள்ளும் கூறிக் கொண்டாள்.
😾❤️😻
இரவு அவளை அணைத்து உறங்கியவன் விடியற்காலை ஐந்து மணியளவில் வெளியே இருந்து கதவு தட்டும் சத்தத்தில் தான் கண் விழித்தான்.
தன் மேல் கனமாக இருப்பது போல் தோன்றியது. இவள் தான் தூங்குகிறாள் என நினைத்து , விடிந்தும் விடியாமலும் இருக்கும் மங்கலான வெளிச்சத்தில் கண்ணை பழக்கப்படுத்தி பார்க்க, தன் மேல் எதுவோ பெரிதாக இருப்பது போல் தெரிந்தது. உற்றுப் பார்க்க அதிர்ந்து திரும்பி தனது பக்கவாட்டில் பார்க்க, அங்கு போர்வையை கழுத்து வரை போர்த்திக் கொண்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள் உத்ரா !
😾❤️😻
“ஏம்மா ! வீடு பெருக்கி விடுங்களேன் ! நான் குளிச்சுட்டேன் ! சாமி கும்பிடுறேன் ! அப்போ தான் மத்த ஜாமான் வாங்க போகனும் “
“இந்தா வரேன்ங்கா ! ” தென்றல் தனது கணவருக்கு சத்தமாக பவ்யமான பதில் கூறி விட்டு, அருகில் இருந்த மகளிடம் “ஏன் சாமி கும்பிடலைனா கடைகாரன் வடை தர மாட்டேனு சொல்லுவாரா டி ! ” மைத்ரேயியிடம் கோபத்தை பல்லிடுக்கில் கூறி காட்டிக் கொண்டிருந்தார்.
மைத்ரேயி இவர்களின் சம்பாஷணைகளை இருபத்தி ஐந்து வருடமாக கேட்டுக் கொண்டு தான இருக்கிறாள். அதனால் இப்பொழுது காரியம் தான் முக்கியம் என நினைத்து கடுப்பில் பொலம்பும் அன்னையின் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு, தகப்பன் கூறுவதை தட்டாமல் செய்யும் தலைச்சன் பிள்ளையாக பொறுப்பாக செய்தாள்.
அடுப்பறையில் அன்னைக்கும் உதவி விட்டு, பிள்ளைகளுக்கும் எல்லாம் செய்து தானும் ரெடி ஆகி வர , அடுப்பறையில் இருந்து அன்னை அனைத்தும் முடித்து வெளியில் வந்தார்.
வெளியில் பொருட்கள் வாங்க சென்ற வைரமணி மற்றும் மைத்ரேயியின் கணவர் அஸ்வந்தும் உள்ளே வந்தனர். பின்னேயே , கார் சத்தமும் கேட்டது. அபி மற்றும் உத்ரா தான் வந்தனர்.
இருவரும் நுழைந்தவுடன் அனைவரின் உபசரிப்புகளும் பலமாக இருந்தது. அபியுடன் வைரமணி மற்றும் அஸ்வந்த் அமர்ந்து விட, பெண்மணிகள் அடுப்பறைக்குள் நுழைந்தனர். பிள்ளைகள் வழக்கம்போல் தொலைக்காட்சியில் ஐக்கியமாகினர்.
உள்ளே நுழைந்ததில் இருந்து உத்ரா தென்றலை உற்று உற்று பார்த்தாள். அவர் இடது புறம் திரும்பினால் இவளும் அருகில் வந்து அவரின் தோளில் கைவைத்து திரும்பி முகத்தை பார்த்தாள். வலது புறம் திரும்பினால் அந்த பக்கம் திரும்பி பார்த்தாள். இவ்வாறு செய்து கொண்டே இருக்க , மைத்ரேயி “என்னடி பண்ணுற ? “
இதே கேள்வியை தென்றலால் கேட்க முடியவில்லை. ஏனென்றால், வேலை ஒரு புறம், மகள் திருமணாகி வீட்டிற்கு முதன் முறை வருவது ஒரு புறம் என பல காரணம் இருந்தது.
“இல்லை இந்த அம்மா ஏதாச்சும் என்ன மிஸ் பண்ணுச்சானு பாக்குறேன் ? “
“அது முகத்தை பார்த்தே கண்டுபிடிச்சிடலாமா? “
“ஏதாச்சும் அழுத மாதிரி கண்ணு வீங்கி , தூங்கதனால கண்ணு சிவந்து, முகம் வீங்கி இப்படி ஏதாச்சும் சிம்டம்ஸ் இருக்குமானு பாக்குறேன் “என உற்று நோக்கி பார்த்து விட்டு மைத்ரேயியின் புறம் திரும்பிய நேரம், நங்கென்று மண்டையில் கொட்டினார் தென்றல்.
“ஆஆ….. ” வீடே அலறும் படி கத்த, வெளியில் பேசிக் கொண்டிருந்த மூவரும் வர, முன்னால் வைரமணி நிற்க, பின்னால் அபி மற்றும் அஸ்வந்த நின்றனர்.
ஏன் என்னாச்சு என்கின்ற கேள்விக்கு பதில் “எதுக்கு கத்துற உத்ரா “வைரமணி மெதுவாக தான் கேட்டார் ஆனால் அதில் கடினம் இருந்தது.
“ஒன்னுமில்லைங்க “என தென்றல் சிரித்துக் கொண்டு கூற, மைத்ரேயி சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் திரும்பி கொள்ள, உத்ரா வலியை கட்டுபடுத்தவும் முடியாமல் இவர்கள் நிற்பதால் தலையை தேய்க்கவும் முடியாமல் கண் கலங்கி ஒரு பக்கமாக நின்று கொண்டு பதில் சொல்லும் அன்னையை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
ஓரளவு இவ்வீட்டை பற்றியும் இவ்வீட்டினரை பற்றியும் தெரிந்து கொண்டதால் அஸ்வந்திற்கு ஓரளவிற்கு புரிந்தது. அவனும் தனது கொழுந்தியாளை கண்டு நக்கல் சிரிப்பை உதிர்த்தான்.
அதற்குள் கல்யாணம் பற்றி விசாரிக்க ஆள் வர, வைரமணி செல்ல பின்னால் தென்றலும் சென்றார் . அவர்கள் இருவரும் சென்ற உடன் அஸ்வந்த் அடுப்பறைக்குள் நுழைய பின்னால் அபியும் உடன் நுழைந்தான்.
அதற்கு மேல் முடியாது என்று மைத்ரேயி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க, அவளின் சிரிப்பையும், உத்ராவின் முறைப்பையும் கண்டு அஸ்வந்துக்கும் சிரிப்பு வந்தது. இருவரின் சிரிப்போடு, மனையாளின் முக சுழிப்பையும் கண்டு அபிக்கும் சிரிப்பு வந்தது. அவளை விட்டு கொடுக்க கூடாது என்று எண்ணி புன்னகை மட்டும் சிந்தி கொண்டு நின்றான்.
” அதான் அபியும் சிரிக்கிறான்ல. அவனுக்கும் புரியுது. இன்னும் வலிக்காத மாதிரியே ஏன் நடிக்கிற? தலைய தடவு “
“எப்படிங்க தலையில தான் அடிவாங்கிருக்கானு கரெக்ட்டா சொல்றீங்க ? ” மைத்ரேயி உடன் உத்ராவும் விழி விரிக்க, அதிலேயே அவள் தலையில் தான் அடி வாங்கி இருக்காள் என்று அபிக்கு நன்றாகவே புலப்பட்டது.
“ஹம்ம்…. நமக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சே மா! அத வச்சு தான் “
” என்ன மாமா? லந்தா? என்ன என் ஆளு முன்னாடி அசிங்கபடுத்துற ? “
“நீ உன் ஆளு இருக்காருனு அடங்குறீயா? அப்பவும் அத்தைகிட்ட பேசி அடி வாங்குற ? கல்யாணம் ஆகி வந்த மறு நாளே அடி வாங்குறீனா அப்போ நீ எவ்ளோ பண்ணிருப்ப ? “
அஸ்வந்த் பேச பேச அவளுக்கு பேச எதுவும் வரவில்லை. அதுவும் தன் கணவன் முன் வேறு எதுவும் தோன்ற மாட்டிகிறதே என்று முணுக்கி கொண்டு நிற்க, இவர்களின் சம்பாஷணைகளை பார்த்துக் கொண்டிருந்த அபியை “அவருக்கு தங்கச்சி கிடையாது, எங்களுக்கும் அண்ணா கிடையாது ” மைத்ரேயி அபி தவறாக நினைத்து விடக் கூடாது என நினைத்து கூற,
“நீங்களும் அண்ணனா நினைக்கிறீங்களா ? “
” டேய் அபி ! என் வாழ்க்கைல ஏன்டா விளையாடுற “அஸ்வந்த பதற,
” அவங்க அப்படித்தான சொல்லுறாங்க “
மைத்ரேயி நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து நின்று விட்டவள் அதன் பின் ஒன்றும் பேசவில்லை. அவளின் தலையை தட்டிவிட்டு “ஓவரா இருக்கு ரியாக்ஷன். இந்த மொமண்ட்டுக்கு இது தேவையில்லை ” கடுப்புடன் உத்ரா கூறினாள்.
அந்நேரம் “என்ன …… என்ன சத்தமா இருக்கு ? ” எனக் கூறிக் கொண்டே பாலா உள்ளே நுழைந்தான்.
அவனை பார்த்தவுடன் உத்ராவின் மந்திரக்காரன் முசுடனான். முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு உத்ராவை முறைத்தான். ஆனால், அவள் அதை காண தான் இல்லை. அவள் வேறு கடுப்பில் இருந்தாள்.
பாலாவோ யாருக்கும் சந்தேகம் தோன்றாதவாறு “வாங்க மாமஸ்களா ! என்ன கூட்டணி ? நீ ஏன் இப்படி நிக்கிற ? ” என உத்ராவை பார்த்து கேட்க,
“ஹாங்….. வேண்டுதல் “எனக் கூறி தென்றலை போன்று அவனின் தலையில் பாத்திரத்தை வைத்து அடித்து விட்டு சென்று விட்டாள்.
இதற்கு மேல் முடியாது என்று அஸ்வந்தும் மைத்ரேயியும் விழுந்து விழுந்து சிரித்தனர். பாலா பாவமாக பார்க்க, அவனை இழுத்து கொண்டு வெளியில் வர, அபியும் வெளியில் வந்தான் .
பின்பு, அனைத்து அரட்டைகளையும் முடிந்து அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். வைரமணி ” மாப்பிள்ளை இவன் பாலா ! என் பிள்ளை மாறி தான்! உத்ரா கூட தான் படிச்சான் . இப்போ சென்னைல வேலைக்கு போறான்”
“தெரியும் மாமா ! பாலாவை தெரியாமா இருக்க முடியுமா ” பல்லை கடித்துக் கொண்டு உத்ரா பாலாவை முறைத்து விட்டு வைரமணியை கண்டு சிரித்துக் கொண்டே கூறினான்.
ஆனால், உத்ரா மற்றும் பாலாவோ காரியமே கண்ணாக குனிந்த தலை நிமிராமல் உணவை உட்கொண்டனர்.
இதை அனைத்தையும் ஒரு ஜோடி கண்கள் கண்டுவிட்டு சந்தேக கணைகளை தொடுத்து கொண்டது மனதிற்குள்ளேயே ! அனைவரும் உண்டு முடித்து விட்டு ஹாலில் அமர அஸ்வந்த் பாலா மற்றும் அபியை அழைத்து கொண்டு வெளியில் சென்று விட்டான்.
மகளிடம் கண்காட்டி விட்டு தென்றல் பிள்ளைகளுடன் படுக்க சென்று விட, வைரமணியும் சிறிது நேரம் கண் அசர சென்று விட்டார்.
😾❤️😻
சாப்பிட்ட உணவு பாத்திரங்களை மாற்றிய மைத்ரேயிக்கு உத்ராவும் உதவி கொண்டிருந்தாள்.
எப்படி கேட்பது என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த மைத்ரேயி, அடுப்பறையில் இருவரும் தனித்து நிற்க, அந்நேரம் ” என்னடி காலைல எத்தனை மணிக்கு எந்திரிச்ச? இங்க மாதிரி தான் லேட்டா எந்திரிச்சியா ? “
“அதலாம் சீக்கிரமே எந்திரிச்சுட்டேன் ….. ஹே உங்கிட்ட அதவிட காமெடியான மேட்டர் பத்தி சொல்லனும் வா வா ” எனக் கூறி அடுப்பறையில் இருந்து வெளியில் சென்ற உத்ராவை வித்தியாசமான பிறவியாக பார்த்துக் கொண்டே “காமெடி மேட் ….ட ……..ரா….. திருந்தாத ஜென்மம் “என தலையில் அடித்து இவளும் வெளியில் வர, ஹாலில் உள்ள டிவியின் முன்புள்ள சோபாவில் உட்கார்ந்து இருந்தாள்.
இவளும் அருகில் அமர, “என்னடி காமெடி ? ” என சுருதியே இல்லாமல் கூற, அவளின் தொனியில் சற்று எரிச்சலுற்று ” நீ நினைக்கிற எதுவும் நடக்கல ஆனா நடக்காமலும் இல்லை “
“என்ன தான்டி சொல்ல வர்ற ? “
“நைட் போனேனா ….. அவரு ரொமான்ஸ் பண்ண வந்தாரா ……. அப்போ ….. “
“அப்போ ….. ” மைத்ரேயி ஆர்வத்துடன் கேட்க,
“அப்போ…. கரண்ட் போச்சு “
“ச்சை…. கரண்ட் எதுக்கு டி தேவை “
“அது தேவை இல்லதான் ….. ஆனா கரண்ட் வந்துருச்சு ……. “
” அப்புறம் என்ன ? “
“அப்புறம் ….. டயர்ட் ஆகிட்டோம் …. அதுனால தூங்கிட்டோம்”
” இது தான் காமெடியா ? ” என முகத்தை சுளித்து கொண்டு கேட்டாள் மைத்ரேயி .
“அது இல்லடி…. காலைல லைட்டா மேல எங்க ரூம்ல நின்னு யாரோ பேசுற சத்தம் கேட்டுச்சு. அதுல முழிச்சுட்டேன் . பாதி தூக்கத்தில இருக்கும் போது அவங்க கதவ தட்டுறதும் இவரு கத்துறதும் ஒரே நேரமா இருந்துச்சு டி”
மைத்ரேயி ஒரு நிமிடம் அதிர்ந்து விழுந்து விழுந்து சிரித்தாள்.
” பாத்தியா உனக்கே சிரிப்பு வருது . அவங்க என்ன நினைப்பாங்க. நான் என்னமோ அந்தாள ஏதோ பண்ணிட்டேன்னு நினைக்க மாட்டாங்களா “
பாவமாக கேட்கும் தங்கையை கண்டு தனது சிரிப்பை அடக்கி, “அப்பறம் என்னாச்சு “
“அப்பறம் என்ன அவங்க சிரிச்ச சத்தம் நல்லாவே கேட்டுச்சு ” என வாயை பிதுக்கிக் கொண்டு கூறினாள்.
” இவரு எதுக்கு கத்துனாரு ? “
“அத ஏன் கேட்குற ? அவங்க வீட்ல வளருற நாய் தான் அவரு மேல படுத்து இருந்துச்சு. அவரு நான் தான் படுத்து இருக்கேனு நினைச்சு இருப்பாரு போல ……. இத விட பெரிய கொடுமை அந்த நாய் நைட் ஃபுல்லா இங்க தான் இருந்திருக்கு ” எனக் கூறும் தங்கையை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
😾❤️😻
வெளியே சென்ற பாலா, அஸ்வந்த் மற்றும் அபி ஒரு காபி ஷாபினில் அமர்ந்து இருக்க, “என்னடா பாலா உன் லவ் என்னாச்சு ? “
குடித்து கொண்டிருந்த காபியை துப்பிய பாலா அபியை கலவரமாக பார்த்தான். “ஏன் மாம்ஸ் நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன் ? “
“டேய் அபி நம்ம ஆளுடா ! அவன் தப்பாலாம் நினைக்க மாட்டான் “
“யோவ் மாமா நான் லவ் பண்ணுறதே அவங்க வீட்டு பொண்ண தான் “
😱😱😱😱😱
கீர்த்தி ☘️
அபி😁