Loading

ன் அன்னை தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் செல்லவும் ஹரிஹரனுக்கு மனம் பாரமானது. அவன் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தவன், மல்லிகை தோட்டத்திற்கு வந்திருந்தான்.

மல்லிகையின் மணம் காற்றில் கலந்து நாசியை அடைந்தாலும் அதனை ஆழ்ந்து நுகரும் நிலையில் இல்லை அவன். வரப்பில் அமர்ந்தவன் கீழே கிடந்த குச்சி ஒன்றை கையில் எடுத்து அதனை ஆட்டிக்கொண்டே எங்கோ வெறித்தவண்ணம் அமர்ந்திருந்தான்.

அப்பொழுது தான் தோட்டத்திற்கு வந்திருந்த பாரிவேந்தன் அவனைக் கண்டு அவன் அருகில் வந்தான். அவன் வந்ததையோ அவனருகில் அமர்ந்ததையோ கவனிக்காமல் இன்னும் எங்கோ வெறித்தவண்ணம் தான் அமர்ந்திருந்தான் ஹரிஹரன்.

ஹரி!” என அவன் தோளைத் தட்ட, அதில் அசைந்தவன், அப்பொழுது தான் தன்னருகே அமர்ந்திருந்த பாரியை கண்டான். “நீங்க எப்போ வந்தீங்க பிரதர்?” என்றான் சிறு புன்னகையுடன்.

நான் வந்து அஞ்சு நிமிஷம் ஆனதுகூட தெரியாம அப்படி என்ன யோசனை தம்பி?” என்றான்.

எத சொல்ல பிரதர்! என் லைப்ல ரொம்ப முக்கியமானவங்க அம்மாவும் ஃபிளவரும் தான். ஆனா, இப்போ ரெண்டு பேருமே என்மேல கோபத்துல பேசாம இருக்காங்க. என்னமோ மாதிரி இருக்கு பிரதர்!” என்றவனின் கண்கள் லேசாகக் கலங்கி இருந்ததோ எனச் சந்தேகம் கொள்ளுமளவு கண்கள் கசிந்திருந்தன.

இப்படி தான அவங்க ரெண்டு பேரும் ஃபீல் பண்ணுவாங்க ஹரி, உனக்காவது பரவால்ல எனக்குலாம் வூட்ல என்ன பூஜை வச்சுருக்காளோ உன் ஃபிளவர்!” என்க, “உங்க நிலைமை என் நிலைமைய விடப் பரிதாபத்துக்குரியது தான் பிரதர்என்றான் சிரிப்புடன்.

சிறிது நேரம் மௌனம் மொழிகள் ஆட்சிபுரிய, ஹரிஹரனே தொடர்ந்தான். “பிரதர் நான் ஒன்னு கேட்கலாமா? தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!” என்றான் பீடிகையுடன்.

ம்கேளுஎன்றான் பாரிவேந்தன். “அன்னிக்கு நைட் என்னதான் நடந்துச்சு பிரதர்? ரெண்டு நாளா அவ எங்ககிட்ட பேசாம இருக்கும்போதே ஏதோ நடந்திருக்குனு நினைச்சேன். ஆனா, கல்யாணம் நடக்க இருந்த நேரம் அவ சின்சியரா வேலைய பார்க்கவும் எனக்கே அடிமனசுல கொஞ்சம் பயம் தான். ஆனா, திடீர்னு எனக்குக் கல்யாணம் ஆகிருச்சுனு தாலிய காட்றா. உண்மைலயே ரொம்ப வருத்தமா தான் இருந்துச்சு பிரதர், இதுவரைக்கும் அவ என்கிட்ட எந்த விசயத்தையும் மறைச்சது இல்ல. ஆனா, உங்க சம்பந்தப்பட்ட விசயங்கள தவிர…” என்றான் ஹரிஹரன்.

அன்னிக்கு அப்படி நடக்கும்னு நானும் எதிர்ப்பார்க்கல ஹரி, எல்லாம் அப்பாயியோட வேலை தான். அவங்க மட்டும் அப்படி அன்னிக்கு பண்ணாம இருந்திருந்தா இன்னிக்கு எனக்கும் யாழுவுக்கும் தான் கல்யாணம் ஆகி இருக்கும்என்றபோது ஹரிஹரனின் முகத்தில் அதிர்ச்சி தென்பட்டது.

உன் கேள்விக்கு நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி நீ என் கேள்விக்குப் பதில் சொல்லணும் ஹரிஎன்றவன், “யாழுவ நீ காதலிக்கிறியா ஹரி?” என்றான்.

அவனின் கேள்விக்குப் புன்னகைத்தவன், “ஏன் பிரதர், உங்களுக்கு இப்படியொரு சந்தேகம்?” என்றான் ஹரிஹரன்.

உனக்கும் மலருக்கும் உள்ள நட்ப பத்தி எனக்குத் தெரியும் ஹரி, அந்த இடத்துல நீ சொன்ன மாதிரி உன் தோழிக்காக யாழுவ கண்ணாலம் கட்டிக்கிறேன்னு சொன்னது மலர் மேல உனக்குள்ள பாசத்தையும் நட்பையும் காட்டுது தான். ஆனா, அதேநேரம் உன் கண்ணுல எங்க யாழுவ தொலைச்சுருவமோன்னு ஒரு பயம். அந்தப் பயத்தோட வெளிப்பாடா தான் உடனே கண்ணாலம் கட்டிக்கிறேன்னு உங்க வாய்ல இருந்து வந்துச்சுனு நான் நினைக்கிறேன்என்றான் பாரிவேந்தன்.

அவன் மனதை அப்படியே புட்டு புட்டு வைப்பவனிடம் இதற்கு மேலும் மறைக்க வேண்டாமென எண்ணியவன், “எனக்கு யாழுவ பிடிச்சு இருந்தது உண்மை தான் பிரதர், ஆனா அந்த இடத்துல என் விருப்பத்த விட என் தோழியோட வாழ்க்கை தான் பெருசா பட்டுச்சுஎன்றான் சிறு முறுவலுடன்.

உண்மைலயே மலர் புள்ள அதிர்ஷ்டக்காரி தான் இப்படியொரு நண்பன் கிடைக்க. எனக்கே கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு உங்கள பாக்கும்போதுஎனக் கள்ளம் கபடமற்று தன் மனதில் உள்ளதை அப்படியே அவன் கூற, “ஆண், பெண் நட்ப இன்னும் தப்பாவே பார்க்கிற ஆளுங்க மத்தில நீங்களும் எனக்கு அதிசயமா தான் தெரிறீங்க பிரதர், சரி இத பேசிட்டே நான் கேட்ட கேள்விய மறக்க வச்சுட்டீங்க. அன்னிக்கு என்ன நடந்துச்சுனு சொல்லுங்க பிரதர்என்றான் ஹரி.

இரண்டு நாட்களுக்கு முன்பு

அப்பாயி இப்பவே கோவிலுக்குப் போயாகணுமா?” எனக் கேட்டவனை முறைத்த ராமாயி பாட்டி, தான் ஊன்ற வைத்திருந்த குச்சியால் அவனை மெதுவாக அடித்தவர், “முன்னாடி போ டா, அப்படியே பாட்டனாட்டம். எத சொன்னாலும் அத பேசாம செய்றது கிடையாதுஎன இறந்து போன தன் கணவரையும் சேர்த்து வசை பாடினார்.

நடந்து செல்லும் தூரம் என்பதால் தெருவில் பேரனும் அப்பாயியும் காலார நடந்து சென்றனர். இங்கு மலர்விழிக்கோ மனம் ஏனோ பாரமாகவே இருக்க, சற்று தூரம் காலார நடந்து வருகின்றேன் எனக் கூறிவிட்டு சாலையில் நடந்தாள்.

மனம்போன போக்கில் அந்த மெல்லிய வெளிச்சத்தில் நடந்தவளுக்கு கோவிலுக்குச் சென்று வந்தால் தேவலாமெனத் தோன்ற, ஊரின் நடுவே இருந்த கோவிலுக்குச் சென்று அங்கிருந்த குளக்கரையில் அமர்ந்தாள்.

அப்பொழுது தான் இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தனர். இரவு நேரம் என்பதால் கோவிலில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்க, அம்மனை தரிசித்துவிட்டு பிரகாரத்தில் ஒரு தூணருகே அமர்ந்தார் ராமாயி.

பாரிவேந்தனும் தன் பாட்டிக்கு அருகில் அமர, “நான் கேட்கறதுக்கு உண்மைய மட்டும் சொல்லலணும்என அவர் நேரடியாக விசயத்திற்கு வந்திருந்தார்.

இதுக்குத் தான் என்னைய இங்க வரச் சொன்னியா ப்பாயி?” என அவன் முறைக்க, “கேட்டதுக்கு மட்டும் பதில சொல்லுஎன்றவர், “நேத்து நைட்டு சாமத்துல எந்திரிச்சு வண்டிய எடுத்துக்கிட்டு எங்க போன டா?” என்றார் ராமாயி.

ஒரு அவசர வேலையா அப்பாயி, அதான் இன்னிக்கு காலைலயே சொன்னேனே!” என்றான் அவன். “அது வூட்ல உள்ளவங்களுக்காகச் சொன்னது, என்ட்ட உண்மைய மட்டும் சொல்லு, அந்த மலரு புள்ளைய பார்க்கத் தான போன?” என்றார்.

இது உண்மைய சொல்லலைனா விடாது போலயே!’ என நினைத்தவன், “ஆமா அப்பாயி, நேத்து நைட்டு தான் முதல் நாள் வேலைல போய் மலரு சேர்ந்திருக்கிறா. நைட்டே ஒரு கர்ப்பிணி பொண்ணு வந்ததுல சின்ன சிக்கல் ஆகிருச்சு. அவ ரொம்பவே பயந்துட்டா அப்பாயி, அதான் நான் போக வேண்டியதா போயிருச்சுஎன்றான் பாரிவேந்தன்.

அங்க என்ன நடந்துச்சு?” என்றவரிடம் கிட்டத்தட்ட அங்கு நடந்த அனைத்தையும் ஒப்புவித்து இருந்தான் பாரிவேந்தன். அவள் தன்னை அணைத்தை மட்டும் தவிர்த்து.

அந்தப் பிள்ளைய விரும்புறியா டா பேராண்டி?” என்றவரின் கேள்வியில் அவன் சற்று தயங்க, “நீ யாழுகிட்ட நடந்துக்கிற முறைய பார்த்துத் தான் எனக்குச் சந்தேகமே வந்துச்சு, அந்தப் புள்ளைய விரும்பிட்டு இப்போ யாழு கூட நடக்க இருக்கிற கண்ணாலத்துக்கு ஏன்டா சம்மதம் சொன்ன?” என்றார் சற்று குரலை உயர்த்தி.

அது வந்து அப்பாயி…” என அவன் இழுக்க, “வந்து போயினு இழுக்காம என்ன விசயம்னு தேங்கா உடைக்கிற மாதிரி பட்டுனு சொல்லுஎன்றார் ராமாயி பாட்டி.

அவன் சுந்தரபாண்டியனின் வேண்டுகோளை நிறைவேற்றத் தான் அந்தத் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாய் கூற, ராமாயி பாட்டியின் முகமோ அதிர்ந்தது.

உன் மாமனுக்கு தான் புத்தி பேதலிச்சுப் போச்சுனா உன் புத்தி எங்க டா போச்சு? உன் மாமன் ஏற்கெனவே பண்ண தப்பயே இன்னும் சரி செய்ய முடியாம இங்கயும் அங்கயும் அல்லாடிட்டு இருக்கான், இதுல அவனோட உன்னையும் கூட்டு சேர்க்க பார்த்தானுக்கும்என மேவாயை சிலுப்ப,

அவரு பாவம் அப்பாயி, எல்லாம் யாழுவுக்காகத் தான் பண்ணாரு. ஆனா, அவ தான்…” என அவன் தலைகுனிய, “உன் மாமன நீ விட்டுக் கொடுப்பியாக்கும்!” என்றவர்,

யாழு புள்ளைய கட்டிக்கிட்ட வுடனே அந்த மலரு புள்ளைய மறந்துருவியாக்கும்!” என்றார் சந்தேகத்துடன். “அது உயிர் இருக்கிற வரைக்கும் நடக்காது அப்பாயிஎன்றவனின் குரலில் இருந்த உறுதி அவரை அசைத்தது.

அப்புறம் என்ன வெங்காயத்துக்கு டா அந்தப் புள்ளைய கட்றேனு உன் மாமனுக்கு சம்மதம் சொன்ன? கோவில்ல இருக்கோம்னு பாக்கிறேன், அப்படியே உன் பாட்டனாட்டமே எல்லாத்தையும் பண்ணுஎன மீண்டும் தன் இறந்த கணவரைச் சாடினார் ராமாயி.

அதுவந்து அப்பாயி…” என அவன் தயங்க, “உனக்கும் மலருக்கும் தான் கண்ணாலம், அத எப்படி எங்க நடத்தணும்னு நான் பார்த்துக்கிறேன்என்றவர், எழப் போக அவர் எழுந்து நிற்க உதவியவன், “இத இப்படியே விட்ருங்க அப்பாயி, இல்லனா நம்ம குடும்பத்துக்குள்ள தான் தேவையில்லாத மனகசப்புகள் உண்டாகும்என்றான் பாரிவேந்தன்.

அப்பொழுது தான் மலர்விழி குளக்கரையிலிருந்து எழுந்து பிரகாரத்திற்கு வந்திருக்க, அவளைக் கண்ட ராமாயி பாட்டி, ‘வேண்டுன தெய்வம் எதுக்க வந்து நின்ன கணக்கால்ல வந்து நிக்கறா, இப்ப நம்ம ஏதாவது பண்ணனுமேஎனத் திட்டம் தீட்டத் தொடங்கினார்.

வந்தவளோ, அவர்களைப் பார்த்துவிட்டு பாட்டியை நோக்கிச் சிறு புன்னகை சிந்தியவள், உள்ளே வீற்றிருந்த அம்மனிடம் கண்கள் மூடி வேண்ட ஆரம்பித்தார். ராமாயி பாட்டியோ அம்மனின் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து வந்து தன் பேரனிடம் நீட்ட, அவனோ அவரைக் கேள்வியாய் பார்த்தார்.

போ, போய் இத அவ கழுத்துல கட்டுஎன அவர் கண்ஜாடை செய்ய, “அப்பாயி!” எனத் தயங்கினான். “போ டா, நான் சொல்றேன்ல. இத விட்டா அப்புறம் நல்ல சந்தர்ப்பம் அமையாது, போஎன மெதுவாகக் கூறியவர், அவனை அவள் அருகே நிற்க வைத்தார்.

அவன் கரங்கள் நடுங்கினாலும் தன் அப்பாயி சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்தவளின் கழுத்தருகே தாலியை கொண்டு செல்லவும் அவள் கண் விழிக்கவும் சரியாக இருந்தது.

 

அவளின் பார்வை அவன் கையில் இருந்த தாலியில் படர்ந்து அதன்பின் அவன் முகம் நோக்கியது. அவளின் பார்வையில் அவன் தலைகுனிய, அவளது கரங்கள் பட்டென அவனது கன்னத்தில் பதிந்திருந்தது. 

 

“தாலி கட்டிட்டா நான் உங்களுக்கு சொந்தமாகிருவேன்னு நினைப்போ!” என கோபமாய் வினவ, பாரிவேந்தனோ தனது அப்பாயியை பார்த்தான். அவரோ எதுவும் பேசாமல் மலரை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

“இதுக்கு நீங்களும் உடந்தையா அம்மாச்சி?” என்றவளின் குரலில் தெரிந்த வலி ராமாயி பாட்டிக்கும் சற்று தயக்கத்தைக் கொடுத்தது. ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவள் கழுத்தில் தாலியை கட்ட சொல்லியது தான் தானே என அவர் மனமே அவரை எதிர்கேள்வி கேட்க அமைதியாக தலை குனிந்தார்.

 

“இப்போ நீங்க என் கழுத்துல தாலி கட்டிட்டா எல்லாமே சரியாகிருமா மாமு?” என்றவளுக்கு பதில் அளிக்க முடியாமல் தலைகுனிந்தவன், “எனக்கு வேற வழி தெரியல புள்ள” என முணுமுணுத்தான்.

 

அதற்குள் தன்னை சரிபடுத்திக் கொண்ட ராமாயி பாட்டி, “இங்க பாரு புள்ள, நிலைம நம்ம கைமீறி போய்ருச்சு. இவன்தான் அவன் மாமனுக்காகனு அவன் வாழ்க்கையவே ஏதோ தியாகம் பண்ணப் போறாப்ல பண்ணிட்டு இருந்தா படிச்ச புள்ள நீயும் இப்படி அமைதியா ஒதுங்கிப் போறது நல்லதா எழிலு? எனக்கு நீயும் பேத்தி தான். இப்போ இவனுக்கும் யாழுவுக்குமே கண்ணாலம் ஆச்சுனே வையேன், இவன மறந்துட்டு வேற ஒருத்தர கண்ணால கட்டிக்கிட்டு நீ சந்தோசம் இருந்துருவியா?” என்றார்.

 

“வேறு ஒருத்தருடன் கல்யாணமா!” என நினைக்கும்போதே அவள் மனம் அதிர்ந்தது. பாரிவேந்தனை தவிர வேறொருவனை அவள் நினைத்துக்கூட பார்க்க மனதைரியம் அற்று நின்றாள்.

 

“எது நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன், இப்போ இந்த கண்ணாலம் நடக்கிறது தான் உங்க ரெண்டு பேரோட வாழ்க்கைக்கும் நல்லது. சரினு சொல்லு தாயி” என்ற ராமாயி பாட்டியின் வார்த்தைகளுக்கு அவள் தலை தானாக சம்மதம் என ஆடியது.

 

“அப்பாயி!” என பாரிவேந்தன் மீண்டும் தயங்க, “அதான் அவளே சம்மதம் சொல்லிட்டாள்ள டா பேராண்டி, தாலிய கட்டு” என்க, தயக்கத்துடனே அவளது கண்களை சந்தித்தான்.

 

அவளது கண்களும் அவனது கண்களை சந்திக்க, அவளது சங்கு கழுத்தில் மஞ்சள் நாணில் மூன்று முடிச்சிட்டான்.

 

தன் நெஞ்சில் உரசிய மஞ்சள் நாணைப் பார்த்தவளின் கண்களில் நீர் திரள, அவள் ஒருவார்த்தை கூடப் பேசாமல் அங்கிருந்து வேகமாகச் செல்ல, அவள் பின்னே செல்ல முயன்றவனை தடுத்த பாட்டி, “இப்போ அவக்கிட்ட எதுவும் பேச வேண்டாம் டா பேராண்டி” என்றார்.

 

எல்லாம் உன்னால தான் அப்பாயி, அவ ஏற்கெனவே என்கிட்ட பேசி அஞ்சு வருஷமாச்சு, நேத்து தான் ஏதோ வாயத் திறந்து கொஞ்சம் பேசுனா. இப்போ அதுக்கும் உலை வச்சுட்டீங்கஎன அவன் கோபப்பட, “இந்த விசயத்த ஆறப் போட்டா தான் சரியாகும் டா பேராண்டி, நான் சொல்றேன்ல வா என்கூடஎன அவர் அவனைக் கோவிலை விட்டு வெளியே அழைத்துச் செல்ல,

அவனோ, “அவ என்னை அடிச்சுட்டா அப்பாயிஎனத் தன் கன்னத்தில் கைவைத்தவாறே அவரைப் பார்க்க, அவரோ நமட்டு சிரிப்பு சிரித்தார்.

அவ என்னை அடிக்கிறா, நீ வேடிக்கைப் பார்க்குறீல கெழவி, எல்லாம் உன்னால தான். இப்போ சிரிக்கிற!” என அவன் கோபப்பட, “உன் பொண்டாட்டி தான டா அடிச்சா, வாங்கிக்கோ தப்பில்ல. ஒரு அடியோட விட்டாளேனு சந்தோசப்பட்டுக்கோ!” என அவர் மலர்விழிக்கு ஆதரவாகப் பேச, அவன் அவரை முறைத்தான்.

பேரன அடிச்சவளுக்கு துணை போறியே அப்பாயி!” என அவன் பொறும, “அவ இடத்துல நான் இருந்தேனா இந்நேரம் விளக்கமாறு தான் பேசி இருக்கும் டா பேராண்டி, அவ ஒரு அடியோட விட்டாளேஎன்றார் பொக்கை வாய் சிரிப்போடு.

எல்லாம் தேவ தான்!” என்றாலும் மீண்டும் பயம் அவனைத் தொற்றிக் கொண்டது. வீடு திரும்பும் வழி நெடுக, தன் அப்பாயிடம் புலம்பிக் கொண்டுதான் வந்தான் பாரிவேந்தன்.

 

***

இதனைக் கூறி முடிக்க, “பலே கில்லாடி தான் ராமாயி பாட்டிஎனப் புன்னகைத்தான் ஹரிஹரன். “அடி வாங்க வச்சதும் இல்லாம அந்த கெழவி முகத்துல சிரிப்பப் பார்க்கணுமே! என் பாட்டன் எப்படி தான் இதோட பொழப்ப ஓட்டுனாரோ!” எனப் புலம்பினான் பாரிவேந்தன்.

இப்படியே இங்க புலம்பிக்கிட்டு இருந்து ஒரு பிரயோஜனமும் இல்ல பிரதர், டைம் வேற ஆச்சு. நம்மள தேடுவாங்க, வாங்க போகலாம். நைட் ஒரு ஆக்ஷன் படமே ஓடும். அதுக்காச்சும் நம்ம ரெண்டு பேர் உடம்புல தெம்பு வேணும்என ஹரிஹரன் எழ, பாரிவேந்தனும் எழுந்து நடக்கத் தொடங்கினான்.

இருவரும் அவரவர் துணைவியின் வீட்டிற்குச் செல்ல, மலர்விழியின் இல்லத்தில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

மலர்விழி எவ்வளவோ தடுத்தும் கேட்காத சிலம்புவும் இந்திராவும் அவளின் அறையைப் பூக்களால் அலங்கரிக்கத் தொடங்கி இருந்தனர்.

தோட்டத்திலிருந்து செவ்வந்தி, மல்லிகை, ரோஜா, முல்லையென அனைத்து மலர்களும் கூடையில் இடம்பெற்றிருக்க, மலர்விழியின் அறையை இருவரும் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு செந்தில் வர,

வாவ், உள்ள வரும்போதே பூ வாசம் கிறங்க வைக்குதேஎன்றவனின் பார்வை சிலம்புவின் மேல் மையல் கொள்ள, அவளோ வெட்கப் புன்னகையை சூடி நின்றாள்.

இதனைக் கண்ட இந்திரா, இடுப்பில் கைவைத்த வண்ணம் அவர்களை முறைத்துக் கொண்டிருந்தாள். “இங்க ஒரு முரட்டு சிங்கிள் இருக்காளேனு கொஞ்சம் மேனர்ஸ் வேணாம், இப்படி பச்சையா ரெண்டு பேரும் ரெமான்ஸ் பண்றீங்க!” என்றாள் மூச்சிறைக்க.

அப்படியே அங்கிட்டு ஓரமா போ மாஎன்றவாறே செந்தில் சிலம்புவை நெருங்க, அவளோ அவன் பார்வை தந்த வெம்மையில் தணிந்தவாறே பின்னோக்கி நகர ஆரம்பித்தாள்.

வேகமாக ஓடிச் சென்று இருவருக்குமிடையே நின்றாள் இந்திரா. “டேய், இன்னிக்கு உங்களுக்கு இல்லடா பர்ஸ்ட் நைட், மலருக்கு தான்என அவசர அவசரமாகக் கூற,

ஏன் டி இப்படி கரடி மாதிரி வந்து டிஸ்டர்ப் பண்ற!” என செந்தில் அலுத்துக் கொண்டான். இந்திரா பத்ரகாளியாக, “சரி, சரி மலை இறங்கு ஆத்தாஎன்றான் செந்தில்.

உங்க ரெண்டு பேரையும் தண்ணி இல்லாத காட்டுல டியூட்டிப் போட்டுப் பிரிச்சு விட்ருக்கணும் டா. இங்க கூட்டிட்டு வந்தது தப்பா போச்சு, ஒழுங்கா வெளிய போ மேன்என செந்திலிடம் வாசற்கதவை காட்ட, அவனோ முகத்தைத் தொங்க விட்டவாறே வெளியேறினான்.

கன்னிப் பொண்ணு மனசுல நஞ்ச விதைக்கப் பார்க்குதுங்க, யார்கிட்ட!” என இல்லாத காலரை இழுத்து விட்டவள், “போ டி, போ போய் வேலைய பாருஎன்றவள், கட்டிலை அலங்காரம் செய்ய ஆரம்பித்தாள் இந்திரா.

அவளின் கோபத்தைக் கண்டு புன்னகைத்த சிலம்பு மீண்டும் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். இருவரும் அறையை அலங்காரம் செய்து முடித்து, ஒருமுறை அதனை ரசித்தவர்கள் மலர்விழிக்கு அலங்காரம் செய்யத் தொடங்கினார்கள்.

அவர்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் இசைந்தாள் மலர்விழி. மறுத்து மறுத்துப் பார்த்துவிட்டு அவளின் வார்த்தையை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் தன்னை அலங்காரம் செய்யும் தன் தோழிகளைப் பார்த்தவள், பின் அவர்களின் மகிழ்விற்காக அமைதி காத்தாள். அப்பொழுது குணவதி அங்குவர, சிவப்பு வண்ண டிசைனர் புடவையில் மிதமான அலங்காரத்துடன் இருந்தவளுக்கு இரு தோள்களிலும் படர்ந்த மல்லிகை மேலும் அழகூட்டியது.

நெட்டி முறித்தவர், “என் கண்ணே பட்ரும் போல மலர், அவ்ளோ அழகா இருக்க!” எனத் திருஷ்டி சுத்திப் போட்டார் குணவதி. தன் அன்னைக்காக வலிய வந்த புன்னகையை இதழ்களில் சூடிக் கொண்டாள் மலர்விழி.

பாரி தம்பி இப்போ தான் சாப்ட்டு ரூமுக்கு போச்சு மா, நீயும் சாப்ட்டு நல்ல நேரத்துலயே போ மாஎன்றவர், தட்டில் உணவைக் கொண்டுவர, அதனை தோழிகளே அவளுக்கு ஊட்டியும் விட்டனர்.

அவர்கள் முன் தான் சந்தோசமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டவளின் முகம் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் மாறியது. அங்கு அவளின் கோபத்தை எவ்வாறு எதிர்கொள்வது என பாரி பதட்டத்துடன் அமர்ந்திருந்தான்.

யாழினியின் இல்லத்திலும் பாரியின் நிலை தான் ஹரிஹரனுக்கும். தன்னவளுக்காகக் காத்திருந்தவனை ஏமாற்றாமல் அறையினுள்ளே நுழைந்தாள் அவனின் பட்டர்பிளை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
7
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்