Loading

ஊடல்கூட காதலானது அவன்
காதலன்னானபோது..
அந்த ஊடல்கூட மோதலுக்கு பாதை வகுத்தது அவன் கணவன் என்றானபோது.
அப்படி இப்படி என்று எல்லா சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடிந்து யாழினி புக்ககம் வந்து இன்றோடு ஒருவாரம் ஆனது.இதோ மதியும் அலுவலகம் செல்ல தொடங்கியாற்று.கிருஷ்ணவேனி மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டாள் யாழினி தனிமையை உணரக்கூடாதென்று.அவளுடன் ஷாப்பிங் செல்வது சினிமா கூட்டிச்செல்வது என்று நாட்களை ஓட்டினாள்.யாழினிக்கு நாட்கள் றெக்கை கட்டிக்கொண்டு பறந்தன.அன்று வாரத்தின் இறுதி நாள் என்பதால் மதி வீட்டில் இருந்தான்.”யாழ்மா,எங்காவது வெளிய போலாமா,”ஓ போலாமே நான் ரெடி”, அதானே ,’என்னடா புருஷன் மாடு மாதிரி உழைக்கிறானே ரெண்டு நாள்தான அவன் ரெஸ்ட் எடுக்க முடியும் அப்படிங்கற நினைப்பு இருந்தாதானே”,” ம்ம் ,”சரி சரி, விடு விடு “சொல்லு, எங்க போலாம் பீச், “நேத்துதான் அத்த கூட போனே ,”சரி சினிமா,” முன்தாநேத்து போயாச்சு,” சரி கோயில்”,” நேத்து அங்க போய்டுதான் பீச்போனது,சுத்தம், மாமியாரும் மருமகளும் சேர்ந்து ஒரு இடம் பாக்கி வைக்கல போல.”ப்ச் ஆமாங்க ,நான் சும்மா இருந்தாலும் அத்த என்னை தனியா போர் அடிக்க விடாம பாத்துக்கராங்களே”.”சரி அப்ப நாம வேற ஒன்னு பண்ணலாம் “,”ம்ம் என்ன “,என்று அவள் உதட்டை சுழிக்க,”ஹனிமூனுக்கு ரிகர்சல் பார்போமா”?, என்று கண்ணடிக்க,”ஐய் ஆசை ,தோச ,என பழிப்பு காட்டியவள் ,”அட ஆமாங்க நாம இன்னும் அத பத்தி பேசவே இல்லயே “,என்றாள் .”எங்க போலாம்”? என்றாள் ,”நீயே சொல்லு ஆனா ஒன்னு இப்போதைக்கு என்னால மிஞ்சி போனா இரண்டு இல்ல மூணு நாள்தான் லீவு போட முடியும் ஏனா கல்யாணதுக்கு ஆல்ரெடி ஒன் மந்த் போட்டாச்சு”.”ப்ச் ,ம் சரி அப்ப ஏர்காடு இல்லனா ஏலகிரிக்கு போலாமா”.”ஓ போலாமே “,”மதி ,யாழுமா சாபிட வாங்க”, என்ற சத்தம் கேட்டதும் அத்தோடு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து கிளம்பினர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்