காட்சி ஒன்று:
முதலிரவில் மருண்டபடி பக்கத்தில் மரகதம்.”பயம் வேண்டாம் காலை எழுந்த கலைப்பு …எண்ணெய் குளியல் …ஹோமபுகை கண்ணெரிச்சல் அசதியா இருக்கும் படு பக்கத்துல நா படுத்துக்றேன் அம்மாவா நினச்சிக்க படு “.-வாசு
காலையில் வாசுவின் கை அவளை அணைத்தபடி இருந்தது அன்னையே தான் மனம் குளிர்ந்தது.
காட்சி இரண்டு :
கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தூக்க கலக்கத்துடன் மரகதம் “பால் புகட்டிட்டியா படு நா பாத்துக்கிறேன் “வாங்கிக்கொண்டான்.
“இந்தாங்க தல வலிக்குதுன்னு சொன்னீங்களே இந்த கஷாயத்தை குடிங்க சரியாகிடும் “குடித்து முடித்தவர்னிடமிருந்து டம்பிரை வாங்கி பக்கம் வைத்தவள் அவர் காலை அமுக்கிவிட. ஆழ்ந்த தூக்கம் தெரிய ஆனந்தம் நிம்மதி கண்டாள்.
காட்சி மூன்று :
“அப்பா அப்பா கதை சொல்லு “குழந்தை ஓடி வர வேலைகளை கலைப்பில் படுத்த அவனை அவன் கலைப்பே காட்டிக்குடுக்க
“குட்டி.. அம்மா ஒரு புது கதை சொல்றேன் அப்புறம் அப்பா சொல்வாறு நீ சமத்தா கேட்பியாம் “
“சரிம்மா”அவள் சொல்லி முடிக்கவும் குழந்தையும் அவரும் தூங்கி இருக்க அவளும் திருப்தியாய் தூங்கினாள்
காட்சி நான்கு:
“என்ன மரகதம் உன் மருமக வந்தாச்சா ?வயசானாலும் பிள்ளைக்கும் மட்டும் சமைக்காம மருமகளுக்கும் செஞ்சி போடனும்னும்னு விதி இருக்கு உனக்கு?
அதனால் என்னங்க நமக்கு இருக்கிறது ஒரே மகன் அவனுக்கு செஞ்சா என்ன அவளை நம்பி வந்தவளுக்கு செஞ்சா என்ன ?இரண்டுமே நம்ப குழந்தங்க இதுல விதி என்ன? சதி என்ன?
அதுவும் சரிதான் என்றவர் கலைத்து படுத்தவளின் முதுகை பதமாய் அமுக்கி விட “நானே யாரேனும் பிடிச்சி விடமாட்டாங்களான்னு இருந்தேன் “என்று மனதில் தோன்றி அவரைப்பார்த்து மிருதுவாய் புன்னகைச்செய்தாள் நன்றி சொல்லும் விதமாய்.
காட்சி நான்கு :
கல்யாணம் ஆன புதிதில் தொடங்கிய பழக்கம் இன்றும் இவள் மீது கை போட்டுக்கொண்டுதான் தூங்குவார்.
அன்றும் அப்படித்தான் அவள் திரும்பி படுக்க நினைக்கையில் அவர் கை தடுக்க எடுத்து வைத்து திரும்ப நினைத்த வினாடி கையின் ஜில்லிப்பு உயிரை உறைக்க மீண்டும் தொட்டு பார்த்தாள்.
மனம் பதற ஒரு முறை பதற்றம் தள்ளி வைத்து எழுத்து அமர்ந்து அவர் மார்பில் தலைவைத்து பார்க்க நிசப்தம் .நாசித்துவாரத்தில் கைவைக்க அங்கும் அமைதி .ஆண்டவா அழைத்துக்கொண்டாயா ?என்ன அவசரம்.
நிஜம் உறைக்க சில நிமிடம் மறுகணமே “திலீபாஆஆஆஆஆஆஆ”என்று கத்தியது மட்டும் தெரியும் .
காட்சி ஐந்து :
“அம்மா அம்மா “அழைத்படி வந்தான் திலீபன்
கட்டிலில் அமர்ந்திருந்தவளருகில் சென்றான்
“இங்க இருக்கியா எல்லாம் சாமானும்னு வண்டியில் ஏத்தியாச்சு
இந்த கட்டிலுக்கு மட்டும் இன்னும் ஆள் வரல வந்ததும் கொடுத்திட்டு கிளம்பலாம் “
“வேண்டாம்டா “
“ஏன்மா நீதானே இடத்த அடைக்கும் யாருக்கும் குடுத்திடலாம்னு சொன்ன அதுக்குள்ள என்ன?”
இதற்குள் மருமகள் மஞ்சு அங்கு வர இவர்கள் உரையாடல் காதில் விழுந்தது.
“என்னாசுங்க ?”
“நீயே சொல்லு இந்த அம்மா தானே இந்த கட்டில் இடம் அடைக்க யாருக்கும் குடுத்திடலாம்னு இப்ப வேண்டாங்கறாங்க”
மஞ்சு அத்தையிடம் திரும்பி “என்னம்மா ?”என்றாள்.
மஞ்சுவை ஒரு பார்வை பார்த்தவள் மீண்டும் பையனிடம் திரும்பி “உங்கப்பாவையும் நம்மளோடு கூட்டிக்கலாம்டா திலீபா”
புரியாது பார்த்த திலீபன் அம்மாவிடம் ஏதோ சொல்ல வாய் எடுக்க அவன் கையை அழுத்தினாள் மஞ்சு “ஆகட்டும் அத்த”
“என்ன மஞ்சு நீயும்?”
“சும்மா இருங்க இப்ப என்ன இந்த கட்டில பிரிக்கலாம் தானே ஆளுங்க இன்னும் கிளம்பல
அப்புறம் கட்டில் எடுக்கிறவனுக்கும் நானே போன் போட்டு வர வேண்டாம்னு சொல்லிடறேன் நீங்க வாங்க “என்றபடி அவன் கைபிடித்து கூட்டிச்சென்றாள்.