Loading

 

இன்று தான் வீரா புது வீடு செல்லும் நாள். கிட்டத்தட்ட எல்லாமே சரிசெய்து முடித்திருக்க, ஜகதீஷ்வரியும் ஜாக்ஷியும் வந்து விட்டனர்.

“உங்க ஆஃபிஸ் ஃப்ரண்ட்ஸ எல்லாம் கூப்பிடலயா?” என்று ஜாக்ஷி கேட்கz “அவங்கள ஈவ்னிங் தான் வர சொல்லி இருக்கேன். நீங்க இருக்கும் போது அவங்க வந்தா, மொத்த ப்ளானும் சொதப்பிடுமே?” என்றான்.

“ம்ம்.. ஒத்துக்க வேண்டிய விசயம் தான்”

வீட்டை சுற்றியும் பார்த்தாள். இரண்டு படுக்கை அறை கொண்ட விசாலமான ஃப்ளாட். ஒரு குடும்பம் தாராளமாக தங்கலாம். இதற்கு முன்பு பார்த்தது இல்லை என்பதால், இப்போது தான் சுற்றியும் பார்த்தாள்.

“நைஸ்..”

அவளது பாராட்டுக்கு ஒரு புன்னகையை பதிலாக கொடுத்தான்.

இருவரின் பாட்டியும் பேச அமர்ந்து விட, ஜாக்ஷியும் வேலை விசயத்தை பற்றி கேட்க ஆரம்பித்தாள்.

“மூணு பேரு சஸ்பெக்ட் லிஸ்ட்ல இருக்காங்க”

“யாரு?”

“கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்லுறேனே?”

“எப்படி?”

“அவங்க முன்னாடியே தான். அண்ட்.. நிறைய பணமும் திருடியிருக்காங்க”

“ரியலி?”

“ம்ம். நான் அதிகாரத்த யூஸ் பண்ணிக்கிறாங்கனு தான் நினைச்சேன். பட் நினைச்சே பார்க்க முடியாத அமௌண்ட்லாம் தூக்கியிருக்காங்க. உங்க.. பழைய சி.இ.ஓ அதெல்லாம் பார்க்கவே இல்ல போல. இல்ல இவங்க எல்லாரும் அவருக்கு வேண்டபட்டவங்களானு தெரியல. நிறைய தப்பிருக்கு”

“அதான் நான் பதவில உட்கார்ரது பலருக்கு பிடிக்கல. உட்கார்ந்துட்டா அவங்களால திருடிட்டே இருக்க முடியாதுல?’

“ம்ம்”

“எவிடன்ஸ எடுத்துட்டு வாங்க பார்த்துக்கலாம். எதாவது ஹெல்ப் வேணும்னா, என் அசிஸ்டன்ட் கிட்ட கேளுங்க. பண்ணுவா”

“பார்த்துக்கலாம்”

பேசி முடித்ததும் ஜாக்ஷியும் பாட்டியும் கிளம்பி விட, வீட்டில் இருந்த மற்ற வேலைகளை பார்த்தனர் மற்ற இருவரும்.

“தாமரை ஃபோன் பண்ணா எடுக்க மாட்டேங்குறனு புலம்புறா வீரா”

“எனக்கு அவங்க கிட்ட பேச பிடிக்கல பாட்டி. அவங்களாச்சு அவங்க குடும்பமாச்சு. என்னை நடுவுல இழுக்காம இருந்தா போதாதா?”

“பெத்தவ இல்லையா?”

“அவங்கள பத்தி பேசாதீங்க. நீங்க போய் தூங்குங்க. சாயந்தரம் எல்லாரும் வந்தா கசகசனு ஆகிடும். அது வரை தூங்கி எந்திரிங்க” என்று அனுப்பி விட்டான்.

மாலை நேரம் அலுவலகத்தில் இருந்த நண்பர்கள் எல்லோரும் வந்தனர். அவர்களை பொறுத்தவரை, இந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஆளுக்கொரு பரிசோடு வந்து சேர்ந்தனர்.

அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து அரட்டை அடித்து முடிக்கும் போது, இரவு வந்திருந்தது. எல்லோரும் கிளம்பியதும், வீரா சுத்தம் செய்து விட்டு மெத்தையில் விழுந்தான்.

காலையில், ஜாக்ஷி வீட்டுக்குள் நடந்து அனைத்தையும் பார்த்தது, மனக்கண்ணில் தோன்றியது. அவள் தான் வீட்டை பார்த்தாள். ஆனால் அவன் அவளை தான் பார்த்தான்.

அவளுக்கு பிடித்திருக்கிறதா? இல்லையா என்பது மிகவும் முக்கியம் போல!

அடுத்ததாக வேலையைப் பற்றிய நினைவு வந்தது.

‘நீங்க கொடுத்த மிசனை சரியா செய்வேன் மேடம்’ என்று நினைத்தவன், என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே உறங்கி இருந்தான்.

*.*.*.*.*.*.

வீரா வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் முடிந்திருந்தது.

அன்று…

காலையில், வீரா ஜாக்ஷியை அழைத்தான்.

“எஸ் சொல்லுங்க”

“மேடம். நாளைக்கு மீட்டிங் அரேன்ஜ் பண்ண முடியுமா?”

“யூ மீன்?”

“எவிடன்ஸ் எடுத்துட்டேன். நாளைக்கு முடிச்சுடலாம்”

“எத்தனை பேரு?”

“ரெண்டு பெரிய கை. ரெண்டு அல்லக்கை. எல்லாரையும் தூக்குங்க. கேஸும் ஃபைல் பண்ண வேண்டி வரும்”

“பண்ணிடலாம் வீரா. நாளைக்கு…”

“லன்ச் க்கு அப்புறம் பண்ணலாம். மார்னிங் பிராஜெக்ட் சப்மிஷன் இருக்கு”

“வாட்? அத வச்சுட்டா இந்த வேலைய பார்த்தீங்க? ஒரு நாள் விட்டு..”

“நோ நோ. நாளைக்கே முடிக்கலாம். நாளைக்கே ரெண்டு டாஸ்க்கும் முடிக்கனும்னு இருக்கேன்”

“ஏன்?”

“எனக்கு ஒரு வாரம் லீவ் வேணும்”

“ஓஹ்.. ஓகே நாளைக்கே பார்த்துக்கலாம். பிராஜெக்ட் முடிஞ்சதா?”

“நீங்க பார்க்கனுமா?”

“எஸ்”

“ஆர் அன்ட் டி க்கு வாங்க. அங்க தான் இருக்கேன்”

உடனே எழுந்து கிளம்பி விட்டாள். இந்த ஆறுமாதமும் எப்படிப்போனது என்று அவளுக்குத் தெரியவில்லை. புது பதவி, பல பிரச்சனைகள் என்று நேரம் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது. வீராவும் அவனுக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்து கொண்டிருந்தான்.

முதலில் அடிக்கடி பாட்டி வீட்டில் சந்தித்தனர். வீரா வீடு மாற்றிய பிறகு, சந்திப்பது இல்லை. எப்போதாவது எதாவது வேண்டும் என்றாலும், அவளது பிஏவை தான் அழைப்பான்.

அவள் வந்து சொன்னால் தான் தெரியும், அவன் உதவி கேட்டிருப்பது. இப்போது வேலையை முடித்து விட்டான். நாளை வரை காத்திருக்க அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவசரப்படவும் கூடாது.

வீராவை சந்தித்து பிராஜெக்ட்டை பற்றி பேசி முடித்து விட்டு வந்து விட்டாள். வேறு எதுவும் கேட்கவில்லை.

தன் அறையில் இருந்து சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் கொடுத்த வேலையை வீரா சரியாக முடித்து விட்டால், பாட்டியிடம் சொன்னது போல் அவனை உயர்பதவிக்கு மாற்ற வேண்டும். அதற்கான வேலைகளை இனி பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

அடுத்த நாள் விடிந்தது. காலையிலேயே வீராவை தன் வீட்டுக்கு வர சொல்லி விட்டாள். ஒன்றாகவே அலுவலகம் செல்ல வேண்டும் என்று.

வீரா வீட்டுக்குள் வர, அங்கிருந்து காவலதிகாரி ஒருவர் வெளியேறினார்.

‘போலீஸா?’ என்று ஆச்சரியப்பட்டவனை, ஜாக்ஷி பார்த்து விட்டாள்.

“உள்ள உட்காருங்க வீரா. நான் அனுப்பிட்டு வர்ரேன்” என்றவள் காவலதிகாரியை அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்தாள்.

“சாப்பிடுறீங்களா?” என்று கேட்டு சுபத்ரா நிற்க, “வேணாம்மா” என்றான்.

“சாப்பிட்டீங்களா வீரா?”

“இல்ல மேடம். அதுக்கு நேரமில்லை. கிளம்பனும்”

“இன்னும் டைம் இருக்கே?”

“இங்க வந்துட்டு ஆஃபிஸ் போகனும்னு சாப்பிடல”

“ஓ.. அப்ப இங்க சாப்பிடலாம் வாங்க” என்றவள், அவனை அமர சொன்னாள்.

சுபத்ரா உணவை பரிமாற, ஜாக்ஷி பிராஜெக்ட் பற்றி பேச ஆரம்பித்தாள். வீரா பதில் சொன்னான்.

அதை பற்றி பேசியபடி, ஜாக்ஷியின் காரிலேயே அலுவலகம் சென்று சேர்ந்தனர்.

“மீட்டிங் டைம் நானும் இருப்பேன்.”

வீரா தலையாட்டி விட்டு, உள்ளே சென்று வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

மீட்டிங் நடந்தது. கிளயண்ட்டுக்கு எல்லாம் பிடித்தும் விட்டது. ஒரு மணிநேரம் மீட்டிங் வெற்றிகரமாக முடிந்து விட, வந்தவர்கள் கைகுலுக்கி விடை பெற்றனர்.

அவர்களை அனுப்பியதும், ஜாக்ஷி மற்ற வேலைகளை பார்க்கச் சென்று விட்டாள்.

மதிய உணவு முடிந்தது. வீரா கேட்டது போல், அனைவரையும் அழைத்து அமர வைத்தாள் ஜாக்ஷி.

வீரா என்ன செய்வான் என்று தெரிந்ததால் ஜாக்ஷி அமைதியாக இருக்க, வீரா பேசினான். ஆதாரங்களை படம் போட்டுக் காட்ட, அங்கிருந்த பலருக்கு வியர்த்து விட்டது. வீராவை பேச விட்டு ஜாக்ஷி வேடிக்கை பார்ப்பது வேறு, எல்லோரையும் அதிர வைத்தது.

அலுவலகத்தில், ஆறு மாதமாக எதோ ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருந்தவன், இன்று பெரிய மனிதர்களின் முகத்தை உரித்து காட்டினான்.

முதலில் மறுத்தவர்கள் கூட, ஆதாரங்களை பார்த்து வாயடைத்துப் போனார்கள். சிற்றம்பலம் இருந்த போது செய்த அனைத்தையும், தோண்டி எடுத்திருந்தான்.

சாதாரண ஆள் என்று கண்டு கொள்ளாமல் விட்டது அவர்களது தவறு.

“உங்க கிட்ட இருந்து இதுக்கான பதில எதிர்பார்க்குறேன்” என்று ஜாக்ஷி கேட்க, ஆளாளுக்கு சமாளித்து வைத்தனர். மூன்று மணி நேர பேச்சு வார்த்தை முடிவில், எல்லோரும் பதவியை இழந்தனர்.

வீரா சொன்ன நான்கு பேரின் மீதும், வழக்கு தொடுக்கப்படும் என்று ஜாக்ஷி கூற, எடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாக சரணடைந்தனர்.

சுமூகமாக அவள் பேசி முடிக்கும் போது, வீரா அவளை அதிசயமாக பார்த்திருந்தான். யாருக்குமே பாதகமில்லாமல் பேசி முடித்தாள். கோபத்தில் கத்தவில்லை. அவசரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. விட்டு பிடித்துக் கொண்டிருந்தாள்.

‘இந்த பதவிக்கு இவ்வளவு பொறுமை இல்லனா எப்படி?’ என்று நினைத்துக் கொண்டான்.

மீட்டிங் முடிந்து, விசயம் வேலை செய்பவர்களுக்கு இடையே பரவியது. அதைப்பற்றி அக்கறை படாமல், வீரா வீட்டுக்கு கிளம்பி விட்டான்.

தொழில் உலகத்தில், இவர்களது நிறுவனத்தை பற்றி அறிந்த அத்தனை பேருக்கும் செய்தி பரவியது.

“அந்த பொண்ணா? அது அமைதியான பொண்ணாச்சே? அதுவா இதெல்லாம் பண்ணுச்சு?”

“அப்பா விட்டத மக பிடிச்சுட்டா.. திருட்டு பசங்க.. கோர்ட் கேஸ்னு அலையட்டும்”

“இத எதிர் பார்க்கல. வெல்டன்”

“இருந்தாலும் அவங்க பெரிய‌ ஆளுங்க. விட்டு கொடுத்து போயிருக்கலாம்”

இப்படி ஏகப்பட்ட கருத்துக்கள். எதுவும் ஜாக்ஷியிடம் வந்து சேரவில்லை. அவள் யாரிடமும் பேசவில்லை. வேலை முடிந்து வீரா வீடு திரும்புவதை, கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மேம்”

திரும்பிப் பார்த்தாள்.

“சைன் பண்ணிட்டா மெயில் பண்ணிடுவேன்”

வாங்கி கையெழுத்திட்டாள்.

வீரா நாளையிலிருந்து புது பதவிக்கு வருவதற்கான கடிதம் அது.

சட்டென ஒன்று தோன்ற, “நான் கிளம்புறேன். வேற வேலை இருந்தா எனக்கு இன்ஃபார்ம் பண்ணு” என்றவள், கைபேசியை எடுத்து வீராவை அழைத்தபடி வெளியேறினாள்.

“சொல்லுங்க மேடம்”

“எங்க இருக்கீங்க?”

“பஸ் ஏற வெயிட்டிங்”

“நான் பிக் அப் பண்ண வர்ரேன். வெயிட்”

பேசிக் கொண்டே லிஃப்டில் நுழைந்து, அவசரமாக பட்டனை அழுத்தினாள்.

தரை தளத்திற்கு வந்ததும், வேகமாக காரை எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றாள். கதவை திறந்து உடனே ஏறிக் கொண்டான்.

“ஒன் வீக் லீவ் போடுறதா சொன்னீங்களே? எப்ப இருந்து வேணும்?”

“நாளையில இருந்து”

“அப்ப உங்க பிரமோஷன்?”

“பிரமோஷனா?”

“ஆமா. உங்கள செக் பண்ணிட்டு, எனக்கு ஓகேனா பாட்டி ஆசைப்படுற மாதிரி பிரமோட் பண்ணுறேன்னு சொல்லிருந்தேனே. மறந்துடுச்சா?”

“ஓ அதுவா? எனக்கு இந்த வேலையே ஓகேவா தான் இருக்கு”

“பட் இப்ப நடந்தது எல்லா ஸ்டாஃப்க்கும் தெரிஞ்சுருக்கும். இதுக்கு மேல நீங்க இதே பொஷிஷன்ல இருக்கத விட, ஹையர்ல இருந்தா மேனேஜ் பண்ணுறது ஈசி”

“பார்க்கலாம். ஒரு வாரம் கழிச்சு பார்த்துக்கிறேன்”

‘ஒரு வாரம் எங்க போற?’ என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் கேட்கவில்லை.

“எங்க போறோம்?”

“பாட்டிய பார்க்க. வேற வேலை இல்லையே?”

“இல்ல. போகலாம்”

“அவங்க கிட்ட என்ன நடந்ததுனு எக்ஸ்ப்ளைன் பண்ணனும். ரெண்டு பேருமா செய்வோம்” என்றவள், ஜகதீஸ்வரியை தேடிச் சென்றாள்.

பாட்டி வீட்டில் இருக்க, இருவரும் ஒன்றாக உள்ளே வந்தனர். ஜகதீஸ்வரி அவர்களை பார்த்து புன்னகைத்தார்.

“என்ன பண்ணி வச்சீங்க? ஃபோன் மேல ஃபோன் வருது”

“உங்களுக்கு தான் ஏற்கனவே தெரியும்ல பாட்டி?” என்று வீரா கேட்க, “நீ பாதி தான சொன்ன? இப்ப முழுசா சொல்லு” என்று கேட்டு முடித்தார்.

“நான் சொன்னேன்ல? வீரா கெட்டி காரன்னு?”

“அதான் பிரமோஷன கொடுத்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா இவரு தான் ஒரு வாரம் லீவ் கேட்டார்”

பாட்டி எதற்கென கேட்பார் என்பதற்காக தான், இதை சொன்னாள். அவளை ஏமாற்றாமல் அவரும் கேட்டார்.

“லீவா?”

“ஊருக்கு போறேன். அப்பத்தா வர சொன்னாங்க.”

“ஓஹ்.. சரி சரி. அவள அடிக்கடி இங்க வர சொல்லு. பால் காய்ச்சும் போது வந்தவ.. திரும்பி வரவே இல்ல”

“ம்ம் சொல்லுறேன்”

‘ஓஹோ.. பாட்டிய பார்க்க போறானா? ஆனா அதுக்கு ஒரு வாரமா?’ என்று யோசித்து விட்டு, கேட்காமல் விட்டு விட்டாள் ஜாக்ஷி.

அலுவலகம் பற்றிய மற்ற விவரங்களை பேசி விட்டு, அன்று மூவரும் ஒன்றாகவே இரவு உணவை முடித்தனர்.

“போயிட்டு வர்ரோம் பாட்டி” என்று இருவரும் விடைபெற்று ஜாக்ஷியின் காரில் ஏற, ஜகதீஸ்வரி பெருமூச்சு விட்டார்.

‘நினைச்சது நடந்தா நல்லா இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டு, தூங்கச் சென்றார்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
25
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. நிசமாவே வீரா பாட்டியை பார்க்கத்தான் போறானோ..?
      எனக்கென்னவோ, அவனோட ஹெல்த் விஷயமா டாக்டரை பார்த்து டவுட் க்ளியர் பண்ண போறானோன்னு தோணுது.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797