அவசர அவசரமாக எல்லாத்தையும் சமைத்தவர் அணைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை மேற் பார்வை செய்து விட்டு
ஹாலுக்கு வந்தவர் அங்கு இரு ஜீவன் இருப்பதையே கண்டு கொள்ளாமல் வாசலுக்கும் வீட்டுக்கும் நடைப்பயிற்சி செய்துக்கொண்டு இருந்தார்.
இது வழக்கமாக நடப்பதுதான் என அஞ்சலி போனில் மூழ்கி விட
கனகராஜ் மட்டும் தன் மனைவியை நோட்டம் விட்டு கொண்டு இருந்தார்.
தனது கணவன் தன்னையே பார்ப்பதை கண்டு நீங்க ஏர்போர்ட் போயிருக்கலாம் இல்லை
இப்ப பாருங்க அவன் வந்த பிளைட் வந்து தா இல்லையான்னு தெரியாம எனக்கு ஒரே படப்படப்பா இருக்கு
நான் என்ன பன்னட்டும் உன் அருமை புத்திரன் தான் யாரும் என்னை ரிசிவ் பன்ன வர வேண்டாம் நானே வந்துடுறேனு சொன்னா
அதான் போல நாங்க போலனா என்னா நீங்க போக வேண்டியது தான சொன்ன மகளை முறைத்தவர்
மீண்டும் நடைப்பயிற்சி செய்ய தொடங்கி விட்டார்.
அவர் நடைப்பயிற்சி செய்யட்டும் அதற்குள் நாம் அவர்கள் குடும்பத்தை பற்றி பார்த்து விட்டு வருவோம்.
கனகராஜ்- சாவித்திரி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் ஜீவா என்கிற ஜீவானந்தம் இரண்டாவது அஞ்சலி,
கனகராஜ் ராணுவத்தில் வேலை பார்த்தவர் உடல் நிலை சரியில்லாமல் போக அவர் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.
சொந்தமாக சாவித்திரி டெக்ஸ்டைல்ஸ் என்ற துணி கடை நடத்தி வருகிறார்.
சாவித்திரி பொறுப்பான குடும்பத்தலைவி
அஞ்சலி பிஎஸ்சி பிசிக்ஸ் இரண்டாமாண்டு படிக்கிறாள்.
இவர்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருப்பது ஜீவாவின் வருகைக்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக எம்பிஏ படிக்க அமெரிக்கா சென்றவன்
அங்கேயே மூன்று வருடம் வேலைப்பார்த்து விட்டு இப்போது தான் இந்தியா வருகிறான் அதுவும் தன் தாயின் அன்பு வேண்டுகோளுக்காக.
நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த சாவித்திரி கார் சத்தம் கேட்டதும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த ஆர்த்தி தட்டை எடுத்து கொண்டு வாசலுக்கு சென்றார்
அவருக்கு பின்னால் அப்பா மகளும் சென்றனர்.
.….……………………………………………………..
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலாவினை எழுப்பி அவளது தோழி தாமரை கூறியதை கேட்டவள் அடித்து பிடித்து எழுந்து
அவளோடு பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு அவளையும் இழத்துக் கொண்டு வேகவேகமாக ஓடினாள்.
போகும் வழி எங்கும் நிலா புலம்பிக்கொண்டே வந்தாள், அய்யோ இந்த மாமா இன்னைக்கு என்ன பஞ்சாயத்தை இழுத்துவிட்டாரோ தெரியலையே
பாவம் பெரிய மாமா ஊருல எம்புட்டு பெரிய மனுஷன் அவர கண்ட ஊரே மரியாதை தரும் ஆனா இந்த மாமா ஒவ்வொரு தரமும் இப்படி பஞ்சாயத்துல தலைகுனிஞ்சு நிக்குற மாதிரி பன்னுது
ஏந்தேன் இப்படி பன்னுதோ தெரியல என்று புலம்பிக் கொண்டே வந்தவள் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.
தாமரைக்கு தான் காதே புளித்து விட்டது, இருக்காதா பின்ன
ஒவ்வொரு முறையும் அவள் மாமா எதையாவது செய்து விட்டு பஞ்சாயத்தில் தெண்டம் கட்டுறான்
ஒவ்வொரு முறையும் அவள் இப்படி தான் புலம்பறா அத கேட்டு கேட்டு இவளுக்கு காது வலி வந்தது தான் மிச்சம்
அவள் மாமா திருந்துற வழியைத் தான் கானும் என்று நினைத்தவள் ஒரு பெருமூச்சு விட்டாள்.
தன் தோழியின் அருகில் சென்று நின்றவள் பஞ்சாயத்தை கவனிக்க ஆரம்பித்தால்.