நினைவெல்லாம் நீயே 10
மறுநாள் காலை சரியாக பத்து மணிக்கு தன்னுடைய ஆஃபீஸ்க்கு மனைவியோடு வந்த தன்ராஜ், தனக்கு முன்பே வந்து காத்திருந்த பிரபுராமை பார்த்து சிரித்தவர், பிரபுவையும் தன்னோடு அவருடைய அறைக்கு அழைத்து சென்று உட்கார்ந்தனர்.
“சார்..மேடம்” என தயங்கிய பிரபுவை பார்த்த தன்ராஜ் “என்ன இருந்தாலும் நீயும் நானும் ஆம்பிள யா..நாளைக்கு நம்ம பேர்ல அவங்க ஏதாவது புகார் குடுத்திட கூடாதுல்ல..அதான்..நம்ம சேப்ட்டிக்காக மேடம் அவளே கிளம்பி வந்திட்டா”
சில நிமிடங்களில் ரூபாவும், அவளுடைய அம்மா விலாசினியும் வந்து சேர்ந்தனர்.
அவர்களை வரவேற்ற தன்ராஜ் ” வாங்க மா..என்ன மா தயாரா இருக்கீங்களா?”
“பத்திரத்தை படிச்சு பார்த்துட்டீங்கனா மேற்கொண்டு நாம கையெழுத்து போட்டு அக்ரீமெண்ட் ரத்து பண்ணிக்கலாம்”..
ஏதோ பேச வந்த ரூபாவை பார்வையால் அடக்கிய விலாசினி “தோ..சார்..நீங்கலாம் இன்டர்ஸ்ட்ரில பெரிய ஆளுங்க சார்..பாரம்பரியமான கம்பெனி…”
“நமக்குள்ள எதுவும் பின்னால பிரச்சினை வரக்கூடாது இல்லையா சார்..எனக்கும் லீகல் விஷயங்கள் தெரியாது சார்..”
“பாப்பாக்கு எதுவுமே தெரியாது சார்..ரொம்ப அப்பாவி..”
“என்ன பண்றது..நான் அவளை உலகம் தெரியாம என் கைக்குள்ளயே வெச்சு வளத்திட்டேன்..”
“நான் எங்க போய் நடிக்க சொல்றேனோ..அங்க போய் நடிச்சு குடுத்துட்டு வந்துடும்…அவ்ளோ தான் தெரியும்..”
“அதான் நேத்து எங்க வக்கீல் கிட்ட பேச்சுவாக்குல சொல்லிட்டு இருந்தேனா..அவரே சார் ஆஃபீஸ் தானே நானே பத்துமணிக்கு அங்க வந்துடறேன்னு சொன்னார்..”
“உங்க சைட்க்கு மேடம் இருக்காங்க..போறாததுக்கு டைரக்டரும் வக்கீல் வேற…”
“நாங்க எல்லாம் உலகம் தெரியாத சாதாரண ஆட்கள் இல்லையா சார்..தோ..வந்துடுவார் சார்..”
வார்த்தைக்கு வார்த்தை விலாசினி போலி பணிவாக பேசியதை கேட்டு கூர்மையாக தன் மனைவியையும் பிரபுராமையும் பார்த்தார்.
பிரபுராமுக்கோ ஐயோ இந்தம்மா இவ்ளோ பெரிய கிரிமினிலா..நல்ல வேளை நாம தப்பிச்சோம்..என ஆஸ்வாசமாக பெரிய மூச்சு விட்டவர்..சாரை கூட கேட்காம அவரோட ஆஃபீஸ்க்கு இந்தம்மா பாட்டுக்கு தன்னோட ஆளை கூப்பிடலாமா.. என கோவமாக தோன்றியது..
“நீங்க உங்க பக்கம் சேப்ட்டிக்காக உங்க வக்கீலை கூப்பிடறீங்க..நியாயமான விஷயம் தான் மா..”
“ஆனா அவரை எங்க ஆஃபீஸ்க்கு வர சொல்றத்துக்கு முன்னால எங்க கிட்ட கேட்டிருக்கணும்ல்ல.”
“எங்க நம்பர் உங்க கிட்ட இருக்குல்ல..அட்லீஸ்ட் காலைல கிளம்பறத்துக்கு முன்னாடியாவது ஒரு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாமே..”
“இது ப்ரொடைக்ஷன் கம்பெனிஇல்லையா..சினிமாக்காரங்க நடமாட்டம் அதிகம் இருக்கற இடம்..”
“இப்ப நீங்க வந்திருக்கீங்க..உங்கள மாதிரி பல ஆட்கள் வந்து போற இடம் பாருங்க..”
“அதனால ப்ரைவசி இஷ்ஷுக்காக நாங்க பொதுவா வெளி ஆட்களை எங்க ஆஃபீஸ்க்குள்ள அனுமதிக்கறதில்லயே.. இது உங்களுக்கு தெரியாதா..”
தன்ராஜ் மனைவியின் கூர்மையான சொல் அம்பினால் அதிர்ந்த விலாசினிக்கு திருதிரு என விழித்தபடி என்ன பேசுவது என்றே தெரியாது போனது.
“என்னங்க..பேச்சே வரலயா…உங்களுக்கு இந்த பழக்கம் மறந்து போனாலும் உங்க வக்கீல் ஏற்கனவே எங்க கிட்ட இங்க வர பேசி அனுமதி வாங்கிட்டார்..”
சரியான பொம்பள.. நாமளே பத்து பேரோட சண்டை போடுவோம்..இந்தம்மா நம்மளையே தூக்கி சாப்பிட்டுடும் போலிருக்கே என மனதுக்குள் அவரை திட்டியபடி வெளியில் சிரித்தார்.
இவர்களின் பேச்சு நடந்து முடிவதற்குள் வேகமாக வந்த விலாசினியின் வக்கீல் தாமதமாக வந்ததற்க்கு மன்னிப்பு கேட்டு உட்கார்ந்தார்.
அதற்குள் அனைவரும் காபி வர அமைதியாக காபி குடித்தனர்.
அதன் பின் நல்ல நேரம் முடிவதற்குள் கையெழுத்து போட வேண்டும் என விஷயங்கள் வேகமாக நடந்தன.
தன்ராஜ் பத்திரத்தை எடுத்து விலாசினியின் லக்கீலிடம் குடுக்க அவரும் சில நிமிடங்கள் செலவழித்து படித்து முடித்து “எதுவும் பிரச்சினை வராது மேடம்.. நீங்க தாராளமா கையெழுத்து போட்டுடலாம்”
உடனே பத்திரத்தை வாங்கிய விலாசினி அங்கிருந்த வெங்கடாசலபதி படத்தின் திருவடியில் வைத்து தன் மகளிடம் குடுக்க அவளும் கையெழுத்து போட்டு குடுக்க..ஒப்பந்தம் ரத்து ஆனது..(தொடரும்)