Loading

மறுநாள் காலையில் நித்ய யுவனி எழுந்திருக்கும் போதே அவளின் பார்வையில் பட்டது சஜீவ் தந்த பரிசு.

 

அதனைக் கையில் எடுத்தவள் அதிலிருந்த தங்கள் இருவரும் சேர்ந்திருந்த புகைப்படத்தை விரல்களால் வருடினாள்.

 

அப்போது அவளின் மனதில் இருவரும் காதலித்த தருணங்கள் மட்டுமே நினைவுக்கு வந்தன.

 

நேற்று ஜனனியின் வீட்டிலிருந்து வரும் போது அவள் தன்னிடம் கூறியது நித்ய யுவனிக்கு நினைவுக்கு வந்தது.

 

_______________________________________________

 

ஜானகியிடம் விடை பெற்று நித்ய யுவனி வெளியே வர அவளுடன் வந்த ஜனனி,

 

“நித்து… உனக்கு சஜீவ் அண்ணா பண்ணினத மறக்க கஷ்டமா இருக்குன்னு சொன்னேல்ல… உங்க ரெண்டு பேருக்கும் இடைல நடந்த பிரச்சினைய பத்தி மட்டுமே யோசிக்கிறதால உனக்கு இன்னும் இன்னும் அண்ணா மேல கோவம் தான் வரும்… அது உனக்கும் கஷ்டமா இருக்கும்… சோ சஜீவ் அண்ணா கூட ஸ்பென்ட் பண்ண ஹேப்பி மொமன்ட்ஸ மட்டும் திங்க் பண்ணு… கொஞ்ச நாள்ள நீயே எல்லாம் மறந்துடுவ…” என்க,

 

“ட்ரை பண்றேன் ஜெனி…” என்றாள் நித்ய யுவனி.

 

_______________________________________________

 

அதை நினைத்தபடியே காலைக் கடன்களை முடிக்க குளியலறைக்குள் புகுந்தாள் நித்ய யுவனி.

 

நித்யா சென்று சற்று நேரத்தில் அவர்களின் அறைக்குள் நுழைந்த சுசித்ராவின் பார்வையில் பட்டது மேசை மீதிருந்த அந்தப் பரிசு.

 

அதனைக் கையில் எடுத்த சுசித்ரா, “ஃபோட்டோல கூட உங்க ரெண்டு பேரையும் சேர்ந்து இருக்க விட மாட்டேன்…” எனக் கோவமாகக் கூறியவள் அதனைத் தரையில் அடித்து உடைக்க கையைத் தூக்க,

 

அதற்குள் குளியலறையிலிருந்து வெளியே வந்த நித்ய யுவனி சுசித்ராவின் செயலைக் கண்டு அதிர்ந்தவள் வேகமாக அவளை நெருங்கி சுசித்ராவின் கையிலிருந்த தன் பரிசைப் பறித்து விட்டு சுசித்ராவின் கன்னத்தில் அறைந்தாள்.

 

நித்யாவின் அறையில் கன்னத்தில் கை வைத்த சுசித்ராவின் கன்னம் எரிந்தது.

 

சுசித்ரா கோவமாக நித்யாவை திருப்பி அறைய கையை நீட்ட அவள் கையை இறுக்கிப் பிடித்த நித்யா அவளின் மறு கன்னத்திலும் அறைந்தாள்.

 

நித்ய யுவனி, “நானும் பொறுமையா போனா ரொம்பத் தான் பண்ற… என்ன தைரியம் இருந்தா என் அனுமதி இல்லாம என் ரூமுக்கே வந்து என் திங்ஸ் மேலயே கை வைப்ப… இந்தக் கை தானே இதை உடைக்க பாத்துச்சி… திரும்ப உடைக்க உனக்கு கையை இருக்காதுடி…” எனக் கோவமாகக் கூறியவள் சுசித்ராவின் கையை முறுக்கினாள்.

 

சுசித்ரா, “ஆஹ்….. விடுடி… வலிக்கிது… நித்யா… விடு…” என நித்ய யுவனியின் பிடியிலிருந்து தன் கையை விடுவிக்கப் போராட,

 

“வலிக்கனும்னு தான் டி பண்றேன்… உனக்கு மத்தவங்கள கஷ்டப்படுத்தி வலிக்க வைக்கிறது தானே பழக்கம்… இன்னெக்கி நீயும் அந்த வலிய அனுபவி…” என்ற நித்ய யுவனி மேலும் தன் பிடியை இறுக்கினாள்.

 

சுசித்ரா, “அத்த…. அத்த…… சீக்கிரம் வாங்கத்த… ஆஹ்… விடுடி…” எனக் கத்த,

 

சுசித்ராவின் அலறல் கேட்டு ஓடி வந்த ஈஷ்வரி அவளின் நிலையைக் கண்டு,

 

“ஏய்… விடுடி என்‌ மருமகள… விடுடின்னு சொல்றேன்ல..” என நித்ய யுவனியின் கையை இழுக்க கடைசியாக ஒரு முறை சுசித்ராவின் கரத்தை நன்றாக முறுக்கி விட்டே விடுவித்தாள் நித்ய யுவனி.

 

நித்ய யுவனி விடுவித்ததும் சுசித்ரா வலியில் தன் கரத்தை அழுத்தப் பிடிக்கவும் அதனைத் தடவி விட்ட ஈஷ்வரி,

 

“கொலைகாரி… என் மருமகள கொல்லப் பாத்தியாடி பாவி மகளே… பாரு அவள் எப்படி வலியில துடிக்கிறான்னு…” என நித்ய யுவனியைத் திட்டினார்.

 

“இதோட அவள விட்டேன்னு சந்தோஷப்படுங்க… திரும்ப இது போல ஏதாவது பண்ணனும்னு நெனச்ச உன்ன சும்ம விட மாட்டேன்… உங்க அண்ணன் பொண்ணுக்கு சொல்லி வைங்க…” என்ற நித்ய யுவனி சஜீவ் தந்த பரிசை கப்போர்ட்டில் வைத்துப் பூட்டினாள்.

 

ஈஷ்வரி சுசித்ராவை அழைத்துக் கொண்டு செல்ல வெளியே செல்ல அறை வாசலில் நின்று திரும்பி நித்ய யுவனியை முறைத்த சுசித்ரா,

 

“உன்ன இதுக்காக நிச்சயம் பழி வாங்காம விட மாட்டேன்டி…” மனதில் இன்னும் வன்மத்தை வளர்த்துக் கொண்டாள்.

 

_______________________________________________

 

பிரேம், “டேய்… எதுக்குடா இப்போ திடீர்னு எங்க மூணு பேருக்கும் ட்ரீட் தர… உனக்கு ஆஃபீஸ்ல ஏதாவது ப்ரமோஷன் கெடச்சிடுச்சா என்ன…” என்க,

 

சஜீவ் புன்னகையுடன் மறுப்பாகத் தலையசைத்தான்.

 

ஆரவ், “அப்போ இன்னைக்கு ஏதாவது முக்கியமான நாளா… காலைல யுவனிக்கு பர்த்டே விஷ் பண்ணப்போ கூட அவள் பார்ட்டி ஏதும் தரதா சொல்லவே இல்லையே.. ஹாஸ்பிடல் போகனும்னு சொன்னாளே…” என்க, அதற்கும் சஜீவ் பதில் கூறாது இல்லை என தலையசைத்தான்.

 

“பின்ன சொல்லித் தொலையேன்டா…” எனப் ஆரவ் கத்த சஜீவ் சிரித்தான்.

 

“அட அட அட… என்னா ருசி… என்னா ருசி…” என சப்பு கொட்டியபடி இவர்களின் சம்பாஷனை எதையுமே கவனிக்காமல் சாப்பாடே கண்ணாக ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தான் ஹரிஷ்.

 

அவனைக் கண்ட பிரேம் மேசையில் இருந்த ஃபோர்க்கை எடுத்து தன் அருகே அமர்ந்து லெக் பீஸை வாயில் வைத்து இழுத்துக் கொண்டிருந்த ஹரிஷின் தொடையில் ஓங்கி குத்தினான்.

 

லெக் பீஸை வாயில் வைத்துக் கொண்டே, “ஆஹ்… மா…. ” எனக் கத்தினான் ஹரிஷ்.

 

ஹரிஷ் கத்தவும் சுற்றியிருந்த அனைவரும் அவர்களைத் திரும்பிப் பார்க்க,

 

“ச்சே… முதல்ல வாய்ல இருந்து அதை எடுத்து தொலை…” எனக் கத்தினான் பிரேம்.

 

அவசரமாக வாயிலிருந்த லெக் பீஸை எடுத்த ஹரிஷ், “வை மீ…” எனப் பாவமாகக் கேட்டான்.

 

பிரேம், “இங்க என்ன நடந்துட்டு இருக்குன்னே கவனிக்காம சப்புக் கொட்டிட்டு திண்ணுட்டு இருக்க…” என்க,

 

“சாப்பாட்ட ருசிச்சு திண்ணது ஒரு குத்தமாடா…” எனக் கேட்டான் ஹரிஷ்.

 

மனதிற்குள் தான்… வெளியில் சொல்லி யார் பிரேமிடம் வாங்கிக் கொள்வது…

 

“விடுடா அவன சும்மா… நீ சொல்லுடா சர்வா.. என்ன விஷயம்… எதுக்காக இந்த ட்ரீட்..” எனக் கேட்டான் ஆரவ்.

 

சஜீவ், “யுவி என் கூட பேசிட்டாடா…” எனப் புன்னகையுடன் கூற மூவரும் அவனை வெட்டவா குத்தவா எனப் பார்த்தனர்.

 

ஆரவ், “இதென்ன புதிய விஷயமா… அவ ஆல்ரெடி உன் கிட்ட பேசிட்டா தானே…” என்க,

 

“இல்லடா.. அவ என் கிட்ட ஒழுங்கா முகம் கொடுத்தே பேச மாட்டாள்.. என்னைத் திட்ட மட்டும் தான் வாய தெறப்பாள்… ஆனா.. ஆனா இன்னைக்கு…” என சஜீவ் வெட்கப்பட்டுக் கொண்டு இழுக்க,

 

“என்னடா நடந்தது… அப்புறம்…” என ஆர்வமாகக் கேட்டான் ஹரிஷ்.

 

பிரேம் அவனை முறைக்கவும் ஹரிஷ் கப் சிப்பென வாயை மூடிக் கொண்டான்.

 

சஜீவ் இரவு நடந்ததைக் கூற மூவருக்குமே மகிழ்ச்சி.

 

பிரேம், “டேய்.. செம்மடா… அப்போ சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்… ஜனனி கூட சொன்னாள் நேத்து மார்னிங் யுவனி வந்து ஃபீல் பட்ணிட்டு இருந்தான்னு… ” என்க புன்னகைத்தான் சஜீவ்.

 

ஆரவ், “ரொம்ப ஹேப்பியா இருக்குடா சர்வா.. ரெண்டு பேருமே ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க… இனியாவது சந்தோஷமா இருங்க…” என்றான் மனநிறைவாக.

 

ஹரிஷ், “நீ குடிச்சி இருந்தப்போ உன்ன வீட்டுல கொண்டு போய் விட்டதும் தங்கச்சி பார்த்த பார்வையில ஒரு நிமிஷம் நானே ஜர்க் ஆகிட்டேன்… உன்ன ஒரு‌ மொற மொறச்சா பாரு… நீ எழுந்தா உனக்கு சமாதி தான்னு நெனச்சேன்…” என்றான் கேலியாக.

 

அவனை முறைத்த சஜீவ், “என் பொண்டாட்டி ஒன்னும் அவ்வளவு கொடுமைக்காரி இல்ல… அவளுக்கு என் மேல ரொம்ப லவ்… என்ன… கொஞ்சம் கோவமா இருக்கா… அதுவும் நான் தப்பு பண்ணேங்குறதால தானே… சீக்கிரமே என் யுவி என்னை மன்னிச்சி ஏத்துக்குவா..” என்க,

 

“சரி தான்…” எனக் கூறி சிரித்தான் ஹரிஷ்.

 

_______________________________________________

 

நித்ய யுவனி ஹாஸ்பிடலில் தன் அறையில் இருக்க திடீரென ஹாஸ்பிடல் ஸ்டாஃப் சிலர் உள்ளே வர அவள் அதிர்ந்து எழுந்து நின்றாள்.

 

நித்யா, “ஹேய்.. என்ன பண்றீங்க எல்லாரும்…” எனக் கேட்க,

 

அவர்கள் புன்னகையுடன் வாசலைப் பார்க்க கையில் கேக்குடன் உள்ளே நுழைந்தான் சித்தார்த்.

 

“ஹேப்பி பர்த்டே டாக்டர்…” என அனைவரும் வாழ்த்த,

 

சித்தார்த், “ஹேப்பி பர்த்டே நிது..” என்றான் புன்னகையுடன்.

 

“தேங்க்ஸ் சித்…” என அவனை அணைத்து விடுவித்த நித்ய யுவனி ஸ்டாஃப்ஸிடமும் “தேங்க் யூ ஆல்…” என்றாள்.

 

பின் அனைவரும் சேர்ந்து கேக் கட் பண்ணி விட்டு சென்று விட இருக்கையில் அமர்ந்தனர் இருவரும்.

 

நித்ய யுவனி, “என்ன சித்… எல்லாம் உன் ப்ளேனா…” என்க,

 

சித்தார்த், “பின்ன.. ஐயா யாரு…” என்றான் காலரைத் தூக்கி விட்டபடி.

 

சிரித்த நித்ய யுவனி, “அது சரி… என்ன நீ… முன்ன மாதிரி என் கூட பேசுறதே இல்ல… ஒரு கால் கூட இல்ல…” என்க,

 

சித்தார்த் அவளைப் பார்த்து இளிக்கவும் ஒற்றைப் புருவம் உயர்த்தி சந்தேகமாக அவனைப் பார்த்தாள் நித்ய யுவனி.

 

சித்தார்த், “அது வந்து நிது….” என இழுக்க,

 

நித்ய யுவனி, “அதான் வந்துட்டேல்ல… சொல்லு…” என்றாள்.

 

சித்தார்த் பல்லிடுக்கில் சுண்டு விரலை வைத்து கடித்தபடி தரையில் காலால் கோலம் போட,

 

அவனைக் கேவலமாக ஒரு லுக்கு விட்ட நித்ய யுவனி, “என்ன சார்… வெட்கப்படுறீங்களோ…” என்றாள் நக்கலாக.

 

சித்தார்த் ஆமெனத் தலையசைக்கவும், “அடச்சே… சகிக்கல… கன்ட்றாவியா இருக்கு… முதல்ல விஷயத்த சொல்லிட்டு இரு…” என்றாள் நித்ய யுவனி.

 

சித்தார்த், “நான்….” என விஷயத்தைக் கூறாமல் இழுக்க,

 

நித்ய யுவனி, “ஹ்ம்ம்… நீ…” என எடுத்துக் கொடுத்தாள்.

 

சித்தார்த் பட்டென, “நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் நிது…” என்று விட்டு முகத்தை மூடிக் கொண்டான்.

 

சித்தார்த் கூறியதில் முதலில் அதிர்ந்த நித்ய யுவனி அவனின் செயலைச் கண்டதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,

 

“என்ன சித் இது… பொண்ணு மாதிரி பண்ணிட்டு இருக்க…” என்றாள்.

 

“போ நிது… எனக்கு வெக்கமா இருக்கு…” என்றான் சித்தார்த் கையை எடுக்காமல்.

 

“நீ ஒரு டாக்டர்டா… உன் பேஷன்ட்ஸ் யாராவது உன்ன இந்த நிலமைல பார்த்தாங்கன்னா உன் ட்ரீட்மன்டும் வேணாம் எதுவும் வேணாம்னு சொல்லிட்டு ஓடிடுவாங்க..” என நித்ய யுவனி கேலியாக கூறவும் அவளை முறைத்தான் சித்தார்த்.

 

நித்ய யுவனி, “சரி சொல்லு… யாரு அந்த பொண்ணு… என்ன பண்றா… டாக்டரா… உன் கூட வர்க் பண்றாளா… அவளும் உன்ன லவ் பண்றாளா…” எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,

 

“ஒவ்வொன்னா கேளு நிது… இப்போவே எதுவும் சொல்ல மாட்டேன்… கொஞ்சம் நாள் போனதும் உன் கிட்ட சொல்றேன்.. நான் லவ் பண்றேன்… அதை உன் கிட்ட சொல்லனும் தோணிச்சு சொன்னேன்… இன்னும் அவ கிட்ட ப்ரபோஸ் கூட பண்ணல… முதல்ல அந்த பொண்ணு கிட்ட என் லவ்வ சொல்றேன்… அதுக்கப்புறம் உனக்கு யாருன்னு சொல்றேன்… அவள கண்டா நீ சர்ப்ரைஸ் ஆகுவாய்…” என்றான் சித்தார்த்.

 

“என்னடா… ஓவர் பில்டப் கொடுக்குற… சரி பார்க்கலாம்… எப்படியும் ஹெல்ப் கேட்டு என் கிட்ட தானே வந்தாகனும்…” என்றாள் சிரித்தபடி.

 

_______________________________________________

 

அன்று நித்ய யுவனி சற்று சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விட குளித்து உடை மாற்றி வந்தவள் கட்டிலில் அமர்ந்து ஏதோ யோசனையில் இருந்தாள்.

 

சற்று நேரத்திலே சஜீவ் ஆஃபீஸிலிருந்து களைப்பாக வர அவன் அறைக்குள் நுழைந்ததைக் கண்ட நித்ய யுவனி சஜீவ் உடை மாற்றி வரும் வரை காத்திருந்தாள்.

 

சஜீவ் வர எப்போதும் போல அவனுக்கு பாலில் மாத்திரை கலந்து கொண்டு வந்த நித்ய யுவனி அவன் குளியலறையிலிருந்து வெளியே வரவும் அவனிடம் சென்று பால் க்ளாஸை நீட்டினாள்.

 

சஜீவ் அதனை வாங்கிக் குடிக்க நித்ய யுவனி ஏதோ கூற வருவதும் தயங்குவதுமாக இருக்க,

 

“என்னாச்சு யுவி… ஏதாவது சொல்லனுமா…” என்றான் சஜீவ்.

 

நித்ய யுவனி, “ஹா… அது வந்து… அப்பா கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணி இருந்தாரு…” என சற்று நிறுத்தியவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்து,

 

“நான் அஞ்சி வருஷமா ஊருக்கு வரவே இல்லல்ல… வந்ததுக்கு அப்புறம் கூட ஃபேமிலில யாரையும் மீட் பண்ணல… என் தங்கச்சி.. அதாவது என் சித்தி பொண்ணு… செவன்த் படிக்கிறா… அவள் என்னைப் பார்க்கனும் என் கூட இருக்கனும்னு சொல்லியே எங்க வீட்டுக்கு கிளம்பி வந்துட்டா… இங்க வரனும்னு சொல்றா..” என்றாள் தயங்கியபடி.

 

சஜீவ், “தாராளமா வர சொல்லு யுவி… அதுக்கெதுக்கு நீ இவ்வளவு தயங்குற….” என்க,

 

“அதில்ல விஷயம்… அவள இங்க வந்து என் கூட தங்கனும்னு பிடிவாதமா சொல்றா… அது தான் என்ன செய்யன்னு புரியல…” என்றாள் நித்ய யுவனி.

 

“இது உன் வீடு யுவி..‌ உனக்கு என் மேல கோவம் இருக்கலாம்… ஆனா நீ என் பொண்டாட்டி… இந்த வீட்டு மருமகள்… என் அளவுக்கு உனக்கும் இந்த வீட்டுல உரிமை இருக்கு… அதை யாருக்காகவும் விட்டு கொடுக்காதே… அதனால நாளைக்கே உன் தங்கச்சிய கூட்டிட்டு வா… ” என்றான் சஜீவ் புன்னகையுடன்.

 

அவனை நன்றிப் பார்வை பார்த்த நித்ய யுவனி வேறு எதுவும் கூறாது சென்று படுத்துக் கொண்டாள்.

 

நித்ய யுவனி படுத்ததும் அவளைப் பார்த்து பெருமூச்சு விட்ட சஜீவ், “நீயா வந்து என் கிட்ட பேசுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு யுவி… நம்ம ரெண்டு பேருக்கும் இடைல இருக்குற இந்த இடைவெளி சீக்கிரம் இல்லாம போயிடனும்… நீ என் பக்கத்துலயே இருக்க… ஆனா நமக்குள்ள ஒரு அந்நியத் தன்மை.. ப்ளீஸ்.. சீக்கிரம் என் பழைய யுவியா திரும்பி வந்துடு… ஐ மிஸ் ஹர் அ லாட்… ” என மனதில் நித்ய யுவனியிடம் கூறினான்.

 

அறை விளக்கை அணைத்து விட்டு தரையில் படுக்கையை விரித்து சஜீவ் தூங்கி விட சற்று நேரத்தில் மெதுவாகக் கண் விழித்துப் பார்த்த நித்ய யுவனி சஜீவ் உறங்கி விட்டதைக் கண்டதும் ஜன்னலால் உள் நுழைந்த திங்களின் வெளிச்சத்தில் தன்னவனின் முகம் பார்த்தாள்.

 

நித்ய யுவனி, “எந்த பிரச்சினையா இருந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே சமாளிக்கலாம்னு சொன்னியே சஜு… அப்புறம் ஏன் என்னை மட்டும் தனியா விட்டுட்டு போன… இன்னைக்கு ஏதோ காரணம்னு சொல்ல வரியே… அதை அன்னைக்கே சொல்லி இருந்தா நமக்குள்ள இந்த பிரிவு வராம இருந்து இருக்கலாம்ல… யாரோ மாதிரி இருக்குறோம் இப்போ…” என எண்ணி கண்ணீர் விட்டாள்.

 

சற்று நேரத்தில் சஜீவ்வின் முகத்தைப் பார்த்தபடியே உறங்கி விட்டாள் நித்ய யுவனி.

 

❤️❤️❤️❤️❤️

 

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  2 Comments

  1. Archana

   அந்த பொண்ணு கிட்ட பத்து நிமிஷம் சஜூவே தனியா பேச சொல்லுங்க பேசுறதே காது கொடுத்து கேட்டாலே மேட்டர் சால்வுட்🤷‍♀️ இந்த டெக்னிக் புரியாதனால தான் பிரிவு வருது என்ன பண்ண எல்லாம் ஈகோ செய்யும் மாயை.

  2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.