Loading

அடுத்த நாள் விடிய சஜீவ் பலமுறை மன்னிப்பு வேண்ட நித்யாவுக்கு அழைக்க அவன் அழைப்புகள் எதுவுமே ஏற்கப்படவில்லை.

 

“ரொம்ப கோவமா இருப்பா போல… (mv- பின்ன நீ பண்ணி வெச்ச காரியம் அவ்வளவு சின்ன விஷயம் தானே..) சரி வேலையெல்லாம் முடிச்சிட்டு நேரடியாவே போய் பேச ட்ரை பண்ணலாம்…” என்று விட்டு குளிக்க சென்றான்.

 

இங்கு ராஜாராமோ வெகு நேரமாகியும் நித்யா அழைக்காததால் நித்யாவின் நண்பர்களுக்கு அழைத்து அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

 

முதலில் ஜனனிக்கு அழைத்தவர், “எப்படி இருக்கம்மா ஜனனி.. நல்லா இருக்கியா..” என்க,

 

“ஆமாப்பா.. நான் ரொம்ப நல்லா இருக்கேன்.. நீங்க வசும்மா ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க.. என்னப்பா காலைலயே கால் பண்ணி இருக்கீங்க.. ஏதாச்சும் முக்கியமான விஷயமா..” என ஜனனி கேட்க,

 

“நாங்க நல்லா இருக்கோம்மா.. நித்யா உன் கூட பேசினாலா?  எங்கயாச்சும் போறதா சொன்னாளா..” எனக் கேட்டார்.

 

ஜனனி, “இல்லப்பா.. என் கிட்ட அப்படி எதுவுமே சொல்லல்ல… நேத்து பேசினப்போ கூட ட்ரான்ஸர் வாங்கிட்டு சென்னைக்கே வரப்போறதா தான் சொன்னா… ஏன்ப்பா கேக்குறீங்க…” என்க,

 

ராஜாராம், “இல்லமா நேத்து நைட் ரொம்ப லேட்டா தான் வந்தா… டையர்டா வேற இருந்தா.. காலைல இருந்தே காணோம்மா.. அதான் கொஞ்சம் பதட்டமா இருக்கு…” என்க,

 

“அப்பா நீங்க டென்ஷனாக வேணாம்.. அவ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல.. ஏதாச்சும் அவசர வேலை இருந்து இருக்கும்.. போயிருப்பா… நான் ப்ரேம் கிட்டயும் சொல்லி ஹாஸ்ப்பிடல்ல தேடி பார்க்க சொல்றேன்… எங்க ஃப்ரன்ட்ஸ் கிட்ட கூட கேட்டு பார்க்கிறோம்.. நீங்க கவல படாம இருங்கப்பா.. வசும்மாவையும் டென்ஷனாகாம இருக்க சொல்லுங்க.. உங்களுக்கு நித்து கோல் பண்ணான்னா எனக்கு சொல்லுங்க..” என்றாள் ஜனனி.

 

“சரிம்மா.. உனக்கும் ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லு.. வெக்கிறேன்மா..” என்று விட்டு அழைப்பை துண்டித்தார்.

 

ஜனனி உடனே ப்ரேமுக்கு சொல்ல இருவரும் தமது நண்பர்கள் அனைவருக்கும் அழைத்து கேட்க யாருக்குமே நித்யாவைப் பற்றிய தகவல் தெரிந்திருக்கவில்லை.

 

பின் நித்யாவை தேடி விட்டு வருவதாக ப்ரேம் கிளம்பினான்.

 

சஜீவ்வின் வீட்டில், குளித்து முடித்து அறைக்கு வந்தவன் தன் அறையில் கட்டிலில் சுவற்றை வெறித்தவாறு அமர்ந்து இருப்பவனைப் பார்த்தவன்,

 

“டேய் நீ எப்படா வந்த… என்ன கூப்ட்டு இருக்கலாம்ல… எதுக்கு இப்படி உக்காந்துட்டு இருக்காய்…” என்க,

 

நேராக அவனை நோக்கி வந்தவன் பளார் என சஜீவ்வின் கன்னத்தில் அறைய அதில் அதிர்ந்த சஜீவ்,

 

“டேய் ஆரவ்… உனக்கு என்ன பைத்தியமாடா.. எதுக்கு இப்ப என்ன அடிக்கிறாய்…” என்க மறு கன்னத்தில் மீண்டும் ஒரு அறை.

 

சஜீவ்வை கண்கள்  சிவக்க நோக்கிய ஆரவ் அவன் காலரை பிடித்து ,

 

“பின்ன என்னடா உன்ன வெச்சி கொஞ்சுவாங்கலா… உண்மைய சொல்லுடா.. நேத்து என்னடா சொன்னாய் நித்தி கிட்ட… சொல்லுடா.. எதுக்கு அமைதியா இருக்காய்…” என ஆவேசமாக கேட்க,

 

“டேய் நீ என்ன சொல்லுறன்னே எனக்கு புரியலடா.. யுவிக்கு என்னடா ஆச்சு.. நான் நேத்து அவ கூட பேச போனது உண்மை தான்..” என்று விட்டு நேற்று நடந்த அனைத்தையும் கூறி தலை குனிய ஆரவ்விற்கு வந்த கோபத்திற்கு மீண்டும் அவனை அறையத் தொடங்கினான்.

 

ஆரவ், “ஏன்டா… உங்க வீட்டு ஆளுங்களால அந்த பொண்ணு பட்ட கஷ்டம் போதாதா.. மறுபடியும் மறுபடியும் எதுக்குடா அவள இப்படி கஷ்டப்படுத்துறீங்க… எத்தன வருஷம் கழிச்சி நித்தி வந்தா… எல்லாரும் எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க அவள பார்த்து… திரும்ப இப்போ அவள் எங்க போனான்னு கூட தெரியாம எல்லாருமே அவளை தேடி அலைஞ்சிட்டு இருக்கோம்.. எல்லாத்துக்கும் காரணம் நீ மட்டும் தான்டா…” என்க,

 

“ஆரவ் என்னடா சொல்லுறாய்.. என் யுவி எங்கிருக்கா… எனக்கு அவள் வேணும்டா.. அதுக்காக தான்டா நான் அப்படி பண்ணேன்… என்னோட காதல அவளுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணேன்டா… யுவி இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லடா.. ப்ளீஸ்டா அவள் எங்கிருக்கான்னு சொல்லு.. எனக்கு என்னோட யுவி வேணும்டா..” என சிறு பிள்ளை போல் கீழே அமர்ந்து அழும் தன் நண்பனை ஆறுதல்படுத்தக் கூட மனமின்றி உடன் பிறவா தங்கை போல் இருந்தவளைக் காணாது வேதனையில் இருந்தான் ஆரவ்.

 

பின் சஜீவ்விடம் அவள் இரவு வீட்டுக்கு சென்றதிலிருந்து காலையில் நடந்தது வரை கூறி,

 

“ப்ரேம் என் கிட்ட சொன்னதும் நான் நித்தி வர்க் பண்ண ஹாஸ்ப்பிட்டல் போய் விசாரிச்சேன்… அங்க இருந்த நர்ஸ் ஒருத்தங்க தான் உன்னோட அடையாளத்தை சொல்லி கடைசியா நீ தான் வந்து சந்திச்சதாவும் கொஞ்ச நேரம் கழிச்சி அழுதுட்டே அவ அங்க இருந்து கிளம்பிட்டதாவும் சொன்னாங்க… அந்த ஹாஸ்ப்பிட்டல் டீன் கிட்ட கேட்டப்போ அவள் அங்க டெம்பரரியா தான் வேர்க் பண்ணதாவும் நைட் திடீர்னு கால் பண்ணி இனிமே வரமாட்டதாவும் சொல்லிருக்கா.. இவர் ஏன்னு கேக்க முன்னாடியே கட் பண்ணிட்டாளாம்.. ” என்க,

 

“என் யுவி என்ன விட்டு போய்ட்டாடா… ரொம்ப தூரம் போய்ட்டாடா… எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம்… ஐயோ…. எங்க போய் நான் அவள தேடுவேன்…” என கதற பின் ஏதோ முடிவெடுத்தவனாய் கண்களை துடைத்துக் கொண்டு,

 

“அவள் இப்படி ஒரு முடிவெடுக்க நான் தான் காரணம்.. என் யுவி எங்க போய் இருந்தாலும் பரவால்ல.. அவள் எந்த மூலைல இருந்தாலும் அவள தேடி கண்டு பிடிச்சி என் கிட்ட கொண்டு வந்ததுக்கு அப்புறம் தான் நான் மறு வேலை பார்ப்பேன்…” என்று விட்டு எழுந்து தயாராகி ஆரவ் அழைக்க அழைக்க கேட்காது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான் சர்வேஷ்.

 

மாலை 5 மணி – Bangalore Airport

 

சித்தார்த், “நிது… எதுக்கும் திரும்ப ஒரு தடவை உன் முடிவ நல்லா யோசிச்சிக்கோ.. எனக்கு என்னமோ இது சரியாபடல.. நானும் எத்தனையோ தடவை உன் கிட்ட கேட்டாச்சி.. இவ்வளவு பெரிய முடிவ திடீர்னு எடுக்குற அளவுக்கு அப்படி என்ன தேவை வந்திச்சு.. நீ சொன்னத்துக்காக அம்மா கிட்ட கூட பேங்களூர் போறதா பொய் சொல்லிட்டு வந்திருக்கேன்..” என்க,

 

“சித் சீக்கிரம் லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கோ.. ஃப்ளைட்டுக்கு டைம்மாச்சி.. ஃபர்ஸ்ட் உன்னோட சிம்ம உடைச்சி போடு.. நானும் என்னோட சிம்ம உடைச்சிட்டேன்..” என நித்யா கூறி விட்டு முன்னே நடக்க,

 

இவ்வளவு நேரம் தன் வாய் கிழிய அறிவுரை வழங்கியும் காதுக்கு எடுக்காது தன் பாட்டில் பேசி விட்டுச் செல்லும் நித்ய யுவனியை நினைத்து தலையிலடித்துக் கொண்டு லக்கேஜ்ஜுடன் அவள் பின்னே நடந்தான் சித்தார்த்.

 

விமானம் கிளம்ப ஆயத்தமானதும் ஜன்னல் பக்கம் தலை சாய்த்து கண் மூடி நேற்று இரவு நடந்ததை  நினைத்தாள்.

 

அழுது அழுது ஓய்ந்து போனவள் முதலில் ஹாஸ்ப்பிட்டல் டீனுக்கு தான் இனி வருவதில்லை என தெரிவித்து விட்டு சித்தார்த்துக்கு அழைத்தாள்.

 

உறக்கத்தில் தனது கனவுக் காதலியுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தவன் மொபைல் ரிங்டோர்ன் சத்தத்தில் கனவு கலைந்த எரிச்சலில் தூக்கக் கலக்கத்திலேயே அழைப்பை ஏற்று,

 

“தாங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்போது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளதால் தயவு செய்து நாளை அழைக்கவும்…” என்று விட்டு மீண்டும் கனவுலகத்துக்கு செல்ல நினைக்க,

 

சித்தூ…. என கேட்ட உரத்த குரலில் பதறியடித்து எழுந்தவன் மொபைலை எடுத்து யாரெனப் பார்க்க திரையில் நித்யாவின் பெயரைப் பார்த்தவன்,

 

“ஹேய் நிது.. நீ என்ன அர்த்த ராத்திரியில கால் பண்ணியிருக்காய்.. ஏதாச்சும் பிரச்சினையா..” என்க,

 

“இப்ப என் கிட்ட எந்த கேள்வியும் கேக்காதே சித்.. ப்ளீஸ்.. முதல்ல யூ.எஸ் ஆஃபர நாம ரெண்டு பேரும் எக்சப்ட் பண்ணிக்கிறதா சொல்லி மெய்ல் அனுப்பிட்டு உடனே நம்ம ரெண்டு பேருக்கும் ஆன்லைன்ல யூ.எஸ் க்கு ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணு.. இப்போவே நாம பேங்களூருக்கு கிளம்பலாம்.. ப்ளீஸ் சித் எனக்காக இத மட்டும் பண்ணு…” என நித்யா கவலை தோய்ந்த குரலில் சொல்ல,

 

“ஓக்கே நிது.. நீ ஏதோ ஒரு அப்சட்ல இருக்காய்.. எனக்கு புரியிது.. நீ எப்படியும் யோசிக்காம இந்த முடிவ எடுத்து இருக்க மாட்டாய்.. ஆஸ் அ ஃப்ரென்ட் ஐ வில் ஆல்வேய்ஸ் பீ தேர் ஃபார் யூ.. நீ எல்லாம் எடுத்து வெச்சி ரெடியா இரு.. நான் இப்போ வந்துட்றேன்…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

 

அதன் பின் உடனே இருவரும் பேங்களூர் கிளம்பினர்.

 

அடுத்த நாள் பேங்களூரை அடைந்தவர்கள் அங்கு ஏற்கனவே தாம் வேலை பார்த்த ஹோஸ்ப்பிட்டலிற்குச் சென்று டீனை சந்தித்து பேசி விட்டு இறுதியாக தாம் யூ.எஸ் செல்வதை அவர் தவிர்த்து யாரிடமும் கூற வேண்டாம் என வேண்டிக் கொண்டு விடை பெற்றனர்.

 

நினைவுகளில் மூழ்கிக் கிடந்தவளை சித்தார்த்தின் குரல் கலைத்தது.

 

சித்தார்த், “நிது நீ காலையிலிருந்தே எதுவும் சாப்பிடல்ல.. இந்தா இப்போ இதையாவது சாப்பிடு..” என விமானத்தில் வழங்கிய உணவை வழங்க,

 

கலங்கிய கண்களுடன் அதனைப் பெற்றுக் கொண்டவள், “தேங்க்ஸ் சித்… உன்ன ஃப்ரென்டா கெடக்க நான் ரொம்ப கொடுத்து வெச்சிருக்னும்… நான் கஷ்டத்துல இருந்தப்போ எல்லாம் எனக்கு பக்க பலமா நீ இருந்து இருக்காய்.. நான் ரொம்ப மனசு உடஞ்சி போய் இருந்தப்போ எனக்கு ஆறுதலா இருந்தாய்.. ஒரு வெல்விஷரா இருந்து எனக்கு சரி எது தப்பு எது, நல்லது கெட்டது எல்லாமே காட்டித் தந்தாய்.. குடும்பத்தை, ஃப்ரென்ட்ஸை பிரிஞ்சி தனியா வந்தப்போ எனக்கு எல்லாமுமா நீ இருந்தாய்… இப்போ கூட நான் வான்னு கூப்பிட்டதும் என்ன ஏதுன்னு எதுவுமே கேக்காம எனக்காக வந்தாய்… நான் உனக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன் சித்..” என உணர்ச்சி வசப்பட்டு பேச,

அவள் கண்ணீரை தன் கரம் கொண்டு துடைத்து விட்டவன் அவள் கரங்களை ஆதரவாகப் பற்றி,

“ஹேய் பைத்தியம்.. இப்போ எதுக்கு தேங்க்ஸ் அது இதுன்னு சொல்லுறாய்.. நீ தானே எப்போவும் சொல்லுவாய்… ஃப்ரென்ஸுக்குள்ள நோ சாரி நோ தேங்க்ஸ்.. என்ட் இத நல்லா ஞாபகம் வெச்சிக்கொ இனியொரு தடவை நன்றிக்கடன்னு ஒரு வார்த்த உன் வாய்ல இருந்து வரக்கூடாது.. இது தான் ஃபர்ஸ்ட் என்ட் லாஸ்ட்டா இருக்கனும்… இங்க பாரு நிது இது எல்லாம் நான் உன் கிட்ட இருந்து எதையும் எதிர்ப்பார்த்து பண்ணல.. ஒரு ஃப்ரென்டா இதெல்லாம் என்னோட கடமை.. இப்போ மட்டுமல்ல எப்போதுமே நீ என்ன முடிவு எடுத்தாலும் என்ன பிரச்சினையா இருந்தாலும் நான் உன் கூட இருப்பேன்… இப்போ சிரி பாக்கலாம்.. சும்மாவே இந்த மூஞ்ச பார்க்க சகிக்காது… இதுல அழுது மூஞ்ச வேற தூக்கி வெச்சிக்கிட்டா அப்பப்பா ரொம்ப கேவலமா இருக்கு… சின்ன குழந்தைங்க யாராச்சும் உன் மூஞ்ச பாத்தா பூச்சாண்டின்னு சொல்லி பயந்து ஓடி போயிரும்..” என கூறி சித்தார்த் சிரிக்க,

அவன் தன்னை சிரிக்க வைக்கவே இவ்வாறு பேசுகிறான் எனத் தெரிந்தும் அவனைப் பார்த்து பொய்யாக முறைத்த நித்யா,

அவள் முறைப்பதைக் கண்டு சித்தார்த் கஷ்டப்பட்டு சிரிப்பைக் கட்டுப்படுத்த முயல்வதைப் பார்த்து அவளும் தன் கவலை மறந்து அவனுடன் சேர்ந்து சிரித்தவாறு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

சித்தார்த் மனதினுள்ளே கடவுளிடம், “ப்ளீஸ் காட்.. என் ஃப்ரென்ட் நிது மனசளவுள ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கா.. இனியாவது அவ சந்தோஷமா இருக்கனும்.. அவளுக்கு இருக்குற எல்லாப் பிரச்சினையையும் தீர்த்து வெச்சி இந்த சிரிப்ப அவ முகத்துல எப்போவும் நிலையா இருக்க வெச்சிரு..” என வேண்டிக் கொண்டு நித்யாவின் தோளில் ஆதரவாக கை போட்டுக் கொண்டான்.

நட்புக்கு ஆண், பெண் பேதம் தெரியாது… தோள் கொடுக்கத் தோழனும் தோள் சாயத் தோழியும் இருந்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்… ☆

 

❤️❤️❤️❤️❤️

 

– Nuha Maryam –

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. சித் நிஜமாலே நல்ல பிரண்டுகான எக்சாம்பிள்🤩🤩🤩🤩 சஜீவ் பார்க்கவும் கஷ்டமா நான் இருக்கு 😒.

      1. Author

        Adutha uds read panna kitta sajeev ku ipdi solla mateenga.. 🤪