Loading

அடுத்து வந்த இரண்டு நாட்களும் சாதாரணமாக கடக்க நித்யாவுக்கு ஏன் மீண்டும் சென்னை வந்தோம் என்றிருக்க, சஜீவ்விற்கோ நித்யாவை எப்படி தன் வழிக்கு வர வைக்கலாம் என்றிருந்தது.

 

சஜீவ்வின் இல்லத்தில் அன்று காலையிலேயே ஜீவிகாவும் வீரும் கிளம்பி வந்திருக்க விடிந்ததும் எழுந்து தயாராகி கீழே வந்தவன் நேராக ஜீவிகாவிடம் சென்று,

 

“ஜீவி இன்னெக்கி உனக்கு ஹாஸ்பிட்டல் போணும்ல.. வா போலாம்..” என்க, அவனை ஜீவிகா சந்தேகக் கண்ணோடு பார்க்க,

 

ஏற்கனவே ஜீவிகா வீரிடம் அன்று நடந்தது பற்றி அனைத்தும் கூறியிருந்ததால் அவன் சஜீவ்வை நமட்டுச் சிரிப்புடன் நோக்கினான்.

 

ஈஷ்வரியோ இது எதுவும் தெரியாமல் பெரிதும் குழம்பி,

 

” ஏன்பா உனக்கு இன்னெக்கி ஆபிஸ் போணும்ல.. அன்னெக்கி போறத்துக்கு அவ்வளவு யோசிச்சாய்.. இன்னெக்கி நீயே வந்து ஜீவிய கூப்பிட்ற…” என்க,

 

“வேலைய விட தங்கச்சி தானேம்மா முக்கியம்.. அதுவுமில்லாம நான் ஆபீஸ்க்கு லீவ் சொல்லிட்டேன்..” என சமாளித்து வைத்தான்.

 

( Sorry guys.. oru chinna wilakkam.. namma hero awlo periya businessman ellam illanga.. foreign la knjm nal wrk pantu ipa sadharanama oru IT Company la wrk panran.. frnds pathi kooda sollalla.. adhukana thewa waralla.. bt na edhukum ippowe solli wekkiren.. cuz pinnadi neenga confuse aaga koodadhula.. Prem Volkswagen Group Company la wrk panran.. Arav sondhama textiles business panran.. Harish Sajeev wrk panra adhe company la wrk panran… Janani oru ophthalmologist.. Anjali & Dhivya lecturers.. Priya oru hotel la receptionist a irukka..)

 

பின் ஜீவிகா, “அண்ணா நீ ஒரு விஷயம் மறந்துட்டன்னு நெனக்கிறேன்.. டாக்டர் இருக்காங்கல்ல டாக்டர்.. என் ஹஸ்பன கூட்டிட்டு தான் வர சொன்னாங்க..” என டாக்டரில் ஒரு அழுத்தம் கொடுத்து கூறினாள்.

 

அதைக் கேட்டு வீர் நகைக்க சஜீவ் வீரை முறைத்து விட்டு மனதினுள், “ஏன்டா சர்வேஷ் இப்படி அநியாயத்துக்கு அவசரப்பட்டு ஜீவி கிட்ட மாட்டிட்டியே.. சரி ஏதாச்சும் சொல்லி சமாளிக்கலாம்..” என நினைத்த வண்ணம்,

 

“என்ன ஜீவி நீ இப்படி சொல்லிட்ட.. ஒரு அண்ணணா தங்கச்ச பத்தி தெரிஞ்சிக்கிறது என்னோட கடமை.. இந்த சர்வேஷ் ஒரு போதும் தன் கடமையை தவற மாட்டான்.. மாப்பிள்ளை வந்தா என்ன.. நானும் உங்க கூட வந்து என்ன பிரச்சினைனு தெரிஞ்சிக்குறேன்..” என்க,

 

ஜீவிகா தலையில் அடித்த வண்ணம், “இல்லாட்டியும் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லாம போய்டுச்சிண்ணா…” என்று அவனை திட்டிய வண்ணம் மூவரும் கிளம்பினர்.

 

ஈஷ்வரியோ,”இந்த காலத்து பசங்களை புரிஞ்சிக்கவே முடியல..” என புலம்பி விட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றார்.

 

திவ்யா பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருக்க அவள் மொபைல் விடாமல் அடித்தது.

 

கல்லூரி நேரம் என்று கூட பாராது யார் இந்த நேரத்தில் கால் பண்ணுவது என்ற கடுப்புடன் பாடம் முடித்து விட்டு வகுப்பிலிருந்து வெளியேற அவள் மொபைல் மீண்டும் அடித்தது.

 

கோபத்துடன் அழைப்பை ஏற்றவள் அனைத்து கோபத்தையும் வார்த்தையில் காட்டி ஹலோ என்றாள்.

 

பல முறை பேசியும் மறு முனையில் பதில் வராததால் அழைப்பை துண்டித்து விட்டு அஞ்சலியிடம் சென்றாள்.

 

“என்னடி யாரு மேல இவ்வளவு கோவம்.. உன்னோட மூஞ்சி இப்படி இருக்குது..” என அஞ்சலி கேட்க,

 

“யாருன்னு தெரியலடி.. க்ளாஸ்ல இருக்க கிட்ட விடாம கால் பண்ணிட்டு வெளிய வந்து அட்டன்ட் பண்ணினா அந்த பக்கம் சைலன்ட்.. எங்கிருந்து தான் கிளம்பி வருதுங்கலோ.. திரும்ப மட்டும் கால் பண்ணட்டும் அவன் செத்தான்…” என திவ்யா கூறும் போதே மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வர மொபைலை அஞ்சலியிடம் காட்டி விட்டு அழைப்பை ஏற்றாள்.

 

அஞ்சலியோ மனதில் மறுமுனையில் இருக்கும் முகம் தெரியா நபருக்காக மனதினுள் வருத்தப்பட்டாள்.

 

திவ்யாவோ எடுத்ததும், “கொப்பா மவனே…” என ஆரம்பித்து வாய்க்கு வந்த நல்ல வார்த்தைகள் எல்லாம் கூறி மறுமுனையில் இருந்தவரை அர்ச்சிக்க தொடங்க அஞ்சலி தன் காதுகளை மூடிக் கொண்டாள்.

 

மறுமுனையில் இருந்தவரின் காதில் இரத்தம் வராவிட்டால் அதிசயம் தான்.

 

பின் மறுமுனையிலிருந்த நபர் அவள் அர்ச்சனை தாங்க மாட்டாமல், “ஹேய் தியா.. தியா.. இனாஃப் டி இனாஃப்.. எங்க இருந்து டி இவ்வளவு நல்ல வார்த்தை எல்லாம் கத்துக்கிட்டு இருக்காய்.. என்னோட நல்ல நேரம் நான் உன் முன்னால இல்ல..” என்க திவ்யா தலையில் கை வைத்தவாறு,

 

“ரிஷி நீயா… முன்னாடியே சொல்லாம்ல.. காலேஜ்ல இருக்க கிட்ட கால் பண்ணதும் இல்லாம அட்டன்ட் பண்ணிட்டு பேசாம இருந்தியா.. அந்த கோவத்துல தான் கொஞ்சம் திட்டிட்டேன்..” என்க ஹரிஷ்,

 

“என்னது கொஞ்சம் திட்டினியா.. என் காதுல இருந்து ப்ளட்டே வந்துட்டு.. ப்ப்பா… ஒரு நிமிஷம் எனக்கு மூச்சே நின்னுட்டு..” என்க திவ்யா,

 

” சோரி ரிஷி.. சரி சொல்லு எதுக்கு கால் பண்ணாய்..” எனக் கேட்க அதன் பின்னே தான் எதற்கு கோல் பண்ணிணோம் என யோசித்தவன்,

 

“அது ஒன்னுமில்ல தியா.. அன்னெக்கி உன் கிட்ட இருந்து நம்பர் வாங்கினேன்.. பட் உனக்கு என் நம்பர் தெரியாதுல.. அதான் சொல்லாம்னு எடுத்தேன்.. நீ கோவமா ஹலோ சொன்னியா.. நான் தான் கோல் பண்ணேன்னு சொன்னா திட்டிருவியோன்னு தான் பேசாம இருந்தேன்.. பட் இப்ப தோணுது அப்பவே சொல்லி இருக்கலாமோன்னு…” என கூற திவ்யா,

 

“வன்ஸ் அகைன் சாரி ரிஷி.. நான் உன்னோட நம்பர சேவ் பண்ணிக்குறேன்.. இப்போ காலேஜ்ல இருக்கேன்.. சோ அப்புறமா பேசலாம்.. பாய்..” என்று விட்டு அழைப்பை துண்டித்தவள் மொபைலை பார்த்து தனியே சிரிக்க கண்ட அஞ்சலி அவளை உலுக்கி,

 

“ஏய் திவி யாருடி கோல் பண்ணது.. ரிஷி யாரு.. எதுக்கு இப்படி பைத்தியம் மாதிரி தனியா சிரிக்கிறாய்..” என்க திவ்யா சிரித்த படியே ஹரிஷ் என்றதும், “அது சரி.. நீ நடத்து.. நான் கிளம்புறேன்..” என்று விட்டு அஞ்சலி அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

 

அவள் சென்றதைக் கூட கவனிக்காது திவ்யா ஹரிஷின் நினைவில் இருந்தாள்.

 

ஃபர்ட்டிலிட்டி சென்ட்டரை அடைந்தவர்கள் தமக்கான அழைப்பு வந்ததும் உள் நுழைய லேப்டாப்பில் பார்வை பதித்திருந்தவள் அவர்கள் பக்கம் திரும்பி,

 

“வாங்க மிஸ்டர் என்ட் மிசிஸ் வீராஜ்… உங்களோட கேஸ் ஃபைல தான் பார்த்துட்டு இருந்தேன்… சொன்ன மாதிரியே செக்கப் பண்ணிட்டீங்க போல…” என நித்யா கூற,

 

முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாது கடமையே கண்ணாக பேசிக்கொண்டிருந்த இந்த நித்ய யுவனி அவர்களுக்கு சற்று புதிது என வீரின் முகமே காட்டிக்கொடுத்தது.

 

சஜீவ் அமைதியாக அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

பின் நித்யா ஜீவிகாவை நோக்கி, “உங்க ஹஸ்பன்ட்டுக்கு ஸ்மோக்கிங் ஹேபிட் இருக்கு போல..” என்க,

 

ஜீவிகா உடனே, “இல்ல டாக்டர் முன்னாடி இருந்துச்சு பட் இப்போ இல்ல..” என்றதும் நித்யா வீரை நோக்கி ஒரு குற்றம் சாட்டும் பார்வை பார்க்க வீர் தலை குனிந்தான்.

 

வீரின் செயலை ஜீவிகா புரியாமல் பார்க்க வீர் தலையை நிமிர்த்தாமல், “அது வந்து டென்ஷனா இருக்குறப்போ மட்டும் ஸ்மோக் பண்ணுவேன்.. பட் ரெகியுலரா இல்ல..” என்றதும் கோபமாகிய நித்யா,

 

“எவ்வளவு ஈஸியா நீங்க சொல்லிட்டீங்க மிஸ்டர்… இந்த பிரச்சினைக்கு முழு காரணமும் நீங்க தான்.. ஜீவிகா இஸ் பர்ஃபக்ட்லி ஆல் ரைட்.. ஷீ டஸ்ன்ட் ஹேவ் எனி ப்ராப்ளம் இன் ப்ரக்னன்சி… பட் நீங்க இப்போ ஈஸியா சொன்னீங்க இல்லயா அது தான் இப்போ ப்ரோப்ளமே.. உங்களுக்கு பல வருஷமா இந்த ஹேபிட் இருக்கு.. அதனால உங்க ஸ்பர்ம்ஸ் க்ரோவிங் பர்சன்ட்டேஜ் குறைவா ஆகி இருக்கு.. இது இப்படியே கன்ட்டினியு ஆனா அத குணப்படுத்த முடியாது..” என்றதும் வீர் நித்யாவை அடி பட்ட பார்வை பார்த்தான்.

 

ஜீவிகாவின் கண்களும் குளமாகியது.

 

தனக்கு ஏதாவது பிரச்சினை என்றாலும் தாங்கி இருப்பாள்.

 

ஆனால் தன்னவனுக்கு இவ்வாறான பிரச்சினை என்றதும் மனம் வேதனையில் துடித்தது.

 

ஆனால் அதற்கு காரணமாக கூறப்பட்ட விடயம் கோபத்தை ஏற்படுத்தியது.

 

சஜீவ்விற்கும் இந்த செய்தி சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

 

அவ்விடமே சில நிமிடங்கள் நிசப்தமாக இருக்க நித்யாவே அவ் அமைதியைக் கலைத்து பேச ஆரம்பித்தாள்.

 

“இப்போ நீங்க ஃபீல் பண்ணி எதுவும் ஆக போகறதில்ல.. அந்த காலத்த விட இந்த காலம் எவ்வளவு வித்தியாசமா இருந்தாலும் எல்லா விதத்துலயும் நாம வளர்ச்சி அடைந்திருந்தாலும் நம்மளோட தோட்ஸ் மாறினாலும் ஒரு பொண்ணு தாய்மை அடையுறத்த அந்த காலம் போல தான் இப்போவும் பாக்குறாங்க..

 

ஒரு பொண்ணு தாயாக முடியலனா முதல்ல அவள் பக்கம் தான் விரல் நீட்டப்படுது.. எவ்வளவு படிச்சவங்களா இருந்தாலும் அந்த பொண்ணோட கணவனும் அதுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்னு யோசிக்க தவறுறாங்க..

 

அவ தான் குறை உள்ளவ.. மலடி… அது இதுன்னு ஆயிரம் குத்திக்காட்டு பேச்சு.. யாருமே அந்த பொண்ணோட புருஷனுக்கு குறை சொல்ல மாட்டாங்க.. எங்க போனாலும் இதை பத்தியே பேசுவாங்க.. அவ கையால ஒரு காரியம் நடந்தா அது விளங்காம போய்டும்னு ஒதுக்கி வைப்பாங்க..

 

எல்லாத்துக்கும் மேல பெரிய கஷ்டம் சில கணவன்மார் தனக்கு தான் குறை இருக்குன்னு யோசிக்காம புது மாப்பிள்ளை ஆகிடுவாங்க.. கொஞ்சம் கூட அந்த பொண்ணோட நிலமைல இருந்து யாரும் யோசிச்சி பார்க்க மாட்டாங்க.. இங்க வரும் நிறைய கேஸ் எடுத்துப் பார்த்தா மேக்ஸிமம் கணவன்மாரிடம் தான் குறை இருக்கும்..

 

மெய்ன் ரீசன் ஸ்மோக்கிங் என்ட் எடிக்டட் டு ட்ரக்ஸ்..” என கூறி விட்டு சஜீவ்வை ஒரு பார்வை பார்த்தாள். அதில் வலி கலந்து இருந்தது.

 

சஜீவ்விற்கும் அவள் முகத்தை பார்க்க முடியவில்லை. தலை குனிந்து அமர்ந்து இருந்தான்.

 

வீரிற்கோ குற்ற உணர்ச்சியாக இருந்தது.

நித்யா கண் கலங்கியவாறு, “எத்தனை தடவை உனக்கு இந்த பழக்கம் வேணாம் விட்டுருன்னு சொல்லி இருப்பேன் ராஜு… ஜீவி கூட அவ்வளவு சொன்னாள் தானே..” என்றதும் மூவரும் அவள் பேசிய விதம் உணர்ந்து மகிழ்ச்சியாக நித்யாவின் முகம் நோக்க அதற்குள் தன்னிலை அடைந்து அவள் முகம் இறுகி இருந்தது.

“மிஸ்டர்.வீராஜ்.. நான் கொஞ்சம் ட்ரீட்மன்ட் எழுதி தரேன்.. நீங்க அதை ஃபலோ பண்ணுங்க.. வீக்லி வன்ஸ் செக்கப்க்கு வாங்க.. டெஃபினீட்லி யூ வில் கெட் இம்ப்ரூவ்மன்ட்.. என்ட் வன் மோர் திங்.. ஃபர்ஸ்ட் டோட்டலி ஸ்டாப் ஸ்மோக்கிங்… மிசிஸ்.ஜீவிகா… உங்களுக்கும் சில விட்டமின் டேப்லட்ஸ் எழுதி தரேன்.. ரெகியுலரா அத எடுத்து வாங்க.. யூ மே லீவ் நவ்…” என்று விட்டு தன் கடமை முடிந்தது என மீண்டும் லேப்டோப்பில் கண் பதித்தாள்.

இதற்கு மேல் அவள் எதுவும் பேச மாட்டாள் என அறிந்து மூவரும் அவ்விடத்தை விட்டு கிளம்பினர்.

செல்லும் போது மூவரின் மனநிலையும் வெவ்வேறு விதத்தில் இருந்தது.

வெளியேறும் போது சஜீவ் ஒரு முறை நித்யா தன்னை பார்க்க மாட்டாளா எனத் திரும்பி பார்க்க அவளோ வேலையிலே கண்ணாய் இருந்தாள்.

மனதில் வருத்தம் தோன்ற உடனே அவ்விடம் விட்டு சென்றான்.

அவர்கள் சென்றதும் லேப்டாப்பிலிருந்து பார்வை அகற்றியவளின் விழிகளில் இருந்து அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர்த்துளிகள் அவள் அனுமதி இன்றியே வெளியேறியது.

 

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Archana

      சூப்பர் எபி சிஸ்😍😍😍😍 பார்க்கிறே, சிரிக்கிறே இந்த மாறி இடத்துல எல்லாம் பார்க்கி(றாய்), சிரிக்கி(றாய்) இது மட்டும் கரெக்ட் பண்ணிக்கங்க 😇😇😇