167 views

நனியிதழ்..

இவளை  மீனாட்சி அடைக்கப்பன் அக்கா கதைய ஃபாலோ பன்ற நிறைய பேருக்கு தெரியும்.

மீனாட்சி அடைக்கப்பன் – இவங்க எனக்கு குரு. இவங்கள ஏன் குருன்னு சொல்றேன்னா ஒரு சம்பவத்தை நம்ம நினைச்சி பார்க்காத இன்னொரு கோணத்துல சொல்லுவாங்க. அது எந்த அளவுக்கு இருக்கும்ன்னா அவங்க கேக்குற கேள்விக்கு நம்ம கிட்ட பதில் இருக்காது. இப்படி நம்மள பதில் சொல்ல முடியாத கேள்விய கேக்குறதுக்கே படைச்ச கேரெக்டர் தான் நனியிதழ்.

இவளை இயற்கைன்னு செல்றாங்க. அதாவது இயற்கையே நம்மள கேள்வி கேக்க எடுத்த அவதாரம் தான் நனியிதழ்ன்னு வச்சிக்கோங்களேன்.

இங்க யாரும் அதிபுத்திசாலி இல்ல. ஒருத்தர் கேக்குற கேள்விக்கு  நம்ம கிட்ட பதில் இல்லன்னாலும் இன்னொருத்தர் கிட்ட பதில் கண்டிப்பா கிடைக்கும். அதான் இந்த கேள்வியவே ஒரு பதிவா கேட்டுருக்கேன்.

சம்பவம் இது தான்.

ஒரு விவசாயி மூங்கில் காட்டுல வளர்ந்த களைன்னு சொல்ற செடிய புடுங்குறாரு. இத பார்த்த நனி நீ பாவம் செஞ்சிட்டு இருக்கன்னு சொல்றாங்க. அவனும் பதிலுக்கு கோபத்தோட வாதிட கடைசில உன் விந்தில் உருவாகும் முதல் குழந்தையின் உயிரை கொடு. நீ செஞ்ச பாவம் போகனும்ன்னா இதான் வழின்னு சொல்றாங்க.

அவன், ‘இந்த களைய நான் பறிச்சது தப்பா. இது மூங்கிலின் வளர்ச்சியை பாதிக்கும்ன்னு’ வாதம் பண்றான். அதுக்கு நனி, ‘பின் தவறில்லையா? இந்த உலகில் வாழ தகுதியற்ற உயிர்ன்னு நீ எப்படி முடிவு செய்யலாம்? வெறும் நெல்லுதான் உயிரா மத்தது எல்லாம் உனக்கு துச்சமா!’ ன்னு கேக்குறாங்க.

அதுவும் சரி தான.. ஒரு தாய்க்கு 2 குழந்தைகள் இருக்கு. ஒரு குழந்தை நல்லொழுக்கத்துடன் நல்ல குழந்தையா இருக்கு. இன்னொரு குழந்தை தீய பழக்கங்கள் கொண்ட குழந்தையா இருக்கு. இப்போ சூழ்நிலை தீய குழந்தையை கொன்றால் தான் நல்ல குழந்தை உயிரோட இருக்கும்ன்னு சொன்னா அந்த தாய்க்கு அது வேதனை தான. ஏன்னா அந்த தாய்க்கு நன்மை தீமை கிடையாதே! இரண்டும் அவள் குழந்தை தானே! அதே மாதிரி தான பூமிக்கு அதுக்கு களை தெரியுமா? நெல் தெரியுமா? கருவேலம் தெரியுமா? தென்னை மரம் தெரியுமா? எல்லாமே அவள் குழந்தை தான. ஒரு குழந்தையோட வளர்ச்சிக்காக இன்னொரு குழந்தைய சாவடிக்கிறது எந்த விதத்துல நியாயம்ன்னு கேட்ருந்தாங்க.!

கதைல மட்டும் இல்ல நிஜத்துலயும் எனக்கு செம்ம ஷாக்கு. இதுக்கு எப்படி நான் பதில் சொல்லுவேன்னு. இப்போ வரைக்கும் நான் யோசிச்சிட்டேன். நனியிதழ் கிட்ட செல்ல எனக்கிட்ட பதில் இல்ல.

உங்களுக்கும் பதில் தெரிஞ்சா சொல்லுங்க..

இந்த கதைல இன்னொரு மேஜிக் வச்சிருப்பாங்க. அதாவாது, ஒரு விவசாய நிலம். நல்லா நெல் எல்லாம் தங்க போர்வை மாதிரி சூப்பரா வளர்ந்துருக்கு. ஆனா ஆறு மாசமா உடமைபட்டவன் தான் வந்து அந்த நெல்ல அறுவடை செய்யனும்ன்னு இந்த வயல் காத்துகிட்டு இருக்குன்னு சொல்லிருப்பாங்க.  கதை தான நம்ம கற்பனை தான் என்னவேனா எழுதலாம்ன்னு நானும் இந்த சீன்ன முதல்ல கண்டுக்கல.

ஆனாலும் ஒரு டவுட்டு. அது எப்படி திமிங்கலம் ஒரு நெல் முத்து கூட கீழ விழாம காத்துருக்கும்ன்னு. அதுக்கு ஒரு விளக்கம் கொடுத்துருந்தாங்க பாருங்க. சூப்பரா இருந்தது!

என்னன்னா அந்த நெல் எல்லாமே மரபனு மாற்றம் செய்யப்பட்ட நெல் மணிகள். அதாவது எல்லா உயிர்களுக்கும் ஏஜிங் ஃபேக்டர்க்கு ஒரு ஜீன் இருக்கும் இத செயலிழக்க செஞ்சிருக்காங்கன்னு சொல்லிருக்காங்க. இது எப்படி நடந்துருக்கும்ன்னு கதைல நமக்கு புரியிற மாதிரி செல்லிருப்பாங்க. நான் இன்னும் கொஞ்சம் சிம்பிள்ளா என்னோட கற்பனைல சொல்றேன்.

அதாவது நம்ம உடல்ல உள்ள ஒவ்வொரு உறுப்பும் வளர காரணம் நமக்குள்ள இருக்க ஒரு வகையான ஜீன் தான் அது சரியா வேலை செய்ய செய்ய தான் நாம குழந்தைல இருந்து பெரியவங்களா ஒவ்வொரு நாளும் வளருவோம். இப்போ அந்த ஜீன வேலை செய்ய விடாம நிறுத்திட்டா நாம கடைசி வர குழந்தையாவே இருந்துருவோம்ல. அதே மாதிரி அது ஒரு பரிணம வளர்ச்சி அடையுதுன்னு வச்சிப்போம் (உதாரணத்துக்கு 10 வயசு வரை பச்சை கலரா இருக்கு 20 வயசு வரை மஞ்சள் 30 வயசு வரை ஆரஞ்சுன்னு இது என்னோட கற்பனை தான் உங்கள் புரிதலுக்காக) இப்போ மஞ்சள் நிறம் வரும் போது அது செயலிழக்குற மாதிரி அதோட மரபனுவ மாற்றம் செஞ்சிட்டா? நாம 20 வயசுல அப்படியே நின்றுவோம்ல. அது மாதிரி அந்த நெல்ல மாற்றம் செஞ்சிருக்காங்க.

இந்த டாபிக் இண்ட்ரெஸ்டிங்கா இருக்குல. இவங்க சொன்னது உண்மையான்னு எல்லம் நான் search and research பண்ணல. ஆனா லாஜிக்கா இது சரின்னு தோனுச்சு.

இப்போதைக்கு அவ்வளவு தான்.!

சீக்கிரமே என்ன ஷாக்காக வச்ச இன்னொரு கேரெக்டரோட அல்லது சம்பவத்தோட வரேன்.!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்