Loading

அத்தியாயம் 1

 

பள்ளிபருவ வயசில்  அனைத்தையும் அனுபவித்து கல்லூரி கால பருவங்களை  அனுபவிக்க தொடர்கின்றாள் நம்மளோட கதாநாயகி மிதுன்யா…. 

 

இவளின் முழு  நோக்கமும் கல்லுரியின்  வாழ்க்கை அனுபங்களை ரசிக்கனும் அது  மட்டும்  தான் இவளது  எண்ணம், ஆசை… 

 

இவளுக்கென்று  யாரும்  இல்லை.. அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள்..தன்  படிப்பை  அந்த ஆசிரமம்  படிக்க வைத்திருந்தாலும் பள்ளி பருவத்திலேயே படிக்கும்  போதே வேலைகளைப்  பார்த்து கையில்  காசு  சேர்த்துக்கொண்டாள்… 

 

கல்லூரி  படிப்பைத்  தொடரனும்  என்பதற்காக  ஆசிரமத்தில் இவளுக்கு ஆதரவாக  இருந்த பாதர், மதர்… சிஸ்டர்  ஒத்துழைப்பு கொடுத்து கல்லூரியில் சேர்த்து  விட்டார்கள்… 

 

மிதுன்யா  கல்லூரி வாழ்க்கையின் பயணத்தை  தொடரச்  செல்கிறாள்… 

 

கல்லூரி  வாசலில்  கால் வைத்து மனுசுக்குள்  பிரேயர்  பண்ணிட்டு  உள்ளே  நுழைய  மிதுன்யா  மேல்  பந்து  விழ, அத  எடுத்து  பார்த்தவள்… 

 

மறுபக்கம்  மூன்று  பெண்மணிகள் அவளை   கோபமாக  உற்று நோக்க  ,சாதுர்யமாக பேசி பந்தைக்  கொடுக்க வரும்  மிதுன்யா, அந்த  பந்தை  தட்டி எரிகிறாள் மெர்லினா… 

 

ஏய்… நீ  யாருடி.. என்னோட  பந்தை  தொடுறதுக்கு,

 

இல்ல… பந்து  என்  மேல  பட்டுச்சு அதான்  எடுத்துக்  கொடுக்க  வந்தேன்…. 

 

ஓ… என்  பந்து  உம்  மேல  பட்டிடுச்சுனு. குத்திக்  காட்டிறியா, பட பட பேச, 

 

ஏங்க சொல்ல தானே செய்றேன்.. அதுக்கு நீங்க இப்படி நடந்துக்கிறீங்க,…

  

பந்து  என்  மேல  பட்டதுக்கு ஒரு  ஸாரி  கூட  சொல்லவே இல்ல, பேச  வந்துட்டாங்க மூன்று  தண்டங்களும் என  முணுமுணுத்தாள்… 

 

இங்க  என்னோட  பந்து  எங்க  வேணாலும்  விழும் அத  யாரும்  அவங்க  கையால  தொடவேக்  கூடாது என்று  சொன்னாள்… 

 

மெர்லினா  கூடவே  இருக்கின்ற  தோழிகள், சாதனா, ப்ரீத்தி  இருவரும்  மெர்லினாவை அதிகமாக தூண்டினார்கள்… 

 

நீ. யாரு… உன்  பெயர்  என்னடி…. அருகில் இருந்த  மத்த  தோழிகள்  கேள்வி மேல் கேள்வி  கேட்டார்கள்… 

 

“My name, mithunia, I am joined today the College… ‘

 

இவங்க  இங்கிலீஷ்ல தான்  பேசுவாங்களே,ஒழுங்காக தமிழில் பேசுடி என  கை ஓங்க  சென்ற அவர்களின் கையைத் தடுக்க வந்தவள்  தான்  அகல்யா….

 

கேட்கறதுக்கு ஆள்  இல்லைனு  நினைச்சீங்களா!…

 

ஒருத்தி தனியாக  வந்துட்டா  போதுமே, உங்களோட  பவர்  காமிச்சிடுவீங்களே, 

 

ஏய்… அகல்யா… என  விரலை நீட்டி  பேச  வந்த  சாதனாவை,….

 

.அட… ச்சீ… உன்னோட  பூச்சாண்டி  வேலையை  வேற  யாரிடமாவது வச்சுக்கோ  என்கிட்ட  காட்டாதே,… எரிச்சலுடன்  பேசிட்டு  சென்றாள்  அகல்யா… 

 

அகல்யாவைப் பார்த்ததும் ஏதோ  ஒரு  ஆனந்தம்  வந்தது போல உணர்வு எப்போதும் இந்த மாதிரி உணர்வை அனுபவித்ததே இல்லை…. 

 

ம்ம்ம்….. ஏம்மா, அவங்ககிட்ட உனக்கு  என்ன  பேச்சு, 

 

நான்  புதுசா  சேர்ந்து இருக்கேன்….என்றாள்   மெல்லிய  குரலில்  மிதுன்யா… 

 

கொஞ்சம்  சத்தமாக  பேசு… என்னிடம்  பயப்பட  வேண்டாம்… 

 

நீ  இப்போது  தான் first year…. OK…. 

I’m agalya…. you name…. 

My name mithunia….. 

Oh nice…. 

 

இனிமேல்  அந்த  மூன்று  கேடி  பெண்களிடம் ஜாக்கிரதையாக இருந்துக்கோ… 

 

..ஏன்?… சிஸ்டர்…அவங்க  மோசமானவங்களா.. 

 

இல்லம்மா…. அவங்க  எல்லாரும்  second Year  படிக்கிறாங்க, நம்ம  கல்லுரிக்கு வரும்  பெண்களை மட்டும்  ராக்கிங்  பண்ணுவாங்க,… 

 

அப்படிப்பட்ட  கேடி…. நீ.  எப்போதும் அவர்களிடம்  பேசிராத… எதாவது  பேசி  உன்னை  வம்புக்கு இழுக்க வாய்ப்பு இருக்கு… 

 

ம்ம்ம்… சரிக்கா…. 

    கிளம்புறேன்  …என்னோட  கிளாஸ்க்கு… நீ  பார்த்து  போம்மா,… 

 

மிதுன்யா  அகல்யாவைப்  பார்த்ததும்  எந்த ஒரு  உணர்வு  தோன்றியதோ, அதே  போல  தான்  அகல்யாவுக்கும்  அப்படி  தோணுச்சு…. 

 

வீட்டில்  தன்னோட  அறையில் காபியைக்  குடிக்காமல்  வேறோரு  சிந்தனையில் இருந்த அவளை அகல்யாவின்  அம்மா நவதாரணி… 

 

அகல்யா…. அகல்யா… என்னம்மா… ஏன்.. ஒரு  மாதிரியாக  இருக்கிறாய்!… 

 

ஒன்னுமில்ல… சும்மா தான்…. 

 

“எனக்கு  தெரியாது  உன்னைப்  பத்தி… ஒழுங்காக சொல்லு  …காலேஜில்  என்னது  நடந்துச்சி ‘

 

அது  எப்படிம்மா… கரெக்ட்டாக  சொல்றீங்க, 

 

எம்  பொண்ண  பத்தி  எனக்கு  மட்டும்  தான்  தெரியும்…. 

 

ஓ… அப்படியா… அப்போம்  எத  பத்தி  யோசிச்சுட்டு இருக்கேன் என்று  சொல்லுங்க பார்ப்போம்…. 

 

அப்படியா… உங்க  காலேஜில் ஏதாவது  புதுசா  நடந்துருக்கனும்  அப்படி இல்லையென்றால்  நீ  யாரையாவது மீட்  பண்ணிருப்ப, 

 

எஸ்… மம்மி…யு… கிரேஸி… யு… பிர்லியண்ட் 

…ஒரு  பொண்ண  பார்த்தேன்… அவ  பெயர்  மிதுன்யா… ரொம்ப  அமைதியான பொண்ணு… காலேஜிக்கு முதல்முதலாக வந்திருக்க அதுவும்  First Year… 

 

அந்த  மிதுன்யா சாந்தமாக பெண்களிடம்  பேசிக்கிட்டு  இருந்தா, அத  புரிஞ்சிக்காத மூன்று பேரும் அடிக்க  கை  ஓங்க  அதுக்குள்ளும்  நானே  போய்  தடுத்துட்டேன்…. 

 

அந்த புள்ளயை   அடிக்க வரும்  போது  அவ  என்ன பண்ணிட்டு இருந்தா, 

 

அம்மா அவ  பயப்படாமல்  எதிர்க்க அவங்கள  பார்த்துட்டு தைரியமாக  நின்றாள்…. 

 

ஆனால்…. மிதுன்யாவை அடிக்க  விடாமல்  அவளை  கைப்  பிடிச்சு  இழுத்துட்டு வந்துட்டேன்… 

 

மிதுன்யாவை  கை பிடிச்சு கூட்டிட்டு  வரும்  போது  ஏதோ  ஒரு  உணர்வு  …அது  தாம்மா என்னன்னு  தெரியல….. 

 

அவளிடம் பேசும்  போது  மட்டும் பேசிக்கிட்டே  இருக்கனும் போல  தோணுது…அத பத்தி  தான்  யோசித்துக் கொண்டிருக்கிறேன்…ஆனால்  அவளுக்கென்று  யாரும் இல்லயா!.. அனாதை  ஆசிரமத்தில் வளர்ந்தவள்  என்பதை  அவளது  அட்மிஷனில்  தெரிந்து கொண்டேன்… 

 

மிதுன்யாவிடம்  இத  பத்தி கேட்கல… பாவம்…அதுவும் காலேஜிக்கு முதன் முதலாக வந்திருக்கா, அவளை  வருத்தப்பட வைக்கக்கூடாதுனு  நினைச்சேன்… 

 

ம்ம்ம்… இப்படித்தான்  இருக்கனும்  அகல்யா.. அந்த  பொண்ண  கஷ்டப்படுத்தக்கூடாதுனு  நினைத்தாயே, வெரி குட்… 

 

மம்மி….நான்  உங்கள  மாதிரி… உங்களுக்கு  இருக்கிற குணம்  தான் எனக்கும்  என பேசினாள்… 

 

நவதாரணி சற்றும்  யோசிக்கவே… நமக்கு இன்னொரு  பெண்  குழந்தை  பிறந்தது  அத  ஆசிரமத்தில்  விட்டுட்டு  வந்தேன்  ஒரு வேளை அந்த  பெண்ணாக  இருக்குமோ…என  மனதில்  பல  எண்ணங்களும் சிந்தனைகளும்   ஓடியது….. . 

 

அகல்யா பேசிக் கொண்டிருக்க  கவனிக்காமல் இருப்பதைப் பார்த்து மறுபடியும் அம்மா… அம்மா… என்ன  யோசனையில்  இருக்கீங்க, ஒன்னுமில்ல நீ காபி  குடி  அடுப்பில்  வெந்நீர்  வைச்சேன்… 

 

அந்த  யோசனையில் இருந்தேன்…இரு…. வரேன் என்றாள்  நவதாரணி… 

 

அம்மா எந்த ஞாபகத்தில்  இருக்காங்களோ!… அடுப்புல எத வைச்சாலும்  மறந்து  விடுறாங்க !!!..

 

ச்சே…. எப்போதும் எனக்கும்  முதல்  மகள்  நினைவுக்கு  வருது…. 

 

   கடவுளே!.. நான்  செய்த  தவறால்  அந்த  பெண்ணை  ஆசிரமத்தில்  போட்டுட்டு வந்துட்டேன்… 

 

    இது  என்னோட  கணவருக்கு மட்டும் தெரிந்த ஒன்றுஎன் மகனுக்கும், பெண்ணுக்கும்  தெரிந்தால்  அந்த  இருபிள்ளைகளும்  என்னைப்  பத்திஎன்ன  நினைப்பார்களோ ,அத நினைச்சு பார்க்கவே  பயமாக இருக்கு,..என  தலை  பிய்த்து கொண்டாள்… 

 

தாரணி ,…என.  பின்பக்கம்  அழைத்தார் நிவாஸ்…. ஏங்க…எனக்கு  பயமாக  இருக்குது என்று  கட்டிப்பிடித்து அழுதாள்…. 

 

யாருக்குமே,இது தெரியாத ஒன்று  இத நினைத்து எதுக்காக அழற.. நடக்கிறது நடக்கும்… அதனால் பயப்படாமல் இரு…. நேரம்  வரும் போது  நம்ம  பிள்ளைகளுக்குத் தெரிய  வரும்.. அதுவரைக்கும் நம்ம  மூத்த பெண்  வருகிற  வரைக்கும்  மன வருத்தத்தில் இருப்பதை விடு… என  ஆறுதல்  சொன்னார்  .. 

 

அவளைப் பத்தி ஏதாவது  அடையாளம்  தெரிந்தால் கண்டிப்பாக  விரைவாக கண்டுபிடித்து விடலாம்…. சொல்லும்மா!.. ஏதாவது ஞாபகம்  இருக்கா, 

 

ம்ம்ம்… இருக்குங்க….அவள் பிறந்த போது கையினில்  ஆறு  விரல்  மட்டும்  இருக்கும்… டாக்டரே  சொன்னாங்க, அதுவும் தேதி நல்லா நினைவு  இருக்கு  . தீபாவளிக்கு மூன்று  நாள் முன்பு…. 

 

சரி,தாரணி..கூடிய  சீக்கிரத்தில்  மூத்த  பெண்ணை  கண்டுபிடிச்சுடுவோம்… 

 

ஹாஸ்டலில் அனைவருக்கும்  சாப்பாடு  நேரம்  வந்தது… மிதுன்யா புதுசு என்பதால் பதற்றத்துடன் சென்றாள்

   மிதுன்யா  துணைக்கு யாரும்  இல்லையே என்றதொரு கவலை…. 

… 

அவளுக்கென்று  தோழிகள்  யாரும்  இல்ல… அதனால்  அமைதியாக  சாப்பிடச்  சென்றிருந்தாள்…. 

 

தனியாக  உட்கார்ந்தாள்..கேண்டினில் அனைவரும் அவளை  உற்று  நோக்க இவள்  யாரையும்  பார்வையிடாமல் தலைகுனிந்து இருந்தாள்…

 

சாப்பிடுபவர்களுக்கு தட்டை  வைத்துக் கொண்டு  வந்த  சமையல்  அம்மாவிடம் அவளுக்கு மட்டும்  வைக்காதீங்க என்று  சொல்லி தட்டை  வாங்கி  வைத்துக் கொண்டாள்… 

 

சமையல்  செய்யும் அம்மா, எதுக்காக அந்த பெண்ணோட  தட்டை  வாங்கிட்ட, 

 

உங்க  வேலை எதுவோ அத  மட்டும்  செய்யுங்க, போங்க.  என  மிரட்டி  விட்டாள்… 

 

அந்த  அம்மாவும்  தட்டை  எல்லாருக்கும்  வைச்சுட்டு அவளுக்கு மட்டும்  வைக்காமல் சென்றார்கள்…

 

மிதுன்யா  அந்த  அம்மாவை  கூப்பிட்டு எனக்கு  தட்டு இல்லையா, புதுசா  வந்திருக்கேன்… 

 

அதுவந்து  …உன்  தட்டை  அவங்க  வாங்கிட்டாங்க,என்று கையை நீட்டினார்கள்….

 

மிதுன்யா  திரும்பி பார்த்தாள்… மெர்லினாவும் அவளுடைய  தோழிகளும் கூடவே  ஜோடி  போட்டு  வந்தார்கள்… 

 

இவுக  தானா, மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்களா, இவங்களுக்கு என்னைப் பத்தி  சரியாக  தெரியல  ,இப்ப  நான்  யாருனு  காட்டுவோம் என்றாள்  ..

 

அதுக்குள்ளேயும் கிச்சன்  மாஸ்டர்  நுழைந்து  விட்டார்… 

 

ஏய்… ப்ரீத்தி… மெர்லினாவை  தட்டைக் கொடுக்க  சொல்லு…மாஸ்டர்  வந்துட்டாங்க,…  அவ்வளவு  தான்… 

 

நம்ம  principalகிட்டComplaint  பண்ணிருவாரு… அவகிட்ட கொடுத்துரு என்று தட்டை  வாங்கி மிதுன்யா  முன்பு  வைத்து  மூன்று  பேரும்  சாப்பிட உட்கார்ந்தார்கள்…. 

 

சிடுமூஞ்சு மாஸ்டர்  வந்துட்டாங்க,..வாங்கடி  சாப்பிடுவோம்  என மனசுக்குள் திட்டி தீர்த்தார்கள்…. 

.

உள்ளே  நுழைந்த  சமையல் மாஸ்டர், புதுசா  வந்துக்கிறவங்க எந்திரிங்க என்று  சத்தமிட்டார்… வேகமாக  எழுந்தாள்  மிதுன்யா…. 

 

மாஸ்டர் நான்  தான்  புதுசு…

 

ஓ.. கே….இனிமேல்  சாப்பிட உள்நுழையும்  கையெழுத்திட்டு  வரனும்  புரியதா?.. 

 

மும்…. புரியுது சார்…. என  இழுத்து  பேசினாள்… வேற  யாராவது  கையெழுத்து  போடாமல்  வந்துருக்காங்களா, 

 

எதிர்த்த டேபிளில்  மறைமுகமாக உட்கார்ந்து இருந்த மூன்று  பேரையும்  போட்டுக்  கொடுத்து விட்டாள்… 

 

யாரும்மா,.. கையெழுத்து போடாமல்  உட்கார்ந்து இருக்கிறது..எந்திரிங்க  ஓங்கி  சத்தம்  கொடுக்க  மூவரும்  எழுந்து நின்றார்கள்…

 

மாஸ்டர்  பார்த்துட்டு  நீங்களா  ,உங்கள  தானே  இரு  நாட்கள்  முன்பு  சாப்பிட  உள்ளே  வரக் கூடாதுனு principal  கூறியிருந்தார்…

 

நீங்க  எப்படி உள்ளே  நுழையலாம்… இப்படி யாரிடமும் பர்மிஷன்  கேட்காமல்  வருவீங்கா, கொஞ்சம்  கூட  அறிவில்ல,,… என்று  எல்லாரும் முன்பு  திட்டினார்… 

 

கெட், அவுட்…. என்று  கூறினார்… 

 

மிதுன்யாவை  பார்த்த  மாஸ்டர்  ,பாராட்டினார்கள்… 

 

வெரி.. குட்… மா… உட்காரு…. சாப்பிடும்மா!..

 

மிதுன்யாவும்  வந்த  நாள்  அன்று  பாராட்டு  வாங்கியதை  பெருமையாக  நினைத்து  சந்தோஷமாக  இருந்தாள் …


இனியும்  வருவாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. ஆரம்பம் அருமை!!!.. எழுத்து பிழைகள் செக் பன்னிக்கோங்க சிஸ்!!!. உரையாடலில் யாரு யாருட்ட பேசுறாங்க இன்னும் தெளிவா கொடுக்கலாம்!!!.. Alignment once chl panni upload pannunga sis!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்💖