Loading

திசைகள் நான்கும் உன் நினைவுகள்
ஆழியாய் சூழ்ந்து என்னைத் தனித்தீவாய் மாற்றியதும் ஏனோ

விழி தொட்டும் மீளும் இடங்களிலும்
என்னை பார்த்தும் புன்னகைக்கும்
உன் வதனமும் காட்சியாவதும் ஏனோ

அமைதியின் ஏகாந்தத்திலும்
தனித்துவமாய் உன் குரல்
ஒலிப்பதாய் தோன்றுவதும் ஏனோ

தனிமைச் சிறையின் பொழுதெல்லாம்
ஆழமாய் என்னை ஆட்டிவைக்கும்
அலையாய்  நீ மாறியதும் ஏனோ

உன் மௌனத்தின் பக்கங்களையும்
அழகாய் மொழிபெயர்க்க 
என்னை மாற்றியதும் ஏனோ

தடம் மாற்றும் தனிமையிலிருந்து
தப்பித்துச் செல்ல முடியாமல் என்னை
தடுத்தாட்கொண்டதும் ஏனோ

தனித்தனி பக்கங்களாய்
தன்னந்தனித் தீவில் என்னை
தனித்திருக்க வைத்ததும் ஏனோ

ஆழி சூழ் உலகில் ஆழமாய் உன்
நினைவுகள் சூழ இன்னும் இன்னும்
என்னை காதலிக்க வைத்ததும் ஏனோ

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்