Loading

உனது வெம்மையால் நான் செம்மை பூத்தேன்..!
உன் நேசத்தால் நான் சுவாசம் பெற்றேன்..!
உயிரில் கலந்து உனதாக காத்திருக்கிறேன்.!
உன் செம்மையால் நான் நாணா விட்டாலும் என் வெண்மையில் உன்னை பணியச்செய்வேன்…
இல்லை உன்னுள் பணிவேன்..!

அந்த கல்யாண மண்டபமே கல்யாண வேலையில் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது. மணமகள் வெண்மதி  அந்த மேடையில் மணமகளாக அமர்ந்து தன் மணங்கவர்ந்தவனை ஒவ்வொரு முறையும் தன் பார்வையால் தீண்டிக்கொண்டு இருக்கிறாள்.

மணமகன் காதில் அவனின் நண்பன் விஸ்வா “டேய் வேதா..!கொஞ்சமாவது சிரி டா..! பவாம் டா அந்த பொண்ணு நீ சிரிப்பன்னு உன்னையே பாத்துகிட்டு இருக்கா.!” வேதகீதனின் சிறு கோபப்பார்வையில் அவனின் வாய் பூட்டிட்டு கொண்டது.

சிறிது நேரத்தில் ஐயர் “ஹான்.. கெட்டிமேளம் கெட்டிமேளம்..! மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” என்று மந்திரம் கூற அருகில் இருக்கும் வெண்மதியை தன் செம்மை பார்வையால் எரித்து கொண்டே அவளின் கழுத்தில் மூன்று முடிச்சுகள் இட்டான்.

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து விட்டு வேதகீதனின் மனைவியாக அவனின் வீட்டிற்குள் நுழைக்கிறாள் வெண்மதி..

வேதாவின் அறையில் வேதகீதன் திருமணத்திற்கு முன் நடந்த நிகழ்வுகளில் திளைத்திருந்தான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு…!

இரு சக்கர வாகனத்தில் வெண்மதி அதி வேகத்தில் கத்தி கொண்டே சென்று கொண்டு இருந்தாள்.

வெண்மதி“டேய்.. நில்லுடா..! டேய் உன்னதான் டா! டேய் வேதா.. !” என்றவுடன் திடீரென்று தன் பிரேக்கை அழுத்தினான் வேதகீதன்..” என்ன டா..! நீ பாட்டுக்கு என் வண்டிய தள்ளிவிட்டு போய்கிட்டே இருக்க.? அறிவு இல்ல. மண்டைல ஏதாவது இருக்கா.? ஒழுங்கா வண்டிக்கு ஆன சேதாரத்தை சரி பண்ணிட்டு போ..இல்ல!” என்று தன் முஷ்டியை முறுக்கியவாறு அவனின் முன் கத்திக்கொண்டு இருந்தாள்.

அவன் அமைதிகாக்க, அவளின் தோழி வினயா “ஏய்..! மதி.. கொஞ்சம் சும்மா இரு டி..அதான் வண்டிக்கு ஒன்னும் ஆகலயேடி. ஏன் டி நடு ரோட்டுல கத்திக்கிட்டு இருக்க”

வெண்மதி “நீ சும்மா இரு டி..என்ன தெனாவட்டு பாரேன்.. செய்றதும் செஞ்சிட்டு ஹெல்மட்ட கூட கழட்டாமா வேடிக்கை பாத்துகிட்டு இருக்கான் டி”

வேதா ஹெல்மட்டை கழட்டி விட்டு அவளை ஓர் கூர்பார்வை பார்த்து விட்டு பளாரென்று அறைந்து இருந்தான். அதற்கு மேல் அவளின் வாய் ஒட்டிக்கொண்டு விட்டன.

வேதா:”ஏய்..! சும்மா நிறுத்து டி! எப்ப பாரு நொய்நொய்ன்னு.. இப்ப என்ன உன் வண்டிய இடிச்சத்துக்கு காசு வேணுமா.? எவ்ளோன்னு சொல்லி வாங்கிட்டு போ.! ஆனா இனிமே என் கண் முன்னால வந்துடாத..அப்ரோம் இன்னொரு கன்னமும் வீங்கிடும்.” என்று விட்டு தன் வண்டியில் புறப்பட்டு சென்றான்.

வினயா வெண்மதியின் வண்டியில் அமர்ந்து கொண்டே ” ஏய்..ஏன்டி தேவ இல்லாம அவங்க கிட்டக்க வம்பிழுத்துகிட்டே இருக்க?”

வெண்மதி வண்டியை கிளப்பிக்கொண்டே “ப்ச்.. வேற என்னாடி பண்ண சொல்ற.? நானும் என் லவ்வ சொல்லி ரெண்டு நாள் ஆகுது..பய ஒரு வார்த்தை சொல்றானா பாரேன்.? எப்ப பாரு மூஞ்ச உர்ர்ர்ன்னு வச்சிக்கிட்டு”

வினயா“மதி நிஜமாவே நீயா டி இது.? காலேஜ்ல உனக்கு எத்தனை பேர் ப்ரபோஸ் பண்ணி இருக்கானுங்க.? அவங்களலாம் நீ கண்டுக்கவே இல்ல..ஆனா இவன் பின்னாடி நீ இப்டி சுத்துற.? என்னால நம்பவே முடியல மதி”

வெண்மதி“அவங்களாம் என் பின்னாடி சுத்துனாங்க டி..ஆனா இவன் இவன் மட்டும் தான் என்ன இப்டி டார்ச்சர் பன்றான்..ரெண்டு வருஷம் இவன் பின்னாடி சுத்தி முந்தாநாலு தான் லவ்வ சொன்னேன்.. மனுசன் மதிக்கவே மாட்டிங்குறான். வினய்..”

வினயா“இது எப்படி ..? நானும் மூணு வருசமா உன்கூட தான் டி இருக்கேன். எனக்கே தெரியாம எப்போ டி பாலோவ்லாம் பண்ண.? ப்ரொபோஸ் பண்ணப்ப கூட என்கிட்ட நீ இன்போர்மஷன் தான டி தந்த.? ” என்று அதிர்ச்சியில் ஆரம்பித்து  கோவமாய் முடித்தாள்.

வெண்மதி:”ஈஈஈ..என்று அசடு வழிந்து, வினய் நான் ஏன் இப்படி அடாவடித்தனம் பண்றன்னு நீ கேட்கவே இல்ல டி?”

வினயா“அது வேற கேட்கணுமா.?.. சொல்லும் சொல்லித்தொலையும்”

வெண்மதி“நான் உன்கிட்ட என் கனவுல ஒருத்தன் ரொம்ப டிஸ்டர்ப் பண்ரான்னு சொன்னேன்ல அந்த ஆணழகன் வேற யாரும் இல்லை இவன் தான்..” என்று கண் சிமிட்டி கூறினாள்

வினயா“அதுக்கு இவ்ளோ அடாவடி தேவையா டி.?”

வெண்மதி“வினய்..சூரியன் சுட்டு எரிக்குதுன்னு அதோட வெப்பத்தை பாத்து பயந்தா எப்டி டி.? அவன் சூரியன் டி.. நான் மதி.. அந்த நிலா எப்டி சூரியன் கிட்ட இருக்க வெப்பத்தை தாங்கிக்கிட்டு குளுமையை எல்லாருக்கும் தருதோ அதே மாதிரி அவன் என்ன எவ்ளோ வெறுத்தாலும் நான் அன்ப மட்டும் தான் டி தருவேன்.”

வினய்“அட நாச்சியப்பா..என்ன ஏன் இப்படி அரைமெண்டல் கிட்டலாம் பழக விட்டு வேடிக்கை பாக்குற ?” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

வெண்மதி“யாரு டி அது நாச்சியப்பன்.? உங்க அப்பா பேர் அது இல்லையே” என்றாள் யோசனையாக,

வினயா:”அது எங்க தாத்தா டி அந்த மனுசன் எங்க அப்பாவ பெத்தார்.. அவர் என்ன பெத்து லூசுகூட லாம் பழக விட்டு வேடிக்க பாக்கிறாரு..அப்டி என்ன தான் இந்த லவ் ல இருக்கோ எனக்கு தெரியல.. காதலுக்கு கண்ணு இல்லன்னு சொல்லுவாங்க..மூளை கூட இல்லன்னு உன்னை பாத்து தான் டி தெரிஞ்சிக்கிட்டேன்”

வெண்மதி:”ஏய்.. என்ன கொழுப்பா.? நானும் எத்தனை நாள் டி சிங்கிள்லா இருக்குறது.? நாமளும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறனும்ல?”

வினயா“ஏறலாமே நல்லா முன்னேறலாமே.. இப்போ நாம கோவில் மலை ஏறலாமா.?..  இருவரும் பேசிக்கொண்டே வண்டியில் மலைமேல் வீற்றிருக்கும் முருகனை தரிசிக்க வந்து இருந்தனர்.

வெண்மதி“வினய்..வினய்..வினய்.. இங்க பாரு டி..”

வினய்:” இப்போ ஏன்டி என் பேர ஏலம் விட்ற.?”

வெண்மதி:”அங்க பாரு டி.. வேதா வண்டி நிக்குது..அப்போ அப்போ.. அவன் இங்க தான் இருக்கான்.. முருகா.. எப்படியாவது அவன் என் காதலை ஏத்துக்கணும்.. அப்டி அவன் ஒத்துகிட்டா.. என் பிரண்ட் வினய்ஓட கொழந்தைக்கு இங்கேயே மொட்டை அடிக்குறேன் முருகா..”

வினய்:”அடியே கிராதகி..! உன் லவ் சக்சஸ் ஆக என் குழந்தைக்கு ஏன் டி மொட்டை அடிக்குற.? முருகா பாவம் வேதா அண்ணா.. இவகிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்த படுறாங்க” என தலையில் அடித்து கொண்டாள்.

இருவரும் மலை மீது ஏறிக்கொண்டு இருந்தார்கள்.

மலை மீது..

விஷ்வா:”டேய்..! ஏன் டா இப்டி இருக்க? அவளா லவ் வ சொல்லணும்ன்னு தான நீ மூணு வருசமா வெய்ட் பண்ண.. அதான் அவ அக்செப்ட் பண்ணிக்கிட்டால அப்ரோம் என்ன டா உனக்கு பிரச்சனை.? ஏன் டா அவள இப்டி ஹர்ட் பண்ற.?”

வேதா:”டேய் நானும் லவ் பன்னேன் தான் டா !  இல்லன்னு சொல்ல.. ஆனா நான் எப்பவோ எங்க அம்மாக்கு அவங்க பாக்குற பொண்ண தான் கல்யாணம் பன்னிப்பன்னு சத்யம் பண்ணிட்டேன் டா..அது இப்போ பெரிய பூகம்பமா கண்ணு முன்னாடி வந்து நிக்குது..”

விஷ்வா:”டேய் என்ன டா சொல்ற.? என்ன டா சின்ன பையன் மாதிரி லூசு தனமா காரணம் சொல்ற.?”

வேதா:”டேய் எங்க அம்மாவ பத்தி உனக்கே தெரியும் ல டா..அண்ட் தென் நான் முதல் முதல மதிய பாகுறப்போ இருந்த சைலேண்ட் இப்போ இல்ல டா.! சம்திங் அவ நெறய சேன்ஞ் ஆகி இருக்கா டா!”

விஷ்வா:” என்ன டா ! என்ன என்னமோ சொல்ற.? அப்போ அவள உனக்கு புடிகலயா.?”

வேதா: சிரித்துவிட்டு, “அப்போ விட இப்போ அவள ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு டா! யூ நோ.. இந்த முருகன் கோவில்ல தான் அவளை நான் பர்ஸட் டைம் மீட் பன்னேன்..”

விஷ்வா“அப்போ ஏன் டா அவள அலைய விட்ற .? வீட்ல பேசி புரிய வைக்கலாம் ல டா!”

வேதா:”அலையலாம் விடல டா!  இப்போ அவ படிச்சிக்கிட்டு இருக்கா..அதுவும் ஹாஸ்டல் ல .. அவ அப்பாஅம்மா அவமேல நம்பிக்கை வச்சு தான இவ்ளோ தூரம் படிக்க வைக்குறாங்க.! படிக்கட்டும் டா.. நானும் அதுக்குள்ள அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்கி அப்ரோம் அவ கிட்ட சொல்றேன்” என்றான் புன்னகையுடன்.

தான் மாறி விட்டதாய் அவன் சொன்னதை கேட்ட அடுத்த நொடி பெண்ணவள் வரவழைத்த புன்னகையுடன் அவ்விடம் விட்டு சென்று இருந்தாள். ஆண்கள் இருவரும் கடவுளை தரிசித்துக்கொண்டு இருக்க , அவர்களின் எதிரில் பெண்கள் இருவரும் கண்களை மூடி வேண்டிக்கொண்டு இருந்தனர்..

வெண்மதியும் வேதாவும் ஒரு சேர கண்களை திறக்க, இரு விழிகளும் ஒன்றை ஒன்று கூர்ந்து நோக்கின..

மதி அவனை கண்டும் காணாதவள் போல் வினய் உடன் சென்று விட்டாள். இங்கு வேதாவோ ஆழ்ந்த குழப்பத்தில் இருந்தான். “சிறிது நேரத்திற்கு முன் தன்னிடம் பேசிய அந்த மதி வெண்மதி..இப்போது தன்னை கண்டும் காணாதது போல் செல்வது ஏன் ? இந்த இடைவெளி எதற்கு.?” என்று எண்ணி தலையை பிடித்துகொண்டு ஒரு இடத்தில் அமர்ந்தான்.

வினயா: “ஏய் மதி என்ன டி ஆச்சு.? ஏன் டி அமைதியா இருக்க.? வேதா அண்ணாவ பாத்தும் பாக்கதது மாதிரி ஏன் டி வந்துட்ட.?”

வெண்மதி:”நான் மாறிட்டேன்னு சார்க்கு தெரியுது. ஆனா அவனுக்காக தான் மாறினேன்னு ஏன் டி அவனுக்கு புரியல.? சேஞ் ஆயிட்டேன்னாம்ல..இனிமே அவன்கிட்ட பேசி என்ன டி ஆகப்போகுது.? இந்த லட்சணத்துல என் பின்னாடி மூணு வருசமா சுத்தனான்டி”

வினயா:”என்னது மூணு வருசமாவா? என்ன டி நீ எனக்கு இன்னைக்கு சாக் மேல சாக் தர.?”

வெண்மதி:”அதுலாம் ஒரு காலம் டி.. அவனே என்ன அவோய்ட் பண்ண முடியாம கல்யாணம் பன்னிப்பான் பாரு.”

வினயா:”என்ன டி சொல்ற.? என்ன பண்ண போற.?”

வெண்மதி:”ஜஸ்ட் வெய்ட் அண்ட் வாட்ச்.”
என்று விட்டு இருவரும் தன் விடுதிக்கு சென்றனர்.

வேதாவின் அறையில்…

விஷ்வா:”டேய் என்ன டா ஆச்சு.? மறுபடியும் ஏன் டா இப்டி இருக்க.?”

வேதா:”டேய் இப்போ அவ கோவில்ல பாத்தோம்ல டா.? ஏன் டா அவ அமைதியா இருந்தா.? எதுவுமே என்கிட்ட பேசல.? என்ன பாத்தும் பாக்காத மாதிரி போய்ட்டா.?”

விஷ்வா: அவன் சொற்களில் கடுப்படைந்தவன் “டேய் நீ தான் டா அவ சைலேண்ட்டா இருக்கணும் னு சொன்ன! இப்போ ஏன் அவ அப்டி இருக்கான்னு சொல்ற.? அவ எப்டி டா இருக்கணும்.? பாவம் டா அந்த பொண்ணு உன்ன கட்டிக்கிட்டு படாதபாடு பட போறா.!”

வேதா:”நான் அவளை பாக்கணும் டா! இப்போவே!”

விஷ்வா:”என்ன டா விளையாடுரியா.?நேர்ல வந்தா அவள அடிச்சு விரட்டுற.. மூஞ்சுலயே முழிக்காதன்னு சொல்ற.. இப்போ என்னடான்னா உடனே பாக்கணும்ன்னு சொல்ற.?”

வேதா“அவள பாக்காம என்னால இருக்க முடியாது டா… அவ இல்லாம நான் இல்லை..மூணு வருசமா அவள பாக்காம நான் ஒரு நாள் கூட இருந்தது இல்லை டா..ப்ளீஸ் டா!” என்று முகத்தை பாவமாக வைத்து கேட்டான்.

விஷ்வா:”நாளைக்கு அவளே உன்னை தேடி வருவா.. ஒழுங்கா லவ்வ சொல்லு..அவ்ளோதான் நான் சொல்லுவேன்”

வேதா“வருவாளா டா.?”

விஷ்வா“டேய் படுத்தாத டா.. வருவா! பேசமா தூங்கு”என்று விட்டு தூக்கத்தை தழுவினான் விஷ்வா.. ஆனால் வேதாவிற்கோ தூக்கம் வருவேனா என்று இருந்தது.. அவளின் பாரா முகம் இவனது தூக்கத்தை தன்னிடம் பெற்று கொண்டது..

ஒரு வாரமாக அவள் அவனை தொந்தரவு செய்யவில்லை..அவனோ அவளை காணாமல் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் காதலின் பிடியில் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருந்தான். இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் எப்போது முடியும் என்பது யார் அறிவாரோ?

ஒரு வாரம் கழித்து…

செம்மை மிகுந்த என்னவனே..!
என் மென்மையை நீ சீண்டி விட்டதால் வளர்ந்த என் முகம் தற்போது தேய்ந்து கொண்டு வருகிறது. !
தேய்ந்த முகமோ தேய்பிறை ஆகி விட
வளர்கிறேன்..வருகிறேன்.. உன்னைக்காண…
பௌர்ணமி எனும் வெண்மதியாய்..!

நேரில் காணாத தன்னவளை கனவில் கண்டு கொண்டு இருக்க, அவனின் கனவை கலைக்க வேண்டும் என்றே அலைபேசி அலறியது.. அதை எடுத்தவன் வரவழைத்த மென்னகையுடன்.. “சொல்லுங்க மா!.. என்ன மா காலைல இவ்ளோ சீக்கிரம் போன் பண்ணி இருக்கீங்க.?” மறுபுறம்”கண்ணு வேதா..! உடனே ஊருக்கு கிளம்பி வா டா! அம்மா எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா..? நீ எனக்கு குடுத்த கடமையை முடிக்க போறேன் டா..”

வேதாவிற்கு ஓரளவு புரிந்தாலும் முகத்தில் கலவரத்துடன் “என்ன மா சொல்றிங்க.? எனக்கு ஒன்னும் புரியல..”

அம்மா“டேய்.. அம்மா பாக்கிற பொண்ண தான் கல்யாணம் செய்துப்பன்னு சொன்னல.. அம்மா உனக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு பாத்துட்டேன் டா.! நாளைக்கு உனக்கு நிச்சயதார்த்தம்”

தன் அம்மா தனக்கு பெண் பார்ப்பார்கள் என்பது அவன் அறிந்ததே..ஆனால் அது நிச்சயம் அளவிற்கு செல்லும் என்பது அவனால் ஏற்று கொள்ள முடியாத நிலை. அவன் பதில் ஏதும் பேசாமல் ம்ம் என்று மட்டும் சொல்லிவிட்டு அலைபேசியை வைத்தான்.

வேதா யோசனையில் மூழ்கி இருக்க, விஷ்வா அவனின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான். வேதா:”ஸ்ஸ்ஸஆஆஆ..! ஏண்டா எருமை என்ன இப்டி அடிக்குற..? கூப்பிட்டா நான் திரும்ப மாட்டேனா.?” என்று முதுகை தடவியபடி கூறினான்.

விஷ்வா:”என்னது கூப்டாவா?.. டேய்.. எவ்ளோ நேரம் டா உன் பேர ஏலம் விடுறது.. நீ திரும்பவே இல்ல.. அதான் அடிச்சேன். என்ன பலத்த சிந்தனை?”

வேதா“அம்மா எனக்கு பொண்ணு பாத்துட்டாங்களாமா டா.! நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தமா..உடனே கிளம்பி வர சொல்றாங்க டா!”

விஷ்வா:”என்னது நாளைக்கு நிச்சயமா.? டேய் உங்க அம்மா உன்ன விட பாஸ்ட் டா.. எனிவே மச்சான்.. கங்கராட்ஸ்…பேச்சலர் பார்ட்டிலாம் தருவல டா..?” என்று கேலி புன்னகையுடன் கேட்க,

வேதா:”என்ன விளையாட்டா.? இந்த கல்யாணத்தை நிறுத்த ஒரு வழி சொல்லு டா? எனக்கு என் மதி வேணும்”

விஷ்வா:”யோசிக்க வேண்டிய விஷயம்.. நீ மதி கிட்ட பர்ஸ்ட் லவ் வ சொல்லு டா.. அப்ரோம் நேரா அவள அம்மா முன்னாடி நிறுத்தி பேசிடலாம்”

வேதா:”லவ்வ சொல்றது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அம்மா முன்னாடி அவள நிறுத்துறதா..? பூகம்பத்துல இருந்து தப்பிக்க வழி கேட்டா..நீ சுனாமில மாட்ட வழி சொல்ற.?”

விஷ்வா:”மிஸ்டர்.வேதகீதன், சாகுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க..எப்டி செத்தா என்ன.? பூகம்பத்துல விழுந்து சாகுறதுக்கு சுனாமில அமைதியா அடிச்சிக்கிட்டு போயிடலாம்ல.?” என்றான் கேலி கலந்த யோசனை பார்வையுடன்.

வேதா அவனை தீயாய் முறைக்க, மீண்டும் அவனின் அலைபேசி சிணுங்கியது.. எண்கள் மட்டும் வந்ததால் அவன் கடுப்புடன் எடுத்து “ஹலோ.!”

அந்த பக்கம்: அமைதி காக்க….

வேதா:”ஹெலோ..! போன் போட்டா மட்டும் போதாது..பேசவும் தெரியனும்..ஹெலோ.!”

மீண்டும் மறுபுறம் அமைதி…

வேதா:”ஹலோ..இப்போ நீங்க பேசல. நான்  போன வச்சிடுவேன்.”

மறுபுறம்.”அய்யோ..வேண்டாம் போன வச்சிடாதீங்க..” என்று ஒரு யுவதியின் கவலை தோய்ந்த குரல்..

வேதா:”டேய் மச்சான்.. யாரோ ஒரு பொண்ணு பேசுது டா”

விஷ்வா:”டேய் ஸ்பீக்கர்ல போடு”

வேதா: தலையசைத்து..”ம்ம் சொல்லுங்க..?யார் நீங்க.?

மறுபக்கம்:”முதல நீங்க என்ன மன்னிக்கனும்.. நான் தான் உங்களுக்கு பாத்த பொண்ணு.. எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்லை.! வீட்ல எவ்ளோவோ சொல்லி பாத்துட்டேன் யாரும் கேட்கலை.. ப்ளீஸ் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க..நான் வேற ஒருத்தர லவ் பன்றேன்.. அவரை தான் கல்யாணம் பன்னிப்பன்..என்ன மன்னிச்சிடுங்க” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தாள்.

வேதாவின் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.. விஷ்வா:”பேசு டா! பல்ல காட்டத!”

வேதா:”சரிங்க! நீங்க பயப்பட வேண்டாம். நான் பாத்துக்குறேன்” என்று விட்டு போனை வைத்தான்.

மகிழ்ச்சியின் உச்சத்தில் வேதா விஷ்வாவை அணைத்து “மச்சான் அந்த பெண்ணுக்கும் கல்யாணத்துல இஷ்டம் இல்ல.. கல்யாணத்தை நிறுத்த என்ன வழின்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். அந்த முருகனே நல்ல வழிய காட்டிட்டாரு.. காட் இஸ் கிரேட்.. அய்யோ மச்சான்..ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா.. இதே சந்தோஷத்தோடு மதி கிட்ட லவ் வ சொல்லிட்டு கையோட அவள ஊருக்கு கூட்டிட்டு போறேன்” என்று விட்டு நண்பனின் பதிலை கூட எதிர்பாக்காமல் கிளம்பி சென்றான்.

மதியின் விடுதி..

வேதன் பார்வையாளர்கள் இடத்தில் காத்து கொண்டு இருக்க, மதிக்கு பதில் வினயா வந்தாள்.

வேதா யோசனையுடன் “மதி…?”

வினயா:”அண்ணா மதி ஊருக்கு போய் மூணு நாள் ஆச்சு ணா.. உங்களுக்கு தெரியாதா.?”

வேதா: மறுப்பாக தலையசைத்து “எதுக்கு போய் இருக்கா.? எப்போ வருவா.?”

வினயா:”அண்ணா.! அவ இனிமே இங்க  வர மாட்டானா..எங்களுக்கு இன்னும் ஒன் வீக்ல செமஸ்டர் ண்ணா! அதுனால இப்போ லீவ்.. இந்த செமஸ்டரோட காலேஜ் முடியுது ண்ணா!” என்றாள் வருத்தமாக.

வேதாவிற்கோ இந்த செய்தி பேரிடியாக இருந்தது.. மேலும் வினயா கூறிய செய்திகள் தான் செய்த முட்டாள்தனத்தை எண்ண வைத்தது அவனுக்கு..

வினயா:”அண்ணா.. இன்னோரு விஷயம்!. அவளுக்கு கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்க ண்ணா”

வேதா சொல்ல முடியாத அளவுக்கு கோபம், வருத்த நிலையில் இருந்தான்.. வேதா:”என்..என்ன சொல்ற.?”

வினயா:”ம்ம்ம் உண்மை தான் ண்ணா!”

வேதா: கோபத்துடன்,”அப்போ எதுக்கு அவ என்ன லவ் பண்ணா.? டைம் பாஸ்க்கா.? அவ டைம்  பாஸ்க்கு நான் தான் கிடச்சேன்னா.?” என்று கோபத்தில் வார்த்தைகளை விட,

வினயா:”போதும் நிறுத்துங்க.. நீங்க மட்டும் ஒழுங்கு மாதிரி பேசுறீங்க.? உங்களுக்கு என்ன தெரியும் மதிய பத்தி.? ஹான்.. என்ன தெரியும்னு கேக்குறேன்.? ஒரு பொண்ணே வந்து உங்க கிட்ட ப்ரபோஸ் பண்ணா இப்டி தான் பிஹேவ் பண்ணுவீங்கல.? ரோடுன்னு கூட பாக்காம அடிக்குறீங்க.? அவ எவ்ளோ சைலேண்ட்.. ஆனா என்னைக்கோ நீங்க யார் கிட்டயோ சொன்ன வார்த்தையை கேட்டு உங்களுக்காக அவ நேச்சர்ரயே மாத்திக்கிட்டா.. அது உங்களுக்கு புடிகல ல.? இப்போ அவளுக்கு கல்யாணம்ன்னு சொன்ன உடனே உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்க? ” என்று தன் தோழியின் மனகவலையை எடுத்து உரைத்தாள்.

வேதா:”நிஜமாவா மா சொல்ற.? அவ..அவ எனக்காகவா இப்டி மாறுனா.?” என்று தலையில் கை வைத்து கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்.

வினயா:”அண்ணா.. என்ன ஆச்சு.?”

வேதா:”நான்..நான்.. தப்பு பண்ணிட்டேன் மா..! அவ படிப்பு முடிக்குற வரை நாம தொந்தரவு செய்ய கூடாதுன்னு நினைச்சேன் தவிர வேற ஒன்னும் இல்ல மா.. இப்போ கூட லவ்வ சொல்ல தான் வந்தேன்!”

வினயா:”என்ன ண்ணா சொல்றிங்க.? நீங்களும் அவள..?”

வேதா:”ம்ம்ம் ஆமா… அது மட்டும் இல்ல இப்போ எங்க வீட்லயும் எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க.. அதான் இவள கையோட கூட்டிட்டு போலாம்னு வந்தேன்..”

வினயா:”ண்ணா…” என அவள் தயங்க..

வேதா:”சொல்லு மா.!”

வினயா:”அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறதா தான் அவ வீட்ல சொல்லி கூட்டிட்டு போய் இருக்காங்க..” என்று தயக்கத்துடன் கூற,

வேதா அதிர்ந்து “என்ன மா சொல்ற? எப்போ.?”

வினயா:”ம்ம்ம் ஆமா ண்ணா.. எப்போன்னு தெரியல.. ரெண்டு நாள் கழிச்சு பரீட்சை..அவ வருவா..நீங்க அவ கிட்ட பேசுங்க..முதல உங்க கல்யாணத்தை நிறுத்துற வேலைய பாருங்க ண்ணா..!”

வேதா:”அது பெரிய விஷயம் இல்லமா..கல்யாணப்பொண்ணுக்கே கல்யாணத்துல விருப்பம் இல்லையாம்.. அதுவும் இல்லாம கைவசம் ஒரு பிளான் இருக்கு..சோ நாளைக்கு போய் நான் பாத்துக்குறேன்..அதுக்குள்ள மதிய நீ கான்டாக்ட் பண்ண முடிஞ்சா இந்தா இது என் நம்பர் அவள எனக்கு கால் பண்ண சொல்லு நான் பேசிக்கிறேன்.”

வினயா:”ண்ணா..பிரச்னை எதுவும் வராதுல..?”

வேதா:”உண்மையாலுமே நான் உன் ப்ரண்ட்ட நல்லா பாத்துப்பேன்.. போதுமா.?”

வினயா“ம்ம்ம் சரிண்ணா.. நாளைக்கு என்ன ஆச்சுன்னு தகவல் சொல்லுங்க..”

வேதா:”ம்ம் சரி மா!” என்று விட்டு பலவித குழப்பத்துடன் சென்றான்.

மறுநாள் பொழுது பல்வேறு விடைகளுடன் புலர்ந்தது… வேதா விடுதியில் நடந்த அனைத்தையும் விஷ்வாவிடமும் கூறி இருந்தான். இருவரும் தன் சொந்த ஊருக்கு சென்றனர்.

இருவரும் ஊருக்கு வந்து வேதாவின்  வீட்டை அடைந்து இருந்தனர் வேதாவும் விஷ்வாவும்.. அவனது வீடே விழாக்கோலம் பூண்டு இருந்தது. தன் ஒரே மகனின் நிச்சயதார்த்தமே சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி இருந்தார் வேதாவின் தாய் மங்கை.

நிச்சயதார்த்ததிற்கு சில மணி நேரங்களே இருக்க, வேதா தன் தாயிடம் பெண்ணை பார்த்து பேச வேண்டும் என்று கூறினான். அவரும் ஒப்புக்கொண்டு அவனை அனுப்பி வைத்தார். கோவிலின் பின் புறம் இருக்கும் குளக்கரையில் பெண் இருப்பதாக செய்தி வர அவளை தேடி சென்றான். அங்கு அவள் முதுகை காட்டி அமர்ந்து இருக்க,

வேதா தன் தொண்டையை கணைக்க அவளிடம் எந்த பதிலும் இல்லை..அப்போது தான் அவன் அவளின் பெயரைக் கேட்கவே இல்லை என்பது நினைவிற்கு வந்தது…

வேதா:”ஹலோ..எக்ஸ்க்யூஸ்மி.. ஐம் வேதா..வேதகீதன்.. நேத்து என்கிட்ட கால் பண்ணி கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொன்னிங்க.. நிறுத்த உங்க கிட்ட ஏதாவது ஐடியா இருக்கா.?”

அவளிடம் எந்த பதிலும் இல்லை..

வேதா:”ஐ திங் நீங்க ரொம்ப டிப்ரஷன்ல இருக்கீங்க போல.. சோ நீங்க எதுவும் பண்ண வேண்டாம்.. நானே கல்யாணத்தை நிறுத்திடுறேன்..”

அவளோ அவனை மனதில் அர்ச்சித்து கொண்டு இருக்க, இவன் கிளம்ப எத்தனிக்க, அவள்”இல்லைங்க.. கல்யாணத்தை நிறுத்த வேண்டாம். நான் நான் உங்களை கல்யாணம் செஞ்சிக்கிறேன்.. நீங்க எதுவும் பண்ண வேண்டாம். கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணா என்னோட பொணத்தை தான் பாக்க முடியும்” என்று விட்டு அவனை பார்க்காமல் சென்று விட்டாள்..

வேதா ஹலோ ஹலோ என்ற வார்த்தைகள் காற்றில் தான் கரைந்தது.. அவனின் முதுகில் அடித்து விஷ்வா..”என்ன டா தனியா நின்னு புலம்பிக்கிட்டி இருக்க.? என்ன மதி நியாபகத்துல மெண்டல் ஆகிட்டியா.?”

வேதா:”டேய்.. அந்த கல்யாணப்பொண்ணு கல்யாணத்தை நிறுத்த வேண்டாம்ன்னு சொல்லிட்டு நிக்காமா போயிடுச்சு டா.! அதையும் மீறி கல்யாணம் நின்னா அவ பொணத்தை தான் பாக்க முடியும்ன்னு பயமுறுதிட்டு போறா டா…மதிக்கு நான் என்ன பதில் சொல்வேன்..  மனசுல மதிய நினைச்சிட்டு இவ கூட எப்டி டா வாழ முடியும்.?’

விஷ்வா தன் நண்பனின் நிலை கண்டு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் திகைத்துதான் போனான்.

நிச்சயத்தார்த்தமும் முடிந்து இன்னும் இரண்டு மாதத்திற்குள் திருமணம் என்பது முடிவாகி விட இருவரும் ஒருவரை ஒருவர் இன்னும் பார்த்து கொள்ளவில்லை. இன்னும் அவளின் பெயர் அவனுக்கு தெரியாது.. மற்றவர்களிடமும் எவ்வாறு கேட்பது.? என்ற தயக்கத்தில் இவன் இருக்க, ஒரு முறையாவது தன் பெயரை அழைக்க மாட்டானா என்று அவள் காத்துகொண்டு இருக்கிறாள்.

இரவு…. மங்கை வேதாவிடம் “அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா..எல்லாரும் சொன்னாங்க.. வெளியூர்ல பையன் இருக்கான்..கண்டிப்பா காதல் அது இதுன்னு பையன் யாரோ ஒரு பொண்ண கூட்டிட்டு வர தான் போறான்.. நீங்களும் ஆம்பள துணை இல்லாம பையன எவ்ளோ கஷ்டப்பட்டு வளத்தீங்க உங்கள மதிக்காம அப்டி பண்ணா என்ன பண்ணுவீங்கன்னு”

வேதா அதில் தான் செய்த தவறை எண்ணி குற்ற உணர்ச்சியில் “அதுக்கு நீங்க என்னமா சொன்னிங்க?” என்று கேட்க,

மங்கை: சிரித்துவிட்டு “இதுல நான் சொல்ல என்னப்பா இருக்கு.? நீ என்னோட வளர்ப்பு டா. உன்ன பத்தி எனக்கு தெரியாதா.? உன்ன சந்தேகபடுறது என்னோட வளர்ப்பை சந்தேகப்படுறதுக்கு சமம் டா”

வேதா ஒரு வித ஏக்கத்துடன் “ஒரு வேளை அப்டி நான் லவ் பண்ணி இருந்தா நீங்க என்ன மா பண்ணிருப்பீங்க.?” என்று கேட்டான்.

மங்கை மகனின் தலையை வருடி கொண்டே “உன் விருப்பம் தான் டா என் விருப்பமும்..”

என்ன தாயின் அன்பு.? தன் மகனின் மீது நம்பிக்கை வைத்தும் ஒரு வேளை அவன் அந்த தவறு செய்து இருந்தால் அதையும் ஏற்று கொண்டு தனயனின் சந்தோஷத்தையே தன் மகிழ்வாக கருதும் தாயுள்ளம்….

வேதா அவரின் சொற்களில் பூரித்து தான் போனான்..அப்போது தனக்குள் ஒரு முடிவை எடுத்து விட்டு தான் உறங்கவே சென்றான்.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாக வந்து விடுவேன் என்று விட்டு விஷ்வா உடன் கிளம்பினான். அன்றிலிருந்து திருமணம் முன்பு வரை விஷ்வா கேட்ட பல கேள்விகளுக்கு வேதா மௌனத்தையே பதிலாக தந்தான்.. மதியிடம் தன் முடிவை கூற பல முறை முயற்சித்தும் தோற்று தான் போனான். அவளிடமும் இருந்தும் இது வரை எந்த அழைப்பும் இல்லை..வினயாவும் பல முறை வேதாவிடம் பேச முயற்சித்து தன் தோழியின் அதட்டலால் அமைதியே காத்தாள்..

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் இரவு,

விஷ்வா:”டேய் ஒன்றை மாசமா உன்கிட்ட கேக்குறேன் இன்னைக்காவது பதில் சொல்லு டா..எப்டி டா கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட.? மதிய லவ் பண்ணிட்டு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னல டா இப்போ எப்டி டா.? என்ன அந்த பொண்ணு ஏதாவது மிரட்டுனாலா.?”

வேதா: வெற்று புன்னகையை சிந்தி, ஒரு பெரு மூச்சை வெளியே விட்டு “அந்த பொண்ணுலாம் என்ன மிரட்டுல டா.. இன்பாக்ட் நான் இன்னும் அவள பாக்கல டா.. இது இந்த கல்யாணம் எங்க அம்மாக்காக டா.. மதி என்ன புரிஞ்சுக்குவா டா.. எனக்கு தெரியும்.. அவ அன்னைக்கு நான் கோவில்ல பேசுனத தப்பா புரிஞ்சிகிட்டா டா..கண்டிப்பா அவ என்ன வெறுத்து இருப்பா”

விஷ்வா:”ஒரு வேளை அவ இன்னும் உன்ன நினைச்சிக்கிட்டு இருந்தா.? இது அவளுக்கு செய்ற துரோகம் இல்லயா டா.?”

வேதா:”அவ என்ன நினைச்சிக்கிட்டு இருந்தா இந்நேரம் இந்த கல்யாணம் நடந்து இருக்காது டா.. என்ன கடத்திட்டு போயாவது கல்யாணம் பண்ணியிருப்பா..” என்று வலி கலந்த புன்னகையுடன் கூறினான். இதற்கு மேல் அவனிடம் எதுவும் பேச முடியாது என்று தெரிந்து விஷ்வாவும் அமைதி காத்தான்.

இரண்டு நாட்களும் திருமண பரபரப்பில் சென்று கொண்டு இருக்க, மாப்பிள்ளையும் பெண்ணும் இன்னும் சந்திக்காமல் இருக்கின்றனர்..

ஆதவன் தன் வரவை உறுதி படுத்தி வெண்மகளை துயில் கொள்ள அனுப்பி வைத்தான். மண்டபத்தில் வேதா தயாராகி கொண்டு இருக்க, வினயா:”வேதா அண்ணா! “

வேதா” ஹே.. வா வினயா..நீ வர மாட்டன்னு நினைச்சேன்..”

வினயா தயக்கத்துடன் “ண்ணா.. மதி உங்கள பாக்கணும்னு சொல்றா.!”

இதைக்கேட்ட வேதா அதிர்ந்து போனான். “என்…என்ன மா… சொல்ற.? மதி வந்து இருக்காலா.?” என்று கண்களில் கண்ணீரை ஏந்தி கேட்க,

வினயா:”சீக்கிரம் வாங்க அண்ணா.!” என்று விட்டு வினயா செல்ல வேதா அவளை பின்தொடர்ந்தான்.. வினயா மணமகள் அறைக்கு செல்ல, இவனும் குழப்பத்துடன் உள்ளே சென்றான்.

உள்ளே மணமகள் தங்க பதுமையாய் மதி வெண்மதி வேதாவின் மதி அமர்ந்து இருந்தாள்.

வேதா தன் கண்களில் அதிர்ச்சி, குழப்பம், வியப்பு என அனைத்து உணர்வுகளையும் தாங்கி “மதி..மதி…நீ..நீ..”

மதி:”வா வேதா!..நானே தான்..வா..வந்து உட்காரு”

வேதா இன்னும் குழப்பம் தீராமல்.”மதி..நீ நீ தான் பொண்ணா?”

மதி:”ஏன் வேதா என்ன பாத்தா பொண்ணு மாதிரி தெரியலையா.?”

வேதா:”மதி விளையாடாத.. எப்டி மதி.?”

மதி:“எப்டினா..? நான் கல்யாணபொண்ணா எப்டினு கேட்கிறியா..? இல்ல ஏன் கல்யாணா பொண்ணா இருக்கேன்னு கேட்கிறியா வேதா?”

வேதா:”உண்மையாலுமே நீ தான் கல்யாணபொண்ணா.? மதி.? கொஞ்சம் என்ன நடந்துச்சுன்னு சொல்லு டி..எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு”

மதி: முதன்முதலில் அவனின் உரிமை அழைப்பு அவளை ஏதோ செய்ய”அதுக்கு தான் உன்ன வர சொன்னேன். என்று விட்டு அவர்கள் இருவரை தவிர மற்றவர்களை வெளியில் அனுப்பினாள். வேதா.. உண்மையாலுமே உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும் வேதா..அன்னைக்கு நீ கோவில்ல நான் மாறிட்டேன்னு சொன்னதை கேட்டு கோவம் வந்துச்சு..அப்ரோம் உன்ன பாக்கவே கூடாதுன்னு முடிவு பன்னேன் தவிர உன்ன வெறுகனும் மறக்கணும்னு நான் நினைக்கல.! அது என்னால முடியாது டா..அப்ரோம் ரெண்டு நாள் உன்ன நான் பாக்கல..ஆனா அந்த ரெண்டு நாள் என் உயிர் போற அளவுக்கு வேதனை அனுபவிச்சேன்..அப்போதான் புரிஞ்சிகிட்டேன் நான் உன்னை எவ்ளோ லவ் பன்றேன்னு..உன்னை பாக்க வரப்போ தான் விஷ்வா அண்ணாவை பாத்தேன்..அன்னைக்கி கோவில்ல நடந்ததை முழுசா என்கிட்ட சொன்னாரு. அப்போ முடிவு பன்னேன்..உன்னை யாருக்கும் விட்டு தர கூடாதுன்னு.. உன்கிட்ட இதை சொல்ற வாய்ப்பு எனக்கு வரல..அதுக்குள்ள வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டாங்க..நானும் எவ்ளோவோ சொல்லி பாத்தேன்..கெஞ்சி பாத்தேன்.. செத்துடுவேன்னு கூட மிரட்டிட்டேன்..ம்க்கும்.. யாருமே மசியல… கோவத்துல மாப்பிள்ளை போட்டோ கூட பாக்கல.. வேற வழி தெரியாம மாப்பிள்ளை கிட்டயே பேசிடலாம்னு தான் மாப்பிள்ளைக்கு போன் பண்ணி கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டேன்.. நிச்சயம் அன்னைக்கு எப்படியாவது கல்யாணம் நின்னுடும் உன்னை பாத்து பேசணும்னு இருந்தேன்..கடைசில பாத்தா நீ தான் மாப்பிள்ளை.. நிச்சயம் அன்னைக்கு தான் எனக்கே தெரியும்.. ஒரு பக்கம் செம ஹாப்பி..ஆனா ஒரு பக்கம் எங்க நீ கல்யாணத்தை நிறுத்திடுவியோன்னு பயம்.. நீ என்கிட்ட பேசுனப்போ தான் புரிஞ்சிகிட்டேன் என்ன மாதிரி நீயும் பொண்ணு பேர் ஊரு ஏன் பேஸ்ஸ கூட பாக்கலன்னு.. சரி நாமளும் கொஞ்சம் விளையாடலாம்னு தான் அன்னைக்கு திரும்பியே நின்னேன்.. நீ என்னடான்னா உங்க கிட்ட ஐடியா இல்ல பரவால்ல..நானே நிறுத்துறேன்னு சொல்லிட்ட. எனக்கு செம சாக்.. கோவம் கூட…ஆனா இன்னோரு பக்கம் எனக்காக தான் நிறுத்துறன்னு நினைச்சு ரொம்ப சந்தோசம்.. எங்க உண்மையாலுமே நிறுத்திடுவியோன்னு தான் அன்னைக்கு அப்டி சொன்னேன்.. உன்ன ரொம்ப காயப்படுத்திட்டேன்ல சாரி டா வேதா” என்று கூறினாள்.

வேதா தனக்காக ஒருவள் இவ்வளவு தூரம் சென்று இருக்கிறாள் என்பது மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது.. அவன் அவளையே கூர்ந்து பார்க்க, அவளே தொடர்ந்தாள் “அப்ரோம்…ஒரு சூழ்நிலைல அப்பாவே கல்யாணம் வேண்டாம்னு சொன்னாரு.. எனக்கு எப்டி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல..சோ அப்பா அம்மா கிட்ட எல்லாமே சொல்லிட்டேன்..உன்கிட்டேயும் சொல்லி இருக்கணும் ஆனா எங்க நீ என்ன வெறுத்துடுவியோன்னு பயம்… எல்லர்க்கும் நம்ம காதல் விஷயம் தெரியும் ரெண்டு நாள் முன்னாடி தான் விஷ்வா அண்ணாக்கு தெரியும்…நான் தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன்..”

வேதாவோ அதிர்ந்து..அப்போது தன் தாயிற்கும் அனைத்தும் தெரிந்து இருக்கும் இனி அவரின் முகத்தில் எவ்வாறு முழிப்பது என்று நொந்து போனான்.. அவனின் குற்ற உணர்ச்சி அவள் புறம் கோபமாய் திரும்ப “போதும் மதி! நான் போறேன்” என்று விட்டு சென்று விட்டான்..

மதியோ “எல்லாம் நன்மைக்கே” என்று அமைதி காத்தாள். அவன் திட்டி இருந்தாலோ அல்லது அடித்து இருந்தால் கூட இவ்வளவு வலித்து இருக்காது ஆனால் அவனின் பாரா முகம் ஏதோ செய்தது…

திருமணமும் முடிந்து விஷ்வாவை வறுத்து எடுத்து விட்டான் வேதா.. இன்னும் அவன் தாயின் முகத்தை பார்க்கவில்லை.. எவ்வாறு பார்ப்பது தான் செய்தது எத்துணை பெரிய தவறு என்று சிந்தனையில் உழன்று கொண்டு இருந்தான்..

அனைத்தையும் யோசித்து கொண்டு இருந்தவனை மதியின் கொலுசு ஒளி நிகழ்வுக்கு கொண்டு வந்தது..

மதி அவனையே பார்த்து கொண்டு இருக்க, அனைத்தும் அறிந்தும் நிலவையே பார்த்துக்கொண்டு இருந்தான்..

மதி:”வேதா…” வேதா அவளை என்னவென்று பார்க்க,  ப்ளீஸ் வேதா இப்டி மட்டும் பாக்காத நாலு அடி கூட அடிச்சிடு.. இப்டி இருக்காதா வேதா.. இதுக்கு தான் நான் பயந்தேன்..” என்று கண்களில் நீர் கோர்க்க,

வேதா:”போதும் மதி.. இப்போ எப்டி நான் என் அம்மா முகத்துல முழிப்பேன்?” என்று கூறியவனை யோசனையுடன் பார்த்தாள் மதி. வேதா”எங்க அம்மாக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஆனா நீ என் அம்மா என்மேல வச்சி இருந்த நம்பிக்கையை காதல்ல சொல்லி உடச்சிட்ட” என்றான் வலி தோய்ந்த குரலில்..

மதி: அவன் கூறுவதை புரிந்து கொண்டு “வேதா.. இல்ல வேதா.. அத்தைக்கு எதுவும் தெரியாது… நீயும் குற்ற உணர்ச்சில இருக்காத.. எங்க அம்மா அப்பாக்கு கூட நான் தான் உன்ன லவ் பண்ணதா சொன்னேன்.. அத்தையை பொறுத்த வரை நான் அவங்க பாத்த பொண்ணு தான்.. நீ எந்த குற்ற உணர்ச்சிலயும் இருக்க தேவ இல்ல வேதா..” என்ற மதி அடுத்த நொடி வேதாவின் இறுகிய அணைப்பில் இருந்தாள்..

மதி:”வேதா…”

வேதா:”ம்ம்ம்”

மதி“வேதாஆஆ..”

வேதா:”ம்ம்ம் சொல்லு டி”

மதி:”சாரி வேதா”

வேதா அவளின் முகத்தை நிமிர்த்தி “எதுக்கு”

மதி:”உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல..சா..”

வேதா அடுத்த வார்த்தை அவளை பேச விடாமல் அவளின் இதழ்களை சிறை பிடித்து இருந்தான்.. பல நிமிட சிறைபிடிப்பிற்கு பிறகு அவளை விட்டவன் அவளின் முகத்தை அளவிட பெண்ணவள் முகம் சிவந்து செம்மை பூத்து இருந்தது..

வேதா:”நிலா..”

மதி அவனை யோசனையுடன் பார்க்க, வேதாவின் பார்வை வீச்சை தாங்காது குனிந்து கொண்டு “யா…யாரு.. அது..நி..நிலா..?” என்று தடுமாறி கேட்டாள்..

வேதா:”நீ தான் டி என் செல்ல பொண்டாட்டி.. மதிக்கு அர்த்தம் நிலா தான..?” என்றான் மர்மபுன்னகையுடன்..

மதி:”ஹான்… அப்படியா சூர்யா..?”

வேதா:”எவன்டி அவன் சூர்யா?”

மதி:” வேதகீதன்னுக்கு அர்த்தம் சூரியன் தான் டா லூசு புருஸா..”

வேதா:”நான் ரொம்ப லக்கி ல நிலா..”

மதி:”நானும் லக்கி தான் சூர்யா..” இருவரும் நீண்ட நேரம் இறுகிய அணைப்பில் இருக்க,

வேதா:”நிலா…”

மதி:”ம்ம்ம்ம்”

வேதா:”நிலா..”

மதி“ம்ம்ம்ம்”

வேதா:”இன்னைக்கு நமக்கு பர்ஸர் நைட் டி.. கொஞ்சம் அதுக்கு தயராகலாமா.?” என்றான் விஷம புன்னகையோடு..

அதில் சிவந்த மதி.. பதிலளிக்க முடியாமல் பெண்ணவளுக்கே உரித்தான வெட்கம் பிடுங்கி திங்க தலையை மட்டும் அசைத்தாள்..

வேதா” இந்த மௌனத்தை நான் சம்மதம்ன்னு எடுத்துக்கலாமா.?” என்க,

மதி“எடுத்துக்கலாமே…!” என்றாள் கைகளை தூக்கி கொண்டு….

வேதா அவளை பூ போல தூக்கி கட்டிலில் போட்டு, இலை மேல் படரும் பனித்துளி போல் மெல்ல அதே சமயம் மென்மையாக அவள் மீது படர்ந்து அவனின் சீண்டல்களால் அவளை வெண்பனியை உருகச்செய்தான்….

இரவின் மடியில் செம்மையானவன் தன்னவளை செம்மையாக்கிக்கொண்டு இருக்க, வெண்மதி வெண்பனியாய் அவனுள் கரைந்தாள்…

வேதா“மதி…”

மதி“ம்ம்ம்ம்”

வேதா “நிலா…”

மதி“ப்ச்..சொல்லு டா சூர்யா..”

வேதா“நமக்குள்ள இனிமே எந்த வேறுபாடும் இல்ல மதி… உனக்கு நான் இனிமே நீ திகட்ட திகட்ட லவ்வ தர போறேன்.. ஆதலால்…”

அதில் மேலும் அவனுள் கரைந்த மதி  “ஆதலால்..”

வேதா:”ஆதலால் நாம் இனி காதல் செய்வோம்..” என்று காதல் நிறைந்த பார்வையோடு கூறினான்..

அதில் முழுவதுமாக தன்னையே அவனிடம் ஒப்படைத்து விட்டாள் மதி.. வெண்மதி….

வேதகீதனும் தன்னவளை தனக்கே உரியவளாக எடுத்துக்கொண்டான்..

வெம்மைக்கே உரித்தான சூரியனே… உன்னை என் வெண்பனியால் கரைத்தேனே…
நானும் உன்னுள் கரைந்தேனே…
கண்ணனே..என் கண்ணாளானே..
காதலால் என்னை களவாடியவனே..!
என் மதியால் உன்னை மதி மயங்க செய்தேன்..
நீயோ உன் வெம்மையால் என்னை செம்மையடைய செய்து விட்டாய்..
இனி அணுஅணுவாய் உன்னை காதல் செய்வேன்.. இனி என் உடலும் உயிரும் உனக்காக.. என்னவனுக்காக….

முற்றும்…💕💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.