ஊருக்கு சென்றதும் கோனார் தன் மகளிடம் குகனுக்கு பேசும்படி ஃபோனை கொடுத்தார். குகனும் தனக்கு தேவையானவற்றை சொல்ல அப்பெண்ணும் தன்னிடம் புதிதாக உள்ளது. கொடுத்து அனுப்புவதாக கூறினாள்.
அதன்படியே மறுநாள் காலையில் கோனார் வந்து உடைகளை கொடுக்க, மிகவும் நன்றி கூறி அவருக்கு அதற்குரிய பணத்தை கொடுத்தான். முதலில் வாங்க மறுத்த கோனார், பின்னர் குகன் வற்புறுத்தியதால் வாங்கிக் கொண்டார்.
வழக்கம்போல் அவர் அவரது வேலைகளை செய்து விட்டு கிளம்ப, குகனும் தனது வேலைகளை செய்ய தொடங்கினான்.
விடிந்து வெளிச்சம் வந்த பிறகு தான் எழுந்தாள் தெய்வானை. தன் காலை வேலைகளை முடித்து சமையலறை வர, அங்கு கறந்த பால் ஒரு கிண்ணத்தில் இருந்தது. அதை எடுத்து இருவருக்கும் காபி போட்டுக் கொண்டு குகனை தேடி வெளியே வந்தாள்.
தோட்ட வேலைகளை அவன் சுறுசுறுப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே அவனுக்கு காபி கொடுத்துவிட்டு, அங்கிருந்த கல்லில் அமர்ந்து அவள் காபியை குடித்தாள். இன்றுதான் தோட்டத்தை பார்க்கிறாள். ஒரு பக்கம் உயரமான கூண்டுகள் கோழிகள் அடைக்கப்பட்டு இருக்க, மாட்டு கொட்டகையில் மாடு கண்ணுக்குட்டி கன்று குட்டியும் இருக்க, ஆடு நீண்ட கயிறினால் கட்டப்பட்டு சுற்றிக் கொண்டிருந்தது. அனைத்தையும் ரசித்துப் பார்த்துக் கொண்டேன் தன் காபியை குடித்து முடித்துவிட்டு, அவனுடன் சேர்ந்து சின்ன சின்ன வேலைகளை செய்ய தொடங்கினாள்.
“நீ கஷ்டப்படாதே. வீட்டுக்குள் போ. இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று மறுத்தான் குகன்.
நீங்க வேலை செய்யும் போது நான் சும்மா இருக்க முடியுமா என்று அவளும் அடம்பிடித்து ஏதேதோ செய்ய,
அவளின் பிடிவாதத்தினால் சின்ன சின்ன வேலைகளை அவரிடம் செய்ய கொடுத்தான்.
நேரம் கடக்க சரி நான் சென்று சமைக்கிறேன் என்று உள்ளே வந்து விட்டாள். அதன்படியே காலை உணவு வேலைகளை தெய்வானை முடிக்க, அவனும் வெளி வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்தான்.
“நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன். சாப்பிடலாம்” என்று கூறிய குகன், அவள் கையில் கோனார் குடித்த பையை கொடுத்தான்.
“இதில் உனக்கு தேவையான உடைகள் இருக்கிறது” என்றதும் ஆச்சரியமாக அவனை பார்க்க,
“கோனரிடம் கேட்டிருந்தேன். அவரது மகள் உடையே கொடுத்திருக்கிறார். உனக்கு பொருந்துகிறதா என்று பார்? இல்லையென்றால் வேற எப்படியாவது ஏற்பாடு செய்து கொள்ளலாம்” என்றான்.
பையை பிரித்து உடையை பார்த்தாள் தெய்வானை. இரண்டு சுடிதார், ஒரு புடவை மற்றும் அதற்கு தேவையான அனைத்தும் இருந்தது.
அதில் மிகவும் மகிழ்ந்தாள் தெய்வானை, நல்லவேளையாக இனிமேல் குகனது சாட்ஸ் போட வேண்டியது இல்லை என்று.
ஆனால் குகனுக்கு வருத்தமாக இருந்தது. அவள் இனிமேல் சார்ட்ஸ் போட மாட்டாளே என்று. இப்படி இருவரது எண்ணமும் இருக்க,
‘ரொம்ப தேங்க்ஸ் சார். அந்த அக்காவுக்கு ரொம்ப நன்றி சொல்லுங்க” என்று உளமார்ந்த பேசியபடி குளிக்கச் சென்றார்.
இருவரும் குளித்து முடிக்க காலை உணவை உண்டுவிட்டு தெய்வானை டிவியில் பொழுதை போக்க, குகனும் மடிக்கணினி வைத்து வேலை செய்ய ஆரம்பித்தான். பின்னர் மதியம் சமையல் செய்ய, தோட்ட பராமரிப்பு என்று இருவருக்கும் நேரம் ஓடியது
அன்றைய பகல் பொழுது அப்படியே போக, இரவு உணவிற்கு பிறகு இருவரும் ஒன்றாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அடிக்கடி குகனை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் தெய்வானை.
டிவியை ஆப் செய்த குகன் அவளைப் பார்த்து திரும்பி உட்கார்ந்து, “இப்ப என்ன என்கிட்ட நீ கேட்கணும்? ஏன் என் மூஞ்ச மூஞ்ச பார்க்கிற?” என்றான் டக்கென்று டிவியை ஆஃப் பண்ணிவிட்டு தன்னிடம் கேள்வி கேட்டதும் திணறிய தெய்வானை,
“அது” என்றாள், “அது இது ப்ரோக்ராம் எல்லாம் அடுத்த சீகன் வரும்போது பார்க்கலாம். இப்ப சொல்லு என்ன விஷயம்?” என்றான்.
“இல்லை, நீங்க என் மாமாவை பற்றி சொன்னீங்களே? உங்களுக்கு எப்படி அவரை தெரியும்?” என்று ஒரு வழியாக திக்கித் திணறி கேட்டு முடித்தாள்.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த குகன் “நான் என்னுடைய கல்லூரி படிக்க சென்னை சென்றேன். அப்பொழுது ஹாஸ்டல் சாப்பாடு எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆகையால் கல்லூரிக்கு அருகிலேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன். அப்பொழுது என்னுடன் சேர்த்து மொத்தம் ஐவர் அந்த வீட்டில் இருந்தோம். நானும் இன்னும் இரு நண்பர்கள் மட்டும் எங்கள் கல்லூரி. மற்ற இருவரும் வேறு கல்லூரி. அதில் ஒருவன் டாக்டர். ஐவரும் சமையல் செய்து ஒன்றாக தங்கி இருந்ததில் ஐந்து வருடங்களில் நல்ல நண்பர்களாக விட்டோம்.
அவரவர் படிப்பை முடித்து அவரவர் ஊருக்கு செல்ல திட்டமிடுகையில், அப்பா ரைஸ்மில் வைத்திருப்பதால் நான் ஆயில் மில் தொடங்க வேண்டும் என்று விருப்பப்பட்டு, கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் பொழுதே அதற்கான முயற்சிகள் அனைத்தையுமே செய்தேன்.
அப்பாவும் சில அறிவுரைகளின் பெயரில் முதலீடு செய்ய, கல்லூரி முடிந்ததுமே என்னுடைய கனவுத் தொழிலை தொடங்கி விட்டேன்.
கூடுமானவரை இயற்கை விவசாயத்தை நான் விரும்புவதால் மரச்செக்கு எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். அதில் அதிக லாபம் எடுக்க முடியாது என்று அப்பா கூறினார்.
அதிகம் லாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை அப்பா நம் இயற்கை முறையை நாம் மறந்து விடக்கூடாது அதற்காகத்தான், என்று முதலில் சிறிதாகத்தான் தொடங்கினேன்.
அப்பா செய்யும் தொழில்கள் மற்றும் நல்ல விஷயங்கள் எல்லாவற்றிலுமே சக்தி மீனா என்றே பெயர் இருக்கும். ஆகையால் நான் எம் எஸ் ஆயில் என்று என் மில்லுக்கு பெயர் வைத்தேன்.
ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நாட்கள் செல்ல அதிக லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் என் தொழில் வளர ஆரம்பித்தது. அதில் அப்பாவுமே மிகவும் மகிழ்ந்தார்.
எனக்கு சிறுவயதிலிருந்தே இதை போல் ஒரு பார்ம் ஹவுஸ் எனக்கே எனக்கென்று இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அதை என் அப்பாவிடம் சொல்ல திருச்சிக்கு பக்கத்திலேயே தான் முதலில் இடம் தேடினோம். பின்னர் சேலத்தில் உள்ள என் நண்பன் ஒருவன் மூலம் இந்த இடம் கிடைக்க, அப்பாவும் சரி என்றார். உடனே இங்கு வாங்கி இந்த விடை கட்டினேன்.
பின்னர் மா, பலா, தென்னை, வாழை என்று மரங்களை வைக்க, அதை பராமரிப்பதற்கு ஊருக்குள் இருந்து ஒருவர் வந்து பார்த்துக் கொண்டார். நான் இங்கு வரும்பொழுது நான் கவனித்துக் கொள்வேன். ஒரு நாள் என் நண்பன் நண்பர்களுடன் ஒரு சின்ன பார்ட்டி. அதற்கு பார்ம் ஹவுஸ் வேண்டும் என்று கேட்க, சரி என்று சொல்லி அவனிடம் ஒரு சாவி கொடுத்தேன்.
அதன் பிறகு நான் அதை மறந்து விட்டேன். ஒரு நாள் ஒரு வாரம் இந்த தங்கலாம் என்று வர, இரண்டு பெண்களுடன் உன் மாமா வாசலில் நின்றிருந்தான்.
“யார் நீ? எதற்கு இங்கே நிற்கிறாய்?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர, நான்கைந்து வேஞர் வீட்டுக்குள் இருந்தார்கள். யார் என்று கேட்க என் நண்பனின் நண்பன் என்று தெரிந்தது. அவர்கள் அதிகம் குடித்து இருப்பதும் தெரிய அவர்களுக்காகத்தான் இரு பெண்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தான் அழகு. அனைத்தையும் பார்த்ததும் எனக்கு கண்மண் தெரியாது அளவிற்கு கோபம் வர, என் நண்பன் உட்பட அனைவரையும் வெளுத்து வாங்கி விட்டேன்
அதில் அதிக அடி வாங்கியது அழகுதான். உலகத்தில் வாழ்வதற்கு எத்தனையோ வழிகளும் வேலைகளும் இருக்கு. இப்படி பெண்ணை கூட்டிக்கொண்டு கொடுத்து வாழ்கிறாயே! என்று அவனை அடித்தேன். இனிமேல் என் கண்ணில் நீ பட்டால் உன் உடம்பில் உயிர் இருக்காது என்று சொல்லி விரட்டி விட்டேன்.
“அதில் தான் அவனது முகம் என் மனதில் நன்றாக பதிந்து விட்டது. அன்று ஃபோனில் ஒரு நொடி பார்த்ததுமே அவன்தான் என்று தெரிந்து கொண்டேன்” என்றான்
அதன் பிறகு நண்பன் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, “நான் இயற்கை காற்றுடன், அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும் என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்தால், நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் இந்த வீட்டை?” என்று கோபமாக கேட்க,
அவனும் மன்னிப்பு வேண்டி இனிமேல் இப்படி நடக்காது என்று கேட்டுக் கொண்டான்.
அதன் பிறகுதான் இனி யாரையும் நம்பி வீட்டை விடக்கூடாது என்று முடிவு செய்து, அப்பாவின் ஊரில் உள்ள கந்தனை குடும்பத்துடன் இங்கு வரவைத்து காவல் காக்க வைத்தேன். அவர்கள் மகனையும் இங்குள்ள பள்ளிக்கூடத்திலேயே சேர்த்து அவன் படிப்பு செலவை நாங்களே பார்த்துக் கொண்டோம்.
கந்தனும் அவரது மனைவியும் இங்கு குடிவந்த பிறகு தான் மாடு கோழி எல்லாம் வளர்க்கலாம் என்று தோன்றியது.
இந்த பண்ணை வீடு என்னுடைய ஐடியாவில் வந்திருந்தாலும் இப்பொழுது முழுவதும் கவனித்துக் கொள்வது கந்தன் தான். முழுவதையும் கூறிய குகன் “இப்படித்தான் எனக்கு அழகு பற்றி தெரியும்” என்றான்.
முழுவதையும் கேட்ட தெய்வானை அவன் செய்யும் வேலை பிடிக்காததால் தான் அப்பாவும் தங்கள் வீட்டுக்குள்ளேயே அவனை சேர்க்கவில்லை என்பதை புரிந்து கொண்டாள் தெய்வானை.
அதை நினைத்துக் கொண்டு தெய்வானை அமைதியாக இருக்க,
“அதெல்லாம் இருக்கட்டும்! நான் கேட்டதற்கு நீ பதிலே சொல்லவில்லையே?” என்றான் குகன்.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..