ஜாலம் 17(இறுதி அத்தியாயம்)..
..மூன்று வருடங்களின் பின்…
அங்கே மேடையொன்றில் நின்றிருந்தாள் மீனாட்சி.. இருபது நிமிட உரை அவளுடையது… இதோ இறுதி கட்டத்துக்கு வந்திருந்தது அவளது பேச்சு..
“கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிக்க விரும்புறேன்.. பெண்கள் கிட்ட தெளிவும் தன்னம்பிக்கையும் இருந்தா.. இங்க பெண்களுக்கு எதிரா நடக்கிற குற்றங்கள பாதியா குறைக்க முடியும்.. உங்கள ஆச வார்த்தை பேசியோ, போட்டோ வீடியோனு காட்டி மிரட்டியோ பணியவைக்கிற ஆண்கள எந்த சூழ்நிலைல நீங்க கடக்க நேரிட்டாலும் தைரியமா பேஸ் பண்ணுங்க… பாதிக்கப்பட்ட உங்கள்ள ஒருத்தியா என்னால மீண்டும் வர முடிஞ்சிதுனா? ஏன் அது உங்களால முடியாது.. இன்னைல இருந்து நம்ம பயத்த ஆயுதமா வெச்சு பெண்களை அழிக்கவோ, பணம் பறிக்கவோ நினைக்கிற கயவர்களுக்கு பயம் என்கிற முகமூடிய தூக்கி வீசிட்டு பெண்களோட தைரியம்னா என்னனு காட்டுவோம்…” என்றவள் பேசி முடிக்க அரங்கமே கரகோசம் தான்…
பெண்களுக்கான விழிப்புணர்வு பேச்சாரளராக மீனாட்சியின் பயணம் கடந்த இரு வருடங்களாக தொடர்கிறது… ஆரம்பத்தில் பல நிராகரிப்புகளை சந்தித்தாள் தான்.. ஆனால் நம்பிக்கையை கைவிடவில்லை… இனி எந்த பெண்ணும் இப்படிப்பட்ட கயவர்களிடம் சிக்க கூடாது என்ற எண்ணமே அவளை முன்னேற வைத்திருந்தது..
இதில் வேந்தனின் பங்கும் அளப்பெரியது.. அவள் தடுமாறும் பொழுதெல்லாம் கைகொடுத்து முன்னேற வைக்கும் ஒரு ஊன்றுகோளாக தான் தோள்கொடுத்திருந்தான்…
இன்று பல இளம்பெண்கள் மத்தியில் சமூக வளையதளங்கள் பற்றிய முன்னெச்சரிக்கையை முடிந்தமட்டும் கொண்டு போய் சேர்த்திருக்கிறாள் அதுவே அவளுக்கு கிடைத்த வெற்றிதான்…
அவள் மேடையில் இருந்து இறங்கி வர வேந்தன் கீழே தான் நின்றிருந்தான்..
“ரொம்ப லேட்டாகிடிச்சாங்க.. பாப்பா அழுதாளா??… மகி வேற அங்க குதிப்பாளே.. மீட்டிங் ஸ்டார்ட் ஆகி இருக்குமோ?..”
“அதெல்லாம் பாப்பா சமத்தா தான் இருக்கா.. போய்டலாம் சிட்டு டைம் இருக்கு.. நீ டென்ஷன் ஆகாம பர்ஸ்ட் தண்ணி குடி, எப்படி வேர்த்திருக்கு பாரு..” என்றவன் அவள் நெற்றியில் படிந்திருந்த வியர்வையை தன் உள்ளங்கை கொண்டு துடைத்து விட்டவன்.. குடிக்க நீரையும் கொடுத்தான்…
இத்தனை வருடங்களாய் அவன் காதல் என்னும் கடலில் மூழ்கி தத்தளிப்பவள், எப்போதும் போல் இன்றும் மூச்சுமுட்டித்தான் போனாள்.. வெளியில் பார்ப்பவர்களுக்கு சாதாரணமாகத்தான் தோன்றும்.. ஆனால் அவனது ஒவ்வொரு செய்கையிலும் தெறிக்கும் மீனாட்சி மீதான அக்கரை அவள் மட்டுமே உணரும் ஒன்று.. இப்போது கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு அவன் காதல் தான் உயர்ந்தது என்று மறுப்பில்லாமல் ஒப்புக்கொள்வாள்..
“என்ன என் தங்கப்பொண்ணு பார்வை எல்லாம் பலமா இருக்கு.. விட்டா இங்கயே ஸ்வீட் டேஸ்ட் பண்ணிடுவீங்க போலயே..”
“வாத்திக்கு ஓகேணா டேஸ்ட் பண்ண அவர் சிட்டுக்கும் ஓகேவாம்..” என்று அவனை வெக்கப்பட வைத்திருந்தாள் வேந்தனின் மீனாட்சி…
எப்போதும் அவன் அரட்டையில் கெஞ்சும் இவள் எப்போதாவது இப்படி காதல் மிகுதியில் மிஞ்சி அவனை வெக்கப்பட வைப்பதுமுண்டு…
“என்னடி பயம் விட்டு போச்சா.. வீட்டுக்கு வா உனக்கு இருக்கு…” என்றவன் அவள் பார்வை வீச்சு தாங்காமல் குழந்தையோடு முன்னே நடக்க, மனம் நிறைந்த புன்னகையுடன் மீனாட்சியும் அவனை பின் தொடர்ந்தாள்…
அவர்கள் நேரே சென்றது.. மகி ஆரு இருவரின் பாடசாலைக்கு தான்.. இன்று குழந்தைகளுக்கான பெற்றோர் கூட்டம் இருந்தது…
இருவரும் உள்ளே நுழையவும் கூட்டம் ஆரம்பிக்கவும் நேரம் சரியாக இருந்தது.. நிகழ்வின் முடிவில் மகி மீது அவளது ஆசிரியை பெரிய புகார் பட்டியல் ஒன்றை வாசிக்க, கேட்டுகொண்டிருந்த வேந்தனுக்கோ முழி பிதுங்கியது.. இருக்காதா என்ன இன்று வீட்டில் ரெண்டு சிங்கங்களை சமாளிக்க வேண்டியிருக்குமே…
_____________________________________________
அவர்களது கார் வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.. ஓட்டுனர் இருக்கையில் வேந்தனும் அருகில் மகியும்.. பின் இருக்கையில் மற்ற மூவரும் அமர்ந்திருந்தனர்…
மகியோ மெல்லிய குரலில்.. “என்னப்பா உன் பொண்டாட்டி ஜிஞ்சர் ஈட்டன் மங்கி மாதிரி உக்காந்திருக்கா.. இன்னைக்கு சமாளிச்சிடுவல்ல…” என்றவளின் மெல்லிய குரலின் அழகுதான் தெரியுமே.. அனைவருக்கும் கேட்கவே செய்தது…
“மகி.. உனக்கு வர வர சேட்டை ஜாஸ்தி ஆகிடிச்சு.. ஒவ்வொன்னா ஆரம்பிச்சு, இப்போ திருடுற அளவுக்கு போய் இருக்க.. இன்னைக்கு என்ன எக்ஸ்கியூஸ் சொல்ல போற.. அவர ஏன் பாக்குற பேசுறது நான்..” என்று மகளிடம் கண்டிப்புடன் பேசினாள்..
“மீனும்மா மகிமேல தப்பு இல்ல…” என்று ஆர்வன் உள்ளே வர..
“ஆரு கீப் குவைட்.. அம்மா மகி கிட்டதான் கேக்குறேன்..” என்று ஆர்வனிடம் சொன்னவள் மீண்டும் மகியிடம், “சொல்லு மகி ஏன் திருடுன..” என்றாள்.
“சிட்டு மகி திருட எல்லாம்…” என்று ஆரம்பித்த வேந்தனையும் தடுத்தவள் “இடைல பேச வேணானு சொன்னது உங்களுக்கும் தான்.. அவ எனக்கு பதில் சொல்லட்டும்… பண்ணலன்னு சொல்லலயே அப்போ பண்ணி இருக்கா அதுக்கான காரணம் எனக்கு அவ சொல்லி ஆகணும்…” என்க, அதன் பின் வேந்தன் பேசவில்லை..
அம்மாவின் கோபத்தை எதிர்த்து அப்பாவின் பேச்சு வராது என்பதை உணர்ந்து கொண்ட மகி “மா அவன் என் பிரண்டோட திங்ஸ டெய்லி திருடிட்டு போயிடுறான்.. மிஸ் கிட்ட சொன்னாலும் அவங்க மகன் என்கிறதால கண்டிக்கிறதே இல்ல.. சோ அவங்க சரியானத செய்யாதப்போ அவளுக்கு சொந்தமானத நாங்களே எடுத்துகிட்டோம்..” என முடித்துக்கொண்டாள் மகி…
மீனுவுக்கும் மகள் பக்கம் இருந்த நியாயம் புரிய.. வீடு வரும் வரை எதுவும் பேசவில்லை…
வீட்டினுள் நுழைந்தது தான் தாமதம்.. “மகி மிஸ் கிட்ட நான் பேசிக்கிறேன்.. பட் இந்த விஷயம் இனி கன்டினியூ ஆக கூடாது.. தப்புனு தெரிஞ்சா பர்ஸ்ட் மிஸ் கிட்ட சொல்லனும்.. அவங்க சரியா பண்ணலன்னு தோணினா அப்பாகிட்ட சரி அம்மாகிட்ட சரி இன்போர்ம் பண்ணனும்..”
“ஓகேமா சூர்..” என்றவள் உள்ளே அறைக்குள் நுழைய, ஆர்வனும் பின்னே சென்றான்… போகும் அவர்களையே பார்த்து நின்ற மனைவியின் தோளில் கைவைத்த வேந்தனோ, “விடு சிட்டு அவ ஓகே ஆகிடுவா…” என்றான்.
“மகி ரொம்ப வளந்துட்டால்லங்க… அப்படியே மஞ்சுவோட பேச்சு தெளிவு எல்லாம் அப்படியே இருக்கு இவகிட்ட..”
“ம்ம்ம் அப்படியும் சொல்லலாம்… ஆனா எனக்கு அவ அப்படியே அவ அம்மா மீனாட்சி போலனு தான் தோணுது.. உன்னோட குணம் தான் சிட்டு, அவகிட்ட நான் முழுசா பாக்குறேன்..” என்றான் அவள் கண்களோடு கண்கள் நோக்கியப்படி…
இவர்கள் அப்படியே ஒருவருள் ஒருவர் மூழ்க, இப்போது நிதானதுக்கு வரமாட்டார்கள் என்றுணர்ந்த அவர்களது குட்டி வாண்டு சத்தமிட்டு கத்த தொடங்கினாள்…
“அச்சச்சோ மதிகுட்டிக்கு பசி வந்துடிச்சாடி தங்கம்..” என்று குழந்தையை சமாதானப்படுத்தியவள், பசியாற்ற அழைத்துச்சென்றாள்..
மதிவதனி.. ஒன்றரை வயது கடைக்குட்டி… பூரி சிட்டு வாழ்க்கையில் வந்த மூன்றாவது வர்ணஜாலம் அவள்…
_________________________________________
அடுத்தநாள் காலையில் சற்று தாமதமாகவே எழுந்திருந்தான் வேந்தன்… இன்றும் நாளையும் விடுமுறை எடுத்திருந்தான்… காரணம், நாளை மீனாட்சி மாற்றும் அவள் நண்பர்களால் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் ஸ்மைலின் அடுத்த கிளைக்கான திறப்பு விழா..
இந்த மூன்று வருடத்தில் அவர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து ஸ்மைலும் வளர்ந்தது என்றால் மிகையில்லை…
எழுந்தவனுக்கு தெரியும் மீனாட்சி இருக்கமாட்டாள் என்பது.. இரவே சொல்லி இருந்தாள் நேரத்துக்கு கடைக்கு செல்லவேண்டும் என்பதை.. அதிலும் அவனை ஆறுதலாக வந்தால் போதும் என்று கட்டளை வேறு..
காலையில் மனைவி குழந்தைகள் தரிசனம் இல்லாமல் சற்று சோர்வாக தான் இருந்தது வேந்தனுக்கு…
வேலைகள் ஒவ்வொன்றாக முடித்து.. குளியலறைக்குள் நுழைந்து கொண்டவன்.. வழமைபோல் குளித்து வெளியேற முனைய, அங்கே வைக்கபட்டிருந்த பொருள் கண்ணில் தாமதமாகத்தான்பட்டது..
கையில் எடுத்து பார்த்தவனுக்கு அத்தனை மகிழ்ச்சி.. வார்த்தையில் விபரிக்க முடியாத உணர்வு… மனைவியை காண வேண்டும் என்று உள்ளம் துடித்தது… வெளியே வந்தவன் அவள் எண்ணுக்கு எத்தனை அழைத்தும் எடுக்கப்படவில்லை…
உடனடியாக தயாராகியவன் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஸ்மைலுக்கு வண்டியை விட்டான்… வழமையை விட ஐந்து நிமிடங்கள் முன்னவே அவன் வாகனம் அங்கே வந்திருந்தது…
அவன் உள்ளே நுழைய எதிரில் வந்த ஊழியன் ஒருவன், “சார் மேடத்துக்கு டெலிவரி பெயின் வந்துடிச்சுனு **** ஹாஸ்பிடல் கொண்டு போயிருக்காங்க…” என்க, மீண்டும் ஆரம்பமானது வேந்தனின் ஓட்டம்..
__________________________________________
அங்கே மருத்துவமனைக்குள் அதிவேகமாகவே நுழைந்த வேந்தன், சிறிது நேரத்திலே வெளியே கையை பிசைந்து கொண்டு நிற்கும் கௌரவ் மாற்றும் விக்ரமை கண்டுகொண்டான்…
“என்னாச்சு டா டெலிவரிக்கு இன்னும் நாள் இருக்கே…”
“தெரியல இன்னைக்கு பெயின் வந்துடிச்சினு கொண்டு வந்தோம்.. டெலிவரி பெயின் தான்னு கான்போர்ம் பண்ணிட்டாங்க…” என்றான் கௌரவ்..
“இந்த டைம்ல அவ்வளவு வேல பாக்காதன்னு சொன்னா கேட்டா தான?.. ஓகே டென்ஷன் ஆகாத எல்லாம் சரியாகிடும்… எங்க அவ?..” என்றான் கேள்வியாக..
“அதோ அங்க..” என்று சற்று தள்ளி இருந்த இடத்தை விக்ரம் காட்ட.. அங்கே அவன் சிட்டு அழும் குழந்தையை சமாதானப்படுத்தி கொண்டிருந்தாள்..
இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள அதில் ஆயிரம் உணர்வுகளின் குவியல் நிறைந்திருந்தது.. பேச்சு வராமல் தவிப்பது போல் உணர்வுகளை கண்களால் பரிமாற்றி கொண்டனர்…
அதற்குள் கௌரவின் மகன் இவ்வுலகுக்கு வந்திருந்தான்… ஆம் இன்று ஸ்ருதிக்கு தான் மகப்பேறு..
அதன் பின் குழந்தையை கொண்டாடி தீர்த்துவிட்டார்கள்.. மாறி மாறி குழந்தை ஒவ்வொருவர் கைக்கும் சென்று இறுதியில் வேந்தனிடம் வந்திருந்தான் குட்டி கௌரவ்…
முதலில் கௌரவ் போய் ஸ்ருதியை பார்த்து வந்ததும் மாற்றவர்களும் உள்ளே சென்றனர்…
“எப்படி இருக்கடா ஸ்ருதிமா..”
“பைன் ணா..”
“பாத்தியா உன் மகன, என்ன விட்டுட்டு எப்படிடா கடைய திறப்பீங்கனு கோபப்பட்டு அவசரமா வெளியே வந்துட்டான்..” என்று குழந்தையின் பட்டு கன்னத்தில் முத்தமிட்ட வேந்தன்.. மீண்டும், “பட்டுக்குட்டிக்கு இன்னும் ஒன்பதே மாசத்துல கூட விளையாட இன்னொரு பாப்பா வரப்போறாங்க தெரியுமா?…” என்று குழந்தைக்கு சொல்வது போல அங்கிருப்பவர்களுக்கும் விடயத்தை தெரியப்படுத்தினான்..
அனைவர்க்கும் விஷயம் புரிய வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்… கௌரவோ சும்மா இராமல்.. “டேய் அண்ணா, இன்னைக்கு நான் தான்டா ஹீரோ.. இன்னைக்கும் என்ன பெர்போமன்ஸ் பண்ண விடாம நீ ஸ்கோர் பண்ற பாத்தியா அங்க நிக்கிற நீ…”
“உனக்கு.. சாமர்த்தியம் பத்தலடா தம்பி.. நான் வேணா அடுத்த ஹீரோக்கு உன்ன ரெகமன்ட் பண்ணவா?..” என்றான் வேந்தன் புன்னகையுடன்..
“எப்பா ராசா ஆளவிடு.. எதுக்கு அந்தம்மா என்ன கதை புள்ளா டென்ஷன்லயே வெச்சிருக்கவா?.. எனக்கு சைட் ரோலே போதும்…” என்று கும்பிடு போட, அங்கே சிரிப்பலைதான்..
__________________________________________
சிறிது நேரத்திலேயே மீனாட்சியை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான் வேந்தன்.. இவ்வளவு நேரத்துக்கும் இருவரும் ஒரு வார்த்தை பேசி இருக்கவில்லை..
வழியிலே குழந்தை மது தூங்கி இருக்க அவளை படுக்கவைத்து திரும்பிய மீனாட்சி வேந்தனின் கைகளுக்குள் சிக்கி இருந்தாள்..
“சிட்டு.. சொல்லுடி…”
“என்னோட பூரி மறுபடியும் அப்பா ஆக போறீங்க…” என்றவள் முடிக்கவில்லை.. வார்த்தைகளை கடன் வாங்கிக்கொண்டான் அவள் கள்வன்..
சிறிது நேர முத்தப்போர் முடிவுக்கு வர, “ஐ எம் சோ ஹாப்பி சிட்டு.. என்னடி பண்ண என் வாழ்க்கைய.. உண்மைலேயே நீ மாயக்காரி தான்..”
“அடடா அப்போ சாரோட உழைப்பு இதுல இல்லையாமா?.. டே நைட் நீங்க ஹெவி பர்போமன்ஸ் பண்ணிட்டு கிரெடிட் மொத்தமும் எனக்கு குடுத்தா எப்படியாம்..” என்று அவனை சிவக்க வைத்திருந்தாள்..
“அடியேய்.. பேசுறது பூரா எய்டீன் பிளஸா தான் பேசுவியா நீ…
“நீங்க வெக்கபட்டா எக்ஸ்ட்ரா அழகா தெரியுறீங்க பூரி.. நான் என்ன பண்ண..” என்றவள் அவன் அணைப்பில் இருந்த படியே எப்போதும் அவளை மயக்கும் அந்த கண்களுக்கு அழுத்தமான முத்தத்தை பரிசாக வழங்கினாள்…
“முதல் முதல் யார்னே தெரியாத உங்க மேல ஒரு கிரஷ்.. அப்பறம் இந்த கண்ணுக்குள்ள என்ன தொலைச்சு இப்போ உங்ககிட்ட மொத்தமா என்ன தொலைச்சிட்டேன்.. தேடி கண்டுபிடிக்க தோணவே இல்ல..” என்க, ஆளை மயக்கும் புன்னகை அவனிடம்..
“பூரி ஐ வாண்ட் டீப் ஹக் அன்ட் டீப் கிஸ்…” என்று கேட்ட மனைவியின் கட்டளையை நிறைவேற்றும் சேவகன் ஆனான் பாரி வேந்தன்..
சாதாரணமாகவே வாரி வழங்கும் பாரி வள்ளல் அவன்.. மனைவியை ஆசையாய் கேக்கும் பொழுது விட்டுவைப்பானா என்ன…
____________________________________________
அன்றிறவு.. மெத்தையில் நடுவில் வேந்தன் அவன் நெஞ்சில் மகி கைவளைவில் ஒருபக்கம் ஆர்வன் இன்னொரு பக்கம் அவன் காதல் மனைவி.. இருவருக்கும் இடையில் குட்டி வாண்டு மதி.. உலகையே வென்றுவிட்ட திருப்தி வேந்தன் கண்ணில்…
“என்ன வாத்தி சார்.. அடுத்து வரப்போற உங்க மகனுக்கு எங்க இடம் கொடுப்பீங்கலாம்…”
“என் மகனுக்கு இல்லாத இடமா.. இன்னும் எத்தன பேர் வந்தாலும் மனம் உண்டால் இடம் உண்டுடி சிட்டு…”
“ஐயோ எத்தன பேர் வந்தாலுமா?? இதுல ஏதோ உள்குத்து இருக்குற போலவே தோணுதே.. இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா நான் தூங்கிட்டேன்…” என்று மீனாட்சி கண் மூடிக்கொள்ள..
வேந்தனோ சிரிப்புடன் “ஐ லவ் யூ சோ மச் டி சிட்டு..” என்றவன் அவனது கரங்கள் என்னும் தோகைவிரித்து அவனது உலகை அணைத்து சுகமாய் கண் மூடினான்…
…ஜாலம் நிறைவாய் முடிந்தது…
… ஆஷா சாரா…
சூப்பர் ❤️❤️ ஒருவழியா happy ending❤️❤️ இப்போ தான் நிம்மதியா இருக்கு but story mudinchiduche 🤧🤧
😁😁 ஒரு வழியா மீனாவ paariyoda சேர்த்து வெச்சாச்சு 😁😁 உனக்கு இனி பாரி இல்ல 🏃♀️🏃♀️🏃♀️
மீனு பூரியோட வாழ்க்கையில அருமையான வர்ணஜாலத்தை நிகழ்த்திட்டீங்க செம்ம 👌👌👌
அருமையான நிறைவான முடிவு 👌👌👌
Thank u so much kaa 😍😍😍
கதை அருமை. காதல் சஸ்பென்ஸ் கொலை வன்முறை நட்பு என்று கலந்து கொடுத்தது செமடா. காதலை சொன்ன விதம் அருமை. அக்கா மாமா விபத்து என நினைத்து இருக்க அது விபத்து இல்லை என்பதை ஷாக் கொலைகாரன் ஹீரோயின் கடத்திட்டு போக எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து கொலைகாரன் தண்டனை . ஹீரோ ஹீரோயின் காதல் குட்டிபசங்க கியூட். அவர்களுக்கு என்று குட்டிஸ் சூப்பர். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்
ரொம்ப அழகா சொல்லிடீங்க 😍😍😍😍 thank u sis
Semma love rendu perum…. Family super support… Lovely… 💖🥰
😍😍 thank u so much sis 😍❤
Super story
Thank u sis ❤😍