ஜாலம் 15
வேந்தனோ உயிரை கையில் பிடித்தபடி ஓடிவந்தான் என்று தான் சொல்லவேண்டும்… அவள் பேசி சரியாக பதினைந்து நிமிடங்களில் வரவேண்டிய இடத்துக்கு வந்திருந்தனர் மூவரும்…
அந்த இடத்தை பார்த்த விக்ரம் யோசனையுடன் முகம் சுருக்க, கௌரவ் நிலைமையும் அதுதான்…
விக்ரமோ, “இங்க எப்படி மீனு?…” என்க
வேந்தன் யோசனையுடன் “என்னாச்சு விக்ரம்… என்ன இடம் இது?.. யார் வீடு?…”
“பாரி ணா.. இது விஜய் அண்ணாவோட வீடு… கொஞ்ச வருசமா இங்க தான் இருகாங்க.. இங்க எப்படி மீனு?…”
“தெரியல பட் உள்ள போய் பாக்கலாம் என்னனு..” என்ற கௌரவின் பேச்சுகினங்க மூவரும் உள்ளே நுழைந்தனர்.. முன் பக்கம் வீடு பூட்டி இருந்தது..
விக்ரம் இரண்டு மூன்று முறை அங்கே வந்திருக்கிறான்… ஹால் வரை தான்.. பெரிதாக உள்ளே சென்றதெல்லாம் இல்லை…
விக்ரம் காலிங் பெல்லை தட்டி வெளியே நிற்க… சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது… உள்ளே விக்ரமின் நண்பன் ஒருவன் நின்றிருந்தான்…
“அடடே விக்ரம் வாப்பா.. இப்போதான் அண்ணன் வீட்டுக்கு வழி தெரிஞ்சிதா?…”
“சுரேஷ் ணா.. அண்ணா எங்க?.. இருக்காங்களா வீட்ல?..”
“இல்லையே விக்ரம்.. மார்னிங் ஸ்டேஷன் போய்ட்டானே.. உள்ள வாயேன்… நீங்களும் வாங்கப்பா..” என்றான் அந்த புதியவன்..
மூவரும் உள்ளே நுழைய “உக்காருங்க குடிக்க ஏதாச்சும் எடுத்து வறேன்..” என்றவன் சமையலறைக்குள் நுழைய, மூவருக்கும் ஒன்றும் புரியவில்லை
“என்ன ணா இங்க தான் லொகேஷன் காட்டுது பட் அப்படி எதுவும் இங்க நடந்த போல தெரியலையே…” என்று விக்ரம் சொல்ல, வேந்தனோ சற்று முன் அழைப்பு வந்த விஜயின் எண்ணுக்கு மீண்டும் அழைக்க, நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக எதிர் குரல் கேட்டது…
“சிட்.. போன் ஓப்.. டைம் வேஸ்ட் பண்ண முடியாது.. அவ குரலே சரி இல்ல சீக்கிரம் கண்டுபிடிச்சாகனும்…” என்றவன் ஹரிஷ்க்கு தொடர்புகொண்டு விடயத்தை விளக்கியவன் லொகேஷனையும் அனுப்பி வைத்தான்…
“என்ன நடந்திருக்குனு தெரியல விக்ரம்.. நான் உள்ள போறேன்.. நீங்க இங்க இருங்க..” என்ற வேந்தன்.. புதியவன் வருவதற்குள் உள்ளே அறைகள் ஒவ்வொன்றாய் பாக்க எல்லாம் வெறுமையே.. பெரிதாய் எதுவும் இருப்பதாக தெரியவில்லை… மண்டை காய்ந்தது…
“டீ எடுத்துக்கோ விக்ரம்.. எங்க இன்னொருத்தர காணோம்…”
“வாஷ்ரூம் போயிருந்தேன் சார்…” என்றபடி வேந்தன் வந்து அமர்ந்தவன்.. எதுவும் இல்லை என்பதாய் மற்றவர்களுக்கு சைகை செய்தான்…
“அண்ணா என் பிரண்ட் மீனாட்சிய காணோம்.. இங்க ஏதும் வந்தாளா?..”
“இங்கயா? இங்க எப்படிப்பா வருவாங்க.. விஜய் கூட நேத்து சொன்னான் காணலன்னு.. ரொம்ப தேடி அலைஞ்சு நைட் லேட்டா தான் வந்தான் மார்னிங்கே கிளம்பிட்டானே..” என்றான் சாதாரண குரலில்..
சிறிது நேரத்தில் விக்ரமோ, “ஓகேணா விஜய்ணா வந்தா என்ன கான்டாக்ட் பண்ண சொல்லுங்க…” என்றவன் சொல்ல, மூவருமாய் வெளியேறி இருந்தனர்…
வெளியே வந்த கௌரவோ, “பாரி ணா… என்ன பண்ண போறோம் இப்போ…”
“அத தான் நானும் யோசிக்கிறேன் கௌரவ்.. விஜய் நம்பர் இருந்து தான் கூப்பிட்டிருக்கா… ஒன்னு விஜய் பண்ணி இருக்கனும்.. இல்லனா அவனும் அங்க அவளோட சேர்த்து மாட்டி இருக்கனும்…”
“பட் அண்ணா பண்ணனும் என்ன அவசியம்..” என்ற கேள்வி தான் விக்ரமிடமிருந்து வந்தது…
“வாய்ப்பிருக்கு விக்ரம்.. அவளை கட்டிக்க கேட்டிருக்காங்க.. அது இல்லனு ஆன கோபமா கூட இருக்கலாம்.. அந்த ஆங்கில்லயும் யோசிக்கணும்ல.. அப்போதான் அவள காப்பாத்த முடியும்..” என்றவன் மனதிலோ தன்னவளுக்கு எதுவும் ஆகி இருக்க கூடாது என்ற எண்ணம் தான் நிறைந்திருந்தது…
ஆனால் அவன் நினைத்தது போல் தான் நடந்திருக்குமா????
_____________________________________________
💔நேற்றைய நாள்💔
இரவு வருவதாக கூறிச்சென்ற விஜய், சரியாக இரவு பத்து மணிக்கு அவளை வைத்திருக்கும் வீட்டுக்கு வந்திருந்தான்…
விஜய் மட்டும் சில வருடங்களாக வசிக்கும் வீடு அது… சில நேரம் அவன் நண்பன் சுரேஷும் அங்கே தங்குவதுண்டு… இருவரும் கூட்டு களவாணிகள் தான்..
சுரேஷ், பாடசாலை ஒன்றில் ஆசிரியராக இருப்பவன்… இவனுக்கும் சரி விஜய்க்கும் சரி மாணவிகளின் தொலைபேசி எண்ணை எடுப்பதில் சிரமம் இருப்பதில்லை…
இளம்சிட்டுக்கள் தான் அவர்களது குறிக்கோள்.. எதுவும் அறியாமல் ஒரு ஆர்வத்தில் சமூக வளையதளங்களுக்கு முதன் முதலில் கால் வைக்கும் பெண்களை இலகுவாக ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையே இவர்களது மூலதனம்..
இப்படிப்பட்ட நாய்கள் தெருக்கு தெரு இருக்கத்தான் செய்கின்றனர்.. இவர்கள் எல்லாம் வெட்ட வெட்ட முளைக்கும் விஷச்செடிகள்.. வேரோடுத்தான் பிடுங்க வேண்டும்… அதற்கு மஞ்சரி, எழில் போன்று இன்னும் பலரின் தியாகமும் வேண்டும்…
“என்ன மச்சான் சொன்ன டைம விட நேரதுக்கே வந்திருக்க.. அவ்வளவு ஆச.. ம்ம்ம்ம் நடத்து நடத்து… நாளைக்கு எனக்கு கொடுத்துடனும் சொல்லிட்டேன்..”
“நோ.. ஒரு ரெண்டு நாளைக்கு எனக்கு, அப்பறம் வேணும்னா நீ எடுத்துக்கோ…”
“என்னடா மச்சான் ரொம்ப காஞ்சு போய் இருக்கவன் மாதிரி பேசுற.. வாரத்துக்கு ஒன்னுன்னு ஜாலியா தானா இருக்க.. அப்பறம் என்ன?..”
“அது வேற இது வேற.. என்னோட ரொம்ப நாள் ஆச இவ… உனக்கு சொன்னாலும் புரியாது.. இன்னும் ரெண்டு பொண்ணுங்ககிட்ட இருந்து பணம் வரல.. இன்னும் ரெண்டு வீடியோ சேர்த்து அனுப்பு.. தன்னால பணத்தோட அவளுகளும் வருவாளுங்க.. அப்பறம் மோர்னிங் என்ன டிஸ்டர்ப் பண்ணாத நானே வெளிய வருவேன்.. ” என்றவன் கண்களில் ஆசைவெறி பற்றி எரிந்தது…
“நீ நடத்து ராஜா.. அவளுங்கள நான் பாத்துக்கிறேன்.. வீடியோ செட்டப் எல்லாம் பக்காவா இருக்கு.. எதுக்கும் நம்ம பசங்க ரெண்டு பேர காவலுக்கு கூப்பிட்டுக்கலாமா?…”
“இங்க யாரு வரப்போறா.. எல்லாரும் அவள தேடுறதுல ரொம்ப பிசி.. அப்படியே வந்தாலும், கிழ இருக்குற ஸ்டோர் ரூமுக்கெல்லாம் யார் வருவா?..”
“அது சரி.. ஸ்டோர் ரூம, உள்ள லக்சரி ரூமா மாத்தி உன்னோட லீலை இன்னைக்கு நேத்தா நடக்குது… என்ஜோய் மேன்…”
அந்த அறைக்குள் நுழைந்த விஜய் சிரிப்புடன் மீனாட்சியை நெருங்க.. அவளோ கோபக்கனலோடு தான் அவனை பார்த்திருந்தாள்..
“எவ்வளவு நேரத்துக்கு டார்லிங் முறைச்சிட்டே இருக்க போற, இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருப்ப..” என்று அவன் நெஞ்சத்தை சுட்டிகாட்டியவன் இன்னும் சில வார்த்தைகள் கீழேதரமாக பேச, மீனாட்சியோ அருவெறுப்பில் முகத்தை சுருக்கினாள்..
“எத்தன பொண்ணுங்களோட வாழ்க்கைய இப்படி சிதச்சிருக்க.. நீயெல்லாம் காவல்துறைக்கே ஒரு களங்கம்… மனசாட்சி இல்லாத மிருகம்.. உன்ன எல்லாம் பாக்குறதே பாவம்…”
“ஸ்ஸப்பா.. இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பக்கம் பாக்கமா டயலாக் பேச வேண்டியது… வெறும் போட்டோஸ் தான் இருக்குனு உன் கட்ட அவிழ்த்து விட்டது தப்பா போச்சு… எல்லா போட்டோவும் பாத்துட்ட போல… எப்படி நம்ம லீலைகள்… ஒவ்வொருத்தியும் அப்படியே பயத்துல கெஞ்சி கத்தி கதறுவாங்க பாரு… சும்மா அப்படி இருக்கும்…”
“உண்மையிலேயே நீ ஒரு மிருகம் வாழவே தகுதி இல்லாத மிருகம்.. உன் அம்மாவும் ஒரு பொண்ணு தான… அவங்களையும் இப்படித்தான் பாப்பியா??…” என்றவள் காரி உமிழ்ந்தாள் அவன் முகத்தில்..
அதனை வெக்கமே இல்லாமல் துடைத்துக்கொண்டவனோ, “தத்துவம்லாம் கேக்குற நேரமா டார்லிங் இது… என்ன விட்டுடுங்கனு நீ ஓடணும் நான் துரத்தணும்.. வேட்டையாடணும் எத்தன இருக்கு.. எங்க ஓடு பாப்போம்..” என்க அவளோ அவனை எதிர்த்து அப்படியே நின்றிருந்தாள்…
“ஆக உனக்கும் ஆச தான் போலிருக்கே ஆசையாம அப்படியே நிக்கிறியே… சரி ஆரம்பிப்போமா?.. இப்போவே பேசி பேசி வன் அவர் வீணா போய்டிச்சு..”
“கிட்ட வந்த நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..” என்று அப்போதும் மிரட்டும் தொணியில் தைரியமாகவே பேசினாள்..
“வீர வசனம் எல்லாம் கேட்குற மூட்ல இல்ல நான்.. உன்ன எனக்கே எனக்குன்னு எடுத்துக்குக்க போறேன்.. அந்த வீடியோவ உன் புது புருசனுக்கு அனுப்புவேன்.. அப்பறம் அவன் எங்க உன்னோட இருக்கப்போறான்… கடைசில வேற வழி இல்லாம எங்கூட வாழ வருவ.. நீயா வரலனா நானா வர வைப்பேன்..” என்றவன் அவள் எதிர்ப்பையும் மீறி அவள் அருகில் சென்றான்…
“இது உங்க கல்யாண அன்னைக்கே பிளான் பண்ணது தான்… ஆனா நீங்க தான் அந்த கிப்ட்ட பாக்கலயே… பாத்திருந்தா ஃப்ரஷாவே கெடச்சிருப்ப ஜஸ்ட் மிஸ் ஆகிடிச்சு..” என்று அவள் கன்னத்தை பற்ற அவளோ தட்டிவிட்டாள்…
“அட இரும்மா, கை பட்டதுக்கேவா.. நேத்துதான் எல்லாம் நடந்திருக்கு போல.. காயம் எல்லாம் ஃப்ரஷா இருக்கே…” என்றவன் கன நேரத்தில் அவள் புடவையை உருவி இருந்தான்… விளைவாக முகம் கை கால்கள் எல்லாம் நக கீரலை பரிசாக பெற்றும் கொண்டான்…
“என்கிட்டயே உன் வேலைய காட்டுறியா?.. செத்தடி இன்னைக்கு..” என்றவன் அவளை தன் ஆளுமைக்கு கீழ் கொண்டுவர, மீனாட்சியும் முடிந்த மட்டும் போராடினாள்… காலால் உதைத்தாள்.. திமிறினாள்.. நகத்தால் ஆழமாய் கிழித்தாள்… ஆனால் அவன் வலிமை சற்று அதிகமாகவே இருந்தது… அவன் விட்ட ஒற்றை அறையில் இதழில் இரத்தம் கசிந்தது… கூடவே கண்களில் கண்ணீரும்…
ஆணை உடல் வலிமையானவனாக கடவுள் படைத்ததே பெண்களை காக்க தானே.. இன்று அவர்களை அடக்கி ஆள அதே வலிமையை பயன்படுத்தும் ஆண்கள் உலகுக்கு சாபக்கேடு தானோ…
அவளை மெத்தையில் தள்ளியவன்… அவளை ஆசைத்தீர கண்களால் அளவெடுத்துக்கொண்டிருந்தான்.. அவனுடனான போராட்டத்தில் இன்னும் உடலில் இருந்த மிச்ச ஆடையும் ஆங்காங்கே கிழிந்து தான் போயிருந்தது..
மீனாட்சிக்கு உடல் தீப்பற்றி எரிந்தது… அவன் பார்வை அருவெறுப்பை தர.. கைகள் விட்டு ஏதேனும் கிடைக்குமா என்று அருகில் துலாவ.. கிடைத்தது என்னவோ அங்கே மேசையில் வைக்கப்படிருந்த இரு பேனாகள் தான்… அதனை வைத்து என்ன செய்வது…
அதற்குள் அவனோ அவளை நெருங்கி இருந்தான்… அவனது உடல் கூட உரசிவிட்டது.. இவன் போய் தன்னை இப்படி பார்ப்பதா?? தொடுவதா??… என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் அவள் மண்டைக்குள் ஓடியது…
கூடவே காதுக்குள் மஞ்சரியின் கதறல் குரலும், அதனுடன் இன்னும் பல பெண்களின் கதறல் குரலும் கேட்பது போலிருக்க, தங்கமுடியாதவளாய் கொதித்தெழுந்தாள் மங்கை…
எங்கிருந்ததான் அவ்வளவு பலம் வந்ததோ தெரியவில்லை… அவனை பலம் கொண்டமட்டும் தள்ளி எழுந்துக்கொண்டவள்.. கையிலிருந்த பேனா இரண்டையும் அவன் கண்களில் சொருகி இருந்தாள்…
சிறு துரும்பும் பல்லு குத்த உதவும் என பெரியவர்கள் வெறும் பேச்சுக்கு சொல்லி செல்லவில்லையே… இன்று அவளது மானம் காத்த ஆயுதங்கள் அவை…
அவன் உடலோ வலியில் துடிதுடித்து அடங்க, அப்போதும் கோபம் தீராதவளாய் தூக்கவே முடியாத அந்த பெரிய கண்ணாடி மேசையை அவன் மீதே போட்டு உடைத்திருந்தாள்…
இவ்வளவு பலமும் அவளுக்குள் இருந்ததே அதிசயம் தான்.. இன்னும் தீரா கோபத்துடன் அவன் இரத்தம் வழியும் உடலையை வெறித்தபடி அப்படியே அமர்ந்தாள்…
அவனுக்கோ வலி உயிர் போனது.. சத்தமிட்டு கத்தி ஒரு கட்டத்தில் கத்தவும் முடியவில்லை முனங்கியபடி மயக்கத்துக்கு சென்றிருந்தான்..
பெண்களின் கதறல் சத்தம் வெளியே போகாமல் இருக்க, வடிவமைத்த அந்த அறை இன்று அவனுக்கும் எமனாக மாறி இருந்தது..
அப்படியே அமர்ந்திருந்தவள் நிதானதுக்கு வந்தது என்னவோ விடியும் வேளையில் தான்… அதன் பின் அவனின் போனை தேடி எடுத்தவள் அவளவனுக்கு அழைத்திருந்தாள்…
அழைத்து பேசியவள்.. அவன் கேட்ட தன் இருப்பிடத்துக்கான வழியை நடுங்கிய கைகளுடன் தான் அனுப்பி இருந்தாள்… அனுப்பிய அடுத்த நொடி அழைபேசி அதன் உயிரையும் விட்டிருந்தது…
_____________________________________________
விஜய் வீட்டுக்கு சென்று திரும்பி வந்தவர்கள் அங்கே வேந்தனின் வீட்டில் தான் கூடி இருந்தனர்…
மூன்று மணி நேரங்கள் தான் கடந்ததே தவிர எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.. வேந்தனுக்கோ மனம் அடித்துக்கொண்டது தன்னவள் பேசிய குரலே உயிரை உறுக்கி இருக்க.. இன்னும் வேடிக்கை பார்க்கும் தன் நிலையை வெறுத்தான்…
ஹரிஷும் அவனாலான எல்லாம் செய்து பார்த்துவிட்டான்… கூடவே அவனது நண்பன் ஒருவன் காவல்துறையில் ஏசிபியாக இருக்க, அவனிடமும் உதவி கோரி இருந்தான்…
பிள்ளைகள், அவளின் தாய் தந்தை என நால்வரையும் கோவிலுக்கு அனுப்பியாகிவிட்டது.. அவளின் பெற்றோரிடம் எதுவும் சொல்லி இருக்கவில்லை.. ஏதோ வேலை டென்ஷன் என்று மட்டும் மேலோட்டமாக சொல்லி இருந்தனர்… பாவம் வயதானவர்கள் பயம் கொள்ள கூடும் என மறைத்துவிட்டனர்..
“ஹரிஷ், கமிஷனர் கிட்ட பேசிட்டேன்.. போலீஸ் போர்ஸ் தர்றதா சொல்லி இருக்கார்..” என்று ஹரிஷிடம் தொடங்கியவன், “நீங்க சொல்ற போல விஜய் மார்னிங் வேர்க் வரலன்னுதான் இன்போர்மேஷன் வந்திருக்கு மிஸ்டர் வேந்தன்…” என்று வேந்தனிடம் முடித்தான், ஹரிஷின் போலீஸ் நண்பன் ரகு..
“எஸ் எனக்கும் அவன் மேல தான் டவுட்… சாதாரணமாவே யாரையாவது பர்ஸ்ட் டைம் பார்க்கும் போது பிடிக்காம போகும்ல.. அப்படிதான் எனக்கும் முதல் பார்வை அவன் மேல நல்ல எண்ணத்த கொண்டு வரல.. மே பி அது மீனாட்சி மேல உள்ள பொஸ்ஸஸிவ் காரணமா இருக்கலாம்னு தான் அப்போ யோசிச்சேன்.. பட் இப்போதான் சந்தேகம் உறுதியாகுது…”
“மிஸ்டர் விக்ரம் உங்க அண்ணா ஆக்டிவிட்டீஸ்ல எப்போவாவது சந்தேகம் தோணி இருக்கா?…” என்றான் ரகு, ஒரு காவலதிகாரியாய்..
“அப்படி எதுவும் இல்ல சார்.. ஒரு வயசுக்கு மேல அவர்கூட எனக்கு கிளோஸ்னஸ் இருந்ததில்லை.. பேருக்கு அண்ணா தட்ஸ் இட்.. வேலை கெடச்ச கொஞ்ச நாள்லயே தனிய வீடெடுத்து தங்க ஆரம்பிச்சிட்டாங்க.. அதுக்கப்பறம் இன்னும் விலகல் தான்..”
“சப்போஸ் விஜய் தான் குற்றவாளினா ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும் இப்போவே போய் அங்க பாக்கலாமே அங்க தானே லொகேஷன் கூட காட்டுது..” என்றான் கௌரவ்
“அதான் அங்க எதுவும் கிடைக்கலன்னு சொன்னீங்களே..” என்று ஸ்ருதி கேள்வியாய் வினவ
மீண்டும் பதிலுக்கு கௌரவே, “தனியா போய் செக் பன்றதுக்கும் போலீஸ் போர்ஸோட போறத்துக்கும் வித்தியாசம் இருக்குல்ல ஸ்ருதி..” என்றான்..
அதற்கு சிறிது நேரம் யோசித்த விக்ரமோ, “நாம ஏன் முதல்ல எங்க வீட்ல, அண்ணா ரூம செக் பண்ண கூடாது.. அண்ணா அத எப்போவும் பூட்டி தான் வெச்சிருப்பாங்க.. அம்மாவ கூட கிளீன் பண்ண விடமாட்டாங்க.. ஏதாச்சும் க்ளூ கிடைக்க வாய்ப்பிருக்குல்ல.. அவர்தான் குற்றவாளினு ஒரு சிக்ஸ்டி பர்ஸன்ட் தெரிஞ்சா கூட முழுசா அதுல இறங்க முடியும்… மீனாட்சியையும் சீக்கிரம் காப்பாத்த முடியும்…” என்றான்.
வேந்தனுக்கோ மனதில் அவன் சொன்ன இறுதி வார்த்தையே நிலைத்தது.. “அவன் தான் உண்மையா அவளை கடத்துனதுனு தெரிஞ்சா.. ஈஸியா கண்டுபிடிக்கலாம்…” என்று மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவன் மனதில் ஏதோ தோன்ற, அவசரமாக உள்ளே சென்று எதையோ எடுத்துவந்தான்…
மற்றவர்கள் என்னவென்று பார்க்க, அவன் கையில் பரிசுப்பொருள் ஒன்று இருந்தது… ஹரிஷ் ரகு இருவரையும் தவிர மாற்ற மூவருக்கும் அது என்னவென்று புரிந்து போனது…
“என்ன வேந்தன் இது?..” என்ற கேள்வி முதலில் ஹரிஷிடமிருந்து தான் வந்தது…
“இது விஜய் எங்களுக்கு கொடுத்த கல்யாண கிப்ட்.. ரெண்டு மூனு முறை பார்த்தாச்சா பிடிச்சிருக்கான்னு ஒரு ஆர்வமா விஜய் மீனாகிட்ட கேக்குறத பாத்திருக்கேன்… இத பிரிச்சா என்னனு தெரியும்..” என்றவன் பெருமூச்சுடன் அதனை பிரிக்க..
அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியே… அத்தனையும் விஜயும் மீனாட்சியும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் தான்…
அதில் ஒன்றை கூர்மையாக பார்த்த விக்ரமோ, அந்த உடையை இனம்கெண்டு கொண்டான்… “இது நானும் மீனுவும் எடுத்துக்கிட்டது.. என் பர்த்டேக்கு அவ செயின் ப்ரசென்ட் பண்ணா, அத போட்டுவிடும் போது எடுத்தது… அதப்போய் இப்படி மாத்தி இருக்கானே… *****..” என்று அண்ணன் என்றும் பாராமல் கெட்டவார்த்தையில் திட்டியவன் அந்த படத்தை தூக்கி எரிந்தான்..
“பார்த்தா மாட்டிப்போங்கிறத தாண்டியும் இத கிப்ட்டா கொடுத்திருக்கான்னா.. எங்களுக்கு சண்டை வரணும்.. நாங்க பிரியனும்னு தான் எதிர்பார்த்திருக்கணும்..” என்றவனின் கூற்றை மற்றவர்களும் ஆமோதிக்கவே செய்தனர்…
அதன் பின் எல்லாம் மின்னல் வேகம் தான்.. காவலதிகாரிகள் அங்கு வர, இரண்டு குழுக்களாய் பிரிந்தவர்கள் ஒன்று விக்ரம் ஹரிஷ் தலைமையில் விக்ரமின் வீட்டுக்கும்.. இன்னொருன்று.. வேந்தன், கௌரவ் ரகு தலைமையில் விஜய் இருக்கும் வீட்டுக்கும் சென்றது…
முதலில் எத்தனை கேட்டும் தெரியாது இல்லை என்பதாகவே சமாளித்தான் விஜயின் நண்பன் சுரேஷ்.. காவலர்கள் துப்பாக்கி காட்டி பேசியும் மசியவில்லை அவன்.. இடத்தை தான் சொல்லாமல் கண்டுபிடிக்க முடியாது என்பது அவன் எண்ணம்.. அது கொடுத்த தைரியம் தான் இதெல்லாம்…
பொறுத்து பார்த்த வேந்தனுக்கே கோபம் வர, உள்ளே சென்று தேடி
பெரிய அருவாள் போன்ற கத்தி ஒன்றை எடுத்து வந்தவன்.. அவன் குரல்வலையில் வைத்து.. “நீ பயப்படாம ரொம்ப நிதானமா பேசுறதுலயே புரியுது கண்டுபிடிக்க முடியாதுங்குற நம்பிக்க தான் எல்லாம்னு… இவங்களுக்கு இது ஒரு கேஸ் அவ்வளவு தான்.. ஆனா எனக்கு அவ உயிர்… இப்போ மட்டும் நீ சொல்லலனா அருத்து போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்… எவனுக்கும் பயம் இல்ல.. அவ இல்லாத உலகத்துல எனக்கென்ன வேல.. அருத்து போட்டுட்டு ஜெயிலுக்கு கூட போவேன்…” என்று கழுத்தில் வைத்த அருவாளை அழுத்த… அந்த அழுத்தமும் அவன் கண்ணில் தெரிந்த தீர்க்கமும் சொல்லாமல் சொன்னது இவன் சொன்னதை நிச்சயம் செய்வான் என்பதை…
உடல் நடுக்கத்துடன் சில நிமிடங்களிலே அந்த அறை முன்னே அனைவரையும் அழைத்துச்சென்றிருந்தான் சுரேஷ்…
வெளியே இருந்தே சாவி போட்டு கதவை திறக்க, உள்ளே தாங்களும் வருகிறோம் என்று எத்தனை பேசியும் வேந்தனோ யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை..
அவள் குரல் சொன்னதே “தன்னை யாரும் பார்க்க வேண்டாம்..” என அத்தனை உறுதியாய்… புரிந்தது அவனுக்குள் அவள் நிலை… என்னவாகி இருந்தாலும் அவனுடைய சிட்டு அவள்… அவளை முழுமனதோடு மீட்டெடுப்பேன் என்ற நம்பிக்கையோடு பெருமூச்சொன்றை விட்டவன் உள்ளே நுழைந்து கதவடைத்துக்கொண்டான்…
உள்ளே இழுந்தவளோ கேட்ட சத்தத்தில் ஏற்பட்ட நடுக்கத்துடன் யாரோ வருகிறார்கள் என்று மட்டும் புரிய, தன் உடலை முடிந்தமட்டும் கைகளால் மறைத்துக்கொண்டாள்…
“சிட்டு..” என்ற அவனது ஒன்றை வார்த்தை தான்… அவளிடம் இருந்த பயம் கோபம் விரக்தி சோகம்.. அத்தனையும் அவளை விட்டு கலைவதாய் ஒரு பிரம்மை…
நிமிர்ந்து அவனை பார்த்தவள் விழிகளில் தன்னவன் உருவத்தை நிரப்பியவள் வில்லிலிருந்து எய்யபட்ட அம்புபோல வேகமாய் அவனை நோக்கி சென்று அவனை இறுக அணைத்துக்கொண்டாள் கண்ணீருடன்…
அவளுக்கு மட்டுமில்லை அவனுக்கும் கண்ணீர்தான்.. என்ன நடத்திருக்கும் என்ற ஒரு விம்பம் அவன் மனதில் இருந்தது.. இது அவளுக்காக வந்த கண்ணீர்…
சிறிது நேரம் அப்படியே இருந்தவன் அவளை தன்னிடம் இருந்து பிரித்து, முகத்தை கையில் ஏந்தியவன் “சிட்டுமா.. டேய்… ஒன்னுமேயில்ல அதான் உன் பூரி வந்துட்டேன்ல அழகூடாது… போய்டலாம் இங்க இருந்தே போய்டலாம் சரியா… இங்க எதுவுமே நடக்கல மறந்துடலாம்.. நம்ம லைப்ல இந்த நாள் இல்லவே இல்ல…”
இத்தனை பேச்சுக்கும் அவளிடம் எதிர்வினை இருக்கவில்லை.. பார்வை மொத்தமும் அவனிடம் நிறுத்தி இருந்தாள்.. இமைகள் கூட மூடவில்லை என்பதை விட அவள் மூட விரும்பவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்…
“என்னாச்சுடா கண்ணா…” என்றவனுக்கும் அவள் வெறித்த பார்வையை காணமுடியவில்லை.. எப்போதும் அவனில் ஒரு ஆர்வத்துடன் அலைபாயும் அவள் கண்கள் இன்றோ பயத்துடன் பார்க்க, அதற்கு மேல் முடியாதவனாய் அவள் உச்சந்தலையில் ஆழ்ந்த முத்தத்தை பதித்து அணைத்துக்கொண்டான்..
அப்படியே இருந்தவனுக்கு நிதர்சனம் புரிய.. “எங்கடா அவன்..” என்றான்.. அவன் குரலே சொன்னது அத்தனை நேரம் இருந்த வேந்தன் இவன் இல்லை என்பதை…
அவளோ கைகளை மட்டும் உயர்த்தி அங்கே மூலையில் இருக்கும் மெத்தையை காட்ட, அதனை நெருங்கியவன் கண்களில் அத்தனை மகிழ்வு கூடவே இதழ்களில் புன்னகை தவழ்ந்தது..
இதே இதற்கு முன் ஒருவனின் கஷ்டத்தில் வேந்தன் சிரிப்பான் என்று சொல்லியிருந்தால் அவனே நம்பியிருக்க மாட்டான்.. ஆனால் இன்று உண்மையாகவே நடக்கிறது…
“நான் பண்ணது ரொம்ப தப்பா பாரி..” என்ற கேள்வி அவனவளிடம்..
“ரொம்ப ரொம்ப சரியா பண்ணி இருக்கடா.. என் தங்கப்பொண்ணுக்கு யாரு சொன்னாங்க தப்புனு…” என்று அவள் இதழில் உறைந்திருந்த இரத்தத்தை துடைத்தவன்.. கேசத்தை ஒதுக்கி அவள் முகத்தை கையிலேந்தியபடி வினவினான்..
“அ..வன் ரொ..ம்ப மோ..சம் பாரி.. மஞ்..சு மாமா.. மகி..ழன் எல்லா..ரையும் கொன்..னுட்டான்… என்..ன என்..ன தொட பா..த்தா..ன் அதா..ன் இப்..படி ” என்றவள் ஏதேதோ அவன் பேசியது செய்தது எல்லாம் சொல்லி உளறத்தொடங்கினாள்…
அவள் நிதானத்தில் இல்லை என்பது வேந்தனுக்கு புரிந்தது… வார்த்தைகளில் அத்தனை குளறல்.. இத்தனை நேரம் அமைதியாய் இருந்தது மாறி விடாமல் பேசினாள்.. ஒருகட்டத்தில் அவளை அமைதிப்படுத்த முயன்றும் முடியாமல் போக, பேசிக்கொண்டே போன அவள் இதழை தன் இதழால் மூடியிருந்தான் வேந்தனவன்…
மனதிலோ கோபம் கோபம் கோபம் மட்டுமே… அன்று தித்திப்பாய் அத்தனை உணர்வுகளின் சங்கமமாயிருந்த இதழ்முத்தம் இன்றோ கடமைக்காய்.. அவளை நிறுத்துவதற்காய்… முடியவில்லை அவனால்.. அந்த விஜய்யை வெட்டி போடும் ஆத்திரம்…
ஆனால் அதனை தான் அவள் மனைவி செய்திருக்கிறாளே… அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்பது அவள் பேச்சில் புரிந்தது… அந்த ஒரு விடயத்தில் சற்று ஆசுவாசம் தான்… இருந்தும் அவள் மனநிலையை எப்படி கையாள போகிறோமோ என்ற பதட்டம் இருக்கவே செய்தது…
அத்தனை நேரம் இருந்த அழுத்தம், அவன் ஒன்றை முத்தத்தில் வடிய.. அப்படியே அவனில் மயங்கி சரிந்திருந்தாள் வேந்தனின் சிட்டு…
தன் சட்டையை அவளுக்கு போட்டு விட்டவன் அப்படியே அவளை பக்கத்தில் இருந்த சோபாவில் கிடத்தினான்…
விஜய்யை நெருங்கி உயிர் இருக்கிறதா என்று கைவைத்து பார்க்க… உயிர் ஊசலாடுவதை, மூக்கின் வழியே வந்த மூச்சு காற்று உணர்த்தியது…
மனதில் இருந்த கோபம் அவனை சும்மா விடுவதற்கு ஒத்துழைக்கவில்லை… அன்றோ நண்பன், நண்பன் மனைவி.. இன்றோ மனைவி அத்தனை பேரின் இன்னலுக்கு காரணமானவன்… அவனை இப்படியே விடுவதா??…
அதற்காக அவனை இப்படியே கொல்ல விருப்பப்படவில்லை… ஒரு நிமிடத்தில் வரும் சாவு இவனுக்கு போதாதே… இன்னும் வேண்டுமே… கொடூரமான மரணம் வேண்டும்..
அதிலும் வேண்டும் வேண்டும் என்று ஆசையாய் கேட்டு பெரும் மரணம்… வாழ்வதற்கு சாவே மேல் என்று என்னும் அளவுக்கு ஒரு வேதனை…
சிறிது யோசித்தவன்.. அங்கே அவன் உள்ளே வந்ததும் கீழே போட்ட கத்தி கண்ணில் பட… விளைவு விஜயின் கை ஒன்றும் கால் ஒன்று வெட்டப்பட்டது வேந்தனால்…
ஏற்கனவே உசலாடும் உயிர்… இனிமேல் உயிரை மீட்டாலும் பார்வையும் சரி… கை கால்களும் சரி திருப்பி கிடைக்க போவதேயில்லை… இனி வாழும் ஒவ்வொரு நாளும் இன்னொருவர் துணையுடன் காலம் கடத்த வேண்டிய கட்டாயம்…
அப்படியே இரத்த கரையுடன் தன் மனைவியை தூக்கிகொண்டவன் வெளியேறியிருந்தான் வேந்தன்…
ஜாலம் தொடரும்….
….ஆஷா சாரா….
விஜய்க்கு சரியான தண்டனை 😡😡 ஒருவழியா சிட்டுவ பூரி கண்டு பிடிச்சாச்சு இப்போ தான் உயிரே வந்துச்சு ❤️❤️
இனி எல்லாம் சுபம் தான் நோ டென்ஷன்.. இனி உன் ஆளோட rommance பண்றதுக்கு மேக்கப் போட்டுக்கோ 😍😍😍😍
மீனு செஞ்சது ரொம்ப சரி எந்த கண்ணால பொண்ணுங்கள ஆசையா பார்த்தானோ அந்த கண்ணு இல்லாம பண்ணிட்டா
விஜய்க்கு கிடைச்ச தண்டனை ரொம்ப சரியானதுதான்
Thank u kaa 😍😍
Ini vaalura ovvoru naalum naragam thaan avanukku
Sema semaaaa.. bt sikiram ud mudinchuruchu.. next ud konjam sikiram podunga pa