Loading

 

ஜாலம் 13

 

அடுத்தநாள் காலை வழமைபோல் வேலைக்கு வந்திருந்தான் வேந்தன்.. முதல் பாடவேளை அவனுக்கு வகுப்பு ஒன்றும் இருக்கவில்லை…

 

ஆசிரியர்களது அறையில் அமந்திருந்தவனுக்கு, நேற்றைய இரவை நினைத்து வெக்கம் தான்.. எதிர்பாராமல் நடந்தது தான் என்றாலும் இருமனங்களின் முதல் இணைவல்லவா..

 

வழமையாக அவள் தான் அவனை காண வெக்கபடுவாள்.. இன்றோ எல்லாம் தலைகீழ்.. அவளை பார்க்க வெக்கம் கொண்டு அவசர அவசரமாக குழந்தைகளையும் அவனே தயார்படுத்தி பாடசாலையில் விட்டு இதோ அவனும் கல்லூரி வந்திருந்தான்..

 

இன்னும் அவன் மனைவி எழுந்திருக்க மாட்டாள் என்பது அத்தனை நிச்சயம்… அவன் எங்கே அவளை தூங்கவிட்டான்..  கண்மூடவே விடிந்திருந்ததே…

 

அவளுக்கு அழைப்போமா என்று யோசித்தவன், “ச்சே ச்சே வேணாம் தூங்கட்டும்.. பாவம்..” என்று மனமோ அவளுக்கு சார்பாகவே கொடி பிடித்தது…

 

அவன் மனைவியோ அவன் எண்ணியது போலவே ஆழ்ந்த தூக்கத்திலிருக்க, இவனோ அவள் எண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தான்…

 

_________________________________________

 

“ஓகே பினிஷ்” என்றபடி கேக்கை அவனில் இருந்து வெளியே எடுத்த மீனாட்சியோ, குழந்தைகளின் சத்தம் இல்லை என்றதும் திரும்பி பார்க்க, அவள் முகத்திலோ கனிவான புன்னகை…

 

“என்னங்க…” என்று அங்கிருந்தே வேந்தனுக்கு சத்தம் கொடுத்தாள்.

 

அவனும் என்னவென்று உள்ளே வந்து பார்க்க, மகியும் ஆருவும் அவனில் இருக்கும் கேக்கை ஆர்வத்துடன் பார்த்தபடி மேசையில் அமர்ந்திருந்தவர்கள் அப்படியே தூங்கி இருந்தனர்…

 

“தூங்கிடாங்களா??.. எவ்வளவு ஆசையா கேட்டாங்க… சாப்பிடலயே…”

 

“அவங்க எங்க சாப்பிட கேட்டாங்க.. பார்க்கணும்னு ஆர்வம் தான்.. காலைல சாப்பிட்டுக்கட்டும்.. ஸ்கூல்லுக்கும் சேர்த்து கொடுத்துவிடலாம்…” என்றவள் ஆர்வனை தூக்கிக்கொள்ள, அவனோ “மீனும்மா..” என்றான் தூக்கத்திலும் அவள் தொடுகையை உணர்ந்து…

 

“பாரேன் இவனுக்கு தூக்கத்திலயும் உன்ன தெரியுது.. ஆருக்கு உன்ன ரொம்ப பிடிக்குமாம் சிட்டு..” என்ற வேந்தன் மகியை தூக்ககியபடி, அன்று ஆர்வன் மீனாட்சியை பற்றி அவனிடம் சொன்னவற்றை, அவளுக்கு சொல்லியபடியே அறைவரை வந்து சேர்ந்திருந்தான்…

 

இரு குழந்தைகளுக்கும் தலையணையை வைத்தவள்.. “எனக்கும் ஆருவ ஸ்கூல்ல பாக்குறப்போலாம்.. மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒரு பீல் இருக்கும்… அப்போ புரியல.. உங்க மகனா அவன பாத்தப்பறம் தான் புரிஞ்சிது…” என்றாள்..

 

அவன் மனதிலோ, “எனக்காகனு இல்லடி.. அவன் உன்னோட இரத்தம் அதான் அப்படி தோணிருக்கு..” என்று எண்ணிக்கொண்டான்…

 

“சிட்டு.. நாம அந்த ரூமுக்கு போவோமா?…” என்றான் குழந்தைகளின் தூக்கத்தை களைக்க விரும்பாமல்..

 

அவளோ அவனை ஒருமாதிரியாக பார்த்துவைக்க.. அப்போதுதான் தன் வார்த்தைகளை அவள் எடுத்துக்கொண்ட விதம் புரிந்தது…

 

“அடியேய் பேச தான்டி கூப்பிட்டேன்..” என்றான் உடனடியாக… அப்போதும் அவள் பார்வையை மாற்றவில்லை…

 

“அது சரி.. மார்னிங் அப்படி ஹெவியா பர்போமன்ஸ் பண்ணிட்டு, தனியா கூப்பிட்டா அவளுக்கும் பயந்து வரும் தானே…” என்று மனதுக்குள் எண்ணியவன்.

 

“சத்தியமா பேசதாண்டி கூப்பிடுறேன்.. நம்பு ஸ்வீட் எல்லாம் சாப்பிட மாட்டேன்… வேணும்னா கேக் எடுத்துட்டு வா இப்போதைக்கு அந்த ஸ்வீட் மட்டும் எடுத்துகிறேன்…” என்றவன் முன்னே நடந்தான்…

 

சிறிது நேரத்தில் மீனாட்சியும் கேக்கை எடுத்து கொண்டவள் கூடவே குழப்பதுடன் அந்த அறைக்குள் நுழைந்தாள்…

 

“என்னங்க… பேசணும்னு சொல்லிட்டு அமைதியாவே இருக்கீங்களே..”

 

“ஜஸ்ட் சும்மாதான்டி.. மகி பேரண்ட்ஸ் பத்தி சொல்லேன்..”

 

“இப்போ ஏங்க..”

 

“இல்ல சும்மா தெரிஞ்சிக்கணும்னு தோணுது… விருப்பம் இல்லனா விடு”

 

“அச்சோ விருப்பம் இல்லாம எல்லாம் இல்ல.. இப்போ எதுக்குன்னு தான் அப்படி கேட்டேன்..”

 

“ம்ம்ம்ம்..”

 

“மஞ்சரி என்னோட அக்கா… ரெண்டு பேரும் ட்வின்ஸ் தான்.. பட் அக்கானு சொல்லியே பழகிடிச்சு.. என்ன போலத்தான் இருப்பா.. ஆனா  ஹோம்லியா செம அழகா இருப்பா..”

 

“நீ அழகு தான்டி..” என்று இடையில் வந்து விழுந்தது அவன் வார்த்தைகள்.. அவளோ சின்ன புன்னகை சிந்தி மீண்டும் தொடர்ந்தாள்…

 

“எனக்கு  ரெண்டாவது அம்மா அவதான்.. அம்மாகிட்டயிருந்து நிறைய டைம் காப்பாத்துறதே அவதான்… உங்ககிட்ட லவ் சொன்னது தெரிஞ்சு என்னைக்கும் அடிக்காத அவளே என்ன அறைஞ்சிட்டா தெரியுமா?..  அப்பறம் செம திட்டு..  நான் பண்ணது தப்புனு எனக்கு புரியவெச்சா..  அப்பறமா உங்கமேல லவ் வந்ததும் தான் அவ சொன்னதும் புரிஞ்சிது.. அன்னைக்கு நீங்க சொன்னதும் புரிஞ்சிது… ஒரே வெக்கமா போயிடிச்சு..  அப்பவும் எனக்கு ஆறுதலா இருந்தது அவதான்… இப்படி என்னோட ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் எனக்கு எல்லாமாவும் இருந்தவ அவ…”

 

“நர்சிங் முடிச்சிட்டு ஹாஸ்பிடலுக்கு வேலைக்கு போனவ அடுத்த வருசமே கூட வேல செய்ற டாக்டர் மேல லவ்னு வந்து நின்னா… எனக்கே சாக்.. மஞ்சுக்கு லவ்வானு.. மாமா ரொம்ப குடுத்து வெச்சவருனு நினைச்சேன்.. பட் அவரோட பழகினப்பறம் தான் தெரிஞ்சிது.. மஞ்சுதான் லக்கினு.. மாமா ரொம்ப ஸ்வீட்.. என்கூட டக்குனு மிங்கிள் ஆகிட்டாங்க… என்ன எப்பவும் சேட்டைனு  தான் கூப்பிடுவாங்க..”

 

“உன் மாமா பேர் என்ன?..” தெரிந்த பதில் தான்.. இருந்தும் கேட்டான்…

 

“எழிலன்பன்.. நைஸ் நேம்ல?.. பேர் போலவே மாமாவும் ரொம்ப கூலான பர்சன் தெரியுமா?.. மஞ்சுமேல அவ்வளவு லவ்.. அவங்க லவ் பாத்து நான் பீல் ஆகிட்டேன்.. அப்போல்லாம் உங்க எண்ணம் தான் அதிகமா வரும்..” என்றவளின் கரத்தை அவன் கரங்களுக்குள் சிறைபிடித்துக்கொண்டான் வேந்தனவன்…

 

அவள் கூச்சத்தில் எடுத்துக்கொள்ள பார்க்க, “கை தானடி இருக்கட்டும்.. அசஞ்சிட்டே இருந்தேனா இழுத்து மடிமேல உக்கார வெச்சிப்பேன்..” என்று மிரட்டல் வேறு அவனிடமிருந்து வந்தது..

 

மீனாட்சிக்கு அவன் செய்கையில் சிரிப்புதான்  “அன்னைக்கு பட்ட சோகத்தை வாத்தி இன்று போக்குகிறாராமா?.. இதுல கேட்டா லவ் இல்லன்னுவார்…” என்று மனதுக்குள் எண்ணிகொண்டாள்..

 

“அப்பறம் ஒருநாள் வீட்டுக்கே வந்து மாமா பேசினாங்க..  அப்பாக்கும் அம்மாக்கும் கூட பிடிச்சு போச்சு.. அவங்களுக்கு இருக்குறது ஒரே ஒரு நண்பன்னு மட்டும் சொன்னாங்க… அப்பறம் என்ன அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் தான்..”

 

“உனக்கும் அதே வயசுதான.. உனக்கு கல்யாணம் பண்ணனும்னு வீட்ல சொல்லலையா?…”

 

“விடுவாங்களா கேட்டாங்க தான்.. மஞ்சுதான் எனக்காக வீட்ல பேசுனா?.. உங்கள மறக்க முடியல.. மஞ்சுக்கு அது தெரியும்.. மாமா கூட அவங்க பிரண்ட் போரின்ல இருக்காரு.. வந்ததும் பண்ணுவோமான்னு கேட்டாரு.. நான் கேக் ஷாப் அது இதுனு சொல்லி தப்பிச்சிட்டேன்.. அதுக்கப்பறம் மாமாவும் அத பத்தி பேசல…”

 

“சரியான.. அவசரகுடுக்க நீ.. பேசாம அப்போவே ஓகே சொல்லி இருந்தா இன்னேரம் கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம்..” என்று சத்தமாய் ஆரம்பித்தவன் “குறைஞ்சது நாளு குழந்தையாவது இருந்திருக்கும்..” என்பதை மட்டும் அவளுக்கு கேக்காதது போல் சொல்லிக்கொண்டான்..

 

“உங்களுக்கு நான் யாரையாவது கட்டிருக்கணும் அதான.. விடுங்க என்ன நான் போறேன்…”

 

“உண்மையிலேயே ஆர்வகோளாறு தான்டி நீ… சரி நான் இடைல பேசல.. நீ சொல்லு…”

 

“ம்ம்ம் எங்க விட்டேன்…”

 

“அதான் உன் மாமாவோட பிரண்ட கட்டிக்க சொன்னாங்களே அது…” என்று அவன் எடுத்து கொடுக்க, அவளோ முறைப்புடன் தொடர்ந்தாள்…

 

“அடுத்த வருசமே மகிழும் மகிழனும் எங்களுக்கு கிடைச்சாங்க… சும்மாவே அக்கா எங்க வீட்லதான் முக்காவாசி நேரம் இருப்பா.. மாமா தான் அங்கேயும் இங்கயுமா அலைவாரு.. பிள்ளைங்க வந்தது மொத்தமாவே எங்ககூடவே இருந்துட்டா..  அந்த நாட்கள் எல்லாம் சொர்க்கம் தான்.. சந்தோஷத்துக்கு குறைவில்லாம தான் இருந்திச்சு…” என்றவள் குரல் கரகரப்பாக வர வேந்தன் கரங்களில் அழுத்தம் கொடுத்தான்.. தான் இருக்கிறேன் என்பதுபோல்..

 

“அவ்வளவு சந்தோசமா இருந்த அவமேல யார் கண்ணு பட்டிச்சோ அவ எங்கள விட்டு போற அந்த நாளும் வந்திச்சி…

 

“அன்னைக்கு மனசு சரியில்ல எங்க குலதெய்வம் கோவிலுக்கு போகணும்னு வந்து நின்னா.. அதுக்கு ஒருவாரம் முன்ன இருந்து அவ ஒரு மாதிரியா தான் இருந்தா என்னனு கேட்டும் சொல்லல.. நானும் அவளா சொல்லுவானு விட்டுடேன்..”

 

“அப்பாக்கு உடம்பு சரியில்லை அதனால அம்மாவும் போகல.. அம்மாக்கு உதவிக்கு ஆள் வேணும்னு நானும் போகல.. குழந்தைங்க விட்டுடு போடினு அம்மாவும் சொன்னாங்க.. ஆனா அவ கேக்கல..  இந்த நிலைல அப்பாவையும் வெச்சிட்டு குழந்தைங்களையும் பாத்துக்க கஷ்டம்னு நினைச்சிருப்பாளா இருக்கும்…”

 

“அன்னைக்கு போனவங்க.. திரும்பி வரவே இல்லை…  விஜய் அண்ணா போலீஸ்ல  அவங்களுக்கு தான் முதல்ல நியூஸ் கெடச்சிருக்கு..  கோவில் போய் வர்ற வழில பெரிய ஆக்சிடென்ட்… அங்க ரோட்ல இருந்து கார் தடுமாறி  மலைமேலயிருந்து கீழ விழுந்துடிச்சினு சொன்னாங்க.. மகிய மட்டும் கார்ல இருந்து தள்ளிவிட்டிருக்காங்க போல அவள மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சதா விஜய் அண்ணா சொன்னாங்க…  அவங்க மட்டும் இல்லனா எங்க மகியும் எங்களுக்கு இல்ல…” என்றவள் அந்த நினைவுகளின் தாக்கத்தில் அழ, வேந்தனோ மென்மையாக அவளை அணைத்துக்கொண்டான்.. எங்கோ கதை திரிக்கப்பட்டிருப்பது புரிந்தது..

 

“ஓகே ஓகே ரிலாக்ஸ்.. ஈடு கொடுக்க முடியாத இழப்பு தான்.. ஆனா நாம மீண்டும் வரணும் தான.. என் மீனாட்சி ரொம்ப ஸ்ட்ரோங்ல…” என்றவனுக்கும் நண்பனின் எண்ணம் ஏழாமல் இல்லை… சிறிது நேரத்தில் அவள் அழுகையும் அடங்கியது…

 

“அதுக்கப்பறம் அம்மா அப்பா ரொம்ப டிப்ரஸ்ட்டா இருந்தாங்க… மகி வேற அழுதுட்டே இருப்பா… அந்த வீடு பூரா மஞ்சுவோட சுவாசம் தான்.. எங்களால மீண்டும் வர முடியல… அங்க இருந்து ஷிப்ட் ஆகிடோம்.. வேற வீடு வேற சூழ்நிலை… இப்படி ஒருவழியா எங்க லைப் மூவ் ஆச்சு… மகியும் வளந்தா… என்னதான் அம்மானு கூப்பிட ஆரம்பிச்சா.. எனக்கும் அவ வாழக்கைனு ஆகிடிச்சு… எனக்கு இன்னொரு அம்மாவா இருந்த என் அக்கா குழந்தைக்கு நான் அம்மாவா இருக்க முடிவு பண்ணுனேன்.. அதனாலதான் எதபத்தியும் யோசிக்கல உங்கள தேடவும் இல்லை… என் லைப் மகிக்காகனு தான் வாழ்ந்தேன்… அப்பதான் நீங்க வந்தீங்க… இப்போ உங்ககூட என் வாழ்க்கைய காலம் முடிச்சு போட்டிடிச்சு….”

 

அவள் சொல்லிமுடித்த ஒவ்வொரு விடயத்தையும் உள்வாங்கிக்கொண்டவன்.. விரைவில் இந்த சிக்களுக்கு விடை அறியவேண்டும் என்று மனதில் உருப்போட்டுகொண்டான்…

 

பழைய விடையங்களை கேட்டு அவளை கஷ்டப்படுத்திவிட்டோமோ என்று அவன் மனம் மருகவே செய்தது… அவள் மனநிலையை மாற்ற எண்ணியவன்..

 

“நான் உங்கிட்ட சொல்லி இருந்தேன்ல.. ஆர்வனோட அப்பா என்னோட நண்பன்னு”

 

“ஆமா..”

 

“அவனோட வைப் இருக்காங்கல்ல அவங்களுக்கு தங்கச்சி ஒருத்தங்க இருக்காங்க.. நான் கூட அவங்கள தான் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருந்தேன்..” என்றவன் அவள் முக மாற்றத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டான்..

 

“சரி அதுக்கென்ன இப்போ..”

 

“அவங்கள மூனு வருசமா தேடுறேன் இன்னைக்கு தான் கண்டுபிடிச்சிருக்கேன்…”

 

“அதுக்கு நான் என்ன பண்ணனும் இப்போ…” என்று பட்டென வந்து விழுந்தது வார்த்தைகள்…

 

“ஏண்டி கொதிக்கிற இப்போ.. லவ் வரவைக்க இன்னும் வழிய காணோம்.. அந்த பொண்ணு வேற சும்மா கும்முனு இருக்கா தெரியுமா??.. பாத்து சீக்கிரம் லவ் பண்ண வைங்க மேடம்… அப்பறம் உங்க ஸ்வீட் அவளுக்குனு ஆகிடும்…” என்றவன் சிரிக்காமல் பேச சிரமப்படவேண்டியிருந்தது…

 

“ஆகும் ஆகும்.. எனக்குன்னே எங்க இருந்து வருவாளுங்களோ???  காலைல வந்து உதட்ட கடிச்சு வைக்க வேண்டியது.. நைட் வந்து லவ் இல்லங்க வேண்டியது…” என்று அவள் முனுமுனுத்தது அவனுக்கு தெளிவாகவே கேட்டது…

 

“என்னடி  முனுமுனுப்பு…”

 

“ஒன்னும் இல்ல.. ஒன்னுமே இல்லயே…”

 

“ஜோக்ஸப்பாட் மீனு.. அவளை நான் கட்டிக்க யோசிச்சிருந்தது கூட ஆர்வன என்னால பிரியமுடியாதுனு தான்…”

 

“நீங்க கவலபட வேணாங்க.. நான் அந்த பொண்ணுகிட்ட பேசுறேன்.. ஆர்வன் நம்மகூடவே இருக்கட்டும்..”

 

“ஒத்துக்கலனா என்ன பண்றதுடி..”

 

“ஒத்துக்க வெச்சிடலாம் ஏன் நெகடிவா பேசுறீங்க.. பொசிட்டிவா யோசிப்போமே.. சம்டைம் அவங்க யாரையாச்சும் லவ் பண்ணிருக்கலாம்ல.. அவங்க லைப்ப பத்தியும் யோசிப்பாங்க தான..”

 

“சரி எவ்வளவு பேசியும் ஒத்துக்கலனா என்ன பண்ணுவ?..”

 

“என்ன பண்ணணும்ங்க..”

 

“அவ என்ன கட்டிக்கணும்னு கேட்டுட்டா..  ஐயா வேற ரொம்ப அழகா.. சோ கேக்க சான்ஸ் இருக்குல?…”

 

“ஓஹோ அந்த ஆச வேற இருக்கா உங்களுக்கு… நீங்க ரெண்டு பசங்களுக்கு அப்பா  ஞாபகம் இருக்கா?.. கிழவனுக்கு வந்த வாழ்வுனு பேசிக்குவாங்க…” என்று அவனை நேரம்  பார்த்து வாரினாள் அவன் மனைவி…

 

“என்னாது கிழவனா… ஏன்டி சிட்டு அவ்வளவு வயசான போலவா தெரியுது?… அய்யய்யோ தப்பாச்சே… இன்னும் ஒரு பர்ஸ்ட் நைட் கூட கொண்டாடலயேடி.. தெய்வகுத்தம் ஆகிட போகுது கிட்ட வா…” என்றவன் கரங்களால் அவளை வளைத்து பிடித்திருந்தான்..

 

“என்னங்க நான் சும்மா சொன்னேன்.. நீங்க எனக்கே தம்பி மாதிரி தான் இருக்கீங்கன்னா பாத்துக்கோங்களேன்…” என்றாள் அவன் கைகளுக்கு நெளிந்தபடி…

 

காலையில் கொடுத்த முத்ததுக்கே இன்னும் அவள் தெளியவில்லை… இதில் இன்னும் அவன் நெருக்கம் அவளை ஏதோ செய்தது…

 

“அப்படியா அப்போ கண்டிப்பா ஸ்வீட் டேஸ்ட் பண்ணி ஆகணுமே… நீ தான் சொன்னத செய்யமாட்டேங்கிற… நானாச்சும் உன் ஆசைய நிறைவேத்தலாம்னு இருக்கேன்..” என்றவன் அவள் உணரும் முன்னரே.. அங்கிருந்த கேக்கை பிட்டு தன் வாய்க்குள் போட்டுகொண்டவன்.. இதழ்வழியே அவள் இதழுக்கு பண்டபரிமாற்றம் செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியிருந்தான்.. ஆனால் இறுதியில் கள்வன் தான் கேக்குடன் சேர்த்து அவளையும் அபகரித்துக்கொண்டான்…

 

அவள் உமிழ்நீரின் சுவையுடன் சேர்த்தே அவனுக்கு பிடித்த கேக்கும் அவன் தொண்டையில் தித்திப்பாய் இறங்கியது….

 

அவளிடமிருந்து விலகியவன்…. “ப்ப்பா செம டேஸ்டு… இனி டெய்லி எனக்கு.. காஃபி கிஸ் கேக் தான் கொடுக்கணும் சொல்லிட்டேன்…”

 

“ச்சீ போங்க…” என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள் சுகமாக…

 

அவள் அணைப்பில் அவன் உணர்வுகள் மேலேழ, “சிட்டு… உன்ன எடுத்துக்கட்டுமாடி?…” என்றான் அவள் காதில்..

 

அவளோ அவனை நிமிர்ந்து நக்கலாய் பார்க்க… அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவன்… “சத்தியமா பேசத்தான்டி கூப்பிட்டேன்.. ஆனா உங்கூட பேசிட்டு மட்டும் இருக்க முடியலயே.. நான் என்ன பண்ணட்டும்…” என்றவன் விரல்கள் அவளில் அதன் உரிமையை நிலைநாட்ட தொடங்கியது…

 

“யாரோ லவ் வரலன்னு சொன்னாங்க…”

 

“லவ் தானே வர்றப்போ வரட்டும்..” என்றவன் மீண்டும் முத்தமிட விளைந்தான் அப்போதும் ஒத்துக்கொள்ளாமல்..

 

அவன் நெஞ்சில் கைவைத்து தடுத்தவள்… “அதெல்லாம் செல்லாது நான் ரோசாக்காரியாக்கும்.. லவ் வர வெச்சிட்டு தான் மத்த வேலையே..” என்றாள் சிரிக்காமல்..

 

“மனிசனோட நிலைமை புரியாம படுத்துறாளே..” என்று எண்ணியவன்..

 

“அது பாட்டுக்கு ஒரு ஓரம் இருக்கட்டுமேடி…” என்றவன் மீண்டும் இதழ்களை நெருங்க… இந்தமுறையும் அவளிடம் மறுப்பு… இப்படியே மாறி மாறி நடக்க.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்தவன், அத்தனை வேகத்தில் அவள் இதழை தன்னிதழால் அடைத்திருந்தான்…

 

முதலில் அதிர்ந்தவளும் அவனுக்கு ஒத்துழைப்பு வழங்க, அதன் பின் கேட்கவும் வேண்டுமா?… வேந்தனவனின் கையில் மீனாய் துள்ளி, மெழுகாய் கரைந்தாள் பெண்ணவள்…

 

அவளில் மூழ்கி தொலைந்தவனுக்கு திரும்பும் எண்ணம் எழவே இல்லை… இன்னும் இன்னும் தொலையவே விருப்பம் கொண்டான்… அவள் மென்மை அவனை பித்தம் கொள்ள வைத்திருந்தது…

 

வெக்கம் கொண்டு அவள் முனங்கும் வேளைகளில் எல்லாம்  “ஸ்வீட் சாப்பிட்டுக்கோ சிட்டு..” என்று பேசி மேலும் வெக்கம் கொள்ள வைத்திருந்தான் அவள் கள்வன்…

 

விடியும் வரை அவளை, அவள் உணர்வுகளை கொண்டாடித்தீர்த்தவன், விடிந்தபிறகே நெற்றிமுத்தத்துடன் அவனும் சுகமான உறக்கத்தினுள் நுழைந்தபடி, அவளை தூங்கவிட்டான்..

 

____________________________________________

 

மீனாட்சிக்கு மெல்ல தூக்கம் கலைய.. முதலில் புரியாத அவள் நிலை.. நொடிகள் கடக்க புரிந்தது.. கூடவே வெக்கமும் வந்து ஒட்டிக்கொண்டது…

 

“ஐயோ… வாத்தி உன்ன ஸ்வாஹா பண்ணிட்டாருடி மீனு..” என்றவளுக்கு வெக்கம் தாளவில்லை…

 

குளியலறை சென்று குளித்து வெளியே வந்தவளது உதடுகள் செல்லமாய் அவனுக்கு அர்ச்சனை வழங்க தவரவில்லை…

 

“பூரி ரொம்ப மோசம்.. லவ் இல்ல லவ் இல்லனு கடிச்சு வெச்சிருக்கிறத பாரு.. பேசாம கலாச்சு விட்டுடுவோமா மீனு…” என்று தனக்கு தானே பேசி   தொலைபேசியை கையிலெடுத்தவள் அவளை அப்படியே கண்ணாடியில் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மெத்தையில் விழுந்தாள்…

 

___________________________________________

 

வகுப்பில் மும்முரமாக பாடம் எடுத்துகொண்டிருந்தான் வேந்தன்… அவன் பாடம் என்றால் அங்கே எப்போதும் ஒரு அமைதி இருக்கும்…

 

இன்றோ அந்த அமைதியையும் மீறி அவன் தொலைபேசி அடித்துகொண்டிருந்தது… மாணவர்களுக்கோ அதிர்ச்சிதான்.. எப்போதும் வகுப்பெடுக்க வரும் போதே அவன் தொலைபேசி சத்தம் குறைக்கப்படிருக்கும்… இப்படி சத்தம் என்றும் வந்ததில்லை…

 

இன்றைக்கு என்னவானது என்று வகுப்பில் சின்ன சலசலப்பு… அவர்களுக்கு தான் தெரியாதே இன்று அவன் அவனாக இல்லை என்பது.. இதில் எங்கே இதனை எல்லாம் அவன் கவனிக்க…

 

“எக்ஸ்கியூஸ் மீ…” என்று ஓரமாக வந்தவன், தொலைபேசியை எடுத்து காதில் வைக்க அந்த பக்கமோ முத்த மழை தான்… வேந்தனோ முகத்தில் உணர்வுகள் வராமல் இருக்க வெகுவாக போராட வேண்டியிருந்தது…

 

பின்னந்தலையை கோதிக்கொண்டவன், “மீனு காலேஜ்ல இருக்கேன்மா…” என்று அத்தனை மென்மையாக வந்தது அவன் வார்த்தைகள்…

 

“இருந்துக்கோங்க வாத்தி… ஆனா எனக்கு அவசரமா ஒரு முத்தா வேணுமே…” என்றவளுக்கு அவன் திணறுவது ஏக கொண்டாட்டம்…

 

“வீட்டுக்கு வந்து பேசிக்கலாமேமா…”

 

“அத கண்ட எடத்துல கடிச்சு வைக்கிறது முதல் யோசிக்கணும் வாத்தியாரே.. ரொம்ப வலிக்கிது தெரியுமா?…” என்றாள் சிணுங்களுடன்…

 

“வெச்சு செய்யிறாளே… வேந்தா கண்ட்ரோல்…” என்று மனதுக்குள் எண்ணியவன்.. “ப்ளீஸ்மா நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் இன்னைக்கு விட்டுடேன்.. அப்பறம் எப்படி நான் பசங்களுக்கு பாடம் நடத்துறது.. இப்போவே நம்பர்ஸ் எல்லாம் ஹார்ட் ஷேப்ல தெரியுது…” என்று கெஞ்சலில் இறங்கிவிட்டான்…

 

“ஓகே ஓகே பொழச்சு போங்க.. பட் நான் அனுப்புற பிக் எல்லாம் பாத்துட்டு தான் போகணும்…” என்க அவனோ விட்டால் போதும் என்பது போல சரி என்றிருந்தான்…

 

ஆனால் ஏன் சரி என்றோம் என அவற்றை பார்த்த பிறகு தன்னையே நொந்துகொண்டான்…

 

அவள் மேனியில் இவன் மீசை, பற்கள் ஏற்படுத்திய காயங்களை  படமாக அனுப்பி இருந்தாள்… கூடவே “லவ் இல்லனு சொல்லி இப்படியா வாத்தி பண்ணுவீங்க.. ஒரு பெரியமனிசன் செய்ற வேலையா இதெல்லாம்..” என்ற வாசகத்துடன், சிரிக்கும் வெக்கப்படும் பொம்மைகளையும் சேர்த்து அனுப்பி இருந்தாள் வேந்தனின் இம்சைகாரி…

 

இவன் அவளில் வரைந்த வர்ணஜாலம் அல்லவா அவை?… பார்த்தவனுக்கு உணர்வுகளை அடக்கவே முடியவில்லை எப்போதடா அவளை பார்ப்போம் என்று தோன்றவே ஆரம்பித்து விட்டது…

 

__________________________________________

 

மனம் கொள்ளா ஆசையுடன் வீட்டுக்கு வந்திருந்தான் வேந்தன்.. ஆனால் அவள் தான் இல்லையே… குழந்தைகள் மட்டும் இருந்தனர்… வழமையாக அவர்களை அழைத்துவரும் வண்டியிலேயே வந்திருந்தனர்… அவர்களுக்கான உணவை கொடுத்தவன் மனதில் மனைவியே நிறைந்திருந்தாள்…

 

“ச்ச்சே பேசாம ஸ்மைலுக்கே போயிருக்கலாம்.. வரட்டும் கழுத என்ன பேச்சு பேசுறா.. பேசுன அந்த உதட்டை என்ன பண்ணுறேன்னு பாரு..” என்று எண்ணியவன் காத்திருக்க தொடங்கி ஒன்று இரண்டு என மணிநேரங்கள் தான் கடந்ததே தவிர அவள் வரவில்லை…

 

அவள் தொலைபேசிக்கு அழைத்தும் பதில் பூச்சியம் தான்… வேந்தனுக்கோ சற்று பயம் வேறு வந்துதொலைத்தது..

 

விக்ரமுக்கு அழைத்து விசாரிக்க… இன்று அவள் ஸ்மைலுக்கு வரவில்லை.. விடுமுறை சொன்னதாக தகவல் வர வேந்தனோ நொறுங்கிப்போய் விட்டான்…

 

இருந்தும் நம்பிக்கையை விட வில்லை… ஆனாலும் அவனது காத்திருப்பு நேரம் கூடியதே தவிர குறையவில்லை…

 

முழுதாய் ஐந்து மணி நேரம் கடந்திருந்தது… தேடாத இடம் இல்லை அலைந்து திரிந்து மீண்டும் வீட்டுக்கே வந்திருந்தான் வேந்தன்.. ஆனால் மீனாட்சி வந்திருக்கவே இல்லை..

 

“சிட்டு எங்கடி இருக்க வந்திடு ப்ளீஸ்… எனக்கு இவ்வளவு காதலையும் கொடுத்துட்டு என் காதல வாங்கிக்காம எங்கடி போன ஆர்வக்கோளாறு… வந்துடுவல்ல..” என்று புலம்பலுடன் கதவையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்… வந்துவிட மாட்டாளா என்ற ஏக்கத்துடன்…

 

ஜாலம் தொடரும்….

 

                     _ஆஷா சாரா_ 


இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
64
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. அச்சோ மீனாட்சிக்கு என்ன ஆச்சு அந்த விஜய் கிட்ட போய் மாட்டிக்கிட்டாளா??

      1. Author

        Thank u ka ❤❤❤

        Next ud la தெரிஞ்சிடும் ka

    2. Ippo unakku sandhosam thana 🤧🤧kaavvu vangitta thana 😔😔ethukkum sillukku kitta solli oru bed pottu vaikkanum 🤧🤧ennada enna vijay kidnap pannittan pola 🤔🤔

      1. Author

        இப்போதான் என் மனப்பாரமே கொறஞ்சிருக்கு 😁😁😁😁