ஜாலம் 06
இப்படியே நாட்கள் கடந்து ஒரு வாரம் சென்றிருந்தது..
“சீக்கிரம் சாப்பிடு மகி.. லேட்டாகுது பாரு.. இன்னைக்கு பர்ஸ்ட் பேரண்ட்ஸ் மீட்டிங் சோ ஏர்லியா போகணும்..”
“மீனு வை டென்ஷன்.. நான் எல்லாம் சமத்து தெரியுமா?.. பாராட்டு மழை தான் இன்னைக்கு உனக்கு.. கூலா இரு மேன்..” என்று இட்லியை உள்ளே தள்ளிகொண்டிருக்க.. வைதேகி சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டார்..
அதனை கண்டுகொண்ட மீனாட்சியோ, “எனக்கே இந்த மூனு மாசத்துல என்ன பண்ணி வெச்சிருக்காளோனு பயந்து வருது.. உனக்கு என்ன சிரிப்பு வேண்டி கெடக்கு..”
“இல்ல, உனக்கு உன்ன மாதிரியே பொண்ணு அத நினைச்சேன் சிரிச்சேன்..” என்று மீண்டும் சிரிக்க..
“மம்மி, கடியாகிடுவேன் பாத்துக்கோ… போ போய் உன் புருஷன கவனி..” என்று அவரை உள்ளே அனுப்பினாள்.
“இந்த மம்மி ஒன்னு போதும் நம்ம இமேஜ டேமேஜ் பண்ண.. நானே பெரிய தில்லாலங்கடி இதுல இவ இப்போவே எனக்கும் மேல இருக்காளே.. என்ன பிள்ளையாரப்பா ரிவேஞ்சா?..” என்று மனதில் எண்ணிகொண்டாள்…
உள்ளிருந்து வந்த வைதேகி “மீனு ஈவினிங் அவங்கல்லாம் வந்துடுவாங்க.. நேரத்துக்கே வரப்பாரு… ஏற்கனவே சகுனம் சரி இல்ல அது இதுனு நாள் தள்ளி போய் இன்னைக்கு தான் அமைஞ்சு வந்திருக்கு..”
“அம்மா வர்றேன் மா படுத்தாத.. இந்த காலத்துலேயே சகுனம் அது இதுனு பாத்துகிட்டு… இரிடேட்டிங்..” என்று கோபமாய் சொல்ல அவர் முகமோ சடுதியில் வாடவும் பொறுக்காதவள்
“மா வர்றேன் மா… முகத்தை அப்படி வெச்சிக்காத..” என்றாள் இறங்கிய குரலில்..
அந்த நேரம் “ஓகே மீனு நான் ரெடி போலாம்..” என்று மகியும் வர, வைதேகிக்கு கைகட்டி, மீனாட்சியின் ஸ்கூட்டியில் அவர்கள் பயணம் தொடர்ந்தது…
சரியாக வர வேண்டிய நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த மீனு அங்கே வாகன நிறுத்தத்தில் ஸ்கூட்டியை நிறுத்தி அங்கேயே மகியுடன் நின்றிருந்தாள்..
“மீனு உள்ள போகலாம்…”
“இருடி இன்னும் டைம் இருக்கு..” என்று மகளை தூக்கி வண்டியில் இருத்திவள் “சில்வண்டு அம்மா உங்கிட்ட கொஞ்சம் பேசணும் சமத்து பிள்ளையா கேட்டுப்பியா??..
“என்ன மீனு பம்முற.. சரி சரி முறைக்காத சொல்லு…”
“அம்மாவ பாக்க ஈவினிங் ஒருத்தங்க வருவாங்க..” என்று ஆரம்பித்தவளுக்கு எப்படி சொல்வது என்ற தடுமாற்றம் தான்… ஆனால் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயமும் கூட…
“யாரு வருவாங்க மா..” என்று மீனாட்சியின் கன்னத்தை பிஞ்சி விரல்களால் பற்றி வினவ.. அந்த விரல்கள் கொடுத்த தைரியத்தில் பேச தொடங்கினாள்..
“எனக்கு அப்பா இருக்காங்கல்ல மகி.. அதே போல் என் மகி குட்டிக்கு அப்பா வேணும்ல…”
“அப்போ அப்பா வர்றாங்களா..” என்று கண்கள் மின்ன அவள் கேட்க.. மீனாட்சிக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்த உணர்வு..
“இல்லடா கண்ணா.. அப்பா வர மாட்டாங்கன்னு சொன்னேன்ல.. ரொம்ப தூரம் போய்ட்டாங்க.. அதனால நம்ம புது அப்பா வாங்க போறோம்.. எப்பவும் மகி கூடவே இருக்க.. மகிகுட்டிய பைக்ல கூட்டி போக.. இதுக்கெல்லாம் புது அப்பா வரப்போறாங்க.. கூடவே மகி விளையாட அக்கா தம்பியும் வருவாங்க…”
“ம்ம்ம்கூம்.. நம்ம அப்பா தான் வேணும்.. வேற யாரும் வேணாம்…” என்று பிடிவாதம் பிடிப்பவளுக்கு எப்படி புரிய வைப்பது என்ற கவலைதான் மீனாட்சிக்கு…
“அப்பா வரமாட்டாங்க டா கண்ணா…”
“இதோ அப்பா வந்தாச்சு…” என்று கத்தியபடி மகி இறங்கி ஓட, என்னவென்று திரும்பி பார்த்த மீனாட்சிக்கு உள்ளுக்குள் பூகம்பமே வெடித்தது…
அங்கே வேந்தன் வந்துகொண்டிருந்தான்.. மகி அவனை நோக்கி ஓட தடுக்க கூட முடியாமல் சிலையாய் நின்றிருந்தாள் மீனு…
________________________________________
கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன் ஒருநாள்.. எப்போதும் போல் வைதேகி திருமணத்துக்கு வற்புறுத்த, மிகவும் உடைந்து தான் போயிருந்தாள் மீனு..
தன் கவலையை யாரிடம் கொட்டுவாள்.. நேரே சென்றது அந்த அறைக்கு தான்.. அவன் வரைபடத்திடம் தன் மனதை இறக்கி வைத்து அமர்ந்திருந்தாள்…
அன்றென்று பார்த்து மீனாட்சி கதவை அடைக்க மறந்திருக்க, மகி உள்ளே நுழைந்துகொண்டது இவளுக்கு தெரியாமல் போனது…
ஒவ்வொரு படமாக பார்த்து இறுதியாய் இருந்த படத்தை பார்த்த குழந்தை கண்கள் விரிய ஆசையுடன் அவளிடம் யாரென்று வினவ, இவளுக்கோ தடுமாற்றம்…
அதில் மீனு மகி வேந்தன் மூவரும் நின்றிருந்தபடி தான் வரைத்திருந்தாள் மீனாட்சி… தங்களை ஒரு குடும்பமாக ஆசையுடன் வரைந்திருந்த படம் அது.. இப்படி குழந்தை பார்க்க நேரும் என்று எதிர்பார்க்கவில்லையே…
யோசித்ததெல்லாம் சில நிமிடம் தான்.. கண்களை துடைத்துக்கொண்டவள் வேந்தனை தந்தை என அறிமுகப்படுத்தி இருந்தாள் அந்த குழந்தையிடம்…
அவன் தான் வெளிநாடு செல்லபோகிறேன் என்றானே.. இத்தனை வருடத்தில் தானே மீண்டும் காணாத ஒருவனை மகி எப்படி காணமுடியும் என்ற நம்பிக்கையும் அவன் மீது கொண்ட காதலும் தான் அவளை இப்படி செய்ய வைத்திருந்தது..
அவள் நம்பிக்கை உடையும் நாள் வெகு சீக்கிரத்திலே அடுத்த மாதமே வந்து சேர்ந்தது… அவனை அன்று முதல் முதலாக அவர்களது கடையில் கண்ட நேரம் நம்பிக்கை உடைந்து தூளாகியிருந்தது..
மகி வேறு அவன் படத்தை தூங்கும் போது கூட கீழே வைப்பதில்லையே.. இது வைதேகிக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டதே பெரிய போராட்டம்.. இதில் இவனும் வந்துவிட்டானே.. எங்கேனும் மகி பார்த்துவிடுவாளோ?.. என்ற பயமே திருமணத்துக்கு உடனடியாக சம்மதிக்கவும் வைத்திருந்தது…
புதிதாக வருபவருடன் குழந்தை நெருங்கி விட்டால் இவனை மறந்து விடுவாள் என்ற எண்ணம் தான்.. ஆனால் அதுவும் சீக்கிரத்தில் அமையவில்லை..
ஏற்கனவே திருமணம் நடந்து குழந்தை உள்ள ஒருவனைதான் இவள் தேட சொல்லி இருந்தாள்.. அப்போதுதான் மகியுடன் ஒரு நல்ல உறவு வரும் என்பது அவள் எண்ணம்..
குழந்தையுடன் இவளை ஏற்றுக்கொள்ள அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் அமையாமல் போனது தான் விதியோ.. என்னவோ..
அவள் பயந்தத்து போலவே இன்று வேந்தனை பார்த்துவிட்டாளே மகிழ்..
___________________________________
வேந்தனோ ஆர்வனுடன் பேசி சிரித்துக்கொண்டு நடந்து வர, அவனை நோக்கி ஓடிவந்த குழந்தையை கண்டவன்.. என்னவென்று உணரும் முன்னரே இவனிடம் தாவி இருந்தாள் குழந்தை.. அவனும் குழந்தை விழுந்து விடுவாளே என கைகளில் அள்ளி கொள்ள, அவன் கழுத்தில் முகம் புதைத்திருந்தாள்.. கூடவே கண்ணீரும்..
அவளை அவனை விட்டு விலக்கப்பார்க்க முடியவில்லை கழுத்திலே ஒன்றிக்கொள்ள, ஏன் அழுகிறாள்.. எதையும் பார்த்து பயந்து விட்டாளோ?.. என்று எண்ணியவன் முதுகை தடவி ஆசுவாச படுத்தினான்..
சிறிது வினாடிகளிலே அவனை நிமிர்ந்து பார்த்தவள்.. “ஏன்ப்பா என்ன பாக்க வரல.. சில்வண்ட உனக்கு பிடிக்காதா??..” என்று அழுகையோடு வினவ.. இவனுக்கு என்னவென்று புரியவில்லை..
அருகில் இருந்த மரத்தின் கீழ் போடப்பட்ட இருக்கையில் குழந்தையை அமர்த்தியவன்..
“ஆரு.. உன் வாட்டர் பாட்டில் குடுங்க பாப்பாக்கு..” என்று மகனிடம் சொன்னான்..
அவனும் திறந்து பருக கொடுத்தவன் “மகி டோன்ட் கிரய்.. எவேர்ய்திங் வில் பி பைன்..” என்றான் பெரியமனிதன் தோரணையில்…
மகன் மகி என்று அழைத்ததும் தான் இவனுக்கு புரிந்தது.. வழமையாக மகனின் பேச்சின் சாரம்சத்தில் அதிகமாக இருப்பவள் தான் இவள் என்று..
“மகி பாப்பா யாரு கூட வந்தீங்க.. ஏதாச்சும் பாத்து பயந்துடீங்களா?..” என்றான் வேந்தன்.
“நோ ப்பா.. அப்பாவ பாத்துதான் ஓடி வந்தேன்.. நீங்க இத்தன நாள் என்ன பாக்க வரலல.. மகி உங்ககூட டூ விட்டுட்டேன்..” என்று அந்த பக்கம் முகத்தை திருப்பி கோபமாய் சொல்ல அவனுக்கு எதுவும் புரியவில்லை.. ஏதோ தவறாக புரிந்து பேசும் குழந்தையின் மனதை உடைக்க மனமில்லாதவன்..
“அச்சச்சோ அப்படிங்களா பெரியமனுஷி.. வாங்க அம்மாகிட்ட போகலாம்..” என்று குழந்தையை தூக்கியப்படி திரும்பியவன் கண்டது கைகளை பிசைந்தபடி அவன் முன்னே நிற்கும் மீனாட்சியை தான்…
அவன் கண்கள் யோசனையில் சுருங்க.. பின் கோபமாக “உன் குழந்தையா?..” என்றான் அவளிடம்.. அவள் தலையோ மேலும் கீழும் ஆசைய, வேந்தனுக்கோ கோபம்.. ஆனால் குழந்தைகள் முன் அதனை காட்ட விரும்பாதவன்…
“மீட்டிங் முடிய வெயிட் பண்ணு பேசணும்…” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்..
குழந்தையை அவளிடம் தர, மகி மாட்டேன் என்று அடம்பிடித்து அவனோடு ஒன்றிக்கொண்டாள்.. மீண்டும் ஒரு முறைப்பான பார்வை மீனாட்சியை நோக்கி…
மகியை தூக்கியபடி ஆர்வன் கையை பிடித்தவனை தடுத்தது அவள் குரல், “நான் தூக்கிக்கிறேன்..”
“நோ தேங்க்ஸ்.. ஹி வில் வாக்…” என்று மகனின் கையை பிடித்து நடக்க தொடங்க… இவளோ தனியே நின்றிருந்தாள்..
___________________________________
“எவ்வளவு நேரத்துக்கு இப்படி அமைதியா இருப்ப.. பதில் சொல்லு..” என்று இருக்கும் இடம் உணர்ந்து கோபத்தை கட்டுப்படுத்தியபடி வினவினான்..
அவளும் தான் என்னவென்று சொல்வாள்.. செய்தது மகா பிழை என்பதுதான் அவளுக்கே தெரியுமே..
“எப்பவும் பின்விளைவு என்னனு யோசிக்க மாட்டேல நீ… அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி.. இதே வேற எவனாவது இருந்திருந்தா என்னவாகியிருக்கும்?.. முட்டாள் முட்டாள்.. குழந்தை எவ்வளவு ஏக்கமா பேசுறா பாத்தல்ல.. அறிவ தூக்கி காக்காக்கு போட்டுட்டியா?.. வர்ற கோபத்துக்கு ரெண்டு விடலாம் போல இருக்கு.. காபீ ஷாப்பா போயிடிச்சு ஆட்கள் இருக்காங்கனு பாக்குறேன்.. இல்ல..”
மீனாட்சிக்கோ உள்ளே அள்ளு விட்டது.. பேசினால் எப்படியும் அடி உறுதி என்பது தெரியும் அதனாலேயே வாயை மூடி அமர்ந்திருந்தாள்..
“அப்பா எங்க?…”
“வீட்ல..” என்றதும் வேந்தன் புருவத்தை ஏற்றி இறக்கியவன்.. அவளை உணர்ந்தவனாக.. “நான் மகியோட அப்பாவ கேட்டேன்…” என்றான் கேள்வியை திருத்தி..
“ஐயோ மீண்டும் மீண்டும் மாட்டுறியே மீனு.. இன்னைக்கு உன்ன தவால போட்டு பிரை பண்ண போறான் இந்த நீலக்கண்ணன்… அப்பறம் நீ சாதா மீனு இல்லை.. பிஷ் பிரை தான் ” என்று மனதுக்குள் எண்ணியவள்..
“உயிரோட இல்ல..”
“அப்போ அவங்கள காட்டி இருக்க வேண்டியது தானே வை மீ?….”
இதற்கு மேல் அமைதியாக இருந்தால் தன்னை தானே கேவலப்படுத்துவதற்கு சமம் என்பதை உணர்ந்தவள்…
ஆழ மூச்சேடுத்துக்கொண்டு.. “மகி என் டுவின் சிஸ்டரோட பொண்ணு.. மாமாவும் அக்காவும் இப்போ உயிரோட இல்ல… மகி இப்போ என் பொண்ணு..” என்றாள் இறுதி வார்த்தையில் அத்தனை அழுத்தம் கூட்டி… வேந்தனிடமும் சிறு மௌனம்..
“ஓகே.. ஆனாலும் நீ பண்ணது தப்பு தான்.. மகிகிட்ட ஏன் அப்படி சொல்லி வெச்சிருக்க.. கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம்ல..” என்றான் உண்மையான அக்கறையுடன்…
“சொல்லணும்னு பேர்பசா சொல்லல.. அன்னைக்கு வீட்ல கல்யாணம் பண்ண போர்ஸ் பண்ணவும் உங்க படத்துகிட்ட பேசிட்டு இருந்தேன் மகி பத்துட்டா… யாருனு கேட்கவும் இருந்த மனநிலைக்கு.. நீங்களும் வரமாட்டீங்கன்ற நம்பிக்கைல அப்படி சொல்லிட்டேன்…”
“என்னோட படம் எப்படி?…”
“வரைஞ்சு வெச்சிருக்கேன்…” என்றாள் உள்ளே போன குரலில்..
மீண்டும் அவளே “நீங்க கவலை படவேண்டாம்.. உங்க லைபுக்கு இதுல எந்த பிரச்சனையும் வராது ப்ரோமிஸ்… உங்கள மறுபடியும் ஸ்மைல்ல பாத்தனைக்கே இப்படி நடந்துடுமோன்ற பயத்துல கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்… இன்னைக்கு கூட பொண்ணு பாக்க தான் வர்றாங்க.. எப்படியும் செட் ஆகிடும்.. மகி மனச மாத்திடலாம்…” என்று அங்கிருந்து சென்றவளின் குரலில் இருந்த சோகம் அவனுக்கு புரியவே செய்தது…
செல்லும் அவளையே பார்த்திருந்தனது தொலைபேசி இருப்பை உணர்த்தியது.. அவன் எதிர்பார்த்து காத்திருக்கும் நபரிடம் இருந்து வந்திருக்க, அழைப்பை உயிர்ப்பித்து காதில் வைத்திருந்தான்..
“ஹெலோ சொல்லுங்க மிஸ்டர் ஹரிஷ்..”
“சார் நீங்க தேடுற பொண்ண பத்தி ஒரு நியூஸ் கெடச்சிருக்கு.. அவங்க முன்னாடி இருந்த வீட்டோட அட்ரஸ் தெரியவந்திருக்கு.. இப்போ எங்க போனாங்கன்னு எக்ஸாக்ட்டா தெரியலைன்னாலும் சீக்கிரமே கண்டுபிடிச்சிடலாம்…”
அவன் இத்தனை நாளாய் எதிர் பார்த்த பதில்.. ஆனால் இன்றோ சந்தோசப்பட முடியவில்லை… போகும் மீனாட்சி மீதே அவன் பார்வை மொத்தமும்.. கூடவே ஏக்கமான மகியின் அப்பா என்ற அழைப்பும்….
ஜாலம் தொடரும்….
_ஆஷா சாரா_
அப்ப மகி மீனுவோட குழந்தை இல்லையா.? அதே போல ஆர்வனும் வேந்தன் பையனா இருக்க வாய்ப்பிருக்காது.. ரைட்.?