Loading

 

ஜாலம் 03

 

மீனாட்சி எப்படி வீட்டுக்கு வந்தாள் என்பது அவளுக்கே கேள்வி குறிதான்.. நேரே உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை..

 

தன் அறைக்குள் நுழைந்து, கதவை அடைத்து அதன் மீதே சாய்ந்துகொண்டவளது  இதய துடிப்பு அவளுக்கே கேட்கும் நிலை தான்…

 

இன்னும் அவன் அருகாமையை அவள் ஒவ்வொரு செல்லும் உணர்த்திக்கொண்டு தான் இருந்தது…

 

இன்னும் சிறிது நேரம் அங்கே நின்றிருந்தால் கூட அவனது நீல விழி ஆழிக்குள் மூழ்கி தொலைந்து தான் போயிருப்பாள் என்பதில் ஐயமில்லை…

 

“என்ன கண்ணுடா சாமி… நல்ல வேள ஸ்பெக்ஸ் போட்டிருந்தாங்க..” என்று மீனுவால் இப்போதும் எண்ணாமல் இருக்க முடியவில்லை… மெல்ல அறையை ஒட்டி இருக்கும் சிறிய அறைக்குள் நுழைந்து கொண்டாள்..

 

அந்த அறை அவளது காதல் பொக்கிஷம்… அங்குள்ள அத்தனையும் பாரி வேந்தனின் வரைபடங்கள்… ஒவ்வொன்றும் அத்தனை தத்துரூபமாய், அதுவும் மீனுவின் கைவண்ணத்தில்.. கால்கள் தன்னால் அவள் மனதுக்கு நெருக்கமான வரைபடத்தின் முன்னால் நின்றது..

 

நிஜத்தில் இருக்கும் வேந்தனுக்கும் அந்த வரைபடத்தில் இருக்கும் வேந்தனுக்கும் ஓரிரண்டு வித்தியாசம் இருக்கத்தான் செய்தது.. அதில் அவன் நீல விழிகளும் அடக்கம்…

 

அந்த வரைபடம் தவிர்ந்த மற்ற அனைத்திலும் நீல விழிகள் கொண்டே வரைந்திருந்தாள்.. அதில் மட்டும் மாறுபாடு ஏனோ???….

 

அதன் முன்னே நின்றவளது எண்ணம் சற்று முன்னர் நடந்த நிகழ்வுகளிலே நிலைத்தது…

 

_____________________________________________

 

“அது எப்படி மீனு.. இந்த பேட்ச்ல நீ பன்ற காபீ கேக் மட்டும் இம்புட்டு ருசியா இருக்கு…” என்றாள் ஸ்ருதி அதனை ருசித்தபடி

 

“இத சொல்லலனா உனக்கு தூக்கம் வராதே.. அதெல்லாம் உன் மன பிராந்திடி செல்லம்..”

 

“நிஜமாடி.. நீ அண்ணனுக்காகனு கொஞ்சம் எக்ஸ்ட்ரா லவ்வோட செய்றது கூட காரணமா இருக்கலாம்..”

 

“இன்னைக்கு கொஞ்சம் ஓவரா தான்டி பேசிட்டு இருக்க.. நல்லதுகில்ல பாத்துக்க…” என்று பேசிகொண்டிருக்க, விக்ரம் சுவரில் ஏரியப்பட்ட பந்தாய் திரும்பி வந்திருந்தான்…

 

“என்ன விக்ரம் திரும்பி வந்துட்ட.. இன்னைக்கு வரலையா?…” என்று அங்கிருந்தே துளையினூடு எட்டிப்பாக்க..

 

ஆகாய நீல நிறத்தில் முழுக்கை சட்டையும்.. அதனை முழங்கை வரை மடித்து.. இடது கையில் கைகடிகாரம் கட்டி, அத்தனை நேர்த்தியான தோற்றத்தில் அங்கே அமர்ந்திருந்தான் வேந்தன்.. கூடவே அவனது வழமையான மேனரிசத்துடன்..

 

“எப்போ பாரு அந்த உதட்ட பல்லால கடிக்க வேண்டியது.. பாவம் வலிக்கும்ல அதுக்கு… ஒருநாள் இல்ல ஒருநாள் அத கடிச்சு வைக்கல என் பேர் மீனு இல்ல..” என்று அவள் எண்ண ஓட்டம், இருக்கும் நிலை மறந்து அவன் பின்னே ஓட..

 

“அடச்சீ.. மீனு என்னடி நீ.. இந்தளவுக்கா காஞ்சிபோய் இருக்க?.. பையன விட மோசமா யோசிக்கிறியே… நல்லா வேள மைண்ட் வாய்ஸ சத்தம் போட்டு பேசல.. மானமே போயிருக்குமே…” என்று மனதில் எண்ணியபடி சுயத்துக்கு வந்தவள்..

 

“இருக்காங்க தானடா… அப்பறம் என்ன? கொடுக்க வேண்டியதுதான..”

 

“நாங்கூட நீ சைட் அடிச்சு முடிஞ்சி நாளைக்கு தான் கேப்பேன்னு நினச்சேன்.. பரவாயில்ல இன்னைக்கே கேட்டுட்ட..” என்று ஸ்ருதி அவள் பங்குக்கு நண்பியை அப்போதும் விடாமல் வாரினாள்…

 

“அடியேய் இதுக்கு ஒரு முடிவு சொல்லிட்டு,உங்க பிரச்சனைய அப்பறம் பாருங்கடி பக்கிகளா..” என்ற விக்ரம் நடந்தவற்றை சொல்லி முடிக்க, மீனுவிடம் மௌனம்..

 

ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டவள் விக்ரமின் கையில் இருந்த கேக்கை வாங்கிக்கொள்ள, நண்பர்கள் இருவர் கண்ணிலும் அதிர்ச்சி தான்…

 

“மீனு நீ..”

 

“வேற வழி இல்ல ஸ்ருதி.. சாப்பிடாம இக்னோர் பண்ற அளவுக்கு போய் இருக்காங்க.. உனக்கும் தெரியுமே அவங்களுக்கு இது எவ்வளவு பிடிக்கும்னு.. என்ன இப்போ, என்ன பார்த்தா தப்பா நினைப்பாங்க அதான.. நினைச்சா நினைச்சிட்டு போகட்டும்.. எத்தன நாளைக்கு மறைஞ்சு ஓடுறது..” என்றவள் அதனை எடுத்துக்கொண்டு அவனிடம் சென்றாள்…

 

தன் முன் வைக்கப்பட்ட தட்டின் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த வேந்தன் முகம் முதலில் சாதாரணமாக தான் இருந்தது… ஆனால் தன் முன்னே நின்றவளை சில வினாடிகளிலேயே கண்டு கொண்டவனது விழிகளில் தீவிரம்..

 

“சோ.. நீ தான் வன் இயரா அவொய்ட் பண்ணி இருக்க ரைட்.. உக்காரு..” என்றவனின் குரலுக்கு அவள் அப்படியே நிற்க

 

“ஐ செட் சிட்…” என்று சாதாரணமாக அவன் சொன்னாலும் அவனை அணுஅணுவாய் அறிந்து வைத்திருக்கும் அவள் அறிவாளே அந்த குரலில் இருந்த கோபத்தை…

 

அவள் அமர.. அவன் பார்வை அவளையே துளைத்தது.. கூடவே எட்டு வருடத்துக்கு முதல் தைரியமாய் தன்னிடம் காதலை சொன்ன அவளது தோற்றமும் அவன் கண்ணில் வந்துபோனது…

 

அன்று இருந்தவளுக்கும் இன்று பயத்துடம் அமர்ந்திருக்கும் இவளுக்கும் தான் எத்தனை வித்தியாசம்… அவளது இந்த பயம் அவனுக்கு சற்று சிரிப்பை வரவழைத்தது எனலாம்… இருந்தும் காட்டிக்கொள்ளவில்லை..

 

“மீனாட்சி ரைட்…” என்றவன் கேள்வியாய் நிறுத்த.. நிமிர்ந்து பார்த்தவளது கண்களில் அதிர்வு.. கூடவே இத்தனை வருடங்களாக ஞாபகம் வைத்திருக்கிறானே என்று சிறு சந்தோஷமும் எழ தான் செய்தது…

 

“பிரியமுடன் மீனாட்சி…” என்று அவன் சொல்ல அவளுக்கோ அங்கேயே புதைந்துவிட மாட்டோமா என்ற எண்ணம் தான்..

 

ஒருவருடம் தன்னை காக்க வைத்ததற்கு அவளை பழிவாங்க எண்ணினானோ என்னவோ அவ்வளவு சீக்கிரத்தில் அவளை விடுவதாக இல்லை…

 

“அப்பறம் சொல்லுங்க மீனாட்சி.. கார் எல்லாம் வாங்கியாச்சா?… என்ன கூட தரைல நடக்க விடாம பாத்துப்பன்னு சொன்னீங்களே..” என்றான் மெல்லிய சிரிப்புடன்… அவள் மனதிலோ சூறாவளி.. இருக்காதா பின்ன என்றோ எழுதிய கடிதம் இன்று அவளை பழிவாங்குகிறதே…

 

“சார்..” என்றவள் எச்சில் விழுங்க..

 

“சார்னு ஞாபகம் இப்போவாவது இருக்கே சந்தோசம்.. அப்பறம் இன்னொன்னு என்ன?.. ஆஆன் கையாள சாப்பிட வேண்டாம் வாயாலயே ஊட்டி…” என்றவன் அடுத்த வார்த்தை பேசும் முன்னர் எழுந்தவள் அவன் வாயை கைகளால் மூடி இருந்தாள்…

 

அவள் எழுந்த வேகத்தில் முன்னே இருந்த கேக்.. இப்போது அவன் சட்டையை கரையாக்கி இருந்தது…

 

“அச்சோ சாரி சார் சாரி சார்…” என்று அங்கிருந்த டிஷுவினால் கரையை துடைத்தாள்..

 

சிறிது நேரத்தின் பின்னே அவன் அருகமையை மூளையில் பதிய.. நிமிர்ந்து அவன் கண்களை நோக்கியவளுக்கு மின்சாரம் பாய்ந்த உணர்வு…

அவன் கண்களை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை.. ஏதோ காந்த விசைக்கு கட்டுப்பட்ட இரும்பு போலவே அவன் விழி ஈர்ப்பில் கட்டுண்டு நின்றிருந்தாள்..

 

அவன் எப்போதும் அமரும் இடம் கொஞ்சம் மறைவான இடம் என்பதாலும்.. அந்த நேரம் கூட்டம் சற்று குறைவு என்பதாலும் இவர்கள் நிலை பெரிதாய் மற்றவர் கண்களை உறுத்தவில்லை..

 

அப்போது கோபமாய் ஒரு பெண்ணின் குரல்… “பாரி..” என்று ஒலிக்க, அந்த சத்ததுக்கு வேந்தனோ எட்டி பார்க்க, மீனாட்சி அப்போதுதான் உலகத்துக்கே வந்தவள்.. அவனை விட்டு சற்று விலகி நின்று கொண்டாள்..

 

“எஸ் திவ்யா.. எதுக்கு இவ்வளவு சத்தம்.. பொது இடத்துல இப்படித்தான் பிஹெவ் பண்ணுவீங்களா?.. எனக்கு தான் காது நல்லாவே கேட்குமே..” என்றான் அழுத்தமான குரலில்..

 

அவன் கோபத்தை உணர்ந்து, சட்டென்று தன் முகபாவனையை மாற்றி கொண்டவளோ.. “அதில்ல பாரி என்னாச்சோனு பதட்டதுல வாய்ஸ் கொஞ்சம் ரைஸ் ஆகிடிச்சு.. இஸ் எவ்ரிதிங் ஓகே?..” என்ற கேள்வியுடன் அவன் எதிரில் அமர்ந்தவள் மீனாட்சியை முறைத்தபடி “டூ பிளாக் காபீ..” என்றாள்.. எடுத்தெரிந்த குரலில்..

 

அதில் வேந்தனுக்கும் சற்று கோபம் வரவே செய்தது.. யாராக இருந்தாலும் மதிக்கப்பட வேண்டும் என்று எண்ணுபவன் அவன்..

 

“நோ திவ்யா.. அவங்க இங்க வெயிடர் கிடையாது இந்த ஷாப்போட ஓனர்.. வெயிடர் வருவாங்க வெயிட் பண்ணுங்க..” என்றவன் மீனாட்சியிடம் திரும்பி “ஐ லவ் யுவர் கேக் மீனாட்சி.. தேங்க்ஸ் போர் தட்.. இட்ஸ் ஆல்வேய்ஸ் கீலிங் மை ஹார்ட் லைக் எ பிரண்ட்.. கீப் ராக்கிங்.. யூ ஹேவ் எ பிரைட் பியூச்சர்..” என்றான் மனதார புன்னகையுடன்..

 

அவளோ அமர்ந்திருக்கும் இருவரையும் பார்த்தபடி அங்கிருந்து செல்ல முதலே, திவ்யா ஆரம்பித்துவிட்டாள்..

 

“என்ன பாரி நீங்க காசு கொடுத்து சாப்பிடுறதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு.. பைவ் ஸ்டார் ஹோட்டல்ல இத விட பெட்டராவே கிடைக்கும்.. இதெல்லாம் போய் எங்கரேஜ் பண்ணிக்கிட்டு…” என்றாள் கோபமாக.. அதுவும் மீனுவின் காதில் விழவே செய்தது..

 

நேரே ஸ்ருதியிடம் சென்றவள் அவளை இறுக அணைத்துக்கொண்டாள் நடுக்கம் குறையும் வரை.. ஆனால் அதுவோ குறைந்தபடில்லை..

 

“ஓகே ஓகே ரிலாக்ஸ்… ஒண்ணுமில்ல மீனு.. எல்லாம் ஓகே ஆகிடிச்சு.. உன்ன தப்பா எல்லாம் நினைக்கல பாத்தியா?.. நான் சொன்னேன்ல.. உன்கூட நார்மலா பேசுன போல தான் இருந்திச்சு.. நான் சொன்னது கரெக்ட்டா?.. இனி நீ ஓடவும் வேணா ஒழியவும் வேணா…” என்றாள் ஸ்ருதி நண்பியின் முதுகை தடவியபடி…

 

அதில் அவளுக்கு மனம் சற்று சமப்படவே செய்தது…. ஆனால் அதற்கு மேல் அவளால் அங்கு இருக்கவே முடிவில்லை.. ஸ்ருதியிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவள் தான் எப்படி வீட்டுக்கு வந்தாள் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்…

 

வெளியே தட்டப்படும் கதவின் ஓசை மீனுவை அந்த நினைவுகளின் இருந்து உலகுக்கு அழைத்து வந்திருந்தது…

 

முகத்தை துடைத்தவள் ஆழ மூச்செடுத்து கதவை திறக்க வெளியே மகிழ் முறைத்துககொண்டிருந்தாள்..

 

“ஐயையோ இவள மறந்துட்டோமே.. செத்தோம் இன்னைக்கு… ஓகே சமாளிப்போம்.. நம்ம சில்வண்டு தானே..” என்று எண்ணியவள்.. “அடடே மகிழ் குட்டி ஸ்கூல் முடிச்சு வந்துடீங்களா?..” என்று அவள் உயரத்துக்கு மண்டியிட்டு வினவினாள்.

 

“அவள் மகளோ அவளை இடித்துவிட்டு கோபமாய் உள்ளே சென்று பெட்டில் அமர்ந்து கொண்டாள்…

 

“அடுத்த சோதனையா?.. ஆண்டவா ப்ளீஸ் ஹெல்ப் மீ…”

 

“என்னடி ஆச்சு மூஞ்ச தூக்கி வெச்சிருக்க…” என்று மகளை இடித்தபடி அமர

 

“எல்லாம் உன்னாலதான்.. பேசாத எங்கிட்ட..”

 

“நானா? நான் என்னடி பண்ணேன்..”

 

“பின்ன.. அந்த ஆர்வன் எங்கிட்ட வம்புக்கு வரான்னு உங்கிட்ட சொன்னனா இல்லையா?..”

 

“சொன்ன…”

 

“அதுக்கு நீ என்ன சொன்ன..”

 

“பாவம் சின்ன பையன்… நான் அவன்கிட்ட பேசுறேன்னு சொன்னேன்..”

 

“அதான் பேசி கிழிச்சதே நான் தான் பார்த்தேனே..”

 

“அடியேய் நான் உன் அம்மாடி..”

 

“பேச்ச மாத்தாத மீனு.. எப்போ பேசுவ.. நீ லேட் பண்ணிட்டு என்ன குத்தம் சொல்ல கூடாது சொல்லிட்டேன்..”

 

“சரிதான்டி.. நீ ஒழுங்கா இருந்தா அவன் ஏண்டி ரவுடி வம்பிலுக்க போறான்..”

 

“இன்னைக்கும் அவன் என்னோட ஸ்கூல் டிரஸ்ல மைய கொட்டிட்டான்.. உனக்காக ஒன்னும் பண்ணாம வந்தேன்.. இனிமேல் பாத்துட்டு இருக்க மாட்டேன் பாத்துக்க…”

 

“அடியேய் என்னடி பண்ணி தொலச்ச.. உன்ன நம்பவே மாட்டேன்.. ஏதாச்சும் பண்ணிட்டுல வந்திருப்ப.. உண்மைய சொல்லுடி..” என்க அவள் மகளோ வில்லத்தனமாக சிரித்தபடி

 

“நாளைக்கு அந்த பிரின்சிய மீட் பண்ண தயாரா இருந்துக்கோ மீனு.. வரட்டா?…” என்றவள் ஹீரோ ரேன்ஜுக்கு அங்கிருந்து நடத்து செல்ல, மீனாட்சிக்கு தான் அப்படி என்ன செய்து வைத்தாளோ என்று முழிபிதுங்கியது…

 

ஜாலம் தொடரும்…

          

                             _ஆஷா சாரா_

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
24
+1
57
+1
6
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. எட்டு வருஷத்துக்கு முன்னாடி மீனாட்சி வேந்தன லவ் பண்ணாலா வேந்தன் மீனாட்சியோட காலேஜ் ப்ரொபசரா??
      உன்னுடைய சில்வண்டு என்ன அளப்பரியை கூட்டி வச்சிருக்காலோ பிரின்ஸ்பல பார்க்க ரெடியாயிரு மீனு

      1. Author

        Thank you sis ❤❤

        Yes ப்ரோபஸ்ஸர் தான் டா… 🤭🤭🤭

        🤣🤣🤣 ரெடியா இரு மீனு

    2. மீனு ஏன் வேந்தனை பார்க்காம இருந்தா.? இந்த திவ்யா யாரு.?

      மீனுவோட பொண்ணு ஹஹஹஹ🤣😂🤣😂😂🤣