Loading

ஜன்னல் நிலவு 03..

 

 

 

“ என்னடா சீனி வாசா, ரொம்ப அமைதியா வாற? காரணம் என்ன?. அங்க நடந்தது பற்றி எல்லாம் கேட்கணும்னு நினைக்கிற ஆனா கேட்காமல் ஏதோ தடுக்குது?.. அட நம்ம அப்படியா பழகி இருக்கோம். நீ ஏதாவது கேட்டு நான் கோபப்படுவேனா?. எதுவா இருந்தாலும் தயங்காம கேளு , பதில் சொல்ல முடிந்தால் சொல்லுவேன்.. ” என்றான் ஈஸ்வர்..

 

 

 

 

“ எனக்கு ஆயிரம் கேள்வி வருது, அதெல்லாம் கேட்க முடியாது. எப்படிடா மச்சான் நீ கொஞ்சம் கூட ஒரு பயம்,பதட்டம், தயக்கம் இல்லாம இப்படி ஒரு முடிவு எடுத்த?.. இதில் உனக்கு எவ்வளவு சக்சஸ் பண்ண முடியும் என்று தோணுது. அதுவும் முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ண கட்டிப்பிடிக்கிற, கிஸ் பண்ற, அவங்களை குளிக்க வைக்குற, டிரஸ் சேஞ்ச் பண்ணி விடுற, இதெல்லாம் எப்படி சாத்தியமாகுது. 

 

 

 

 

 அவனுகளோ நீ எந்த ஊருன்னு மட்டும் கேட்டு மதுரைன்னு சொன்னதும் எல்லாமே ஓகே இது உங்க மனைவி தான் அப்படின்னு வாய் கூசாமல் சொல்லுறாங்க.. ஒரு நிமிஷம் அங்க நடந்ததெல்லாம் பார்த்து எனக்கு பைத்தியம் பிடிக்காமல் இருந்த வரைக்கும் சந்தோசம்.. 

 

 

 

 

 

 அவன், அவன் கல்யாணம் பண்றதா இருந்தா மாப்பிள்ளை பத்தி நூறு இடத்துல விசாரிப்பான்.. பொண்ணு குடும்பத்தை பற்றி விசாரிப்பாங்க.. இங்கே என்னடா இது எதுவுமே இல்லாம பார்த்ததும் காதல், கட்டிப்புடிச்சு கிஸ் பண்றது. அதெல்லாம் ஓகே. நூறு படி மேலே போய் உடனே குளிக்க வைச்சு டிரஸ் சேஞ்ச் பண்ணி கூட்டிட்டு வர.. அம்மாக்கு இதெல்லாம் தெரிஞ்சா என்ன நிலைமைன்னு யோசிச்சியா?. அந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு எதாவது தெரிஞ்சு குணப்படுத்தாமல் நீ எப்படி இப்படி எல்லாம் முடிவு எடுக்கலாம்?. ஒருவேளை அந்த பொண்ணு குணமாகினதுக்கு அப்புறம் உன்னை புடிக்கல ஏன் என்னை கேட்காமல் சுயநினைவு இல்லாத டைம் கல்யாணம் பண்ணுனீங்கன்னு உன்னை கேட்டா நீ என்ன பதில் சொல்லுவ?..  

 

 

 

 

 ரெண்டு பேரும் சுயநினைவோட இருந்து காதலிச்சு கல்யாணம் பண்ற வாழ்க்கையே ஒரு வருஷத்துக்குள்ள டிவோர்ஷ்ல முடியுது.. நீ என்னடா அந்த பொண்ணுக்கு சுயநினைவு இல்லாத நேரம் எல்லாத்தையும் பண்ணுற? இதோட பின்விளைவு எப்படி இருக்குன்னு யோசிக்கிறியா இல்லையான்னு எனக்கு எதுவும் புரியல?.. அவனுக நல்லா ஓசில பாரின் சரக்கு குடிக்க பார்க்கிறானுக.. ஒரு நயா பைசா செலவில்லாத ஒரு கல்யாணத்தை பண்ண இவ்வளவு சீன் பண்ணுறாங்க. 

 

 

 

 

 எல்லாத்தையும் சந்தேக கண்ணோட பார்த்து சரியா கணித்து செய்து முடிக்கிற நீ இந்த பொண்ணு விஷயத்துல எதையும் யோசிக்காமல் இறங்குவது தான் எனக்கு ஏதோ தவறாகப்படுது.. என்னைக்குமே நீ சந்தோசமா இருக்கணும் அதுதான் எங்க ரெண்டு பேருக்குமே முக்கியம்.. அதுக்காக நானும் அம்மாவும் என்ன வேணாலும் பண்ணுவோம்.. ஏதோ நீ பண்றது எல்லாம் உனக்கு சரின்னு பட்டா சரி.. நல்ல படியா நீ அந்த பொண்ணோட வாழ்ந்தால் எங்களை விட சந்தோஷப்படுற ஆள் யாரும் இல்லை.. ” என தன் நண்பனின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று உணர்ச்சி பூர்வமாக சீனி பேசினான்..

 

 

 

“ சந்தேகப்பட்டு பிசினஸ் பண்ணலாம் மச்சான். ஆனா சந்தேகப்பட்டு வாழ்க்கை ஓட்ட முடியாது.. லண்டன்ல படிச்ச நான் எத்தனை பொண்ணுங்களை கடந்து வந்திருப்பேன். இதோ இந்த மதுரை, சென்னை அப்படி எங்கெல்லாம் போயிருக்கேன் பிசினஸ் சம்பந்தமா அங்கே எல்லாம் நான் பார்க்காத பொண்ணுங்களா?.. இல்ல அங்கெல்லாம் அழகான பொண்ணுங்க இல்லையா?. ஏதோ இவளை பார்த்ததும் இவ தான் எனக்கு என்னும் ஒரு எண்ணம் மனசுல வந்துச்சு. அப்படி எல்லா பொண்ணுங்களையும் பார்த்தாலும் வராது மச்சான்.. ஒரே ஒரு பொண்ண பார்த்தா மட்டும் தான் வரும் அவதான் மனைவி.. எல்லா பொண்ணுங்களையும் பார்த்து அப்படி ஒரு எண்ணம் வந்தா அதுக்கு பேரே வேற.. நீ வேணா பாரு அவ சீக்கிரமாவே குணமாயிடுவா நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா தான் வாழ்வோம்.. நம்ம கிட்ட இல்லாத பணமா? மச்சான். கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எதுக்கு அதிக பணம் .. சந்தோசமான கல்யாண வாழ்க்கை தான் முக்கியம்.. 

 

 

 

 அவங்க அம்மா என்ன நினைச்சு இந்த கண்டிஷன் போட்டு இருப்பாங்க. தன்னோட பிள்ளைகள் எல்லாம் ஒரே இடத்தில் சந்தோசமா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா ஒற்றுமையா இருக்கணும்னு நினைச்சிருப்பாங்க அதுக்கு முன்னாடி பணம் எல்லாம் ஒரு விஷயமா என்ன?.. 

 

 

 

 

 கூடிய சீக்கிரமே அவங்க கண்டிஷன் நிறைவேற்றி நான் அவளை கல்யாணம் பண்ணி கூட்டிக்கொண்டு வந்து சந்தோஷமா வாழத்தான் போறோம். அதை நீ பார்க்க தான் போற.. 

 

 

 

 

 அப்படியே ஒரு ஆன்டியை பார்த்து உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்.. அப்பதான் உன் வாய் அதை, இதை பேசாது உன் கல்யாண வாழ்க்கை ரொம்ப பிசியா போகும் என்னை பற்றி கவலை பட நேரம் இருக்காது..

 

 

 

 இதே மாதிரி எங்க அம்மாவுக்கும் வருஷத்துக்கு ஒரு பேர புள்ள பெத்து குடுக்கணும் அப்பதான் எங்க அம்மாவும் வேற எதைப் பத்தியும் சிந்திக்காமல் அவங்களோட பிஸியா இருக்கும்.. ” என்று பேசி நண்பனை சமாதானப்படுத்தி விட்டு அழகிய பல்வரிசை தெரிய சிரித்தான் ஈஸ்வர்..

 

 

 

 

 நண்பனின் முகத்தில் தெரிந்த கலையும், சந்தோசமும் உண்மையில் சீனிவாசனுக்கு மிகுந்த சந்தோஷத்தை தன் கொடுத்தது.. தாய்க்காக, தனக்காக என்று சிரிப்பானே தவிர மனம் ஒத்து சிரிக்கிறானா?. என்பது அவர்களுக்கு எப்பொழுதும் சந்தேகம் தான்..

 

 

 

 

 கூடப்பிறந்த அண்ணனே அவனது அப்பாவிற்கு அனைத்திலும் உதவியாக இருப்பேன் என்று கூறி நல்லவைகளை சொல்லிக் கொடுக்காமல் கெட்டவைகளை சொல்லிக் கொடுத்து அவரை வழி தவறி போக வைத்து அவர் வாழ்க்கையை கெடுத்தார்.. 

 

 

 

 

 பத்மாவதியை கைப்பிடித்த பின் தான் அவர் ஓரளவுக்கு மனிதனாகவே மாறினார் என்று சொல்ல வேண்டும்..

 

 

 

 இப்படி அவன் குடும்பத்தில் பல சிக்கல்கள் இருந்ததால் அவன் அனைத்தையும் சந்தேக கண்ணோடு தான் பார்ப்பான்.. இவள் விஷயத்தில் மட்டும் அப்படி பார்க்க அவனுக்கு தோன்றவில்லை.. 

 

 

“ ஆமாண்டா நீங்க எல்லாம் 20 வயசு பொண்ணுங்களை பார்த்து கல்யாணம் பண்ணனும். நான் மட்டும் ஆன்ட்டியை கல்யாணம் பண்ணி சீரழியனும் என்ன ஒரு நல்ல மனசு.. பண்ணுங்க பண்ணுங்க எல்லாம் சிறப்பா பண்ணுங்க.. ” என்று இருவரும் பேசி அந்த கடினமான சூழ்நிலையை கொஞ்சம் இலகுவாக்கி பயணத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..

 

 

 

 ஈஸ்வர் வந்ததும் சீனியை அழைத்துக்கொண்டு நேற்று விட்ட வேலைகளை பார்க்க சென்று விட்டான்..

 

 

 

 பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்தது வேண்டுமானால் லண்டனாக இருக்கலாம்.

 

 

 ஆனால் தாய் வளர்ப்பில் அவன் தூய தமிழன்.. 

 

 

 மதுரை மண்ணை மிகவும் நேசிக்கக் கூடிய ஒருவன்..

 

 

 

 ஒரு ஊரில் சாதாரணமாக ஒரு மனிதன் வசிக்கலாம். ஆனால் அந்த ஊர் காற்று, இயற்கை அழகு மற்றும் கோவில் அப்படி பல நல்ல விஷயங்களை அவன் உள்வாங்கி அதை சுவாசிக்கிறான் என்று தான் கூற வேண்டும்..

 

 

 

 பல ஏக்கர் கணக்கில் தென்னந்தோப்பு உள்ளது அவர்களுக்கு..

 

 

 

 வாழை,மா, கொய்யா, பிலா, தோடை, தேசி,அத்தோடு பனை,போன்று அனைத்து பயனுள்ள மரங்களும் வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் காய், கனி ஏனைய பொருட்கள் என அனைத்தும் அவன் ஏற்றுமதி செய்கிறான்.. 

 

 

 

 

 தானிய வகைகள், பயிர்கள் நெல் என அனைத்தும் பயிர் செய்கிறான்.. 

 

 

 

 இயற்கை உரத்தை பயன்படுத்தி அவன் செய்யும் பயிர்கள் அனைத்தும் அவனுக்கு மாபெரும் பயனை கொடுக்கிறது..

 

 

 

 

 அவன் தொழில் மற்றும் வீடு எதிலும் இயற்கைக்கு மாறாக செயற்கை மற்றும் ரசாயனங்கள் இருக்கவே இருக்காது.. 

 

 

 

 

 

 இந்த காலத்து பெண்கள் அவன் வீட்டு கிச்சனை பார்த்தால் பயந்து ஓடி விடுவார்கள்..

 

 

 

 விறகடுப்பு, அம்மிகல் , ஆட்டுரல், மண்பானை தண்ணீர். என அனைத்தும் இயற்கையானவை மட்டுமே..

 

 

 

 

 நவீன சமையல் இயந்திரங்கள் உபகரணங்கள் எதற்கும் அந்த வீட்டில் இடமில்லை..

 

 

 இயற்கையில் கிடைக்கும் ருசி செயற்கையில் என்றும் கிடைப்பதில்லை..

 

 

 

 அவன் உணவுப் பிரியனும் கூட மீன் குழம்பு மற்றும் சிக்கன், மட்டன் என அனைத்தும் அவனுக்கு ருசியாகவும் தரமாகவும் சமைக்க வேண்டும்.. 

 

 

 பொடிநடையாக இயற்கை காற்றை சுவாசித்தபடி சீனியுடன் பேசிக்கொண்டு வயல்கள் அனைத்தையும் பார்வையிட்டு கொண்டு ரைஸ் மில்லுக்கு சென்று அங்கிருந்த கணக்கு வழக்குகளையும் பார்த்துவிட்டு இன்றைக்கு தென்னை மரத்தில் எத்தனை காய் பறிக்கப்பட்டது என அந்த கணக்கு வழக்குகள் மற்றும் காய், கனி கணக்கு வழக்குகள் என அனைத்தையும் பார்த்துவிட்டு இரவு 9 மணி அளவில் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்..

 

 

 

 அனைத்தும் அருகே அருகே உள்ளதால் அவனுக்கு வாகனம் தேவைப்படுவதில்லை..

 

 

 

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நடந்து சென்று தன் வேலைகளை பார்த்துவிட்டு வருவான். அதனால் மோட்டார் பைக் அவர்கள் வீட்டில் இல்லை ..

 

 

 

 இரண்டு கார் மட்டும் உள்ளது தாய்க்கும், அவனுக்கும் என..

 

 

 

 இயற்கையோடு ஒப்பிடும் தொழில் எதையும் அவன் விட்டு வைக்கவில்லை.. வீட்டிற்குப் பின்புறம் பெரிய மாட்டு பண்ணை, கோழி பண்ணை உள்ளது. 

 

 

 

முன்பு சாதாரண சிறிய அளவு வீடு தான்.. இவன் தான் அதை பெரிதாக மேலும் எடுத்துக்கட்டினான்..

 

 

 

 கீழே மூன்று அறை மேலே மூன்று அறை, பூஜை அறை, சமையலறை ஒவ்வொரு அறைக்கும் அட்டாச் பாத்ரூம் என நவீனகரமாக வீட்டை கட்டி முடித்துள்ளான்..

 

 

 

 

 மேல் தளத்தில் அவனையும் சீனியையும் தவிர வேறு யாரும் போக மாட்டார்கள்.. அங்கிருக்கும் மூன்று அறையும் கிட்டத்தட்ட அவனுக்கு மட்டுமே சொந்தமானது.. 

 

 

 

சுத்தம் செய்வது கூட சீனி தான்..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்