ஜன்னல் நிலவு 02
விடிந்தும் விடியாத காலை பொழுதில் திருமணத்துக்கு உரிய அனைத்து அலங்காரங்களையும் சற்று நேரம் தள்ளி வைத்துவிட்டு நண்பனின் நிலைமையை தெரிந்து கொள்ள குமார் வேகமாக அந்த வீட்டின் முன்பு வந்து நின்றான்..
நடந்து வந்த களைப்பில் வேக மூச்சு விட்டு சற்று நேரம் அசுவாசப்படுத்தி கொண்டு வீட்டின் காலிங் பெல்லை அடிக்கவும் சீனி கதவை திறந்தான்..
“ டேய் சீனி எங்கடா அவனை.. ஏன்டா இப்படி பண்ணினான்? ஏதாவது கேட்டியா?.. எனக்கு ஒரே பதட்டமா இருக்கு.. சீக்கிரம் பதில் சொல்லித் தொலை எரும.. நான் வந்தது வீட்டுல யாருக்கும் தெரியாது, என்னை அவங்க தேடும் முன்னாடி நான் அங்க போகணும்.. ” என்று அவன் பேசிக்கொண்டு இருக்கவும்.
ஈஸ்வர் வெளியே வந்தான்..
“ இதோ நீ கேள்வி கேட்ட அவனே வந்துட்டான், நீ அவனிடமே உன் எல்லா கேள்வியும் கேட்டுக்கோ..! எனக்கு எதுவும் தெரியாது ஆளை விடு சாமி.. இரவு முழுக்க அவனும் தூங்கல, என்னையும் தூங்க விடலை.. தாலி கட்ட இன்னும் நேரம் இருக்கு தானே நான் போய் கொஞ்ச நேரம் உறங்குறேன்.. ” என்று கூறி சீனி உள்ளே போகவும்
“ அப்படி எல்லாம் அவ்வளவு ஈஸியா உன்னை தூங்க விட மாட்டேன். வாடா என் பொண்டாட்டி என்ன பண்ணுறான்னு ஒரு எட்டு பார்த்துட்டு வருவோம். நேற்று பார்த்ததில் இருந்து மாமன் கண்ணுக்குள்ளயே இருந்து என்னவோ மாயம் பண்ணுறா கள்ளி. எங்க கண்ணை மூடினால் மாயமா போய்டுவாளோன்னு நானே உறங்காமல் எப்ப விடியும் திரும்ப என் நிலா பொண்ணை பார்க்கலாம்னு காத்திருக்கிறேன்.. உனக்கு என்னை பற்றி கவலை இல்லை.. ஒரு இரவு உறங்காதது தான் பெரிய விஷயமா? ஆளை பார் ஒழுங்கா வா.. ” என்று சீனியை ஒரு வாங்கு வாங்கிவிட்டு திரும்பவும் குமார் அங்கே நிற்பதை அப்போதுதான் பார்த்தவன் போல்
“ அடேய் மாப்பிள்ளை உனக்கு இங்க என்ன வேலை போ.. ஒழுங்கா பவுடர் பூசி அழகா கல்யாண மாப்பிள்ளை போல ரெடி ஆகு. அதை விட்டு பெரிய இவர் போல என்னை விசாரிக்க வந்துட்டான்..” என்று குமாரை ஒரு வழி பண்ணிவிட்டு சீனியின் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றான் ஈஸ்வர்..
அவனை தடுக்க குமார் எவ்வளவோ போராடினான் ஆனால் நம்ம ஈஸ்வர் விரும்பியதை அடைந்து தானே பழக்கம்.
“ ஈஸ்வர் நீ காதலிக்க அந்த பொண்ணு ஏற்றது இல்லடா.. அவ வேறமாதிரி பொண்ணு. சொன்னா கேளுடா. அது பெரிய பிரச்சினை. உன் கிட்ட எப்படி சொல்லுவேன்.. நான் தான் முட்டாள் உன்னை பற்றி தெரிஞ்சும் இங்க தங்க வச்சேன் பார்.. என்னை செருப்பால அடிக்கணும்.. வாடா போகலாம்.. ”
“ டேய் சீனி நீ என்ன பார்த்துட்டே இருக்க எடுத்து சொல்லுடா அவனுக்கு.” என்றான் குமார். அவன் பேச்சு எதுவும் காதில் கேட்காமல் ஈஸ்வர் அவள் வீட்டிற்குள் சென்று விட்டான்..
மீண்டும் அவள் நேற்று இருந்த அதே இடத்தில் தான் இருந்தாள்..
அவள் மேல் வியர்வை மணம் மற்றும் மூன்று நாள் குளிக்காமல் இருந்த அழுக்கு என பேட் ஸ்மெல் வந்தது..
எதிலும் சுத்தம் பார்க்கும் ஈஸ்வருக்கு அவள் வியர்வை மணம் பன்னிர் வாசத்தை ஒத்து இருந்ததோ யார் அறிவர்..
இதுவும் காதலின் ஒரு நிலை தான்..
ஒருவர் மேல் ஆணுக்கோ, பெண்ணுக்கோ காதல் வந்துவிட்டால் அவர் மேல் உள்ள குறைகள் எதுவும் கண்ணுக்கு தெரியாது. அதுதான் உண்மை காதல்..
அப்படியே குறை இருந்தாலும் இவள்(ன்) தன்னுடைய சொந்தம் என்ற நினைப்பு அந்த குறையை எடுத்துக்காட்ட நினைக்காது..
ஈஸ்வர் ,சீனி, குமார் மூவரும் அந்த அறைக்குள் நிற்கவும்
“ ஈஸ்வர் இது உனக்கு தேவையில்லாத வேலை. வா உனக்கு எல்லா விளக்கமும் நான் எடுத்துச் சொல்லுறேன். இது சரி வருமா என்று தீவிரமா யோசிச்சு முடிவு எடு.. முதல்ல இங்கிருந்து வெளியே போகலாம்.. நீ இந்த ஊருக்கு புதுசு யாராவது உன்னை இங்க பார்த்த தப்பா நினைப்பாங்க சீக்கிரம் வாடா..” என்றான்..
“ டேய் குமார். நீ கல்யாண மாப்பிள்ளை. அப்புறம் என் நண்பன் என்று பார்க்கிறேன். நீ போடா முதல்.. நான் இவங்க யாரு என்னன்னு தகவல் எடுத்துட்டு அப்புறம் நான் உன் கல்யாணத்துக்கு கட்டாயம் வருவேன்..” என்று பேசிகொண்டிருக்கும் போதும்.
நேற்று வந்த மூவரும் தற்பொழுதும் அங்கே வந்தார்கள்..
அவர்கள் குமாரை பார்த்து முறைக்கவும் அவன் அங்கு இருப்பது சரியில்லை என்று வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான்..
அவனுக்கு தான் தெரியுமே அவர்கள் விஷயத்தில் யார் தலையிட்டாலும் அந்த குடும்பத்தில் இருக்கும் காட்டன் இருவரும் யாருக்கும் தெரியாமல் அழித்து விடுவார்கள் என்று..
குமாருக்கு தெரியும் அவர்களின் ஜம்பம் நண்பனிடம் பழிக்காது அவன் வித்தகனுக்கும் வித்தகன் என்று.
அந்த துணிவில் தான் தன் நண்பன் எல்லாம் பார்த்துக் கொள்வான். என்று நினைத்து விட்டால் போதும் என அவன் வீட்டிற்கு ஓடியே வந்துவிட்டான் குமார்..
அதன் பின் கல்யாணதிற்கு தயாராகும் பிஸியில் குமார் நண்பனை பற்றி யோசிக்கவில்லை..
எல்லாம் ஈஸ்வர் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தான்..
அவள் வீட்டில் “ யார் நீங்க? ஏன் இங்க ஒரே வாரீங்க?. யாருன்னு தெரியாத வீட்டுக்குள்ள இப்படித்தான் கேட்டு கேள்வி இல்லாம வருவாங்களா?.. பார்த்தா படிச்ச பையன் மாதிரி இருக்கீங்க. இதுதானா உங்க பழக்கம்?.. ” என கோபால் பல கேள்வி கேட்டும் ஈஸ்வரிடம் எந்த பதிலும் இல்லை..
“ ஹலோ மிஸ்டர் நீங்க கேள்வி கேட்கிறது இருக்கட்டும். ஏன் இவங்க இப்படி இருக்காங்க?.. ஐ மீன் அவங்க சுத்தம் இல்லாமல் இருப்பதை பற்றி நான் கேட்கல. நான் வந்து இப்படி முன்னாடி நின்னும் அவங்க முகத்தில் எந்த ரியாக்சனும் இல்லையே அதை கேட்டேன்.. ” என்றான்…
‘ நீ யாருடா?. பெரிய இவனா? உன் கேள்விக்கு நான் பதில் சொல்லனுமா? ’ என்று நினைத்தான் ஈஸ்வர்..
ஆனால் அதை வெளியே சொல்லவில்லை.. அவளைப் பற்றி அவனுக்கு தெரிந்து கொள்ளும் கட்டாயம் இருப்பதால் ஆரம்பத்தில் அவர்களைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை..
“ அதுவா தம்பி அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க?.. இவ எங்களோட ஒரே பொண்ணு, இதோ நிக்கிறாங்களே இவங்க ரெண்டு பேரும் இவளோட அண்ணன்.. இவ அம்மா சாகும்போது இவளுக்கு 15 வயசு. அப்ப எங்க மூணு பேரையும் இவளோட பொறுப்புல தான் விட்டு என் ஸ்ரீதேவி உயிரை விட்டுட்டாள்..
ஆனா போகும்போது மகராசி சும்மா போகாம ஒரு கண்டிஷன் போட்டுட்டு போயிட்டாள். ” என்றார்..
அவ்வளவு நேரம் நின்று கதை கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் அவனையே பார்ப்பதை உணர்ந்ததும் அவளையும் தன் அருகே அமர்த்தி அவள் தோளில் கை போட்டு தன்னுடன் அணைத்துக் கொண்டு “ என்ன சொல்றீங்க அவங்க அம்மா என்ன கண்டிஷன் போட்டாங்க? ” என்றான்..
“ தம்பி இது சரி இல்லை. பிளீஸ் கொஞ்சம் தள்ளி இருங்க.. ” என்றார் கோபால்..
“ ஹலோ மிஸ்டர் அப்படி எல்லாம் தள்ளி இருக்க முடியாது.. என்னை பார்த்தா உங்களுக்கு பொறுக்கி பையன் மாதிரி தெரியுதா?.. ஒரு பொண்ண பார்த்து சைட் அடிச்சு இப்படி கட்டிப்பிடிச்சு விட்டுட்டு போற மாதிரி இருக்கா?. என் பிறப்பு வளர்ப்பு அப்படிப்பட்டது இல்லங்க சார். உங்க வீட்டுக்குள்ள வந்து உங்க முன்னாடியே உங்க பொண்ண இப்படி கட்டிபிடிச்சிட்டு நிக்கிறேன்னா என்ன பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு?.. எனக்கு 30 வயசு ஆயிடுச்சு சார். நான் முதல் முதல் காதலா பார்க்கிற ஒரே பொண்ணு உங்க பொண்ணு தான்.. ” என்றான்..
ஈஸ்வர் பண்ணும் கூத்து அனைத்தையும் சீனி பார்த்து பீதியாகி கொண்டிருந்தான்..
“ நாங்க உங்களை தவறா நினைக்கல தம்பி.. தவறான எண்ணம் உங்க மேல வரல.. உங்க மேல சின்ன சந்தேகம் வந்திருந்தாலும் நீங்க இப்படி எங்க வீட்ல வந்து எங்க பொண்ணுக்கு பக்கத்துல இருக்க மாட்டீங்க.
நான் யோசிக்கிறது என் மனைவி போட்ட கண்டிஷன் என்னன்னு தெரிஞ்சு நீங்க அதை செய்ய முடியாதுனு சொல்லி விட்டுட்டு போயிடுவீங்க. அப்புறம் என் பொண்ணோட நடத்தை பற்றி இந்த ஊர் இன்னும் தவறாக தான் பேசும்.. என்னும் கவலை தான் எனக்கு. மத்தபடி உங்க மேல தப்பான எண்ணம் இல்லை.. ” என்றார் கோபால்..
அவர் முகத்தில் கவலை அப்பட்டமாக தெரிந்தது. இப்படி எத்தனை பேர் வந்து பார்த்து முடியாது என்று கூறிவிட்டு சென்ற பின் இந்த ஊர் தன் மகளையும் தன் குடும்பத்தையும் எப்படி வசை பாடியது அதனால் தானே தன் மகள் இதை எல்லாம் கேட்டு, உணரும் சக்தி இல்லாமல் இப்படி
சொல்வதை செய்யும் கிளிப்பிள்ளை போல் இருக்கிறாள்..
“ ஹலோ சார் அது என்ன கண்டிஷன் முதல் சொல்லுங்க. அப்புறம் அது என்ன பெரிய பிஸ்கோத்து கண்டிஷன் அப்படின்னு நான் பார்த்துக்கிறேன்.. நேத்து இரவு முதல் இவளை பார்த்த பார்வையிலேயே இவதான் என் பொண்டாட்டின்னு முடிவு பண்ணிட்டேன்.. அப்புறம்தான் மத்ததெல்லாம்.. என்னவா இருந்தாலும் அதை நான் பண்ணிட்டு இவளை நான் கல்யாணம் கட்டி இங்கிருந்து கூட்டிட்டு போறேன்.. இது நான் எங்க அம்மா மேல பண்ணுற சத்தியம் அப்படின்னு நீங்க எடுத்துக்கோங்க.. ” என்றான்..
“ அதாவது தம்பி வயசு பொண்ணு வீட்ல இருக்குன்னு தெரிஞ்சாலே எல்லாரும் பொண்ணு பார்க்க வருவாங்க அப்படி வர்றவங்க எல்லாம் கண்டிஷன் கேட்டு எங்களை மன நோக பண்ணி தான் எங்க பொண்ணு இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகி இருக்கா..
அதனால் ஊருக்குள்ள எங்க குடும்பத்தை ரொம்ப தவறாக பார்பாங்க..
என் மனைவி இப்படி ஒரு கண்டிஷன் ஏன் போட்டாள் என்று யாருக்குமே தெரியாது..
வர்ற மாப்பிள்ளை எல்லாம் பொண்ணு பாத்துட்டு கண்டிஷனுக்கு ஒத்துக்கொள்ள முடியாது அப்படின்னு தட்டி கழிச்சிட்டு போகவும் ஊருக்குள்ள அவள ரொம்ப ராசி கெட்டவ அப்படின்னு தப்பா பேசவும் மனம் நொந்து தான் என் பொண்ணு இப்படி ஆயிட்டா.. என் பொண்ண பாத்துக்கறதுக்கு ஒரு ஆள் வைத்திருந்தோம் அவங்களும் திடீர்னு உடம்பு சரி இல்லாம லீவுல போனதால யாருமே அவளை பார்த்துக்க முன்வரவில்லை.. நாங்க அவ அண்ணனா அப்பாவா இருந்தாலும் எப்படி ஒரு வளர்ந்த பொண்ணு தொட்டு தூக்கி குளிக்க வைத்து நாங்க பத்திரமா பார்த்துக்கொள்ள முடியும்.. அதனால நல்ல உடை உடுத்தாமல் அழுக்கா இருக்கா.. எங்களாலையே அவளுக்கு பக்கத்துல போக முடியல அப்படி இருக்கும்போது நீங்க எப்படி தம்பி அவ இருக்கிற இந்த நிலைமையில் நீங்க பக்கத்துல இப்படி நெருக்கமாக கட்டிப்பிடித்து இருக்கீங்க? ஆனா இத பார்த்து தான் நாங்க நீங்கதான் எங்க பொண்ணுக்கு ஏத்த மாப்பிள்ளையா இருப்பீங்களோன்னு முடிவு பண்ணி இப்ப உங்களோட பேசிகிட்டு இருக்கோம்.. ஏதாவது ஒரு பொண்ணு கிடைச்சா எங்க பொண்ண குளிக்க வைத்து நல்லா உடை மாத்தி சுத்தமா வச்சிக்க உதவியா இருக்கும் யாரும் வர மாட்டேங்கிறாங்க.. ” என்றார் கோபால்..
“ அதுக்கு என்ன சார் . ஏன் யாரும் வரனும் நான் என்ன வாய் வார்த்தையால இவ என் பொண்டாட்டின்னு சொன்னேனா? இல்லையே..! இவ இப்பவும் என் பொண்டாட்டி தான். என் பொண்டாட்டிக்கு ஒண்ணுன்னா நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?. நானே அழைச்சிட்டு போய் குளிக்கவைச்சு உடை மாற்றி சுத்தமா கூட்டிட்டு வரேன்..” என்றான் ஈஸ்வர்..
“ எல்லாம் சரி தான் தம்பி நான் கேட்கிற ஒரே ஒரு கேள்விக்கு நீங்க பதில் சொல்லிட்டு தாராளமா கூட்டிட்டு போங்க.. ”
“ இன்னும் என்ன சார் கேளுங்க சீக்கிரம்.. ”
“ நான் முதல் அண்ணன் சரவணன் நீங்க எந்த ஊர்.. ”
“ இவ்வளவு தானா?.. இங்க பக்கம் தான் மதுரை.. ” என்றான்..
“ என்னது மதுரையா?.. ” என்றான் இரண்டாம் அண்ணன் சண்முகம்..
அவனை தொடர்ந்து “ அதாவது மதுரைன்னா எப்படி மதுரை தான் உங்க பூர்வீகமா?.. இல்ல மதுரையில் குடிபெயர்ந்து இருக்கீங்களா?.. இல்ல வேலை பாக்குறீங்களா?.. இல்லை மதுரைக்கு பக்கத்து ஊர் அப்படி எதுவுமா?.. ” என்றான் சரவணன்..
“ ஏன் சார் இவ்வளவு கேள்வி மதுரை தான் எங்க பூர்வீகம்.. எங்க பூட்டன் காலத்தில் இருந்து எங்களுக்கு அந்த ஊர் தான்.. மதுரை வந்து நாராயணன் வீடு எதுன்னு கேட்டால் தெரியாதவங்களே இருக்க மாட்டாங்க..” என்றான்..
“ அப்போ உங்க பூர்விகம் மதுரை என்றால் உங்களுக்கு பல சொந்த பந்தங்கள் இருக்கும் அப்படித்தானே தம்பி..” என்றார் கோபால்
“ ஆமாங்க.. ” என்றான்..
அவள் ஒருத்திக்காக இவ்வளவு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான்.. சீனிவாசனே இது நம்ம ஈஸ்வரா என்று வாயில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..
ஏனென்றால் அவனது இயல்புக்கு மாறாக இது அனைத்தும் நடந்து கொண்டிருந்தது..
“ உங்க கேள்வி எல்லாம் முடிஞ்சுது அப்படின்னா நான் இவளை அழைத்துக்கொண்டு போய் சுத்தப்படுத்தி கூட்டிட்டு வரலாமா?.. இப்படி இருக்கிறதால எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.. ஆனால் நல்ல காரியம் பேசும் போது சுத்தமா இருந்தால் தானே நல்லது..” என்றான்..
“ சந்தோசம் தம்பி தாராளமா உங்க மனைவியை அழைச்சிட்டு போய் குளிக்க வைத்து அழைத்து வாங்க. அந்த கபோர்டுல அவளுக்கு தேவையான உடை எல்லாம் இருக்கு.. ” என்று கூறி கோபால் வழி விடவும் அவனும் அவளை அழைத்துக் கொண்டு போய் சற்று நேரத்தில் குளிக்க வைத்து அழைத்து வந்தான்..
தலைக்கு பூ வைத்து, பொட்டு வைத்து, அவனுக்கு தெரிந்த அளவில் அவளை அலங்காரம் பண்ணி. அதே இடத்தில் அமர வைத்தான்.. அவள் குளித்து வருவதற்கு இடையில் சண்முகமும் சரவணனும் சேர்ந்து அவளது அறையை சுத்தப்படுத்திக் கட்டில் விரிப்பு மாற்றி நேர்த்தியாக வைத்திருந்தார்கள்..
அதன் பின் அவர்கள் கண்டிஷன் என்னவென்று கேட்டு தெரிந்து கொண்டு தன் தாயிடம் கூறி இதற்கு முடிவோடு மீண்டும் வருவதாக கூறி அவளை மீண்டும் ஒருமுறை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு விட்டு
“ நான் சொல்றேன் கேட்டுக்கோங்க.. நானும் நைட்டு இவளை அப்படி பார்த்ததும் ஒரு வேளை நீங்கள் அடிச்சு கொடுமைப்படுத்தி இருப்பிங்கலோன்னு உங்களை தப்பா நினைச்சுட்டேன், அதுக்கு நீங்க என்ன மன்னிச்சிடுங்க. இனிமே இப்படியே இவளை பார்த்துக்கோங்க.. அவ கண்ணுல கண்ணீர் வரக்கூடாது. எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை வீட்டில் தங்கி இருக்க சம்மதிக்கிற நர்ஸ் வைத்து பார்த்துக்கோங்க. கூடிய சீக்கிரம் கண்டிசனுக்கு எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு நான் திரும்ப வருவேன்.. இது என்னோட கார்ட் இதுல என் நம்பர் இருக்கு. நானே நர்ஸ் ஏற்பாடு பண்ணி தரேன்.. நிலா பொண்ணு என்னைக்குமே நல்லா இருக்கணும்..” என்று பேசிவிட்டு அவளை விட்டு பிரிய மனமே இல்லாமல் போக வேண்டிய கட்டாயத்தினால் பிரிந்து வந்தான் ஈஸ்வர்..
அங்கிருந்து வீட்டுக்கு வந்து குளித்து உடைமாற்றி நண்பனின் திருமணத்திற்கு சென்றான்..
முகூர்த்தம் நெருங்கிவிட்டது ஈஸ்வர் மற்றும் சீனி இருவரும் வந்து குமாருக்கு பக்கத்தில் நின்று கொண்டார்கள்..
நிறைவாக குமாரின் திருமணத்தை முடித்து வைத்துவிட்டு குமார் விருப்பப்படி அவனுடன் இருந்து சாப்பிட்டுவிட்டு ஊருக்கு கிளம்பி விட்டான் ஈஸ்வர்..
இங்கே நடந்துவற்றை பார்த்து சீனிவாசன் தான் நம்ப முடியாமல் திகைத்துப் போயிருந்தான் என்று கூறுவது தான் மெய்..
அனைத்திலும் அவன் பார்வையாளராக தான் இருந்தான்..
மீண்டும் அந்தக் கார் பயணம் இளையராஜாவின் இசையில் மிதந்து மதுரையை நோக்கிச் சென்றது..
பாடல் கேட்டு ரசித்தாலும் போகும் இடமெல்லாம் இதற்கு தீர்வு என்னவென்று அவன் சிந்தையில் ஓடிக் கொண்டிருந்தது..
ஒரு வழியாக இதை அனைத்தையும் தாயிடம் சொன்னால் தாய் இதற்கு நல்ல தீர்வு சொல்வார் என்று நம்பிக்கையில் பயணத்தை தொடர்ந்தான்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
+1