Loading

    

அத்தியாயம் 1

செங்காடு கிராமம் ஈரோடு மாவட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ளது பெயர் தான் செங்காடு ஆனால் கிராமமோ அவ்வளவு அழகாக இருக்கும் சுற்றிலும்
தென்னை மரங்களும் மஞ்சள், கரும்பு, வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை கொடி கால்கள் என நிறையவே இருக்கும்….

ராஜப்பன் சாரதா தம்பதிகளுக்கு இரு மகன்கள் ஒரு பெண்..முதல் மகன்

சண்முகம் சிவகாமி  இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் மூத்தவள் வான்மதி-கணேசன் இரு புதல்வர்கள்
அபிலாஷ் , அகிலேஷ் 1 வருட இடைவெளியில் பிறந்த குழந்தைகள் ஒன்று நான்காம் வகுப்பு இன்னொன்று ஐந்தாம் வகுப்பு

இரண்டாவது நம் கதையின் ஹீரோ சூரிய தேவன்  29 விவசாயத்தில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு கிராமத்தை முன்னேற்றுவதில் ஈடுபாடு கொண்டவன்..

ராஜப்பன் சாரதாவின் இரண்டாவது மகன் கோபால் -சாந்தா  ஒரே மகன்
சந்திரதேவன் 29  பக்கத்து டவுனில் கல்லுரியில் தமிழ் விரிவரையாளர்..

கடைக்குட்டி இந்த வீட்டின் செல்ல மகள் சண்முகம் கோபலின் ஒரே தங்கை மல்லிகா சுந்தர் … இப்பொழுது சந்திர தேவன் பணிபுரியும் கல்லூரி இருக்கும் ஊரில் தான் கணவனோடு வசித்து வருகிறாள் .. குழந்தைகள் இல்லை..

சுந்தர்  மனைவி பேச்சை தட்டாமல் கேட்கும் கணவன்  இங்க எல்லாரும் அப்படித்தானுங்கோ

ராஜப்பனுக்கு இயற்கை மீது ஆளாதி பிரியும் அதனால இயற்கை கடவுள்களின் பெயரை தன் பேரன்களுக்கு வைத்து விட்டார்..

சூரிய தேவன் எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் கொஞ்சம் அதிகமாகவே கோபம் வரும்
இதில் ராஜப்பனுக்கு க்கு பெருமைதான்
பேரன் தன்னை போலவே இருக்கிறான் என்று…

கூட்டு குடும்பம் தான்  சிவகாமி மட்டும் மூத்த மருமகள் என்கிற உரிமையை அதிகம் காட்டுபவர் அதிகமாகவே அந்த வீட்டில் அதிகாரம் காட்டுபவர்..
சாந்தா உண்மையிலேயே சாந்தமான பெண்.. அனைவரிடமும் பாகுபாடில்லாமல் பழகும் ஒரே ஜீவன்

சிவகாமி மட்டும் கொஞ்சம் வெளியே வட்டிக்கு பணம் கொடுத்து கொண்டு வருகிறார் பெரிய வீட்டு பெண்ணல்லவா இவரிடம் வந்தால் பணம் இருக்கும் என்றும் வாங்குபவர்களும் அதிகம் அதிகமாகவே வாய் பேசக்கூடியவர்..

இதில் சாரதா மட்டும் இறைவனடி போய் சேர்ந்து விட்டார் ராஜப்பான் 70 களில் இருந்தாலும் கம்பிரமாக இருப்பார் குடும்பப் பொறுப்புகளில் எதுவும் தலையிட மாட்டார்.. ஆலோசனை கேட்டால் மட்டுமே அனுபவித்தின் மூலம் சொல்லுவார்..

சண்முகமும் கோபலும் தனித்தனியாக மில் வைத்து உள்ளனர் பெரியவர் தேங்காய் நார் உரிக்கும் மில்லும் சின்னவர் ரைஸ் மில்லும் உள்ளது இருவரும் மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை குடும்பத்திற்காக கொடுத்தனர் மீதி அவரவர் பெயரில் அக்கவுண்டில் போட்டுக் கொள்வார்  சிறியவர்களும் அப்படியே…

வான்மதி மட்டும் அம்மா வீட்டிலேயே இருக்கிறாள் கணவன் அவ்வளவுக்காக வேலைக்கு எதுவும் சொல்வதில்லை…. வேலைக்கு போவது போல பில்டப் மட்டுமே கொடுத்துக்கொண்டு மாமியார் வீட்டில் இருக்கும்  ஆள்..

அப்பாடா ஹீரோ பேமிலி அறிமுகம் முடிஞ்சது ஹீரோயினை பற்றி போறப்போக்கில் தெரிந்து கொள்ளலாம்..

ஹீரோயின் பேமிலி
நல்லசாமி சகுந்தலா மகள் தான் தங்கநிலா இறுதியாண்டு பிகாம் மாணவி ..

இரண்டாவது துருவன் 10 வகுப்பு

நல்லசாமி குடும்பத்தில் மூத்தவர் இரண்டாவது சிவகாமி   சூரிய தேவனின் தாயே தான் அடுத்து லோகநாதன் கஸ்தூரி  இவர்களுக்கு மதிஸ்ரீ ஒரே மகள் நம் கதாநாயகி விட இரண்டு வயது குறைவு அழகோ அவளை விட சற்று அதிகம் தான்…

இங்கு பிரச்னை என்னவென்றால் நல்லசாமி குடும்பத்திற்கும் சிவகாமி வீட்டிற்கும் பேச்சு வார்த்தை கிடையாது ஆனால் லோகநாதன் வீட்டில் சிவகாமி நன்றாகவே பழகுவார்… இரு வீட்டினர்க்கும்  1/2 மணி நேர பயணம் மட்

நடப்பு

சுற்றமும் நட்புகளும் சூழ ஒரு பக்கம் சூரியதேவன் குடும்பமும் மறுபக்கம் லோகநாதன் குடும்பமும் அமர்ந்து இருந்தனர் நல்லசாமி குடும்பம் மட்டும் மிஸ்ஸிங்…

ஏம்மா மதி ஸ்ரீ உனக்கு உனக்கு எங்க சூரியனை கட்டிக்க சம்மதமா

ம்ம் தலை மட்டும் ஆடியது
ஏம்பா சூர்யா உனக்கும் அந்த பிள்ளை மதி ய கட்டிக்க சம்மதம் தானே

சம்மதம்  கணிறென்று  குரல் வந்தது அப்புறம் என்னப்பா தட்ட மாத்திக்கலாம் தானே

ஒரு வழியாக நிச்சயம் நன்றாக முடிந்தேறியது..

இந்த மாதம் கோவில் திருவிழா உள்ளது அது முடிந்து அடுத்த மாதம் மாசி 10ஆம் தேதி திருமணம் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது..

சொந்த பந்தங்கள் அனைத்தும் போன பிறகு சிவகாமி குடும்பம் மற்றும் லோகநாதன் குடும்பம் மட்டுமே இருந்தது..

அக்கா நானு  அண்ணனை கலியாணத்துக்கு கூப்பிடலாம்னு இருக்கேன் அக்கா

இல்ல தம்பி அதெல்லாம் சரி வராது நடந்த எதையும் நான் மறக்கல அவனை நான் கூப்பிட மாட்டேன்..

ஐயோ அக்கா புரிந்துகொள் அக்கா நம்ம தேவனுக்கு அண்ணனும் ஒரு தாய் மாமன் தான் இப்ப நீ போய் அவங்கள கூப்பிட்டேனா ஊரு உன்ன தாக்கத் பெருமையா பேசும்..

பெருமை பேசும் என்றதும் சிவகாமியின் மூளை கொஞ்சம் சிந்தனைக்கு போனது..

அக்கா நீ ஒன்னும் நிரந்தரமா உறவுக்காக கூப்பிட வேண்டாம் கல்யாணத்துக்கு மட்டும் வந்துட்டு போகட்டும் அப்புறம் எப்பவும் போலவே அவங்க இருக்கட்டும்…

சரி சரி கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருக்க அப்பவே போய் பத்திரிக்கை வைக்கலாம்  நீயும் வா

அக்கா அது வந்து இழுத்தார்….,

இன்னும் என்னடா

இல்லக்கா அடுத்த வாரம் திருவிழா வருது நாம இப்போ போய் சொல்லிட்டு வந்தோம்னா திருவிழாவுக்கு வந்துட்டு இங்கே அவங்க வீட்டிலேயே தங்கியிருந்து கல்யாணத்தை முடிச்சு குடுத்துட்டு போயிடட்டும்

அதெல்லாம் வேண்டாம் வேணும்னா உங்க வீட்டு வேலைக்கு மட்டும் வச்சிக்கோ இங்க அவங்க கலியாணத்துக்கு மட்டும் வந்தா போதும்

ஒரு வழியாக  நல்லசாமி குடும்பத்தை அழைப்பது என முடிவெடுக்க ஒரு ஜீவன் மட்டும் சந்தோஷத்தில் பறந்து கொண்டிருந்தது… வேறு யார் சந்திரதேவன் தான் மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டான் பெயர் கூட பொருந்துகிறதே சந்திரனின் நிலா சொல்லி சிரித்து கொண்டான்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்