Loading

அத்தியாயம் -12

முதலில் சிறியவர்களிற்கு கோச்சாக இருந்தவன் படி படியாக முன்னேறினான். அவன் ஆசைப்பட்டு விளையாட முடியாத நேஷனல்ஸ் போட்டியில் அவன் ட்ரெயின் செய்த அனைவரையும் ஜெய்க்க வைத்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டு உலகில் அவன் பெயர் பிரபலம் ஆனது.
அவன் தான் வேண்டும் என நிறைய விளையாட்டு வீரர்கள் அவனை தேடி வந்தனர். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் போல் கை நிறைய சம்பாரிக்க ஆரம்பித்தான் கார்த்தி.

இப்பொழுது சொந்தனமாக சென்னையில் ஒரு லக்சூரி பிளாட் வாங்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறான்.

கடவுள் கொடுக்க நினைத்தால் கூரையை பிய்த்து கொண்டு கூட கொடுப்பாராம்..!

அந்த வாக்கியம் கார்த்திக்கு உண்மையாகி போனது.

அவனின் அப்பா நடேசன், ரிடையர்ட்டாக இன்னும் ஏழு எட்டு வருடங்கள் இருப்பதால் அவனின் பெற்றோர் அங்கு ஊரில் தான் இருக்கின்றனர்..! அவருக்கு பணி ஓய்வு கிட்டியவுடன் அவர்களுடன் ஒன்றாக சென்னையில் செட்டில் ஆகி விடுவது தான் அவனின் பிளான்..!

என்ன தான் நிறைய மாணவர்கள் அவனின் அகாடமியின் மூலம் சாதித்து கொண்டிருந்தாலும் எத்தனையோ குழந்தைகள் வெறும் திறமையை மட்டும் வைத்து கொண்டு சரியான வழிகாட்டுதல் இல்லாமல், பண உதவி இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களை தேடி கண்டு பிடித்து ஒரு ரூபாய் கூட அவர்களுக்கு செலவு இல்லாமல் விளையாட்டு துறையில் அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுப்பான்..!

சில சமயங்களில் ஸ்பான்சர்ஸ் கிடைக்கும். பல சமயங்களில் அவனின் சொந்த செலவுலேயே தான் இவை அனைத்தையும் செய்வான்.

ஒரு காலத்தில் அவனுமே வெறும் திறமையை மட்டும் வைத்து அல்லோலப்பட்டவன் தானே..!

இதோ இப்பொழுது கூட அப்படி ஒரு காரியத்திற்காக இந்த ஊருக்கு வந்தவன் தான். அங்கு வருணை பார்த்து விட்டு அவனோடு ஊடல் செய்து கொண்டிருக்கிறான்.

” நீ.. துரோகி டா உன் மூஞ்சிய பாக்கவே எனக்கு புடிக்கல..!” என வருணிடன் கத்தி விட்டு அவனின் ரூமிற்கு சென்று விட்டான் கார்த்தி.

கண்மணி தான் பாவம் இருவரின் ஊடலுக்கும் காரணம் தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள்.

இருந்தாலும் கார்த்தியின் சொல்லம்பை அவளால் ஏற்று கொள்ளவே முடியவில்லை..!

” உங்களுக்கு கோவமே வராதா பாஸ்? அந்த நெட்டயனும் உங்கள சும்மா சும்மா நொட்டு சொல்லிட்டே இருக்கான். நீங்க என்னடானா அவுச்சு வெச்ச இட்லி மாறி அப்படியே இருக்கீங்க? “

அவளின் உவமையில் சிரித்தவன்,

” சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி, கண்மணி “

“ங்கே..? “

” திருக்குறள் சொன்னேன்,
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். குறள் -306

இதுக்கு போய் என மீனிங்னு படிச்சி தெரிஞ்சிக்கோ “

வருணை கொலைவெறியோடு நோக்கினாள் கண்மணி.

” நா கேட்டத்துக்கு இது பதில்
இல்லயே?”

“இதுவும் ஒரு பதில் தான்..! சொல்ல போனா “

கை உயர்த்தி அவனை தடுத்தவள்.

” இல்ல நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் நானே சொல்லறேன்..!

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

எங்களுக்கும் குறள் தெரியுமாக்கும்..! அவன் என்ன தான் மூஞ்சில முழிக்காத முழிக்காதனு சொன்னாலும் திரும்பவும் அவன் தான் வம்படியா உங்க கிட்ட வந்து பேசிட்டு இருக்கான் அது தானே இந்த குறளோட அர்த்தம்?
விட்டா என்ன ஒண்ணுமே தெரியாத மக் உருண்டனு மார்க் பண்ணிருவீங்க போல? ஆல் டீடைல்ஸ் ஐ ஆல்சோ க்நோவ்..! இதுக்கு மேல இங்க இருந்தா மறுக்கா நீங்க குறள் சொல்ல ஆரம்பிச்சிருவீங்க குட் நைட் பை..! ” என்றவள் விட்டாள் போதுமென அவ்விடம் விட்டு ஓடி விட்டாள்.

தூங்கும் அஷ்வினியையே பார்த்து கொண்டிருந்தான் மாதவன். உடம்பு சரி இல்லாமல் போனது எனவோ அவளிற்கு தான். ஆனால் ஒன்றும் இல்லை என சமாதானம் கூறி அவனை சமன்ப்படுத்தும் பொறுப்பும் அஷ்வினிக்கே வந்தது. இருந்தாலும் அவள் தூங்கும் வரை உடன் இருப்பேன் என சண்டையிட்டு சட்டமாக அங்கேயே அமர்ந்திருந்தான் மாதவன்.

மாத்திரை போட்டத்தன் விளைவு,சிறிது நேரத்திலேயே கண்கள் சொக்க தூங்கி விட்டாள் அஷ்வினி. அவளை விட்டு பிரிந்து வரவே அவனிற்கு மனம் இல்லை தான், ஆனால் அவன் அவளுடனே இருக்க முடியாதே! வந்து தானே ஆக வேண்டும்.

அவன் அறைக்கு வந்தவன் எண்ணம் முழுக்க அவளே ஆக்கிரமித்து இருந்தாள்..!

அன்று தியேட்டரில் அவள் பேச்சில் கவரப்பட்டவனிற்கு அவளை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது.

ஆதலால் அவளை பற்றி விசாரித்து தினமும் அவள் போகும் இடம் எல்லாம் சம்பளம் இல்லா நிழல் போல் அவளேயே பின் தொடர்ந்தான்.

அன்று காலேஜ் ஃபங்ஷனிற்காக சேலையில் வந்தவளின் அழகில் தன்னை மொத்தமாக தொலைத்திருந்தான் மாதவன்.

அஷ்வினியின் அழகை பார்த்து ஒன்றும் அவள் மேல் அவன் காதல் கொள்ளவில்லை..!
அவளின் மதியூகமும், வேறுப்பட்ட சிந்தனையாலேயே அவள் பால் வசீகரிக்கப்பட்டான்.

நமக்கு பிடித்தமானவர்கள், நம் கண்களுக்கு எப்பொழுதும் அழகு தானே!

அவளின் பேச்சு, செயல், மற்றவர் மீது காட்டும் அக்கறை, பரிவு, கணியம் என அனைத்தயும் காதல் செய்தான்.

சில நேரங்களில் அவளை போலவே சிந்திக்கவும் தொடங்கி இருந்தான் , அவளின் நல் ஒழுக்கங்கள் யாவும் அவனும் பின்பற்ற ஆரம்பித்திருந்தான்.

இத்தனை மாற்றங்களை அவனுள் செய்தவளிற்கோ இப்படி ஒருவன் இருக்கிறான் என்பதே தெரியாமல் போனது தான் வேடிக்கை..!

அவள் மேல் காதல் இருக்கிறது எனவோ உண்மை தான். ஆனால் அதை விட அவள் மேல் மரியாதை மிகவும் அதிகமாக இருந்தது, அதுவே அவன் காதலுக்கு எதிரியாக போனது. அவளிடம் போய் என்ன பேசுவது, ஏது பேசுவது என மிகவும் தயங்கினான்.

திடுதிப்பென அவள் முன் போய் நின்று, உன்ன காதலிக்கிறேன் என சொன்னால் தன்னை பற்றி என நினைப்பாள்? நிச்சயம் கேவலமாக தான் நினைப்பாள் என மனசாட்சி எடுத்து கூற,வழக்கம் போல் அன்றும் அவளிடம் பேசாமலேயே ஹாஸ்ட்டல் திரும்பி விட்டான்.

“என்ன மச்சான் இன்னிக்கும் வெறும் லுக்கிங் மட்டும் தானா? “

” இன்னொரு நாள் பேசிக்கலாம் மச்சான் “

” எப்போ அவ காலேஜ் முடிச்சி ஊர காலி பண்ணி போனதுக்கு அப்றமா “

“அப்படி இல்ல”

” அப்றம் என்ன வெண்ண..? தைரியமா போய் அவ கிட்ட பேசு மச்சான் “

“இல்லடா அவ கிட்ட போனாலே ஒரு மாறி படபடனு வருது, அவள பாத்துட்டு மட்டும் இருந்தாலே போதும்னு தோணுது டா. அவ தூரமா இருந்தாலும், என் பக்கத்துல்ல இருந்து அவ வழி நடத்துற மாறியே இருக்கும்..! என்னோட சிந்தனை செயல் எல்லாத்துலையும் அவ மட்டும் தான் இருக்கா..! பேசி, பழகி, ஜோடியா கைக்கோர்த்து போறது தான் காதலா? உங்களுக்கு எல்லாம் தான் அவ கூட நா பேசாத மாறி தெரியுது, ஆனா என் மனசுக்குள்ள அவ கூட எவளோ பேசிருப்பேனு எனக்கு மட்டும் தான் தெரியும்..!
அவளுக்குனு தனியா ஒரு கோட்ட கட்டி வெச்சி இருக்கேன் டா. அதுலாம் ஒரு ஃபீல்..!உங்களுக்கு சொன்னா புரியாது “

” நா சொல்லல ஒரு நாள் இவன் பொண்ணுக்காக ரோட் ரோடா அலைய போறானு? அந்த நாள் நெருங்கிருச்சி போல, ரைட்ரா மச்சி உன் வாயி உன் உருட்டு. நீ நடத்து, நாங்க போய் எங்க பொழப்ப பாக்கறோம் “

தன்னை கேலி செய்கிறார்கள் என தெரிந்தும் தன்நிலை விளக்கம் ஏதும் கொடுக்காமல் தன்போக்கில் சிரித்து கொண்டான் மாதவன்.

ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் அவன்..!
அவனை ஆட்டுவிக்கும்
நிலவொளியாய் அவள்…!

காலை எழுந்தவுடன் மாதவை தான் முதலில் தேடினாள் கண்மணி. நேற்று இரவு வெகு நேரம் கழித்தே அவன் உறங்கி இருக்க, மாதவனால் கண்களை திறக்க கூட முடியவில்லை.

“அய்யோ அவசரம் புரியாம இப்படி அனகோன்டா மாறி தூங்கறானே!! டேய் எந்திரிடா சாணி “

ம்ஹ்ம்.. அவளின் கதறலுக்கு அவன் செவி சாய்ப்பதாய் இல்லை,

“இனி பேச்சு எல்லாம் இல்ல ஒரே வீச்சு தான் ” என்றவள் அவனை ஒரே உருட்டாக கட்டிலில் இருந்து கீழே உருட்டிவிட்டாள்.

“ஆஆ.. ம்மாஆஆ..” என்றவன் அலறி கொண்டே கீழே இருந்து எழ,

” என்ன டா பசு மாடு மாறி முக்கற? ” என்றாள் அடக்கப்பட்ட சிரிப்போடு.

அவளை முறைத்தவன், ” என்ன விஷயம் சொல்லு ” என்றான்.

” விஷயம் இருந்தா தான் உன்ன பாக்க வரனுமாண்ணா? என்ன ண்ணா இப்படி பாக்குறீயேண்ணா நா உன் செல்லம் தானே ண்ணா ஏன் ண்ணா என்ன நம்ப மாட்டியா ண்ணா? “

” நீ இத்தன ண்ணா போடும் போதே தெரிஞ்சிருச்சு ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டேனு..! சொல்லு என்ன வேணும்? “

” ஐடியா வேணும் “

“எதுக்கு “

“கரெக்ட் பண்ணுறதுக்கு “

“யார?”

“என் ஆள!”

“யாரு “

“சொல்ல மாட்டேன் “

“ஏன் “

“தெரிஞ்சா நீ காரி துப்புவ”

“தூஊ.. இப்போவே துப்பிட்டேன் சொல்லு!”

“நம்ம பாஸ் தான் “

“ஏதேஏஏ..!”

” பரவால மறுக்கா துப்புவியோனு பயந்துட்டேன் “

“அடிங்க..!!”

“ஓடாத கண்மணி நில்லு..!”

“நீ அடிக்க மாட்டேனு சொல்லு அப்போ தான் நிப்பபேன்..”

“சரிஈஈ அடிக்க மாட்டேன் நில்லு “

” இது நல்ல பையனுக்கு அழகு. ஏன்டா நீ மட்டும் பஞ்சுமிட்டாய் பஞ்சுமிட்டாய்னு அஷ்வினிக்கு ரூட்டு விடுவியாமா ஆனா அதே நா லவ் பண்ணா தப்பா? இது என்னடா நியாயம்? சரியான ஆணாதிக்க சமூகமடி மணி இது “

” ஆணாதிக்கமும் இல்ல ஆண்டிப்பட்டியும் இல்ல, சும்மா ஷாக் ஆக்கிட்டேன் “

“ஏன் எங்களுக்கு எல்லாம் லவ் வராதா? இல்ல நாங்க எல்லாம் லவ் பண்ணவே கூடாதா? இந்த சுதந்தர நாடுல பொண்ணுங்க ஃபீரியா லவ் பண்ணுறதுக்கு கூட தடையா? ஓஹ் மை காட் கருப்பு சாமிஈ..! சரியான ஆணாதிக்க சமூகடி மணி இது “

அவளை வெறியாய் முறைத்தவன்,

“அப்படி இல்லடி லூசே, சரியான ஆள சூஸ் பண்ணி இருக்கியானு பாக்கனும்ல”

” ஏன் நம்ம பாஸ் பத்தி உனக்கு தெரியாதா? “

” தெரியும்.. ஆனா “

” ஆனா? “

“ம்ம்ச் ஒன்னும் இல்ல விடு. உனக்கு அவர புடிச்சி இருக்கு, ஆனா அவருக்கு உன்ன புடிக்கனுமே?”

“ஏன்டா கோளாறு மண்ட..! அதுக்கு தானடா ஐடியா கேட்டு வந்தேன். விடிய விடிய சினிமா பாத்து, ப்ரொட்டியூசர் அப்பா தான் ஹீரோவானு கேட்ட கதையால இருக்கு..!”

“ஏதே!!”

“ஹீஹீ.. ஜும்மா சோக்கு “

“ம்ம்க்கும் எனக்கு தெரிஞ்சி பாஸ் அவ்ளோ சீக்கரம் மசியற ஆள் கிடையாது “

“அதான் எனக்கே தெரியுமே..! அவரோட பேச்சு நடவடிக்கை எல்லாம் பாத்தா முனிவரா போயிருவாரோனு பயமா இருக்கு டா.. நேத்து கேள்வி கேக்கறேன், திருக்குறள் சொல்லி அட்வைஸ் பண்ணாருடா! நா அப்படியே ஆடி போய் ஆவணிக்கே போய்ட்டேன் தெரியுமா? இப்படி கருத்தூசி போட்டே வள்ளுவர் மாறி போதி மரத்துக்கு அடியில தியானம் பண்ண போயிருவாரோனு பயமா இருக்கு டா..!”

” வள்ளுவருக்கு வாசுகினு ஒரு சம்சாரம் இருக்காங்க.. அவரே குடும்பஸ்தனா இருக்கும்போது நம்ம பாஸ் இருக்க மாட்டாரா?”

” ஹை.. ஆமால? இப்போ தான் டா என் வயித்துல பால்கோவாவ வார்த்த மாறி இருக்கு! சரி ஐடியா சொல்லுடா மொதல்ல “

” எனக்கு மட்டும் என்னடி தெரியும்? இப்போ புதுசா ஒரு தொல்ல வந்து சேந்து இருக்கே அதுவ வேணா அடிச்சி பத்த விட்டுட்டு பாஸ் கிட்ட நல்ல பேர் எடுக்க பாரு!”

” ஆமாடா அந்த காண்டா மிருகம் கார்த்தி ரொம்ப தான் பண்ணுறான். இருக்கு இன்னிக்கு அவனுக்கு கச்சேரி, இனிமே தெரியும் இந்த கண்மணியோட பவரு என்னனு..!”

அவனை என்ன செய்யலாம் என்ன யோசித்தவாரு அப்படியே வீதியில் உலா போய் கொண்டிருந்தாள் கண்மணி.

அப்பொழுது தான் ஒரு வீட்டின் முன்பு இருந்த தொண்டு பட்டியில் கட்டி வைத்திருந்த பசு மாடுகளை பார்த்தாள்.

மூளையில் சட்டென மின்னலடிக்க நமட்டு சிரிப்போடு அவ்விடத்தை கடந்தாள் கண்மணி.

” ஹெலோஓஓ கார்த்திஈஈ சார்..! ” என்றவள் வாயெல்லாம் பல்லாக அவன் முன்பு போய் நிற்க, அவளை சந்தேகமாய் பார்த்தான் கார்த்தி.

” என்ன சார் அப்படி பாக்கறீங்க? என்ன இருந்தாலும் நீங்க எங்க கெஸ்ட்டு உங்களுக்கு மரியாதை கொடுத்து நல்லபடியா உபசரிக்கறது தானே எங்க கடமை. அது தானே தமிழர் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம்..! பாரதியார் என்ன சொல்லி இருக்காரு, ஓடி விளையாடு பாப்பா வீட்டுக்கு வந்தவங்கள பாத்துக்கோ பேஷா..! சொன்னாரா இல்லயா “

அவளை மேலும் கீழுமாக பார்த்து வைத்தவன்,

“அது சரி ” என்றான் யோசனையாய்.

” சார் ஆக்சுவலி ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் வந்தேன் “

‘என்ன ‘ என்பது போல் அவன் ஒரு புருவத்தை உயர்த்தி கேட்க,

” நீங்க இங்க திறமையான பாஸ்கெட் பால் பிளேயர்ஸ்ஸ உங்க அகாடமில சேத்திக்க தானே வந்தீங்க? எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான் ரொம்ப டேலேன்ட், ஆனா பாவம் அவங்க வீட்டுல படிப்பு தான் முக்கியம்னு சொல்லி விளையாடவே விட மாட்டேங்கறாங்க.. உங்கள மாறி பெரிய ஆளுங்க வந்து சொன்னா தான் அவங்க பையனோட திறமை என்னனு அவங்களுக்கே புரியும்…! அவங்கள வந்து மீட் பண்ணுறீங்களா சார்? “

கண்மணி சொன்னதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என யோசித்தான். இருப்பினும் ஒருவேளை உண்மையாக இருந்தால் அந்த வாய்ப்பை தவற விட கூடாது என எண்ணியவன்.

“ம்ம்.. ஓகே எங்க இருக்கு அவங்க வீடு?”

‘வாடா எ.. வாழக்கா பஜ்ஜி..! என்னய எத்தன டார்ச்சர் பண்ணிருப்ப? இனிக்கு உன்ன வெச்சி செய்யறேன் பாரு ‘ மனதினுள் சபதமிட்டவள், முகத்தில் எதையும் காட்டி கொள்ளாது வழி காட்டி அவனோடு நடந்தாள்.

“நில்லுங்க நில்லுங்க இந்த வீடு தான். இருங்க நீங்க பாட்டுக்கு என்னமோ, உங்க மாமியார் வீட்டுக்குள்ள போற மாறி உரிமையா போக பாக்கறீங்க? கொஞ்சம் வைட் கரோ..! அந்த பையனோட அப்பா ரொம்ப ரக்கட்டான ஆளு! நாம பாட்டுக்கு உள்ள போய் திடீர்னு எதாச்சி கத்திட்டாருனா? அவர் இப்போ வெளிய வர டைம் தான். கொஞ்சம் நேரம் வெளியவே வைட் பண்ணுவோம் “

அவன் அவளை வினோதமாய் பாத்து வைக்க, “இந்த பக்கம் நவுந்து வாங்க பரபரப்பேனு நடு வாசல்லயா நிக்கறது?”

ஏற்கனவே அவள் திட்டமிட்டது போல் அவனை கோழிகளை அடைத்து வைத்திருக்கும் கூடை அருகே நிற்க வைத்தவள். அவன் பார்க்கா வண்ணம் அதை கால்களால் மெல்ல எட்டி உதைத்து தட்டி விட்டாள். கோழியும் அதன் குஞ்சுகளும் வெளியே ஓட,

“அய்யயோ என்ன சார் நீங்க பாத்து நிக்க மாட்டீங்களா? பாருங்க கோழி எல்லாம் ஓடுது..! என்ன பிதுக்கா பிதுக்கானு முழிக்கறீங்க போங்க போங்க போய் கோழிய புடிங்க.. வீட்டாளுங்களுக்கு இது தெரிஞ்சிது உங்கள தோரணம் கட்டி தொங்க விட்டுருவாங்க.. சீக்கிரம் சீக்கிரம் ” என அவனை விரட்ட ஒன்றும் புரியாமல் அவனும் கோழிகள் பின்னே ஓடினான்.

அவன் அந்த பக்கம் போனதும் இந்த பக்கம் கட்டியிருந்த கண்ணு குட்டியை கட்டவிழ்த்து விட்டாள் கண்மணி.

அவள் திட்டம் படி, கார்த்தி கோழியை பிடித்து கொண்டிருக்கும் பொழுது வீட்டு கதவை தட்டி ஆளுங்களை அழைத்து கோழியையும் கண்ணு குட்டியையும் திருட வந்த திருடன் என கார்த்திக்கு பெயர் கட்டி விடலாம் என நினைத்திருந்தாள்.

ஆனால் நடந்தது என்னவோ வேறு. சரியாக அவள் கண்ணு குட்டியை கட்டவிழ்த்து விடும் நேரம் ஒரு பெரியவர் அவளை பார்த்து விட்டார்.

” ஏய்.. இந்தாம்மா என்னம்மா
பண்ணுற ” என அவர் அதட்டலாக கேட்க
அவரை பார்த்த அதிர்ச்சியில் பேச்சு வராமல் உறைந்து போய் நின்றிருந்தாள் கண்மணி..!

வந்தவர் வெடுக்கென அவள் கையில் இருந்த கயிற்றை பிடுங்கி மறுபடியும் முளை குச்சியில் (முளை குச்சி எனப்படுவது ஒரு சிறிய மரகுச்சியை கூராக செதுக்கி வைத்து இருப்பார்கள் {கிரிக்கெட் ஸ்டும்ப் மாதிரி}.அதில் இருந்து ஒரு நீண்ட கயிற்றை மாட்டின் கழுத்தில் கட்டி வயலில் அந்த குச்சியை ஊன்றி விடுவார்கள். மாடு அந்த கயிற்றின் நீளத்துக்கு ஏற்ப வட்ட வடிவில் சுற்றி புற்களை மேய்ந்து விடும்.) கட்டினார்.

கார்த்திக்கு திருடன் என பட்டம் வாங்கி கொடுக்கலாம் என நினைத்த கண்மணிக்கு தான் பட்டம் கிடைத்து விட்டது.

கர்மா இஸ் அ.. பூமராங் கண்மணி..!!

இங்கே அந்த பெரியவர் அவளை தூண்டி துருவி விசாரித்து கொண்டிருக்க, அங்கே கோழிகளை எல்லாம் கூடையில் அடைத்து விட்டான் கார்த்தி. அவனும் விவாசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பதால் மிகவும் சுலபமாக முடித்து விட்டான் இந்த வேலையை.

” இல்லைங்க ஐயா அது வந்து, அந்த கண்ணுக்குட்டி என்ன பாத்ததும் வா வா கூப்பிட மாறி இருந்துச்சா அதான் வந்தேன் “

” என்னம்மா சொல்லுற “

” ஆமா நா சொன்னா நம்பமாட்டீங்க எனக்கு ஒரு அற்புத சக்தி இருக்கு. மிருகங்க பேசுறது எல்லாம் எனக்கு கேக்கும்…! கண்ணுக்குட்டிக்கு ரொம்ப தாகமா இருந்துச்சாம். என்ன பாத்த உடனே ஒரே அழுக..! அதான் சரி தண்ணி தொட்டிக்கு கூட்டிட்டு போய் அதுக்கு தண்ணி காட்டலாம்னு நெனச்சேன். கண்ணு குட்டிய தூக்கிட்டு போய் நா என்ன பண்ண போறேன்? நா இந்த ஊரு கூட இல்லை. இருங்க இருங்க மறுபடி கண்ணு குட்டி ஏதோ சொல்லுது. ” என்றவள் சற்று குனிந்து கண்ணுகுட்டியை நோக்கினாள்,

” என்னது இப்போ மட்டும் இந்த தாத்தா உனக்கு தண்ணி காட்டலைனா அவர் குடும்பத்துக்கே சாபம் விட்டுருவியா?
கடைசி காலத்துல்ல தண்ணி இல்லா காட்டுல தனியா கஷ்டப்படுவாரா? அச்சசோ பாவம் தாத்தா இப்படி எல்லாம் சாபம் விடாத.. என்னது கோமாதா பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் பலிக்குமா? “

அவளின் பேச்சில் மிரண்டவர் வேக வேகமாக கட்டவிழ்த்து கண்ணு குட்டியை தண்ணி தொட்டிக்கு இழுத்து சென்றார்.

‘ ஹப்பாடா ஓடிருடி மணிஈஈ..!’ என்றவள் கார்த்தியை பற்றி எல்லாம் யோசிக்காமல் அவள் பாட்டிற்கு கேம்ப்பிற்கு வந்து விட்டாள். அவன் எப்படியும் வந்து விடுவான் என அவளிற்கு தெரியும்.

இவை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த கார்த்தி ‘ சரியான முழு பைத்தியம் ” என தலையில் அடித்து கொண்டான்.

“ம்ம்ச் இப்படி சோதப்பிட்டியே மணி..! இனி அந்த கார போண்டா கார்த்தி மூஞ்சில எப்படி முழிப்பே? ஒரே அசிங்கமா போச்சு குமாரு..!” என மனதினுள் நொந்தவள், போய் அவள் வேலையை பார்க்க தொடங்கினாள்.

எப்பொழுதும் இரவு, அனைவரும் முடித்த வேலையை ஒரு முறை சரி பார்த்துகொள்வான் வருண்.

மாதவனை கூப்பிட்டு சில கரெக்ஷன்களை கூறியவன், கண்மணியை அழைக்க அவள் போனை எடுத்தப்பாடில்லை..!

அவளை தேடி அவள் ரூம்மிற்கு செல்ல, அங்கேயும் அவளை காணவில்லை.

“மாதவ் கண்மணிக்கும் கொஞ்சம் கரெக்ஷன்ஸ் சொல்லனும். அவள இங்க எங்ககேயுமே கானோமே?அவ எங்க போய்யிருக்கானு உனக்கு தெரியுமா? “

” என்னது கானோமா? அவ உங்க கூட இருப்பானுலே நா நெனைச்சிட்டு இருந்தேன்? “

” என்னது “

” இல்ல.. இல்ல… அது காலையில்ல தான் அவள பாத்தேன் அதுக்கு அப்றம் பாக்கலயே “என்றான் பதட்டமாக,

” இருங்க பாஸ் எதுக்கும் போன் பண்ணி பாக்கலாம் “

” ஏற்கனவே பண்ணிட்டேன். நாட் ரீச்சப்பிள் “

நன்றாக இருட்டி விட்டது, இந்த சமயத்தில் எங்கே சென்றிருப்பாள்? ஒரு முதலாளியாக தனக்கு கீழ் வேலை செய்பவர்களின் பாதுக்காப்பிற்கு அவன் தானே பொறுப்பு.

” பாஸ் நா பக்கத்துல்ல யார் கிட்டயாவுது வண்டி வாங்கி போய் பாக்கறேன் ” என பறந்து விட்டான் பொறுப்பான அண்ணன் மாதவன்.

அஷ்வினியோ, ” இங்க பக்கத்துல்ல ஒரு ஆண்டி வீடு இருக்கு, அவங்க கிட்ட நல்லா ஜாலியா பேசுவா ஒருவேள அங்க இருக்காளானு நா போய் பாத்துட்டு வரேன். ” என கிளம்பி விட,

வருண் தான் செய்வதறியாது முழித்து கொண்டிருந்தான். எதற்கும் ஊர் தலைவரிடம் விஷயத்தை சொல்லி விட்டு, போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என முடிவு செய்தவன் அவன் காரை எடுக்க போக,

கேம்ப்பை நோக்கி ரோட்டில் மிகவும் சோர்வாக நடந்து வந்து கொண்டிருந்தாள் கண்மணி.

அவனை பார்த்தவள் அவனிடம் வந்து ,
” கொஞ்சம் லேட் ஆகிருச்சு பாஸ் ” என்றாள் மூச்சு வாங்க,

அவளின் சோர்ந்த முகமும் வாடிய வதனமுமே அவள் எங்கே சென்று வந்திருக்கிறாள் என புரிய, கோவமாக அவளை பார்த்து முறைத்தான் வருண்.

காலையில் அந்த பெரியவரிடம் இருந்து தப்பி கேம்ப் வந்தவள், அவள் வேலையை பார்த்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்திலேயே வருணின் நியாபகம் வர அவனை பார்க்க சென்று விட்டாள்.

யாரிடமோ போன் பேசி கொண்டிருந்தவன் பார்க்க சற்று டென்ஷனாக தெரிந்தான்.

அவனின் பதட்டம் அவளிற்கும் தொற்றிக்கொள்ள, ” என்னாச்சி? ” என்றாள் புருவங்கள் முடிச்சிட்டு.

” இங்க கேம்ப் நடத்தும் போது சர்வே எடுத்தோம்ல அதுல வறுமை கோட்டுக்கு கீழ இருக்க பேஷன்ட்ஸ்க்கு , ஆறு மாசத்து தேவையான மெடிசன்ஸ் எல்லாம் ஃபீரியா கொடுக்கலாம்னு ரொம்ப ஆசைப்பட்டு அது எல்லாம் ஆர்டர் பண்ணுனேன் மருந்தும் வந்துருச்சு, ஆனா இப்போ எப்படி அவங்களுக்கு போய் கொடுக்கறதுனு தெரில. இதே நம்ம ஊரா இருந்தா இது மாறி சர்வீஸுக்கு எல்லாம் ஆளுங்க இருப்பாங்க, கொடுக்க வேண்டிய அட்ரஸும் அவங்க டெலிவரி பண்ணுறதுக்கான காசு மட்டும் கொடுத்தா போதும், ஆனா இது ரொம்ப சின்ன ஊருங்கறனால வண்டில கூட சில ஏரியாக்கு எல்லாம் போக முடியாது, நடந்து போனா தான் உண்டு..
எனக்கு என்ன பண்ணுறதுனே தெரில.
அவசரப்பட்டுடேனோனு தோணுது.”

“ஓஹ் எங்க அந்த லிஸ்ட் எல்லாம் காட்டுங்க..?”

” ம்ம்ச் அத விடு, இப்போதைக்கு கேம்ப்ப நல்லபடியா முடிப்போம், இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு அப்றம் பாத்துக்கலாம், நீ போய் உன்
ஒர்க்க பாரு ” என்றான் முகத்தில் சோகம் இளைந்தோட.

அவனிடம் இருந்து விடை பெற்று கொண்டு வந்தாலும், அவனின் வார்த்தைகளே அவளுள் ஓடி கொண்டிருந்தது.

‘ரொம்ப ஆசப்பட்டேன்னு சொன்னாரு அத எப்படி அப்படியே விட முடியும்?’என எண்ணியவள், வருணிற்கு தெரியாமல் பேஷன்ட் டிடைல்ஸ் மற்றும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்தை ஃசீப் டாக்டரிடமிருந்து பெற்று கொண்டு, அவளே அவர்களின் வீட்டு அட்ரஸை அலைந்து தேடி கண்டு பிடித்து. மருந்தையும் அவர்களுக்கு கொடுத்து விட்டு இப்போழுது தான் கேம்ப் வந்து சேர்ந்திருக்கிறாள்.

” ஏன் ” என்றான் கவலை தொய்ந்த குரலில்.

“நீங்க ஆசைப்பட்டீங்கள? உங்களுக்காக தான்!” என்றாள் காதல் பொங்கும் விழிகளோடு.

முதல் முறையாக அவளின் பார்வையில் தடுமாறி போனான் அவன்..!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
31
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments