Loading

 

காதல் 17

“எனக்கு இந்தியா போகணும்ங்கிற எண்ணம் இனிமே வராதுனு தோணுது… அங்க எனக்குனு யாருமில்லையே… இப்ப வரைக்கும் அம்மாவும் அக்காவும் ஒரு தடவை கூட கால் பண்ணி பேசாததே அவங்க என்னை முழுசா வெறுத்துட்டாங்கனு புரியவச்சிடுச்சு… இங்க எனக்கு டாம் இருக்குறான்… எவ்ளோ நாள் நாங்க ஒன்னா இருப்போம்னு தெரியல… பட் என்னோட இருக்குற கடைசி நாள் வரைக்கும் அவனுக்கு என் மேல இருக்குற அன்பும் காதலும் குறையாது… நாளைக்கே நாங்க பிரிஞ்சாலும் அவன் கூட இருந்த ஸ்வீட் மெமரீஸோட என்னால வாழ்நாள் முழுக்க சிங்கிளா அமெரிக்கால வாழ்ந்துட முடியும்… சப்போஸ் இந்தியாக்குப் போனேன்னா, பொண்ணு தனியா வாழமுடியாது, அதுக்கு சொசைட்டி அனுமதிக்காதுனு சொல்லி விருப்பமே இல்லாத ஒரு வாழ்க்கைக்குள்ள என்னைத் திணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கிடும் அங்க உள்ள சூழல்”

 

     -ஜெர்ரி

 

விம்பர்லியில் விடுமுறையைக் கழித்துவிட்டு மீண்டும் ஓல்ட் வெஸ்ட் ஆஸ்டினுக்குத் திரும்பிவிட்டனர் ஆர்யாவும் டாமும்.

 

கிளம்பும் முன்னர் லிண்டா ஆர்யாவிடம் “நான் சொன்னதை மறந்துடாத ஹனி” என்று குறிப்பு காட்டிச் சொல்ல டாமுக்கோ ஒன்றும் புரியவில்லை.

 

“கண்டிப்பா ஆன்ட்டி” என்ற ஆர்யாவும் அது என்ன விசயமென டாமிடம் சொல்லவில்லை.

 

இருவரும் ஓல்ட் வெஸ்ட் ஆஸ்டினுக்கு வந்த பிறகு அதை பற்றி அவளிடம் விசாரித்தவனிடம் ஏதோ சொல்லி மழுப்பினாள் ஆர்யா.

 

மறுநாள் பல்கலைகழகத்தில் அவளுக்கு ஃபால் செமஸ்டர் ஆரம்பிக்கப் போகிறது. அதற்கு தயாராகலாமென நினைத்தவளின் மொபைலில் வெகு நாட்களுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து அழைப்பு வந்தது.

 

அழைத்தவன் ராஜேஷ். அழைப்பை ஏற்போமா வேண்டாமா என்று கூட ஆர்யா யோசிக்கவில்லை. அடுத்த நொடியே இளக்கமின்றி துண்டித்தாள். அருகே கிடந்த கவுச்சில் அமர்ந்து மடி கணினியில் மாணவர்களிடம் கலந்துரையாடிக்கொண்டிருந்த டாம் ஆர்யாவின் முகமாற்றத்தைக் கவனித்துவிட்டான்.

 

“ஜஸ்ட் அ மினிட் கய்ஸ்” என்றவன் மடிகணினியின் திரையிலிருந்து தனது முகத்தை நிமிர்த்தி “ஜெர்ரி?” என்றதும் அவள் ஒன்றுமில்லை என மறுப்பாய் தலையசைத்தாள்.

 

ஆனால் அடுத்தடுத்து அழைப்பு வந்துகொண்டேயிருக்க, ஆர்யாவும் சளைக்காமல் அழைப்பைத் துண்டித்துக்கொண்டே இருந்தாள்.

 

டாமின் ஆன்லைன் வகுப்பு முடிவடைந்ததும் முதல் வேலையாக ஆர்யாவிடம் என்னவாயிற்று என விசாரித்தான் அவன்.

 

ஆர்யா சலித்துக்கொண்டே “என் அக்கா ஹஸ்பெண்ட் கால் பண்ணுனார்” என்றாள்.

 

“ஒய் டிண்ட் யூ அட்டெண்ட்?”

 

“ஐ காண்ட்… நான் இந்தியாவை பத்தி யோசிக்கக்கூட விரும்பல டாம்”

 

முகம் சுருங்க உரைத்தவளைத் தனது மார்போடு அணைத்துக்கொண்டான்.

 

“நம்ம மேல அக்கறை வச்சிருக்குறவங்களை அவாய்ட் பண்ணக்கூடாது ஹனி”

 

“என் மேல என்னை விட வேற யாருக்கு அக்கறை இருந்துட முடியும் டாம்?”

 

முந்தையதினம் அவன் கேட்ட கேள்வியைக் கிளிப்பிள்ளை போல சொன்னாள் ஆர்யா. அந்தக் கேள்வி தனக்கும் தானோ என ஐயம் கொண்டவன் அவள் ஆமாம் என்று சொல்லிவிட்டால் மனம் வலிக்கும் என்பதால் மேற்கொண்டு இந்திய அழைப்பைப் பற்றி பேசவில்லை.

 

ஆர்யாவும் செப்டம்பர் மாதம் ‘யூ.டி ரெக்ரியேசன்’ குழுவினர் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக என்ன போட்டி நடத்தவிருக்கிறார்கள் என இன்ஸ்டாக்ராமில் பார்க்கலானாள்.

 

செப்டம்பர் மாதத்தில் ‘Once upon a ball’ என்ற நடன நிகழ்ச்சியை நடத்தப்போவதாக அறிவிப்பு வந்திருக்கவும் வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன் டாமிடம் போட்டி அறிவிப்பைக் காட்டினாள்.

 

‘ஃபேன்டசி’ தீமுடன் கூடிய பால்ரூம் நடனப்போட்டி அது. அதற்கேற்ப உடைகளை அணிந்து வரும்படி கூறியிருந்தார்கள்.

 

போட்டி நடைபெறும் இடத்தில் விளையாட்டுகள், கரோகே மற்றும் உணவுக்கு ஏற்பாடு செய்வார்களாம். கலந்துகொள்ள போகிறவர்கள் தங்களுடன் நடனத்துணைவராக ஒருவரை அழைத்து வரலாம்.

 

உடனே ஆர்யா டாமைப் பார்த்தாள்.

 

“நீ என் கூட வருவியா டாம்?” ஆர்வமாகக் கேட்டாள்.

 

“உன் கூட வேற ஒருத்தனை டான்ஸ் பண்ண விடுவேனா? கண்டிப்பா நான் வருவேன்… பால்ரூம் டான்சுக்கு மெடிவெல் பீரியட் காஸ்ட்யூம் போட்டா சூப்பரா இருக்கும்” என தன் பங்குக்கு ஐடியா கொடுத்தான் டாம்.

 

“அதுல்லாம் ரொம்ப ஹெவியா இருக்கும் டாம்… எனக்கு நார்மல் கவுன் போதும்… இன்னைக்கு ஈவ்னிங் ஷாப்பிங் போகலாமா?”

 

“போகலாம்… பட் காஸ்டியூம், அசஷரீஸ் எல்லாமே என்னோட செலவு… ஓ.கேவா?”

 

“என் ட்ரசுக்கு நான் செலவு பண்ணுனதா தான டாம் சரியா இருக்கும்” ஆர்யா தயங்கினாள். டாமின் முகமோ உடனே சுருங்கியது.

 

“நீ, நான்னு ஏன் பிரிச்சு பேசுற ஜெர்ரி? நாம பார்ட்னர்ஸ்”

 

ஆர்யா கண்கள் கனிய அவனைப் பார்த்தாள்.

 

“ஐ நோ… பட் எனக்கான செலவுகளை உன் தலையில சுமத்த தோணல… ஒரு மாதிரி கில்டியா இருக்கு டாம்”

 

“எதுக்குக் கில்டியா ஃபீல் பண்ணுற? ஐ டோன்ட் அண்டர்ஸ்டாண்ட்”

 

“டாம்…” என்று விளக்கம் கொடுக்க வந்தவள் மீண்டும் மொபைலில் அழைப்பு வரவும் இப்போது யாராக இருக்கக்கூடுமென தொடுதிரையைப் பார்த்தாள்.

 

நவீனின் பெயர் வரவும் அவசரமாக அழைப்பை ஏற்றாள்.

 

“சொல்லு நவீன்”

 

“மதுக்கு ப்ளீடிங் ஓவரா இருக்கு ஆர்யா… அவளுக்கு இப்ப உன் துணை தேவைனு தோணுது… இஃப் யூ டோண்ட் மைண்ட், அவளுக்கு ப்ளீடிங் நிக்குறவரைக்கும் நீ துணையா இருக்க முடியுமா?”

 

“ப்ளீடிங்? எதுக்கு?”

 

“ஷீ வாஸ் ப்ரெக்னெண்ட்… இப்ப ஒரு குழந்தைய எங்களால மேனேஜ் பண்ண முடியாது… சோ வீ டிசைடட் டூ அபார்ட் த பேபி… நேத்து டேப்ளட் குடுத்தாங்க… இன்னைக்கு மதியத்துல இருந்து ப்ளீடிங் ஆரம்பிச்சிடுச்சு… ஒரு கட்டத்துக்கு மேல அவளால தாங்க முடியல… இதுக்கு முன்னாடி இந்த மாதிரி சிச்சுவேசனை நான் ஃபேஸ் பண்ணுனதில்ல… லேடீஸ் இருந்தா பெட்டர்னு தோணுச்சு… மது நீட்ஸ் யூ ஆர்யா”

 

“ஓ.கே… நான் இப்பவே வர்றேன்”

 

பதற்றத்தோடு அழைப்பைப் பேசி முடித்தவளிடம் என்ன பிரச்சனை என வினவினான் டாம்.

 

“மது ப்ரெக்னென்டா இருந்திருக்கா… பட் இப்ப பேபி வேண்டாம்னு அவளும் நவீனும் அபார்ட் பண்ணலாம்னு டிசைட் பண்ணிருக்காங்க… கைனகாலஜிஸ்ட் குடுத்த டேப்ளட்டை சாப்பிட்டதும் அவளுக்கு ஓவர் ப்ளீடிங் ஆகுதாம்… தட்ஸ் ஒய் நவீன் இஸ் காலிங் மீ டு ஹிஸ் ஹோம்… என்னை நவீன் வீட்டுல ட்ராப் பண்ணிடுறியா? நான் ட்ரஸ் பேக் பண்ணிடுறேன்”

 

ஆர்யா படபடவென சொல்லவும் டாமின் கண்களில் தவிப்பு. அவள் இல்லாத தனிமையை தன்னால் சமாளிக்க முடியுமா என்ற திகைப்பு.

 

உடைகளை ரோலர் சூட்கேசில் எடுத்து வைத்தவளிடம் “நீ கண்டிப்பா போகணுமா ஜெர்ரி?” என்று பரிதாபமாகக் கேட்டான் அவன்.

 

“ஐ ஷூட் ஹேவ் டு கோ தேர்… இந்த மாதிரி நேரத்துல தானே ஃப்ரெண்ட்ஸ் உதவியா இருக்கணும் டாம்”

 

பேசிக்கொண்டே தனது மடிக்கணினி மற்றும் படிப்பதற்கு தேவையான உபகரணங்களை ஷோல்டர் பேக்குக்குள் திணித்தாள்.

 

“பட்…” ஏதோ சொல்ல வந்தவன் அவள் தனது பேச்சைக் கவனிக்கவில்லை என்றதும் வாயை மூடிக்கொண்டான்.

 

ஆர்யா டாமிடம் ஒரு வாரத்திற்கு நவீனின் வீட்டிலிருந்து மதுரிமாவைக் கவனித்துக்கொண்டபடி பல்கலைகழகத்திற்கு போய்க்கொள்வதாகக் கூறவும் ஏழு நாட்கள் அவன் மனதிற்கு ஏழு ஜென்மங்கள் போல தோன்றி மிரட்டியது.

 

அத்தனை நாட்கள் ஆர்யாவைப் பிரிந்து எப்படி இருக்கப்போகிறாம் என்று அவன் சோகவயப்பட ஆர்யாவோ தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு “கிளம்பலாமா டாம்?” என்று கேட்டாள்.

 

அரைமனதோடு தலையாட்டியவன் கார்ச்சாவியை எடுத்துக்கொண்டான்.

 

அவளது ரோலர் சூட்கேசை உருட்டிக்கொண்டு போய் கடனே என காரில் வைத்தவன் மனமோ “ஜெர்ரி என்னைப் பத்தி யோசிக்கவேல்ல” என்று சுணங்கியது.

 

கார் நவீனின் வீட்டை அடைந்ததும் ரோலர் சூட்கேசை தானே உள்ளே கொண்டு வருவதாகச் சொன்ன டாம் ஆர்யாவைத் தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

 

அங்கே நவீன் தலையைப் பிய்த்துக்கொள்ளாத குறையாக அமர்ந்திருந்தான்.

 

ஆர்யாவைப் பார்த்ததும் ஓடி வந்து அணைத்தவன் “ஷீ இஸ் ஸ்கோல்டிங் மீ ஆர்யா” என்றான் பரிதாபமாக.

 

“வாட்?” என்று ஆர்யா கேட்கும்போதே படுக்கையறையிலிருந்து தலையணை ஒன்று பறந்து வந்தது.

 

“ஜெர்ரி” என்று கூவியபடி டாம் மட்டும் அவளை இழுக்காவிட்டால் ஆர்யா தலையணை தாக்குதலுக்கு ஆளாகியிருப்பாள்.

 

நவீன் அரண்டு போய் விழிக்கும்போதே புயலைப் போல அங்கே வந்தாள் மதுரிமா.

 

ஆர்யாவையும் டாமையும் பார்த்ததும் திகைத்தவள் “ஆர்யா பேப்” என்றபடி அவளை அணைத்துகொள்ள

 

“ஏன் இவ்ளோ கோவம் மது? ரிலாக்ஸ்… ஆல்ரெடி டயர்டா இருப்ப… ஏன் கத்தி உன் எனர்ஜிய வேஸ்ட் ஆக்குற?” என ஆறுதல் சொன்னாள் அவள்.

 

உடனே மதுரிமாவின் கண்ணீர் சுரப்பிகள் வேலை செய்ய தொடங்கிவிட்டன.

 

நவீனைக் கை காட்டி “இந்த ராஸ்கலால தான் எல்லாமே… ரொம்ப பெயினா இருக்கு ஆர்யா… பாத்ரூம்ல ரத்தமும் சதையுமா போறது என் குழந்தை… ஐ அம் அ கில்லர்” என்று உடைந்து அழ ஆரம்பித்தாள்.

 

“ரெண்டு பேரும் சேர்ந்து தான அபார்ஷன் பண்ணலாம்ங்கிற டிசிசனை எடுத்தோம்… இப்ப என்னை மட்டும் ப்ளேம் பண்ணுறா ஆர்யா” என்றான் நவீன் மனத்தாங்கலாய்.

 

ஆர்யா யாரைச் சமாதானம் செய்வதென புரியாமல் திகைத்தாள்.

 

முதலில் மதுரிமாவைத் தேற்றினாள்.

 

“ரிலாக்ஸ் மது… யூ போத் ஆர் நாட் கில்லர்ஸ்… சிச்சுவேசன் இஸ் த ப்ரைமரி அக்யூஸ்ட்… இங்க பாரு, உனக்கு இப்ப தேவை ரெஸ்ட் மட்டும் தான்… ரொம்ப யோசிக்காத… சாப்பிட்டியா?”

 

“இல்ல” என மதுரிமா சொல்லும்போதே “தால் சாவல் (பருப்பு சாதம்) ரெடி பண்ணிக் குடுத்தேன் ஆர்யா… சாப்பிடமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்குறா” என்று இடையிட்டது நவீனின் குரல்.

 

உடனே மதுரிமாவின் முகம் கோபவண்ணம் பூசிக்கொள்ள ஆர்யா அவனை அதிருப்தியாகப் பார்த்தாள்.

 

“நீயும் என்னை முறைக்குற… நான் என்ன பண்ணுனேன்?” என்று அவன் புலம்ப ஆரம்பிக்கவும் வாயில் ஆட்காட்டிவிரலை வைத்து பேசாதே என சைகை காட்டினாள் ஆர்யா.

 

அவன் சமைத்திருந்த பருப்பு சாதத்துடன் ஃப்ரிட்ஜில் இருந்த பழச்சாறையும் எடுத்துக்கொண்டவள் மதுரிமாவை அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள்.

 

பொறுமையாய் எடுத்துச் சொல்லி புரியவைத்தவண்ணம் சாப்பாட்டை ஊட்டியவள் பழச்சாறையும் பிடிவாதமாக அருந்த வைத்தாள்.

 

பின்னர் அவளைப் படுத்துக்கொள்ள சொன்னவள் “நல்லா தூங்கு… நைட் பெயின் எடுத்தா என்னை எழுப்பு… இப்ப நான் டாமை சென்ட் ஆப் பண்ணிட்டு வர்றேன்” என்று அங்கிருந்து வெளியேறி ஹாலுக்கு வந்தாள்.

 

நவீனிடம் “அவளுக்கு இந்த நேரத்துல ஹார்மோன் கன்னாபின்னானு வேலை செய்யும்… கோவம் அதிகமா வரும்… யூ ஹேவ் டூ அண்டர்ஸ்டாண்ட் ஹெர் பாடி கண்டிசன் நவீன்… யூ டோண்ட் வொரி அபவுட் ஹெர்… நான் அவளைப் பாத்துக்குறேன்… நீ டாம் கூட எங்க வீட்டுல இரு… ஒன் வீக் கழிச்சு அவ ரெகவர் ஆனதும் நீ இங்க வரலாம்” என்றாள்.

 

நவீன் டாமைப் பார்க்க அவனோ அலறாத குறை.

 

“இந்த நாட்டுல ரெண்டு ஆம்பளைங்க ஒரு வீட்டுல தங்குனா அதை வேற விதமா அர்த்தம் எடுத்துப்பாங்க ஜெர்ரி… அதுலயும் இவன் என் ஸ்டூடண்ட் வேற… இந்த செமஸ்டர்ல நான் உங்களுக்கு மார்க்கெட்டிங் புரொபசர்… தெரியுமா?”

 

ஆர்யாவுக்கும் அவனது நிலை புரிந்தது. ஆனால் மதுரிமா இருக்கும் நிலையில் நவீனைப் பார்த்தால் அவள் கத்தி கத்தி சக்தியை இழப்பாள். அது அவளது உடல்நிலையைப் பாதிக்கும். எனவே டாமைச் சமாதானம் செய்து சம்மதிக்க வைக்க முயன்றாள்.

 

அவனைத் தனியே அழைத்துச் சென்றவள் “எனக்காக நவீனை அழைச்சிட்டுப் போ டாம்… அவன் ரொம்ப நொந்து போயிருக்குறான்… உன்னோட ஆறுதல் அவனுக்குத் தேவை… இன்ஃபேக்ட் பிரச்சனைல இருக்குறவங்களுக்கு ஆறுதல் சொல்லுறதுல யூ ஆர் த எக்ஸ்பெர்ட்” என்றதும்

 

“உனக்கு மட்டும் தான் ஆறுதல் சொல்ல வரும் ஜெர்ரி… நான் என்ன ஆறுதல் சொல்லுற பிசினஸா பண்ணுறேன்?” என சிடுசிடுத்தான் டாம்.

 

ஏற்கெனவே ஏழு நாட்கள் ஆர்யா இல்லாமல் அவன் மட்டும் வீட்டில் உலாவவேண்டுமே என்ற ஏக்கம். இதில் நவீனை அழைத்துச் சென்று ஆறுதல் சொல் என்றால் அவனுக்குக் கடுப்பு வராதா?

 

“ப்ளீஸ் டாம்! எனக்காக இதை செய்யமாட்டியா? நீ குட் பாய் தானே… ஜெர்ரியோட டாம் தான”

 

“நான் ஜெர்ரியோட டாம் தான்… என் இதயத்துல மட்டுமில்ல வீட்டுலயும் ஜெர்ரிய தவிர வேற யாருக்கும் இடம் கிடையாது” என்றான் அவன்.

 

ஆர்யாவின் முகம் வாடிப்போனது. உடனே அவளை அணைத்துக்கொண்டவன்

 

“செவன் டேய்ஸ் நீ இல்லாம எப்பிடி கழிக்கப்போறேன்னு தெரியல… இதுல இன்னொருத்தனை எப்பிடி என் கூட தங்க வச்சிக்க முடியும் ஜெர்ரி?”

 

“அவனுக்கும் உன் நிலமை தான் டாம்… யூ போத் ஆர் செய்லிங் இன் த சேம் போட்”

 

“டாமிட்”

 

டாமின் கடுப்பு ஆர்யாவுக்கு இப்போது சிரிப்பை வரவழைத்தது.

 

சிரித்தபடியே அவனது கன்னத்தில் முத்தமிட்டவள் “ஏழு நாள் தான டாம்? யூ கேன் மேனேஜ்” என்றாள்.

 

“நீ இல்லாம வாழ நான் இன்னும் பழகல ஜெர்ரி” முகம் கசங்க உரைத்தான் டாம்.

 

உடனே ஆர்யா ஏதோ சொல்ல வரவும் அவளது உதட்டின் மீது ஆட்காட்டி விரலை வைத்தவன் “இதுக்கு முன்னாடி எப்பிடி நீ இல்லாம வாழ்தேன்னு மறந்து போச்சு… இந்த ரெண்டு மாசத்துல ஒரு மந்திரவாதியோட மாயாஜாலத்துல மாட்டுன மாதிரி உன் காதல்ல நான் சிக்கியிருக்குறேன்… நீ இல்லாத தனிமைய என்னால கற்பனை பண்ணிக் கூட பாக்க முடியல” என்றான் உணர்ச்சிவசப்பட்டவனாக.

 

ஆர்யாவுக்கு அவனது சொற்கள் கொடுத்த இன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

 

என்னை நீங்கி இவனால் வாழமுடியாது என்றால் என்னுடன் நிரந்தரமாக வாழ நினைக்கிறான் என்று தானே அர்த்தம்!

 

மனதுக்குள் குதூகலித்தவள் நொடியும் தாமதிக்காமல் காலை எக்கி பெருவிரலை ஊன்றி நின்று அவனது இதழை அணைத்தாள்.

 

கொடுக்கல் வாங்கலின் முடிவில் மூச்சுக்கு நுரையீரல் ஏங்கியதும் விலகினர் இருவரும்.

 

“இந்த முத்தம் ஏழு நாள் பிரிவை ஈடுகட்டும்” என்றாள் அவள்.

 

“நாட் இனாஃப்” என்றவனின் குரலில் ஏகத்துக்கும் குழைவு. அந்தக் குழைவு ஆர்யாவைத் தடுமாற வைக்கும் அபாய அறிவிப்பு. அதில் மயங்கினால் மீண்டும் தெளிய அவளுக்கு இந்த ஏழு நாட்கள் போதாது.

 

“ஐ நோ மிஸ்டர் தாமஸ் போல்டன்… பட் வீ நீட் அ ப்ரேக்” என குறும்பாகச் சொல்லி தோள்களை ஸ்டைலாக குலுக்கியவள் “நவீன் உங்களோட ரெஸ்பான்சிபிளிட்டி புரொபசர் போல்டன்… இந்த வீக் க்ளாஸ் ஸ்டார்ட் ஆகாது… சோ முடிஞ்சவரை அவனுக்கு அட்வைஸ் பண்ணுங்க… காதலியோட முகச்சுழிப்பை விட வேற எதுவும் ஒரு காதலனுக்குப் பெரிய தண்டனை கிடையாதுனு அடிக்கடி சொல்லுவான்… ஹீ இஸ் வெரி இன்னசண்ட்” என்றாள்.

 

“இன்னசண்டா? அவனா? அபார்ஷன் மட்டும் நடக்கலனா இன்னும் பத்து மாசத்துல டாடியா ப்ரமோட் ஆகிருப்பான்” ஹாலில் நின்றவனைக் கைகாட்டி கேலி செய்தான் டாம்.

 

“டாம்” கண்டிப்பு பார்வை ஆர்யாவிடமிருந்து வரவும் நவீனைத் தன்னோடு அழைத்துச் செல்ல சம்மதித்தான் அவன்.

 

ஒரு பேராசிரியனாக மாணவனின் மனநலன் சீராக இருப்பது அவனுக்கும் முக்கியம் தான். ஆர்யாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்புகையில்

 

“இப்ப புரொபசர் போல்டனா கிளம்புறேன்… இன்னும் ஏழு நாள் கழிச்சு உன்னோட டாமா வருவேன்… அப்ப நீ எந்தச் சாக்குபோக்கும் சொல்லாம என் கூட வரணும்… வர்ற” என்று மிரட்டலாய் சொன்னவன் குனிந்து அவளது உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான்.

 

“குட் நைட் ஜெர்ரி… இப்பிடி ஒரு சிச்சுவேசன்ல குட் நைட் கிஸ்குடுப்பேன்னு கனவுல கூட நான் நினைச்சுப் பாத்ததில்ல” என்று புலம்பியவனையும் நவீனையும் வழியனுப்பி வைத்தவள் தன் காதலனுக்குத் தன்மீது இருக்கும் மையலில் கர்வம் கொண்டவளாக வீட்டின் கதவைச் சாத்திக்கொண்டாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
40
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்