Loading

காதல் 13

“அதிகமான கட்டுப்பாடுகள் தான் நிறைய நேரங்கள்ல அதை மீறியே தீரணும்ங்கிற வெறிய குடுக்கும்… ரொம்ப நெருக்கமானவங்களோட நம்பிக்கையின்மையும், அவங்களோட மோசமான வார்த்தைகளும் நம்மளை ஒரு கட்டத்துல சரி தான் போடானு எல்லாத்தையும் தூக்கியெறிய வச்சிடும்… எல்லா வேலியையும் நொறுக்கித் தள்ளிட்டு யாருக்கும் கட்டுப்படாம மனம் போன போக்குல வாழ்ந்துடலாம்ங்கிற பைத்தியக்காரத்தனமான எண்ணத்தை விதைக்கும்… கிட்டத்தட்ட என்னோட இப்போதைய நிலை இது தான்… அப்பாவோட கொடுமையான வார்த்தைகளால நான் ரொம்ப உடைஞ்சிட்டேன்… எந்த தப்பும் செய்யாம அவப்பெயரைச் சுமக்குற வலி உயிர் போற வலிய விட கொடுமையானது… அது எல்லா கட்டுப்பாட்டையும் தூக்கி வீசுற குருட்டுத்தைரியத்தை எனக்குக் குடுத்திருக்கு”

 

     -ஜெர்ரி

 

ஆர்யா கொடுத்த திடீர் முத்தத்தில் அன்றைய காலைப்பொழுது இனிமையாக விடிந்தது டாமிற்கு.

 

அவனது கொள்கைகள், எச்சரிக்கையுணர்வு எல்லாம் மறந்து போய் “ஐ லவ் யூ ஜெர்ரி” என்றவன் அவள் முடித்த முத்தத்திற்கு முகவுரை எழுத ஆரம்பித்தான்.

 

முகம் கனிய, உள்ளம் இனிக்க நடந்த முத்த யுத்தம் முடிவுக்கு வந்ததும் ஆர்யா அவனுக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தாள்.

 

“நம்ம ரெண்டு பேரும் லிவின் பார்ட்னரா வாழலாமா டாம்?”

 

டாமால் தனது காதுகளை நம்ப முடியவில்லை. ஒருவேளை கனவு காண்கிறோமா? ஆர்யா தானாக வந்து முத்தமிடுவதும், இணைந்து வாழ்வோமா என்று கேட்பதும் நிதர்சனத்தில் நடப்பதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லையே!

 

அவன் யோசிக்கையில் ஆர்யா அவனது தோளை உலுக்கினாள். அதில் இயல்புக்குத் திரும்பியவன் “ஆர் யூ சீரியஸ் ஜெர்ரி?” என ஐயத்தோடு வினவினான்.

 

“ம்ம்ம்”

 

இறுகிய முகத்தோடு அவள் சம்மதிக்கவும் மீண்டும் யோசனைவயப்பட்டான் டாம். ஒருவேளை குடும்பத்தாரின் புறக்கணிப்பு காரணமாக இப்படி முடிவு எடுத்திருப்பாளோ? ஒருவேளை அதுதான் காரணம் என்றால் டாமிற்கு இம்முடிவில் திருப்தி இல்லை. அதை வெளிப்படையாக ஆர்யாவிடம் கூறினான்.

 

“அடுத்தவங்க சொன்னாங்கனு நீ முடிவெடுக்குறதுல எனக்குச் சம்மதம் இல்ல ஜெர்ரி… உன் மனசுக்கு என்னைப் பிடிக்கணும்…” என பேசிக்கொண்டே போனவனின் பேச்சில் இடைவெட்டினாள் அவள்.

 

“இத்தனை நாள் அவங்களை மனசுல வச்சு தான் உன் மேல எனக்கு லவ் இருந்தாலும் நான் விலகியிருந்தேன் டாம்… நேத்து நடந்த இன்சிடெண்டுக்கு அப்புறம் எனக்கும் ஃபேமிலிங்கிற அமைப்பு மேல இருந்த மரியாதை தகர்ந்துடுச்சு… ஐ லவ் யூ அண்ட் ஐ வாண்ட் டூ லிவ் வித் யூ… ஐ ப்ராமிஸ், உன் விருப்பத்துக்கு மாறா என் கூடவே நீ நிரந்தரமா வாழணும்னு நான் கட்டாயப்படுத்தமாட்டேன்… இந்த ரிலேசன்ஷிப்ல இருந்து மூவ் ஆன் ஆகணும்னு எப்ப நீ விரும்புனாலும் விலகிக்க நான் தயாரா இருக்கேன் டாம்”

 

ஆர்யாவின் உதட்டில் ஆட்காட்டிவிரலை வைத்து பேச்சை நிறுத்தினான் டாம்.

 

“ரொம்ப யோசிக்காத ஜெர்ரி… இந்த ரிலேசன்ஷிப்ல நம்மளை பிணைக்குற காரணி காதலா மட்டும் இருந்தா போதும்… குடும்பம், குழந்தைங்க இந்த ரெண்டு எதிர்பார்ப்பு எனக்குக் கிடையாது”

 

“அஸ் யூ விஷ்”

 

தனது உணர்வுகளை மதிப்பவனிடம் சரணாகதி அடைவது தவறாகத் தோன்றவில்லை ஆர்யாவுக்கு.

 

அந்த இடத்தில் அவர்களது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்தது.

 

அன்றே ஆர்யாவின் உடமைகள் அனைத்தும் டாமின் அறைக்கு இடம் மாறின. முன்பை விட தங்களுக்குள் நெருக்கம் அதிகரித்துவிட்டதாகவே அவர்களுக்குத் தோன்றியது.

 

ஒரே காரில் பல்கலைகழகம் போகக் கூட தயங்கவில்லை இருவரும். யாரேனும் கேட்டால் ‘வீ ஆர் பார்ட்னர்ஸ்’ என்று சொல்லிக்கொள்ளலாம் என ஆர்யாவே கூறிய பிறகு டாமுக்கு என்ன கவலை?

 

மனதில் குடும்பத்தினரைப் பற்றி எழுந்த எண்ணங்களை புறம் தள்ளிவிட்டு வகுப்பில் கவனம் செலுத்தினாள் ஆர்யா. ஒரேயடியாக ஒதுக்கித் தள்ள முடியாத உறவுகள் தான்! ஆனால் அவர்களுக்கே அவள் மீது நன்மதிப்பு இல்லாத போது அவள் மட்டும் அவர்களைப் பற்றி சிந்தித்து என்ன பிரயோஜனம்!

 

ஒரு வார்த்தை வெல்லும்! ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள்.

 

தேவநாராயணனின் வார்த்தைகள் ஆர்யாவுக்குள் இருந்த கடமை தவறாத மகளை கொன்று, சுதந்திர சிந்தனையுள்ள பெண்ணை பிறப்பெடுக்க வைத்துவிட்டன.

 

அவள் டாமுடன் சேர்ந்து வாழ்ந்து உருப்படாமல் போய்விடுவாள் என்ற அவரது எண்ணத்தை உடைத்து வாழ்க்கையில் ஜெயித்துக்காட்ட வேண்டுமென்ற வெறி அப்போது அவளுக்குள் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

 

மதுரிமாவும் நவீனும் அவளது கவனத்தைக் கடன் வாங்கிக்கொண்டதும் ஆர்யா குடும்பத்தார் பற்றிய சிந்தனைகளில் இருந்து வெளியே வந்து அவளது இயல்பான பல்கலைகழக மாணவி வாழ்க்கையில் கலந்துவிட்டாள்.

 

இருவரும் மீண்டும் வீட்டுக்கு வந்ததும் ஒருவித சங்கடம் பரவியது. அதை முதலில் உடைத்தவள் ஆர்யாவே.

 

தனக்கும் டாமுக்கும் காபி போட்டு எடுத்துக்கொண்டவள் “இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து டின்னர் சமைப்போமா டாம்?” என்று உரையாடலை ஆரம்பித்து வைத்தாள்.

 

“நானே கேக்கலாம்னு நினைச்சேன்… பட் உன்னோட மூட் எப்பிடி இருக்குனு தெரியாம கேக்க வேண்டாம்னு இருந்துட்டேன்”

 

“எனக்கென்ன? ஐ அம் ஹாப்பி… இத்தனை நாளா அவங்களுக்குப் பதில் சொல்லணுமே இவங்களுக்குப் பதில் சொல்லணுமேனு தயங்குன நிலமை மாறி ரொம்ப சுதந்திரமா ஃபீல் பண்ணுறேன் டாம்… இதுக்குக் கொஞ்சம் அதிகவிலை குடுத்தாலும் வொர்த் தான்”

 

அவன் முகத்தைப் பார்க்காமல் அவள் சொல்லி முடித்தாள். வெளிப்பார்வைக்கு எல்லாம் சுமூகமாக இருப்பது போல தெரிந்தாலும் உள்ளே இன்னும் நீறு பூத்த நெருப்பாக அந்தச் சம்பவத்தின் தாக்கம் குறையாமல் இருப்பதை டாமால் உணர முடிந்தது.

 

“ஜெர்ரி இங்க வா”

 

கவுச்சில் அமர்ந்திருந்தவன் இரு கரங்களையும் நீட்டி அழைத்தான். அவனது கரங்களுக்குள் சிறைபட்டவள் வழக்கம் போல இதமாக உணர டாமின் கரங்கள் அவளைத் தனக்குள் இழுத்துப் புதைத்துக்கொண்டன.

 

“சம்மர் டெர்ம் முடிஞ்சு ஒரு ஸ்மால் வெகேசன் போயிட்டு வருவோமா?”

 

“எங்க டாம்?”

 

“என் மாம் வீட்டுக்கு… அது கொஞ்சம் கன்ட்ரி சைட்… உனக்குக் கொஞ்சம் சேஞ்சா இருக்கும்”

 

“ஷ்யூர் டாம்… பட் உன்னோட அம்மா கிட்ட என்னை என்னனு சொல்லி அறிமுகப்படுத்துவ?”

 

“வேற என்ன? ஜெர்ரி, என்னோட பார்ட்னர்னு சொல்லுவேன்”

 

ஆர்யா அவனது மார்பில் சாய்ந்திருந்ததால் அவன் பேச பேச அவளது மடல்களில் டாமின் உதடுகள் உரசி விலகின.

 

காது மடல்களைத் தேய்த்துவிடலாம் என்றாலோ அவளது விரல்கள் அவன் கரங்களுக்குள் பின்னி பிணைந்திருந்தன. டாம் அவளது விரல்களுடன் விளையாடியபடி சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்க ஆர்யாவுக்குத் தான் அவனது ஸ்பரிசம் அவஸ்தையைக் கொடுத்தது.

 

“ஜெர்ரி நான் பேசிக்கிட்டே இருக்குறேன், பதிலே சொல்லாம உக்காந்திருக்க?”

 

அவளின் தலையில் டாம் செல்லமாகக் குட்டியதும் “சாரி டாம்” என அசடு வழிந்தவள் என்னவென கேட்க ஆரம்பித்தாள்.

 

“மேரி ஹாகின்ஸ் ஃபவுண்டேசன் அவார்டுக்கு என்னை யூனிவர்சிட்டில இருந்து ரெகமண்ட் பண்ணிருக்காங்க… அதுக்கான ஃபங்சன் செப்டம்பர் ஃபர்ஸ்ட் வீக் நடக்கப்போகுது”

 

“வாவ்! க்ரேட் நியூஸ்”

 

“அவார்டுக்கான நாமினில நானும் ஒருத்தன்… பட் இதுக்கே நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்… எத்தனை இண்டர்நேஷ்னல் செமினார்ஸ், எத்தனை பேப்பர் சப்மிசன்ஸ்… அந்த ஹார்ட் வொர்க்குக்கான பலனா இந்த அவார்ட்டுக்கு நாமினேட் ஆகிருக்குறேன்… அவார்ட் வாங்குனதும் முதல் வேலையா என் டாட் கிட்ட அதை காட்டணும்… புரொபசரா ஆகி என்ன கிழிக்கப் போறனு கேட்டவர் கிட்ட என் தகுதிய நிரூபிக்கணும்”

 

எப்போதும் பேசுவது போல விளையாட்டுத்தனம் இல்லாமல் தீவிரமாக மாறியிருந்தது டாமின் குரல்.

 

“போல்டன் இன்கார்பரேசனோட மேனேஜ்மெண்டை கவனிக்க முடியாதுனு சொன்னப்ப அவர் அலட்சியமா சொன்ன வார்த்தைகளை என்னால மறக்கவே முடியாது ஜெர்ரி… டீச்சிங் புரொபசன்ல நான் தோத்து அவர் கிட்ட திரும்புவேன்னு தான் இப்ப வரைக்கும் காத்திருக்குறார்… அம்மாவோட பிசினஸை நான் கவனிக்கமாட்டேன்னு சொன்னப்ப ஷீ அண்டர்ஸ்டுட் மை ட்ரீம்… பட் ஹீ டிண்ட்… இந்த அவார்ட் அவரோட நீண்டநாள் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்னு ரொம்ப ஆழமா நம்புறேன்”

 

தீர்மானத்தோடு உரைத்தவனின் தாடையில் எம்பி இதழ்களைப் பதித்தாள் ஆர்யா.

 

“யூ கேன் அண்ட் யூ வில்”

 

“தேங்க்யூ பார்ட்னர்” என்றவன் அவளது இதழ் நோக்கி குனிந்தான். பின்னர் சடாரென விலகினான். ஆர்யா ஏன் என யோசிக்கும்போதே “டின்னர் குக் பண்ணலாமா?” என்றான் அவன்.

 

அவனது திடீர் பின்னடைவுக்கான காரணம் புரியாமல் ஆர்யாவும் அவனோடு சேர்ந்து சமைக்கத் தயாரானாள். அவளுக்குச் சமையல் பரிச்சயமில்லாத கலை.

 

ஆனால் டாம் அப்படியில்லை. எல்சா மற்றும் அலெஸாண்ட்ரோவின் நட்பு ஓரளவுக்குச் சுவையாகச் சமைப்பவனாக அவனை மாற்றியிருந்தது.

 

அவன் காய்கறி நறுக்கிய வேகமே அடிக்கடி வீட்டில் சமைத்துப் பழக்கப்பட்டவன் என்பதை சொல்லாமல் சொன்னது ஆர்யாவுக்கு.

 

அவனுக்கு உதவுகிறேன் என்று நின்றவள் அவன் கேட்ட பொருட்களை எடுத்துக்கொடுத்ததைத் தவிர வேறு எந்த உதவியும் செய்யவில்லை.

 

சூடாக பாஸ்தாவும், ஃப்ரெஞ்ச் டோஸ்டும் செய்தவன் ஆர்யா அதை சுவைத்துச் சாப்பிடவும் கர்வப்புன்னகை பூத்தான்.

 

“நான் செஃப் தானே?”

 

டீசர்ட்டில் இல்லாத காலரைப் பெருமையாக அவன் தூக்கிவிட ஆர்யா நமட்டுப்புன்னகையோடு ஆமோதித்தாள். கூடவே அவளுக்கு ஆச்சரியமும்.

 

ஆண்பிள்ளைகள் சமைக்கும் காட்சி எல்லாம் அவர்கள் குடும்பத்தி காணக்கிடைக்காத காட்சி. அதிலும் பெண்களை உட்கார வைத்துச் சாப்பாடு பரிமாறுவது எல்லாம் நடந்தால் தரையிலிருந்து வானத்தை நோக்கி மழை பெய்துவிடும்.

 

தேவநாராயணன் சமையலறையை எட்டிக் கூட பார்க்கமாட்டார்.

 

ஆனால் இங்கே டாம் சகஜமாகச் சமைக்கிறான். அவளுக்கும் பரிமாறுகிறான் என்றால் ஆர்யா ஆச்சரியப்படத் தானே செய்வாள்.

 

அதை வெளிப்படையாகச் சொன்னபோது டாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

 

“குக்கிங் இஸ் ஒன் ஆப் த சர்வைவல் ஸ்கில்… அதை லேடீஸ் தான் செய்யணும்னு என்ன அவசியம்?” என்று கேள்வி வேறு கேட்டான் அவன்.

 

அதற்கு என்னவென பதிலளிப்பாள் அவள்? பழங்காலத்தொட்டே அதுதான் வழக்கமென சொல்லி வைத்தாள்.

 

பின்னர் இருவரும் நிறைய பேசினார்கள். நிறைய சிரித்தார்கள். இடையிடையே சாப்பிடவும் செய்தார்கள். அவர்களின் குரல் நாண்கள் தொய்வுற்று வெறும் காற்று மட்டுமே வந்த தருணத்தில் இருவரும் படுக்கையறையில் நின்று கொண்டிருந்தனர்.

 

இருவரின் மனதிலும் காதல் இருந்தது. ஒரே படுக்கையைப் பகிர்ந்துகொள்வதில் எவ்வித சிக்கலுமில்லை தான். ஆனால் அதையும் தாண்டி ஒருவித அலைக்கழிப்பு இருவருக்குள்ளும்.

 

டாம் இது வரை எந்தப் பெண்ணுடனும் தனது படுக்கையைப் பகிர்ந்து கொண்டதில்லை. கிங் சைஸ் பெட்டில் தனியாய் புரண்டு தூங்குவதில் அவனுக்கு அலாதி பிரியம். முதல் முறையாக அதில் பாதியை ஆர்யா ஆக்கிரமிக்கப் போகிறாள் என்றதும் கொஞ்சம் தயக்கம்.

 

ஆர்யாவுக்கோ அவ்வபோது டாமுக்கும் தனக்கும் இடையே தோன்றும் நெருக்கமே அவஸ்தையில் தள்ளிவிடும் என்ற நிலையில் ஒரே படுக்கையை எவ்வாறு பகிர்ந்து கொள்வாள்?

 

டாம் சிறிது நேரம் யோசித்தவன் “வெல்!” என்றான் ஆடம்ஸ் ஆப்பிள் ஏறியிறங்க.

 

“வாட்?”

 

“அது… நீ பெட்ல படுத்துக்க… நான் அந்தப் பக்கம் கவுச்…”

 

“வேண்டாம் டாம்… நீ பெட்ல படுத்துக்க… உன் ஹைட்டுக்கு கவுச் ரொம்ப சின்னதா இருக்கும்”

 

“ஆர் யூ ஷ்யூர்?”

 

“ஹன்ட்ரெட் பர்சென்ட்”

 

“தேங்க்ஸ் ஜெர்ரி” என்றவன் அவள் கவுச்சை நோக்கி செல்லவும் இழுத்தணைத்துக்கொண்டான்.

 

“குட் நைட் கிஸ் தர மாட்டியா?” என்று ஹஸ்கி குரலில் அவன் கேட்க

 

“கிஸ் மட்டும் போதும்னு நீ கண்ட்ரோலா இருப்பியா?” என சீண்டினாள் ஆர்யா.

 

“ஊப்ஸ்… தட்ஸ் நாட் இனாஃப்… பட் ஐ கேன் கண்ட்ரோல் மைசெல்ஃப் ஜெர்ரி… நமக்குள்ள இருக்குற எம்பாரஸ்மெண்ட் மறைஞ்சதுக்கு அப்புறம் நம்ம லவ் லைஃபை ஆரம்பிச்சா தான் இட் வில் பி மீனிங்ஃபுல்”

 

திருமணத்திற்கு அவசியமற்ற உறவை ஏற்றுக்கொண்டோமே, இங்கே மெய்யான காதலுக்குப் பதில் உடல்வேட்கை மட்டும் தான் ஆட்சி செய்யுமோ என பயந்திருந்த ஆர்யாவின் செவிக்கு டாமின்ன் இந்தப் பேச்சு இன்பமாக இருக்கவும், பெண்ணவள் தாமதிக்காமல் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

 

“குட் நைட் டாம்”

 

“இப்ப என் டர்ன்” என்றவன் “பட் நான் உன்னை மாதிரி கிஸ்சை அவமானப்படுத்தமாட்டேன்” என்று சொல்லிவிட்டு மென்மையாக ஆர்யாவின் உதட்டில் தனது உதட்டை ஒற்றியெடுத்தான்.

 

வெறும் ஒரு நொடி கூட இல்லாத அந்த உதட்டொற்றலில் கூட அவனது தேகம் சிலிர்த்து அடங்கியது.

 

‘கண்ட்ரோல் யுவர்செல்ஃப் டாம்!’ மனசாட்சி மண்டையில் தட்டி எச்சரித்தது.

 

மனமோ அவளது அருகாமை வாழ்நாள் முழுவதும் வேண்டும் என்று ஏங்கத் துவங்கியது.

 

என்ன நான் இப்படி யோசிக்கிறேன்? நிரந்தரமாக யாருடனும் உறவை வலுப்படுத்டிகொள்ளமாட்டேன் என வைரக்கியமாக இருந்த எனது புத்தி ஏன் திடீரென பிசகுகிறது?

 

டாம் அதிர்ந்து போய் தன்னருகே புன்னகை தவழும் வதனத்தோடு நின்றவளைப் பார்த்தான்.

 

தனது தடுமாற்றத்திற்கான காரணம் புரிந்தது.

 

இவளது அழகும், சுட்டித்தனமும் என்னைத் தடுமாறச் செய்கிறது! நான் கண்ட கனவை விட்டு விலகி தனது வழிக்கு வரும்படி என்னைத் தூண்டுகிறாள் இப்பெண்! இவள் அபாயகரமானவள்!

 

தனக்குத் தானே சொல்லிக்கொண்டவன் “தூக்கம் வருது” என கரகரத்த குரலில் சொல்லிவிட்டு ஆர்யாவைப் பார்க்காமல் படுத்துக்கொண்டான்.

 

இன்று ஏன் அவன் திடீர் திடீரென வினோதமாக நடந்து கொள்கிறான் என்ற கேள்வியுடன் கவுச்சை ஆர்யா ஆக்கிர

இணைந்து வாழ்வோமென தீர்மானித்த இரு உள்ளங்களும் ஒரே அறையில் தனித்தனியே தங்களின் நித்திரையைத் தொடர்ந்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
45
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்